Blog Archive

Monday, May 18, 2009

சந்தேகம் என்னும் கிரகம்------3










கதிர் வெளியே வருவதைப் பார்த்துக் கொஞ்சம் தெளிவானாள்.
எல்லாம் தூங்கிட்டீங்களே. பிள்ளைகளை அழைத்துக் கொன்டு நாமாவது கடற்கரைக்குப் போகலாமா என்றாள்.


ஒன்றும் பேசாமல் அருகே நடந்துவந்துக்குழந்தைகளோடு கடலோரம் வந்தான் கதிர்.




அண்ணி நாளைக்கே நான் ஊருக்குப் போகிறேன்.இங்க ஒத்து வராது. இவர்கள் எல்லா விதத்திலும் அளவு மீறுகிறார்கள் என்று சுருக்கமாக முடித்துக் கொன்டான்.சரியென்று தலையாட்டிய கனகாவின் பார்வையில் தினேஷும் நிலாவும் பட்டார்கள்.
தங்களைப் பார்த்து நடப்பார்கள் என்று நினைத்தபோது அவர்கள் எதிர்த்திசையில் போவதைப் பார்த்துக் குழம்பினாள்.கதிரைப் பார்த்து ''நாம் போய்க் காப்பி டிபன் ஏதாவது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து நாமும்சாப்பிட்டு வரலாம் வாருங்கள்'' என்று அழைத்துச் சென்று உணவு விடுதியில் உட்காரவும்







சந்திரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. குரலில் ஒரு கரகரப்போடு தன் பெண்களைப் பார்த்து''எங்க உங்க அம்மா'' என்று ஒரு அதட்டும் தொனியில் கேட்கவும் ''தினேஷ் மாமாவோட வாக் போயிருக்காங்க'' என்று ஒருமித்த குரலில் அந்தக் குழந்தைகள் கூறின.
அதற்கப்புறம் நடந்ததெல்லாம் ஒரு பயங்கரக் கனவாகப் பதிந்தது கனகாவின்
மனத்தில்.அவள் கொண்ட அதே கோபம் இப்போது சந்திரன் கண்களில் பார்த்தாள்.நாகரீகம் விடை பெற்ற நேரம் அது. பெண்டாட்டியைப் போதையில் திட்டும் கணவனையும், அதற்கு சமமாக மறு பதில் கொடுக்கும் மனைவியையும், உதவி செய்யப் போய் மாட்டிக் கொண்ட தன் கணவனையும் ,மலங்க விழித்த குழந்தைகளையும் சமாளிக்க வெகு பாடுபட்டுத் தோற்று, கதிரின் துணையுடன் பஸ்ஸேறி வீடு வந்து சேர்ந்தாள்.
இரன்டு மணி நேர அவகாசத்துக்குப் பிறகு உறுமி வந்து நின்றது தினேஷின் வண்டி.


நீ இவ்வளவு அனாகரிகமாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் கனகா. நிலா மிகவும் வருத்தப் பட்டாள்.
ஒரு நல்ல விடுமுறை இப்படி நஷ்டப்பட்டதே என்று மனம் நொந்து விட்டாள்'' இதுதான் முதலில் தினீஷ் சொன்ன வார்த்தைகள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த கனகா,அவனை நம்ப முடியாமல், .
பார்த்தாள்.
எங்களாலா இப்படி ஆச்சு?' நீங்கள் மூவரும் குடித்து நடந்து கொண்டது அல்லவா கேவலம். அவளை அழைத்துக் கொண்டு தனியே போகவேண்டிய அவசியம் என்ன.
அனாவசியமாகச் சந்திரன் சந்தேகிக்கும்படி ஆயிற்றே'' என்று பொரிந்தாள்.
நிலாவிற்குச் சந்திரன் போக்கு பிடிக்கவில்லை. அவர்கள் பொருளாதாதார நிலைமையும் சரியில்லை. அதனால் அவர்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லத்தான் போனேன், அதிலென்ன தவறு.'

என்றவனைப் பார்த்துப் பரிதாபம்தான் வந்தது கனகாவிற்கு.
இன்னொருவர் குடும்பத்தில் எடுக்கும் அக்கறை நம் குடும்பத்தின் மீது வேண்டாமா, தம்பி ஊருக்குக் கிளம்புகிறான். அவன் சந்தோஷமாக இருக்கிறானா என்று கவனித்தீர்களா.
நாம் என்ன மேல் நாட்டவரா, தினம் குடித்தே ஆக வேண்டுமா.ஒரு அளவு திரவம் தொண்டையில் இறங்கினாலே நீங்கள் அனைவரும் மாறி விடுகிறீர்கள்!!
அதுவும் சிறு குழந்தைகள் முன் நடந்து கொள்ளும் முறையே மறந்து போகும் அளவு போதை தலைக்கேறி விடுகிறது.
இந்த வழியில் பணம் எப்படிப் போதும் ஒரு குடும்பத்துக்கு.
அவர்கள் அந்த வழியில் போய்த்தான் இப்போது உங்கள் உதவியைத் தேடும் வரை வந்து விட்டது.

பேசிக் கொண்டே வந்தவளின் கவனம் மைத்துனன் பக்கம் திரும்பியது.
'வரேன் அண்ணி, வரேன் அண்ணே'' என்றபடி அவன் கிளம்பி விட்டான். தினேஷ் என்ன சொல்லியும் நிற்கவில்லை.
கனகாவுக்கும் வருத்தம் மேலிட்டது. இயலாமையால் கண்களில் கண்ணீர்.
அதைப் பார்த்து தினேஷுக்குக் கோபமே மேலிட்டது.
''இப்ப இங்க என்ன அப்படித் தப்பு நடந்து போச்சு! போனாப் போகட்டும், என்றவனிடம்,
சந்திரனின் குழந்தைகளைகாட்டி,
இவர்கள் வீட்டிற்குப் போக வேண்டாமா என்றாள்.
நாளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றபடி அவன் தூங்கப் போய்விட்டான்.
அடுத்த ஆறு மாதங்களில் வீட்டு நிலைமை தரம் மாறியது.
சந்திரனின் வீட்டில் மது அருந்திவிட்டு வருவது வழக்கமாவிட்டது. சாலை விபத்தில்
வாகனம் நொறுங்கியது.
வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டான்.
ரித்துவின் பள்ளி வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
கனகாவின் மன நிம்மதி போய், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை,.
தினேஷின் பெற்றோர் வந்தும் ஒன்றும் சரியாகவில்லை.



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

6 comments:

துளசி கோபால் said...

கொஞ்சம் ஸ்பீடு குறைச்சால் நல்லது:-))))

குடி குடியைக் கெடுக்கும் என்பது மெய்தான்.

ராமலக்ஷ்மி said...

துளசி கோபால் said...

// குடி குடியைக் கெடுக்கும் என்பது மெய்தான்.//

பிறர் குடியையும்..:(!

கோபிநாத் said...

அடுத்து..!

வல்லிசிம்ஹன் said...

துளசி,

சொல்ல வேண்டியது

நிறைய. நீட்டினால் போர்:)
அதான் ஸ்பீட்!!!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி, தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கும் கொடிய பழக்கம். ஆரம்பித்தவமன் பிழைத்துவிடுவான். பின்னால் வந்தவன் மாட்டிக் கொள்வான்.
நேரில் பார்த்த அவலங்களை எழுத மனம் வரவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அடுத்தாப்பில கதை முடியப் போகிறது:) கோபி நாத்!!!