இரண்டு வயசுப் பிள்ளைகள் துறு துறு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.
சிலது சத்தமில்லாமல் விஷமம் செய்யும்.
சிலது சொல்லிட்டுச் செய்யும்.
இதில இரண்டு வகையும் எங்க வீட்டில் இருப்பது வான் வழி வந்த செய்திகள்:)
பேத்தி சத்தம் போடாமல் இருந்தால் எதோ கிழி பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
என்னா ராஜாத்தி செய்யறேன்னா, சமத்தா இருக்கேன் பாட்டி என்று பதில் வரும்.
அவளுடைய பிடித்த ஆசைகள்.
பிடிக்காத உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லும்போது,தூக்கம் வருவது போல நடிப்பது.
பிடித்த நூடுல்ஸ் வந்தால், உடனே கண்கள் விழித்துவிடும்.:)
ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே விழுந்திடுமே என்று சிரிக்கிறது.
இந்த ஸ்விஸ் மாயப் பெண் ணைத் தாண்டிப் போனால்,
அங்கே சிகாகோல இருக்கானே மாயக் கண்ணன்.
அவன் இன்னும் தாங்க முடியாத விஷமம்.
கண்மூடித்திறப்பதற்குள் சகல விஷயங்களையும் கொட்டி விடுவான்.
நேற்று அவனை அழைத்துக் கொண்டு டார்கெட் கடைக்கு வீட்டூக்கு வேண்டிய பொருட்கள் வாங்கப் போயிருக்கிறாள் பெண். கூடவே பாடிகார்ட் அண்ணனும் வந்திருக்கிறான்.
வண்டியில் போதித்துக் கொண்டே வந்திருக்கிறாள்.
ஒன்றும் எடுக்கக் கூடாது. கொட்டக் கூடாது.
எடுத்தால் அங்கயே விட்டுவிட்டுவந்துவிடுவேன், என்று சொல்லி
மால்'உக்குள் நுழைந்ததது, அங்கே இருக்கிற தள்ளு வண்டி சிம்மாசந்த்தில் உட்கார்ந்தபடிப் பார்த்துக் கொண்டே வந்தவன்,
இவள் கவனமாக எடுத்து வைக்கும் ஷாம்பூ பாட்டில்களையும் பற்பசை டப்பாக்களையும் நோட்டம் இட்டிருக்கிறான்.
''இதெல்லாம் தொடக் கூடாது . கொட்டினா வேஸ்ட் ஆயிடும்'' என்ற படி சொல்லி இருக்கிறான்.
பிள்ளை திருந்தின மகிழ்ச்சியில் அவளும் கவனத்தைச் சற்றே தளர்த்தி, கவுண்டரில் பணம் செலுத்தும்
அந்தக் கணத்தில் நொடிக்குள் அந்தப் பிரம்மாண்ட பற்பசைப் பெட்டியைப் பிரித்து ஒரு பசை டியுபைத் திருகி, பசையை அந்த கார்ட்(cart) முzhuவதும் பிதுக்கியிருக்கிறான்.
தன்னைச் சுற்றி மிந்த்(mint) வாசனை பரவுகிறதே என்று அநேகர் திரும்பி இருக்கிறார்கள். ஐயா, அவ்வளவு பசையையும் அழகாக அந்த வண்டியின் ஓரங்களில் தடவி விட்டார்,
அண்ணனுக்கு பதட்டம்.
அம்மா ''லுக் அட் ஹிம்''. என்றவாறு அவனும் அந்தப் பசையில் கைவைத்துத் துடைக்கப் பார்த்திருக்கிறான்.
அதற்குள் உதவியாளர்கள் துடைக்கும் காகிதங்களைக் கொண்டுவர.
ஒரு வேலை முடிந்த கையோடு , ஷாம்பூ பாட்டிலையும் மூடி திறந்து கொட்ட முயற்சித்திருக்கிறான். நல்ல வேளை பெண் ,அதைப் பார்த்து
பறித்துக் கொண்டுவிட்டாள்.
இன்று யாஹூவில் பேசும்போது ''ஏண்ட பையா இந்த விஷமம் செய்யறேன்னு கேட்டால்,
நல்ல வாசனையா இருக்குப் பாட்டி, உங்கிட்ட ஷாம்பூ இருக்கா'' என்று கேட்டு என்னைக் கலக்கி இருக்கிறான்.
நினைத்தாலே சில் என்று இருக்கிறது.:))))
15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண்ணனை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
19 comments:
//15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண்ணனை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!//
ஹைய்ய்ய் சூப்பரூ :))))
நன்றி ஆயில்யன்.
உங்க பேரு போட்டுக் கோயில்ல அர்ச்சனை எல்லாம் செய்றாங்களாமே படிச்சீங்களா:)
விஷமக்காரக் கண்ணன், என்று அருணா சாயிராம் மாதிரிப் பாட ஆரம்பிசுடுங்க, வேண்டாம் பாட்டி, வேண்டாம் பாட்டினு ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான்! :)))))))))))))))))) நல்லா ரசிக்கலாம் போலிருக்கே! நினைச்சுப் பார்க்கவே நல்லா இருக்கு!
