வேடிக்கையில் பிடிக்க முடிந்தது சிலவற்றைத்தான்.....
அருவிக்குப் பின்னால் கட்டப்பட்ட பாதை.குகை வழி. கூகிள் உதவி.
அருவியின் பின் இருக்கும் பாதையின் வரைபடம்
மிஸ்ட்,மிஸ்ட்,மிஸ்ட். இந்தத் திரை எழும்பும் வேகம்ம்ம்ம்.ஒரு பெரிய கோபுரம் மாதிரி வளர்ந்து மேலே மேகங்களாக அலைய ஆரம்பிக்கும்.
SKYLON TOWER .இங்கே மேலே ஏறவில்லை.நேரமின்மை தான் காரணம்.
இந்தப் பயணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு சந்தோஷம் ,அந்த சாரல் மேலே தெறித்து உள்ளம் குளிர வைத்தது.
ஏதோ ஒரு சுதந்திரம் இங்கே கிடைத்தது என்றே நம்புகிறேன்.
இந்த பொம்மைப் பெண் மீண்டும் பதிவுக்கு வந்துவிட்டாள்.
விடுதியிலிருந்த புகைப்படம்.
அந்திவேளை விளக்கு அலங்காரம்.இருகரைகளிலும் மினுக்குகின்றன. விடுதி ஜன்னலிலிருந்து எடுத்த படம். பறவைப் பார்வையா இது:)
மாலை எட்டு மணிக்கு அருவியின் மேல் வண்ணவிளக்கு ஒளி பாய்ச்ச ஆரம்பிக்கிறது. முதல் வண்ணம் வெள்ளை.
அருவியும் பச்சை.கரைகளும் பச்சை.நடுவே இந்தப் பனிச்சாரல் மட்டும் வெள்ளையும் கருப்புமாக ஆவியாகிறது.
ஒண்டேரியோ ஏரிக்கரையோரம்.
இரவு படுக்கப் போவதற்கு முன்னால் க்ளிக்கியது.
மழையில் அருவிக்குப் பின்னால் போவது தடைப்படுமோ என்று சந்தேகம் வந்தது.
நான் நினைத்தபடி அது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. அருவிக்கு மிக அருகில் போகலாம். ஆனால்
ஒரு மேடையில் நின்றுதான் சாரலை அனுபவிக்க முடியும் என்று தெரிந்தது.
நான் என்னவோ குற்றாலம் அருவிக்குப் பின்னால் போவது போல இங்கேயும் போகலாம்
என்று கனவு கண்டு இருந்தேன்.
நாம என்ன ஆண்டாளா:))
கனடா நாட்டில் இது ஒரு பிரமாதனமான ஏற்பாடு.
மலையைக் குடைந்து,அருவிக்குப் பின்னால் சுரங்கம் அமைத்து
நாலைந்து இடங்களில் அருவி விழும் இடம் வரை போக வழி வகுத்து இருக்கிறார்கள்.
போகும் வழியெல்லாம் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
மேலே படபடக்கும் நதியின் ஓசை.
மஞ்சள் ப்ளாஸ்டிக் உடை எல்லோருக்கும் கொடுத்திருந்தார்கள்.
ஒரே ஒரு இடத்தில் கீழே இறங்கப் படிகள்.
வெளியே வந்தால் இடியோசையுடன் அருவி விழும் ஓசை.
இந்த அனுபவத்தை எழுத வார்த்தைகள் எனக்குக் கிடைக்க மறுக்கின்றன.ஒரு அரை மணி நேரம்
இங்கே செலவழித்தோம்.
சின்னவன் அருவி சத்தத்துக்குப் பயப்படவில்லை.அம்மாவோடு ஒண்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தான். பெரியவனுக்கும் எனக்கும் கண்ணில் இருக்கும் கண்ணாடி நன்றாகப் பார்ப்பதைத் தடை செய்தது.!!
கண்ணாடி லென்ஸெல்லாம் தண்ணீர் தெறித்து பார்க்க முடியவில்லை.
நானும் அவனும் ஜோடி சேர்ந்து கொண்டோம். அருவியின் மிக அருகில் நின்று கண்ணாடிகளைக் கழற்றி விட்டோம்.
இப்போது நாங்களும் நயகராவும் மட்டுமே:)
எப்பவுமே வராத கோபம் என்மேலேயே வந்தது.
கண்களை நன்றாகப் பராமரித்திருந்தால் இப்போது
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் இந்த மாதிரி அழகான
அற்புதமான அனுபவத்தை இன்னும் கூர்மையாகக் கவனித்திருக்கலாம். இல்லையா!!
கண் பழுதுபட்ட பிறகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை:)
ஒரு நிமிடம் தான்!!!.

நயகரா மேலே சிந்திக்க விடவில்லை.குழந்தைகளாய் அங்கே இருந்துவிட்டு,மீண்டும்
பெரியவர்களாய் மேலே ஏறிச் சாப்பாட்டுக்கு விரைந்தோம்.
அடுத்த நாள் பயணம் டெட்ராய்ட்டுக்கு.
