அஜந்தா ஓவியங்கள்
மாவீரன் கல்
பீமன் வெண்ணெய்
சிவகாமியும் சுகப் பிரம்மமும்
குள்ளன்,நாகநந்தி
நரசிம்ஹா நரசிம்ஹா பல்லவன்
மாமல்ல பல்லவன் .
முதல்ல டிஸ்கி!! அப்புறம் உண்மையான பதிவு:)
இந்தப் பதிவு உண்மையாவே என்னுடைய 484 ஆவது பதிவுதான் என்று
உறுதியாகச் சொல்லுகிறேன்.:)
புதுவருஷத்தன்னிக்கு ஒரு பதிவு ஏற்கனவெ ஆரம்பித்ததைப் பூர்த்தி செய்து
பப்ளிஷ் செய்யலாம்னு பதிவைத் திறந்தால் ஏதோ சரியாக இல்லை என்ற உணர்ச்சி.
டாஷ்போர்டில ,எடிட் போஸ்ட் அழுத்தினா 15 பதிவுகள் அதுவும் ட்ராஃப்ட் ஆகவே இருக்கு என்று வருகிறது. அப்படியே ஸ்தம்பிச்சுப் போச்சு இதயம். என்னது மொத்தமே 15 பதிவா.! என்னடா இது
அப்படியே ஒரு சில்லுனு உணர்வு உடம்பெங்கும். திகிலடிச்சாப் போல. சரி பதிவை மூடிட்டு மீண்டும் திறந்தால் 483 என்று காட்டுகிறது.
இல்லையெ நேத்திக்கு 872 பார்த்த மாதிரி இருக்கே.
என்னவோ குழப்பம்.
ஏதோ துக்கம்.இப்படிக் கூட நடக்குமா. என்ன காணாமப் போச்சு. என்ன இருக்கு தெரியவில்லையே.
பகல் ஒரு மணி .
துளசிதளம் தூங்காத பார்ட்டி.
எடுடா போனை, போடுடா நம்பரைன்னு அவசர உதவிக்குக் கால் போட்டாச்சு. துளசி குரல் கேட்டதும் ஒரு பாடு,
திருவிழா கூட்டத்துல தொலஞ்ச குழந்தை மாதிரி ஒரு அழுகை. உண்மையாவே அந்த மனுஷி நடுங்கிப் போயாச்சு.
அப்புறம் நடந்ததெல்லாம் துளசிதளம்''பயப்ப்ராந்தி விசுக்கி விசுக்கி''ல பார்த்து மனசாரச் சிரிங்க:)
பழைய கால டாக்டர் ஸ்ரீதரின் வீட்டு வைத்தியம் புத்தகத்தில்,
மதுமேகம்னோ எதுவோ டயபெடிஸ் பற்றி படித்த நினைவுதான் வந்தது. சில வேளை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானா
பாதிக்கப் பட்டவங்களோட நடவடிக்கையும் சற்றே மாறுபடும்னு எழுதி இருப்பார்.
அன்னிக்குத் திருவாதிரைக் களியைக் கொஞ்சம் ருசி பார்த்ததுதான் காரணம் என்று தோன்றுகிறது. திரு ஸ்ரீதர் எழுதின வார்த்தைகளை
இப்ப முழுசா அதை நம்பறேன்.
மற்றவை அடுத்த பதிவில் சிவகாமி நரசிம்ம வர்மனோடு பார்க்கலாம் :)
எல்லோரும் வாழ வேண்டும்.
எல்லோரும் வாழ வேண்டும்.
11 comments:
என் இந்த இடுகை தமிழ்மணத்தில் தெரிகிறதா தெரியவில்லை. பரிசோதனை.சோதனை.:(
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் . பதிவுகள் எதுவும் தொலையாம பத்திரமா இருக்கா ??? :)
-LK
ஆஹா ஆரம்பிச்சுட்டாங்களே.:)
எல்லாம் இருக்குன்னு தான் நினைக்கிறேன் எல்.கே!
ஆனாலும் தொலைத்துவிட்டா மாதிரி ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது நேற்று வரை:)
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சீக்கிரம் சிவகாமி சபதம் பட்டிய பதிப்பை போடுங்கள் ... உங்கள் எழுத்தில் அதை பற்றி படிக்க ஆவலாக உள்ளேன்
LK
http://lkspic.blogspot.com/2010/01/anjaneyar.html
எல்.கே.!
இப்போது நல்ல படம் ஸீ ஸ்டூடியோவில் போய்க் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டுத்தான்
பதிவெல்லாம்:0)
//இந்தப் பதிவு உண்மையாவே என்னுடைய 484 ஆவது பதிவுதான் என்று
உறுதியாகச் சொல்லுகிறேன்.:)//
வல்லிம்மா சீக்கிரமே 500வது பதிவை போடுங்கள்.(தமிழ்மணத்துல தெரியுதே)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாங்கப்பா சின்ன அம்மிணி. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சரியான தடுமாற்றம் அன்னிக்கு.
இது மாதிரி இனிமே நடக்காம இருக்கணும்னு சாமியை வேண்டிக்கறேன்:0)
போட்டுடலாம்பா. முதல்ல என்னோட 400ஆவது பதிவு என்னன்னு கண்டுபிடிக்கணும்!!துளசிக்கு மீண்டும் நன்றி.
//முதலில் டிஸ்கி//
ஓக்கே.
//அப்புறம் பதிவு//
எங்கே??????????????????
:-))))))))))))))))
தொலைக்காததெல்லாம் கிடைச்சுடுச்சு தானேம்மா? :)
தொலைக்காததைத் தேடிப் போனதும் நல்லதாப் போச்சுப்பா!
இப்படியும் நடக்க முடியும்னு ஒரு விஷயத்தைக் கண்டு பிடிச்சுட்டேன்:)
நன்றி கவிநயா.
டிஸ்கி வரும் முன்னே. பதிவு வரும் பின்னே துளசி. உங்களுக்குத் தெரியாதா, கதையளக்காம
பதிவு போட முடியுமா என்னால்:))
போட்டுட்டேன்!! சிவகாமியின் முதல் அத்தியாயம்.
Post a Comment