:-))) சுட்டிகள்!!
கீதா, இன்னிக்கு அதுதான் பாட்டே:)
எல்லாத்தையும் செய்துட்டு நீ எதைக் கொட்டின ? பாட்டின்னு கேக்கறான்.:))
முல்லை வாங்கப்பா.
மூன்றடிக்கு கீழே எதையும் வைக்காதேன்னு சொல்லி இருக்கா பொண்ணு.
மாடிப்படி போகிற வழில நல்ல வேளையாக் கதவு போட்டு இருக்கு:)
எனக்கென்னமோ பாட்டி ஜீன் கொஞ்சம் தெரியுதே - என்னதான் இருக்கு போய் பாத்திரலாம், எல்லாத்தையும் தெரிஞ்சக்கலாம், ஜாலியா என்சாய் பண்ணலாம், இந்த விஷயமெல்லாம், டூத் பேஸ்டுல காட்ட கூடாதா? ஒரு பதிவு போட்டு நல்ல விஷயங்கள உலகத்துக்கே காட்டுறீங்க நீங்க,அதான் பேரப் புள்ள ஷாம்புவ உடைச்ச ஊத்தி பாத்தீங்களா எப்படி வாசனை அப்படின்னு எல்லாத்தையும் கேட்டுருக்கான் - இதைப் போய் தப்புன்னு நீங்களே சொல்லலமா ;)))) ...
கட்டுகுள்ள போட்டுற முடியுமா இந்த ஜீன? ;)))) ...
Wish you a lot of fun discovering the world (and your house products) with him - the sound, smell, taste, spread, everything are worth discovering again! ;)
மதுரா, என்னை மாதிரி சாதுவுக்கு இந்த மாதிரி வாண்டுவா. கொட்டுவதற்கு எங்க வீட்டில அம்மா எதையும் வைக்க மாட்டாங்களே.
:இவன் தாத்தா+ மாமா+ அப்பா காம்பினேஷன்:)))
நான் ஒரு சோம்பேறி.
அவர்கள் தேனீக்கூட்டம்.
இவ்வளவு நல்ல காம்ப்ளிமெண்ட் கொடுத்ததுக்கு என்னென்னிக்கும் கடமைப் பட்டிருக்கேன் பா.
ம்ம்ம்...என்ஜாய் வல்லிம்மா ;))
Definetely,
Mr.Gopinath:)
மனமகிழ்வைத் தரும் பதிவு.. பேரன் பேத்திகளோடு வாழ்வைக் கொண்டாடுங்கள் :-))
நன்றி உழவன்.
அப்படியே நடக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.
அருமையான குழந்தை :)....இதே போன்ற நிகழ்ச்சி என் வீட்டிலும் நடந்தது....:))
அப்ப ,குழந்தைக்காக நீங்களும் பதிவு எழுத வேண்டியதுதான்.:)
மௌலி ,எவ்வளவு சந்தோஷமா இருக்குகேட்க:)
//ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே விழுந்திடுமே என்று சிரிக்கிறது.//
ச்வீட்!
விஷமக் கண்ணன்னால நிறைய சுவராஸ்யமான பதிவும் எழுத போறீங்கதானே! :)
அன்பு கவிநயா, வீட்டில செட்டில் ஆயாச்சா:)
கண்ணனோட அம்மா சரின்னு சொன்னா எழுதறதுல எனக்கு ஆக்ஷேபணை இல்லப்பா.:)
ரொம்ப நல்லாருக்கு வல்லி! பேரனின் குறும்புகளை ரச்த்துக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது.
எங்க வீட்டு குட்டி வருதுன்னா...நானும் ரங்கமணியும் அவசர அவசரமாக மூன்றடி உயரத்தில் எந்த சாமன்களும் இல்லாமல் பாத்துக்குவோம். அவன் கீழ் டிராயரை பாதி திறந்து அதன் மேலேறி மேலிருக்கும் சாமான்களையெல்லாம்.......ஒரே தள்ளு!
அதுவும் நாம் ரசிக்கத்தானே!!
வாங்கப்பா நானானி. இப்பத்தான், நல்லதோர் வீணை படிச்சுட்டு மனம் கலங்கி வெளியில் வந்தேன்.
நீங்க சொல்லுவது உண்மைதான். எத்தனை விஷமம் செய்தாலும் ஒரு சிரிப்பில நம்மை வீழ்த்திவிடும் வாலில்லாத கிருஷ்ணன்:)
அடடா வல்லிம்மா!
நேத்து நட்ராஜ் காலில் ஒரு கட்டை போட்டுகிட்டு ரத்தம் கட்டி ஒரே அழுகை. இன்னிக்கு டாக்டரிடம் போய் ஊசி எல்லாம் போட்டு வீட்டூக்கு வந்தா அடுத்த காலில் அதே கட்டையை போட்டுகிட்டானாம். அம்மா கிட்ட "பார்த்துக்க கூடாதாம்மா""ன்னு கேட்டா சிரிச்சுகிட்டே "நீயும் இப்படித்தான்"ன்னு சொல்றாங்க!
Post a Comment