அங்கிருந்து மீண்டும் சிகாகோ வந்தாச்சு.வண்டியும் பழைய பொலிவோடு காத்திருந்தது.
நல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
நயகராவை நினைவுகளில் மீண்டும் சுவைத்தபடி இதோ பதிவும் இட்டுவிட்டேன்.
நன்றி எல்லோருக்கும்.

25 comments:
என் பதிவு இணையத்தில் தெரிய கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.என்ன பிரசினையோ தெரியவில்லை.பார்த்தவங்க சொல்லுங்கப்பா.;)
விதவிதமாய் நயகரா புகைப்படங்கள்!
இருந்த இடத்திலிருந்தே ரசித்த நாங்கள்தான் சொல்லவேண்டும் உங்களுக்கு நன்றிகளை...!
நன்றிகளுடன்...!
(உண்மைதான்! உங்களது பதிவுகள் திறக்கையில் சில நிமிடங்கள் தாமதிக்கின்றது! )
//நல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,// நல்ல பல படங்களையும் பார்வைக்குத் தந்திருக்கிறீர்கள். அருமை.
//என்ன பிரசினையோ தெரியவில்லை.பார்த்தவங்க சொல்லுங்கப்பா.;)//
சில காலமாகவே உங்கள் பதிவு திறப்பதற்கு வெகுநேரம் பிடிக்கிறது. எனக்கு மட்டும்தான் இப்படியா எனத் தெரியவில்லையே வல்லிம்மா.
ஆமாம்! வல்லி! எனக்கு வரவேயில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி பண்ணி விட்டு, தமிழ்மணம் வழியாக இல்லாமல் நேரடியாக
www.naachiyaar.blogspot.com டைப்
செய்துதான் பார்க்கமுடிந்தது. இவ்ளோ
சிரமப்பட்டதுக்கு அருமையான பதிவு, படங்களுடன்.
ஆயில்யன் வரணும்மா.
கொத்ஸ் முதல்லியே சொன்னார். கணினியில் தொந்தரவோ என்று நினைத்தேன். அது இல்லை.
வேற கோட்(code) புதுப்பிக்க வேண்டுமோ தெரியவில்லை. செய்து பார்க்கிறேன்.
நல்ல எழுத்தாளர்கள் இங்கே நயாகரா வந்திருந்தால் இன்னும் அழகாக விவரித்து இருப்பார்கள்:)
ரசித்ததற்கு மிகவும் நன்றிம்மா.
வரணும் ராமலக்ஷ்மி.
நீங்க எல்லாரும் நயகரா வந்து அனுபவிக்கணும். எங்க பசங்க(பொண்ணைத்தவிர ) ரெண்டு பேரும் இன்னும் பார்க்கவில்லை.
பார்க்கலாம்.:)
ஓஹோ!!!!!!
அதானே!! இந்தியாவிலயே இன்னும் தாஜ்மகால் பார்க்கவில்லை:)
அப்ப இதுக்கு என்ன மருந்துன்னு சுப்பையா சாரைத்தான் கேட்கணும்:)நன்றிம்மா.
நானானி, வரணும்மா.
உங்களோட இது ஐந்தாவது நபர், பதிவைப் பற்றி சொல்வது. ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன்.
பாராட்டுகளுக்கு நன்றிப்பா.
அம்மா, சரியாச் சொன்னீங்க. அந்த அருவியில் நனையும் பொழுது எனக்கு வந்த உணர்ச்சியும் சுதந்திரம்தான். கனேடியப் பக்கம் இன்னும் போகலை. ஆனா அமெரிக்கப் பக்கத்திலும் இப்படி செய்து இருக்கிறார்கள். இந்த அருவி மேட்டர் பத்தி ஒரு பதிவு போடணும். போடலாம்.
அதே தான் கொத்ஸ்.!!
சென்னையில் பீச் அலைகள் காலைத் தொடும்பொழுதும் இந்த உணர்வு சிறிது வரும்.
இந்த அருவியில் அருகே நிற்கும்போது பாரதி படமும் பாடல் நிற்பதுவேயும் நினைவு வந்தது:)
நீங்க ஹரிக்கேன் டெக் போனீர்களா??
இந்த சைடிலிருந்து அங்கே நிற்பவர்களைப் பார்க்க முடிந்தது.கட்டாயம் ஒரு லாங் வீகெண்டில் போய் வாருங்கள்.குழந்தைக்கும் ஓத்துக்க வேண்டும்.அதனால் கோடையிலேயே போகலாம்.
அருமையான படங்கள் அம்மா. எனக்கும் ஒவ்வொரு முறை நயாகரா போகும் போதும் இந்த 'அருவிக்குப் பின்னால்' போகவும் அமெரிக்கப்பகுதியில் இருக்கும் 'மணப்பெண் முகத்திரை அருவியில்' நனையவும்/குளிக்கவும் ரொம்பப் பிடிக்கும். இந்த இரண்டிற்காகவே இன்னும் பத்து முறை கூட நயாகரா சென்றாலும் செல்வேன். :-)
குமரன் வரணும்மா. ஓ!அது மணப்பெண் முகத்திரை யா??
