அமைதிப் புறாக்கள்
------------------------------------
கறுப்பு வெள்ளை சாம்பல்
வண்ணங்களோடு இரைதேடி
பறந்து அமர்ந்து ஓடி
அலையும் உங்களுக்கு
உங்கள் முன் ஒரு சமுதாயம் சீரழிவது தெரியவில்லையா.
வெடிகளும் குண்டுகளும் உங்களுக்குப் பழகி விட்டனவா.
சத்தமும் புகையும் கண்ணில் உறுத்தாத பரமானந்த நிலைக்கு நீங்கள்
சென்றிருக்க வேண்டும்.
இல்லையெனில் இந்திய நகரமொன்று அழுது கண்சிவந்து
நொந்து அலறித் துவளுகையில்,
புறாக்களே உங்களுக்கு அங்கே இரை தேட எப்படி முடிந்தது.
மனிதனின் கொடூரம் உங்களிடம் காற்றொடு சேர்ந்து கலந்து விட்டதோ.
காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.
நொந்த உள்ளங்களுக்கு உங்கள் இறகுகளால்
அமைதி தூவுங்கள்.
25 comments:
//இந்திய நகரமொன்று அழுது கண்சிவந்து
நொந்து அலறித் துவளுகையில்,
புறாக்களே உங்களுக்கு அங்கே இரை தேட எப்படி முடிந்தது.
//
காணும் நிகழ்வுகளுக்கிடையில் அங்குமிங்கும் பறந்து திரிந்த புறாக்கள் கவனம் பெற்றது கவிதையாக்கியிருக்கீர்கள் அம்மா!
இரை தேடல் மட்டுமின்றி, அழகாய் அமைதியாய் அமர்ந்திருந்த இடமின்று அலங்கோலமாகிப்போய்விட்டதே என்ற பரிதவிப்பும் கூட பார்க்க முடிகிறது :(
அன்புச் சகோதரி வல்லி
மனம் கனக்கிறது - நடக்கும் கொடுமைகளைத் தாங்க இயலவில்லை.
கவிதை அருமை - அழகுச் சொற்கள் - நல்ல சிந்தனை
//மனிதனின் கொடூரம் உங்களிடம் காற்றொடு சேர்ந்து கலந்து விட்டதோ.//
//நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.
நொந்த உள்ளங்களுக்கு உங்கள் இறகுகளால்
அமைதி தூவுங்கள்.//
வைர வரிகள் - ஆழ்ந்த கருத்து
நல்லதையே நினைப்போம் - நல்லது சீக்கிரமே நடக்கும்
//காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.//
மனிதம் மலரும் அந்த காலம் விரைவில் வரக் காத்திருப்போம் நம்பிக்கையோடு.
புகைப்படங்களில் பார்த்தேன்! தீயும் நெருப்புமாய் வீச, சாம்பல் புறாக்கள் அங்கேயும் பறக்கும் போது, இதைத் தான் நினைச்சிக்கிட்டேன்! அமைதியான மும்பை இந்திய நுழைவாயிலில் பறக்கும் சாம்பல் புறாக்களும் நினைவுக்கு வந்தன! எல்லாமும் சேர்த்து நீங்க சொல்லிட்டீங்க!
ஆயில்யன்,அவைகள் இறை தேடுவதோடு அங்குமிங்கும் அல்லாடியது
மனதை க் கலங்க வைத்தது. ஒரு வெடிச்சத்தம் அத்தனையும் பறக்கும். மீண்டும் வந்து அமரும்.
சூழ்நிலையில் நெருப்பில் வெந்து போய்விடப் போகிறதே என்று தவிப்பாகவும் இருந்தது.
குழந்தைகளை நாம் நெருப்பு பக்கத்தில போகாதேன்னு சொல்லலாம்.
இவைகளுக்குக் கவிதைத் தூது தான் சொல்லமுடியும்.
நன்றி ஆயில்யன்.
வார்த்தைகளில்லை வல்லிம்மா...தொலைக்காட்சியில் பார்க்கப்பார்க்க மனசு பதறுகிறது.
மனதின் தவிப்பை வார்த்தைகளில் அழகாகச் சொல்லியிருக்கீங்க...
அன்பு சீனா, தொலைக்காட்சி பார்க்கவேண்டாம்னு நினைத்தாலும் ,
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை/.
பயமும்,கலக்கமும் தூக்கம் கூட வரவில்லை.
என்ன ஆகிறதோ என்ன ஆகிவிட்டதோன்னும் கவலை. ஒருதடியா இப்ப முடிந்து விட்டதுன்னு சொல்றாங்க. கடவுள் புண்ணியத்தில
நாடு காப்பாத்தப் படணும். இப்படியா நாம் ஏமாறுவோம்!!
அநியாயமாக இருக்கிறதே:(
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சீனா.
அன்பு ராமலக்ஷ்மி, நெஞ்சு பொறுக்குதில்லையே பாட்டு நினைவுக்கு
வருதில்லையா.
