வீட்டில் உள்ள செடிகளொ மரங்களோ பூக்கும்போதும் காய்கள் காய்க்கும்போதும் கிடைக்கு இன்பம் தனிதான்.
இறைவன் எத்தனை வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறான்.
செம்பருத்தி, நித்திய மல்லி
டெம்பிள் ட்ரீ என்று பலவிதத்தில் பூகள் பூத்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் இங்கே பூத்திருக்கும் தங்கமரம் என்று அழைக்கப் படும் கேசியா ஃபிஸ்டுல்லா
போன வருடன் சிறிய மரமாக இருந்தது.
சென்ற வருடம் அதிக மழை என்று கேள்விப்பட்டோம். நாங்கள் அந்தச் சமயம் சென்னையில் இல்லை.
இந்த மரங்கள் அத்தனையும் தண்ணீரை உள்வாங்கிக் கொண்டு
பூக்களாகச் சொரிகின்றன இப்போது.
நன்மை சிறிதளவு கிடைத்தால் கூட இன்னும் பல மடங்காக த் திருப்பித் தரும் இயற்கை அன்னையும்,
எதையுமே எதிர்பாராமல்
அன்பு பொழியும் அன்னையும் எப்பவுமே ஏமாற்றுவது இல்லை.
ஏமாற்ற நினைப்பதும் இல்லை.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
17 comments:
மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் சாலையில் இது போன்ற பூக்களை பூக்கள் தெளித்திருக்கும் சாலைகளை ஞாபகப்படுத்தியது !
அழகிய மஞ்சள் வண்ணப்பூக்கள்
பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது :)
தங்க மரங்களை பெங்களூரிலும் நான் பார்த்திருக்கிறேன். அற்புதமாய் இருக்கும்.
//இயற்கை அன்னையும்,
எதையுமே எதிர்பாராமல்
அன்பு பொழியும் அன்னையும் எப்பவுமே ஏமாற்றுவது இல்லை.
ஏமாற்ற நினைப்பதும் இல்லை.//
உயரிய உண்மை. படங்களுடன் பதிவு அருமை. நன்றி வல்லிம்மா.
வாங்கப்பா ஆயில்யன்.
இந்த மஞ்சள் வண்ணம் காலையில்ருந்து இரவு வரும் வரை வேறு வேறு மஞ்சள் நிறைங்களைக் காட்டுகின்றன:)
அழகோ அழகு.
இதுதான் இந்த மரங்கள் பூக்கும் காலம் என்று இவர் சொன்னார். வித விதமான மஞ்சள்.
இந்தத் தங்கம் நமக்குப் போதுமில்லையா ராம்லக்ஷ்மி:))))
இதுக்கு தமிழ் பெயர் சர கொன்றை என்று நினைக்கிறேன்
முதல் படம் வேற மாதிரி இருக்கே, பச்சையாய் அது என்ன வல்லி?
இது பூப் பூக்கும் வசந்த காலம். அருமையான படங்கள்
வரணும் உஷா. இது சரக் கொன்றை இல்லம்மா. நானும் முதலில் ஏமாந்துட்டேன்.
கொன்றைமரம் இவ்வளவு உயரம் போகாதாம்.
அந்தச் சின்னச் செடில மஞ்சளா இருக்கிறது கொன்றை. ஸ்வாமிக்கு வைக்கலாம்.
முத்ல்ல இருக்கிறது நித்திய மல்லி. ம்ம்ம்ம் மகா வாசனை:)
மந்தாரையோனு நினைக்கிறேன். கொன்னைப் பூவாத் தெரியலை, பொன்னார் மேனியனே, பாடல் நினைவில் வருது. ஆனால் அந்த மிளிர் கொன்றை வேறே நிறம். சிவந்த மஞ்சள் அல்லது மஞ்சள் சிவப்பு???? அப்படி ஏதோ ஒண்ணு. இதை எங்க வீட்டிலே மந்தாரைனே சொல்றோம். என்னவோ தெரியலையே?
இங்கே தங்க அரளின்னு சொல்லுவோம்.
தினசரி பூஜையிலே எனக்கு பயன்படுது!
படங்கள் அழகு! அடுத்தத் தெருவில் இருக்கிறது தங்க மரம்..அந்த இடமே பூக்கள் கொட்டி அழகா இருக்கும்!
தங்கமரம் சூப்பர் பெயர்:-))))
இது கனிக்கொன்னை பூக்கள்.
இலக்கணமாச் சொன்னால் 'கணிக் கொன்றை'!!!
கொன்னைப்பூக்கள் வெறு சில நிறங்களிலும் வருதாம்
வரணும் கைலாஷி.
வெகு அழகான் பூக்கள். ஆனால் உயரத்தில் இருப்பதால் பறிக்க முடிவதில்லை:)
ஆமாம் கீதா இந்த நிறம் பொன் கலந்த மஞ்சள்.
இது கொன்றை இல்லை. மந்தாரை சின்ன புதர் மாதிரி இருக்குமில்லையா. சிங்கம் சொன்ன பேரைச் சொல்லுகிறேன்:)
அதற்கு விக்கி தங்கமரம் என்கிறது:)
வாசுதேவன் வரணும்
தங்க அரளியா.
இது வரை இந்தப் பூவைத் தொட்டுப் பார்க்கவில்லை.
தொட்டால் அரளிபோல இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
இன்னோரு சின்னச் செடியின் இலைகள் கூட கொன்றைப் பூ மரத்தின் இலை மாதிரி இருக்கிறது.
அட, முல்லைக்குப் பக்கத்திலியே தங்க மரம் இருக்கா!!
ஒரு பலமான காற்றடிக்கும் போது
இந்த மலர்கள் சாலையில் உருளுவதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பாதங்களும் வண்டிகளும் அதன் மேல் ஓடிவிடும்.
துளசிம்மா, இது விக்கி பீடியா வச்ச பேரு:)
கேஷிய ஃபிஸ்டுலாவாம் தாவர இயல் பேர்.
நமக்கென்ன வீட்லியே தங்க மரம் வச்சிருக்கோம்.:)
Post a Comment