நல்ல பெயர்தான்.
மெயிட் ,ப்ரைட்!!
தேவலை நல்லாத்தான் பெயர் வைக்கிறாங்க.
//நனையவும்/குளிக்கவும் ரொம்பப் பிடிக்கும்//
குளிக்க முடியுமா!!!!
நனைந்தாலே குளித்தமாதிரிதானே..
நல்லாப் போயிட்டுவாங்கம்மா.
வல்லி,
இந்தப் பயணக்கட்டுரைதான் ரொம்ப அட்டகாசமா இருக்கு.
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.
ஹ்ம்ம்.பாருடா.
துளசி.நீங்களே சொன்னப்புறம் அப்பறமா அப்பீலே இல்ல....
சில சமயம்தான் இந்த உற்சாகம் வருது.
அதுவும் உங்க பின்னூட்டம் அட்டகாசம்தான்:)
நயாகரான்னாலே எனக்கு நினைவுக்கு வர்ர பாட்டு "மலைராணி முந்தானை சரியச் சரிய"ன்னு வாணி ஜெயராம் பாடுறதுதான். கவியரசர் அருவியை பெண்ணோடு ஒப்பிட்டு எழுதீருப்பாரு.
காதல் விட்ட மூச்சு இன்று கருகிக் கருகிக் காற்றாகி
காதலியின் கண்ணீர்தான் பெருகிப் பெருகி நீராகி
மேகம் என்னும் தோழி வந்து கனியக் கனிய மொழி பேசி
தாயை விட்டு ஓடிச் செல்லும் பெண்ணைப் போலே நழுவி.....
மேடை விட்டு ஆடிச் செல்லும் மென்மைதானோ அருவி...
அது உண்மைதான்னு படங்களும் சொல்லுது.
வரணும் ராகவன்.
நயாகராவைப் பார்க்கும்போது ஒரு சிம்ரன் பாட்டும்...ஏதோ கடிதம்னு வரும்.
நீங்கள் சொல்லும் வாணிஜெயராம் பாட்டு அப்படியே அருவி மாதிரி துள்ளித் துள்ளி வரும்.
கே..ஆர்.விஜயாவின் முகத்தோடு பாவனையோடு அந்தக் குரலும் ஒத்துப்போகும்.
நீங்கள் பாடல் அருமையாகக் கொடுத்திருப்பதால் உடனே அதைக் கேட்கத் தோன்றுகிறது.
நன்றிம்மா.
அனைத்து படங்களும் அருமை நண்பரே !!!
அனைத்து படங்களும் அருமை நண்பரே !!!
வாங்க பாலா.
உங்க பெயர்லியே ஸ்டில்ஸ் இருக்கே!!
நான் நண்பி.அம்மான்னு சொன்னாக்
கூட போதும்.
ரொம்ப நன்றிம்மா/.
ஜிரா சொல்வது தான் எனக்கும் ஞாபகம் வந்துச்சு! சரி வல்லிம்மா, தீபாவளிக்கு வந்திடுவேன் நான். அப்போ சென்னை வந்து உங்க கையால கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட வருவேன், ஓக்கேய்!!!
அபி அப்பா,நல்லா வாங்க.
நாங்கதான் அங்க இல்லை.;(
சென்னை வர டிசம்பர் ஆகும்.
சாரிம்மா.
நான் துபாயிலியே வீட்டுக்கு வந்தா செய்து தரேன்.
ந்நவம்பரில் அங்க வருவோம். கடவுள் கிருபையில்.
அருமையான பயணக்கட்டுரை வல்லி, நேரில் பார்த்த உணர்வும், நயாகராவின் சப்தமும் நீங்கள் எழுதும்போது உணர முடிகின்றது. எனக்குப் பதிவைத் திறக்க நேரம் ஆகவில்லை, சரியாகாவே இன்று வந்தது. அதான் எல்லாருக்கும் நல்லா இருந்தா எனக்குச் சரியா இருக்காது போலிருக்கு! எல்லாருக்கும் சரியில்லாதப்போ எனக்குச் சரியா இருக்கு! :))))))))))
கீதா வரணும்மா.
ராகவன் எப்படி ஒரு அருமையாப் பாட்டு போட்டுவிட்டார் பாருங்க.
நேரம்தான்:)
துளசி சொல்றா மாதிரி எல்லோருக்கும் ஒருவழின்னா நமக்கு ஒரு வழி.
நல்லவேளை படிக்க முடிஞ்சதே. நன்றிப்பா.
இந்தப் பயணக்கட்டுரைதான் ரொம்ப அட்டகாசமா இருக்கு.
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
//என் பதிவு இணையத்தில் தெரிய கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.//
i guess, bcoz of pictures loading time.
அம்பி,
ஆணி முடிஞ்சுதா.
நீங்கள் சொல்வது சரிதான். படங்களாலே கூட இது போல ஆகலாம்.
அதென்னது !! எல்லோருக்கும் நான் மங்களம் பாடினது ரொம்பப் பிடிச்சீருக்கு:))))))))
Post a Comment