என்ன ஒரு அநியாயம் பாருங்கள். யாருக்கு யார் பிணை. நமக்குச் சுதந்திரமா கிடைத்திருக்கிறது???
இன்னுமொரு கட்டபொம்மன், இன்னும் ஒரு பாரதி, இன்னுமொரு காந்தி வந்தால் கூட
நிலைமை மாறுமா என்று சந்தேகம் வருகிறது. மனித மனம் இறுகி விட்டது.
இளகவேண்டும் இறயருள் வேண்டும்.
எனக்கு அந்தப் புறாக்களைக்கைப் பார்க்கப் பார்க்க துன்பம் அதிகரித்தது ரவி. இதற்கு உண்டான் ஒற்றுமை கூட நம்மிடம் இல்லையே என்றுதான் தோன்றியது.
அதுகளுக்கு வேறு இடம் தேடிப் போகக் கூடத் தெரியவில்லை. ஏனெனில் அந்த இடம் அவர்கள் நாடு!!
பரிதாபம்.
//காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.
நொந்த உள்ளங்களுக்கு உங்கள் இறகுகளால்
அமைதி தூவுங்கள்.//
ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது பல இன்னுயிர்களைக் காவு கொண்ட பின்னர். அனைவருக்கும் எவ்வகையில் ஆறுதல் சொல்ல முடியும்? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்தால்! :((((((((
//காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.//
அந்த நாளுக்கான ஏக்கப் பெருமூச்சுடன்..:(
;(
Thanks
அந்த புறாக்களைப்போல இருந்திருக்கலாமே ன்னு பார்த்தப்ப எனக்கும் தோணிச்சு.. எல்லாரையும் அந்த காட்சியில் சிறகடித்து பறந்துகொண்டிருந்த புறாக்கள் பாதிச்சிருக்குன்னு புரியுது...
அன்பு சுந்தரா,எல்லொர் உணர்வுகளையும் தட்டித் தாக்கிவிட்டது இந்த நிகழ்வு. 5000 நபர்களைக் கொல்லத் திட்டத்தோடு வந்தார்களாம். கடவுளே!!!
உண்மைதான். நிலை கெட்ட்டுதான் போய்விட்டார்கள் மாந்தர்கள்..
கீதா , மனம் கலங்கிக் கிடக்கிறது.
தமிழ் பிரியன், எல்லாம் சரியாகி விடும். இவ்வளவு நபர்களின் தியாகம் பலனில்லாமல் போகாது. ஆனால் அவர்களை இழந்தவர்கள் வயிற்றெரிச்சலை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது:(
தி.ரா.ச, நன்றிம்மா.
உண்மைதான் முத்து.
அன்பு என்ற உணர்ச்சி எங்கயாவது ஓடி விட்டதா.
நம் குழந்தைகளின் எதிர்காலம் என்ன. என்னவெல்லாமோ கேள்விகள்.
ம்ம்ம்..பாவம் புறாக்கள்! என்ன நடந்தாலும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே! நாமும்தான் தூங்காம இருந்தோமா, சாப்பிடாம இருந்தோமா? அப்படியே இருந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள்? அப்புறம்?
நடக்கிறது நடக்கும். அடுத்த வேலையை பார்க்கிறதுதான் யதார்த்தம்.
:-(
வாசுதேவன், நான் புறாக்களை உவமையாகத்தான் எடுத்துக் கொண்டேன்.
மீடியா மனிதர்கள் செய்தியை முந்தித் தருவதற்காக, இதை ஒரு ஹைடென்ஷன் டிராமாவகச் சித்தரித்து அந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தது,அதை மீண்டும் மீண்டும் அந்த ஹாரர் எஃபெக்ட் போகாமல் நடத்திச் சென்றது இதெல்லாம் பார்த்துத்தான்,புறாக்களைக் கூப்பிட்டேன்.:)
நான் ஒரு கு.வி!
:-S
இதுக்குத்தான் இணைய மொழில பேசத்தெரியணும்னு சொல்றது.
இப்ப கு.வி என்ற சொல்லுக்குக் கீதா கிட்ட அர்த்தம் கேட்கணும். சரிம்மா வாசுதேவன்:)
மனசு கனத்துப் போச்சுப்பா.
அதுகளும்தான் எங்கே போகும்? போகணுமுன்னும் தோணாதே.....அதுகள் மனிதர்களா என்ன? (-:
ஆமாம் துளசி. நூற்றாண்டுக் காலமா அங்க இருக்குங்க.
அதுகளுக்குப் போக இடம் இல்லை. ஆனால் அந்தத் தீயில் வெந்து போகப் போகிறதேன்னு வருத்தமாயிருந்தது.
அதான் வேற இடத்துக்குப்போன்னு சொல்ற மாதிரி எழுத ஆரம்பித்தேன். தொடரவில்லை.
நாம் மட்டும் ஓடப் போகிறோமா. இந்தியாவில் தான் இருக்கப் போறோம்!!
Post a Comment