நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது.
நல்லவங்க பிறந்திருக்காங்க.
இந்த வருடம் இன்னிக்கு மஹாலய அமாவாசை. நவராத்திரிக்கு ஏற்பாடு செய்கிற நாள்.
சென்றவர்களை நினைத்து வணங்கும் நாள்.
லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.
இன்னும் கூகிளில் தேடினால் ஏகப்பட்ட பிரபலங்கள்,நடிக நடிகையர்
பிறந்திருக்கிறார்கள்.
அந்தக் கால கனவுக்கன்னி ப்ரிஜிட் பார்டொ பிறந்து மயக்கி இருக்காங்க.
தி.ரா.ச சார் 100ஆவது பதிவு போட்டு இருக்கிறார்.(கௌசிகம்)
இயற்கை, தமிழ்,சினிமா,சிவாஜி கணேசன்,மகள்,பெற்றோர்,அக்கா,அண்ணா,மனைவினு எல்லோரையும்,எல்லாவற்றையும் நேசித்த,
வாழ்க்கையை ரசித்த என் தம்பியும் பிறந்தான்.
இன்று அவனுக்கு 56 வயது பூர்த்தியாகிறது.
நீ கொடுத்த,காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் நன்றி தம்பி.
இன்னும் ஒரு உதவி செய்ய நீ மறந்துவிட்டாய்.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.
வாழ்த்துக்களுடன்,
உன் அன்பு அக்கா.
17 comments:
?!
என்ன சொல்றதும்மா...?
நானும் வாழ்த்துக்களையே சொல்லிக்கறேன்..
அன்பு தமிழன்,
வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் இப்படி ஒரு புலம்பல் பதிவுகள் போடுவதை நிறுத்த முயற்சி செய்ய நினைக்கிறேன்.
யாரையும் வருத்துவது என் முயற்சியில்லை. ஒரு நினைவலை அவனுக்காகப் பதிகிறேன்.
நன்றிம்மா. அவன் வாழ்கிறான் எங்களுக்குள்:)
என்னில் ஒன்றரை வயதே மூத்த சகோதரன் மறைந்து ஆகிறது வருடங்கள் இருபத்தைந்து.
//அவன் வாழ்கிறான் எங்களுக்குள்//
வருடங்கள் எத்தனை ஆனாலும் இந்த வலிகள் மறைவதில்லை.
//யாரையும் வருத்துவது என் முயற்சியில்லை.//
வருத்தங்களைப் பகிரும் போது வருகிறது ஒரு ஆறுதல்.
படத்தில் இருப்பது எந்த ஊர்க் கோவிலம்மா?
ஏதோ சொல்லணும்னு தோணுது..ஆனா, வார்த்தைகள் இல்லை..ம்ம்..உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் வலிகளை!!
அன்பு ராமலக்ஷ்மி,
அட ராமச்சந்திரா.
அம்மாவுக்கு எத்தனை வருத்தம்.
இவர்கள் புண்ணியவான்கள் மா.
கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி உங்களுக்கு.
//வருத்தங்களைப் பகிரும் போது வருகிறது ஒரு ஆறுதல்.//
உண்மை!
நினைவுகளுடன் இந்த ஆறுதல்களையும் கொண்டு மனம் கொஞ்சமாய் நிறைகிறது!தெளிகிறது!
ஜீவா, இங்கே சிகாகோவில் ஆரோரா என்கிற இடத்திலிருக்கும்
ஸ்ரீனிவாசர் கோவில்.
போனபோது நான்கு படங்கள் எடுத்தேன்.
ரொம்ப அழகு.
எஸ்பெஷலி நோ ஜெருகண்டி:)
ஆகா, அரோரா கோவிலா.
டென்னஸி நாஷ்வில் மகாகணபதி கோவிலின் முகப்பும், கிட்டத்தட்ட இப்படியே இருக்கும். அதே யானை, தேர், சக்கரம் என!
வாங்கப்பா சந்தனமுல்லை.
வந்ததே போதும்.
என் மனது நிம்மதிக்காக எழுதினேன்பா.
ஆமாம் நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.
நினைவில் நிறுத்தி அவனை மகிழ்வாக நினைக்கவேண்டும்.
நன்றி ஆயில்யன்.
:((((( வாழ்த்துகளா, வருத்தங்களா?? என்ன சொல்றது புரியலை வல்லி!
கோவிலைப் பார்த்ததும் எனக்கும் தோன்றியது நாஷ்வில் பிள்ளையார் கோயில் தான். அதுவோனு தான் நினைச்சேன் முதல்லே, அப்புறமாய்ப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தெளிந்தேன். நல்லாவே படம் எடுக்கறீங்க! ப்ரொஃபெஷனல் தோத்தாங்க. எங்க பெண்ணும் ஒரு புகைப்படக் கலை நிபுணிதான், என்றாலும் அதிலேயே மேலும் முயலவில்லை என்னமோ!!!
ஜீவா, கீதாவும் கணபதியைக் கூப்பிட்டு விட்டார்கள்.:)
கீதா வாழ்த்துகளே அவனுக்குப் போகட்டும்.
ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். இப்படி
வலிதெரியாமல் கடவுளை அடைந்தவர்களுக்கு மறுபிறவி ரொம்ப பக்தியான குடும்பத்தில் பிறப்பதுதானாம்.
அதனால் அவன் சந்தோஷமாகவே இருப்பான்.
Post a Comment