
.




தூத்துக்குடி வந்துவிட்டது. கண் விழித்தாள். நம் வண்டிதான் ஊருக்கு வந்துவிட்டது. நாம் ஏன் ஊர் வந்துவிட்டது என்று சொல்லணும்.
என்னவோ பைத்தியக் கார சிந்தனை இப்போது. இறங்கு!
ஆக வேண்டியதைப் பார்.திரும்பும்போது அந்தத தாத்தா பாட்டி இறங்க உதவி செய்தாள்.
தூங்கும்போது அழுதியேப்பா, ஏதாவது சொல்லணும்னா சொல்லு என்ற அந்தத் தாத்தாவின் குரல் கேட்டதும் திக் என்றது கனகாவுக்கு..
எப்பவுமே இருட்டில சிந்திக்கறதைவிட , முதல்ல பசியாறிப் பெத்தவங்களோட உட்கார்ந்து பேசும்மா.''
என்று சொன்ன அந்த அம்மாவையும் பார்த்துக் சரியென்று தலையாட்டினாள்.
நெத்தியில எழுதி ஒட்டி இருக்குமோ'என்று தலையைக் கோதியவள் கண்களில் அப்பா தென்பட்டார்.
அப்படியே வயிற்றிலிருந்து ஒரு கலக்கம் ஆரம்பித்தது.
எப்படி விளக்குவது இவரிடம்.
என்ன சொன்னால் புரியும்.


பெற்றோரிடம் பேசுவதோ, நடந்த விவரம் சொல்வதோ கடினமாக இல்லை.
அவர்களும் சென்னை வந்திருந்த போது தினேஷின் காலை மாலை நடத்தையைப் பார்த்திருந்தார்கள். அப்பாவின் பெட்டியிலிருந்து பணம் பறி போயிருந்தது.
இத்தனைக்கும் தினேஷுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.
ஒன்றும் முடிவெடுக்க முடியாமல் அவர்கள் திரும்பி இருந்தனர்.
அவர்கள் இருக்கும் போதுதான் நிலா ஒரு நாள் வந்திருந்து கனகாவைக் 'கணவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி விட்டுப் போனாள்.
அப்பொழுது தினேஷும் ஒன்றும் சொல்லாமல் ஒரு பார்வையாளனாக நின்றதுதான் அவளை மிகவும் வருந்த வைத்தது.
அன்றுதான் அவளும் அவனுடன் உட்கார்ந்து மது அருந்தினாள்.
குழந்தைக்கு உணவு கொடுக்காமல் மயங்கித் தூங்கி விட்டாள்.
காலையில் தாய் தந்தையர் இருவரையும் பார்க்கக் கூட தைரியம் வரவில்லை.
ஒருவருடைய பழக்கம் அவரோடு போவதில்லை. அவரது நடவடிக்கைகள் கூட இருப்பவர்களையும் அவரைப் போலவே செயல் பட வைக்கிறது என்ற செய்துயை எப்பவோ பழைய ஆங்கிலப் பத்திரிகையில் படித்தது நினைவுக்கு வந்தது. தானும் ஒரு மது அருந்தாத ,ஆனால் போதைக்கு அடிமையான நபராக நடந்து கொள்வதும் புரிந்தது.
தான் அந்த இடத்தை விட்டு விலக வேண்டிய கட்டாயமும் புரிந்தது.
இந்தப் பிரிவு கணவனுக்கும் நல்லது என்பதையும் உணர்ந்தாள்.
ஒன்றே ஒன்றை அவளால் செய்ய முடியவில்லை. கணவனை நினைவிலிருந்து ஒதுக்க முடியவில்லை.
அவன் சாப்பிட்டானா, தூங்கினானா, பண இருப்பு போதுமா இப்படி எல்லாம் யோசனை.
இந்த நிலைமைக்கு விடிவு தேடினாள்.
மன வைத்திய நிபுணரைக் கண்டு விசாரித்த போது தெரிய வந்த விஷயங்களைத் தொகுத்து வைத்து,
பெற்றோரிடம் தொடர்ந்து பேசி ,தந்தையுடன்
சென்னை வந்து சேர்ந்தாள்.
இந்திரா நகரில் இயங்கிக் கொண்டிருந்த திருமதி சாந்தி ரங்கனாதனின் போதையிலிருந்து விடுபடும் சிகித்சைக்குத் தான் முதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்..
மதுவுக்கு அடிமையானவர்களின் ஸகல விவரங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்ட பிறகுத் தூத்துக்குடிக்கே திரும்பினாள்..
அடுத்தமுறை சென்னைக்கு க் குழந்தையூடும் பெற்றோருடனும் வந்தவள் ,கணவனை
முதலில் கண்ட கோலம் மனத்தைக் சிதைத்தாலும்,
தன்னை அந்த சூழலில் உட்படுத்தாமல், கணவனின் அலுவலகத்துக்கே சென்று
அவனது மேலாளரைக் சந்தித்துத் தான் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளுக்கு உதவி கேட்டாள்.
அவர்களும் நல்ல திறமையுள்ள பயிற்கி பெற்ற நிர்வாகியை இழக்க விரும்பாததால்
சம்மதித்தனர்.
அடுத்த கட்டமீ அவள் பொறுமையைவக் சோத்தித்தது. தினேஷ் சிகித்சை செய்து கொள்ள மறுத்தான்.
வேறு வழியில்லாமல் அவனை வலுக்கட்டாயமாக மருத்துவ மனையில்
சேர்த்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது..
மூன்று வார தீவிர சிகிக்கைக்குப் பிறகு, தெளிவான முகத்துடன் வெளி வந்த கணவனைப் பார்த்து
அளவில்லாத ஆனந்தம் கொண்டாலும்,
தான் கற்றறிந்த பக்குவத்தில் அவனிடம் நடந்து கொண்டாள். குழந்தை ரித்துவையும்,
அப்பாவிடம் மீண்டும் நட்புடன் பாசத்துடன் அணுகக் கற்றுக் கொடுத்தாள்.
சிறிது சிறிதாகக் கவிழ்ந்திருந்த அவள் உலகத்தை நிலையாக நிமிர்த்த அவளுக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. முதல் மாறுதல் அவர்களுக்குத் திரு நெல்வேலிக்கு இடம் மாற்றம் கிடைத்ததுதான்..
பழைய நட்புகள் பற்றிய விவரங்களைப் பற்றி அவ்வப்போது காதில் விழும். ஏற்றுக் கொண்டாள்.
நிலாவும் சந்திரனும் பிரிந்து விட்டது தெரிந்து வருத்தம்தான் ஏற்பட்டது..
அவளுக்குக் கிடைத்தப் புது பரிசான மழலைக் செல்வம் அவளை மேலும் அமைதியிலும்,வாழ்வின் அருமையையும் உணர்த்தியதால் அவள் எந்த ஒர் கணத்தையும், தொலைக்காமல் அனுபவித்தாள்.
இப்போது ரித்துவுக்கு திருமணமாகி ஒரு களங்கமில்லாத வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது.
அவர்கள் எல்லோருக்குமே வெறுப்பைத்தள்ளி, மகிழ்ச்சியை வாழ்க்கையில் மலர வைக்க நிறையப் பாடுபடத்தான் வேண்டி இருந்தது.
இந்தப் பதிவு
டி.டி.ரங்கனாதன் சேவை மையம்,அதை வெற்றிகரமாக நடத்திவரும் சமூக சேவகி திருமதி சாந்தி ரங்க நாதன் என்கிற உயர்ந்த மனுஷிக்கும் சமர்ப்பணம்
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
6 comments:
உதறி விடாமல்
உறுதியான மனதோடு இருந்து உறவினை சரிசெய்து கொண்டதும்
சந்தேகம் சந்தோஷமாய் முடிந்ததும்
எங்களுக்கும் நிறைவு.
எல்லோருக்கும் அத்தனை எளிதல்ல இது போல ஒத்துழைப்பு கிடைப்பது.
பாடம் சொல்லும் நல்ல கதை.
நேரமிருப்பின் உழவனின் இன்றைய பதிவினைப் பாருங்கள்:
http://tamiluzhavan.blogspot.com/2009/05/blog-post_20.html
அன்பு ராமலக்ஷ்மி, பெயர் மாற்றப்பட்ட தினேஷ்,அவன் வேலை பார்த்த கம்பனிக்கு ஒரு இன்றியமையாத அங்கமாக
உழைத்திருக்கிறான்.
அவர்களும் அவனை வெளினாடுகளுக்கு அனுப்பிப் பயிற்சி கொடுத்து,அவனை ஒரு உன்னதமான டெக்னிஷியனாக உருவாக்கி இருந்தார்கள். அவர்களுக்கும் அவன் உழைப்பு தேவையாக இருந்தது.
அந்த நிறுவனம் வளர்ந்து வந்த காலம் அது.
இது நடப்பது சாத்தியமாயிற்று.
மதுவுக்கு அடிமையானவர்கள் எப்பவுமே அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளி போல அவர்கள் மதுவை மனதால் கூட நினைக்கக் கூடாது. இன்னும் எத்தனையூ.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவைப் படிக்கப் போகிறேன். நன்றி ராமலக்ஷ்மி.
நல்ல பாடம்.
நன்றாக நடத்திட்டிங்க வல்லிம்மா ;))
நல்ல பாடமாக இருக்க வேண்டும்.
ஒரு தடவை மீண்டால் மட்டும் போதாது. எப்பவுமே கவனமா இருக்கணும்.
நன்றி கோபி நாத்.
போதையின் அழிவுகளிலிருந்து குடும்பங்களைக் காப்போம்.
என் இந்த பதிவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைபற்றி மற்றோருக்கும் தெரியப்படுத்திய ராமலஷ்மி மேடத்திற்கு நன்றி.
அன்புடன்
உழவன்
very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time.
Post a Comment