ஃப்ளாக்ஸீட்
நீல பெர்ரி
சிவப்புத் தக்காளி
நம்ம இருதயம்.(என்னுடையதல்ல)
நீல பெர்ரி
சிவப்புத் தக்காளி
நம்ம இருதயம்.(என்னுடையதல்ல)
பயமில்ல,
ஐந்து நிமிடம்தான்.என்ன இருக்கு,என்ன அதிகமா இருக்கு......
இதெல்லாம் டைப் செய்து கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுடெடுத்த்க் கொடுத்துவிட்டார்,.
என்னோட இருதயத்துக்கு இப்போது 70 வயதாம்:)
இந்தக் கால்ஷியம் கொஞ்சம் அதிகமா இருக்காம்.
அது இருதயத்தோட இடது பக்கத்தில நாலு இடத்தில இருக்காம்.
சரிப்ப்பா அது மாட்டு ஒரு ஓரத்தில இரூக்கட்டும் .இனிமேகாஅல்ஷியம் மாத்திரை சாப்பிடலைன்னு சொன்னேன்.
அதுக்கு அவங்க நாங்க சொல்ற கால்ஷியம் வேற.
நீங்க சர்க்கரையை விட்டீங்க,இப்ப உப்பு,சிகரெட் எல்லாம் விட்டுடுங்கன்னு சொன்னாங்க,.
சரின்னுட்டேன்.
நமக்குத்தான் அந்த வாசனையே பிடிக்கிறதில்லையே:)
ஒரு ஹைரிஸ்க் பட்டம் போட்டு 150 டாலர் வாங்கீக் கிட்டு,
ம்ம்,ஜாக்கிராதையா இருங்கனு அனுப்பிட்டாங்க.
அது வெள்ளைக்காரங்க ஆஸுபத்திரி அப்படித்தான் சொல்லுவாங்க,
அதூக்காக நம்ம இந்திய வம்சாவளி வைத்தியரிடம் போனோம்.
அந்த அம்மா, ரெகார்டெல்லாம் பார்த்துட்டு
ஆமாம்மா,கொலஸ்ட்ரால் கொஞ்சம் நிறைய இருக்கு.
அதுக்கு மருந்து கொடுக்கிறேன்.
தினம் ஒரு மணி நடங்க.
பழம் சாப்பிடுங்க. தட்டை,முறுக்கு,ஊறுகாய் எல்லாம் வேண்டாம்.(ஹையோ)
பழுப்பு அரிசி,சப்பாத்தி இதெல்லாம் ந்நிறையச் சேர்த்துக் கோங்கன்னு ஆதரவா விளக்கினாங்க.
என்ன இருந்தாலும் நம்ம வைத்தியர் மாதிரி வருமா சொல்லுங்க:0)
சரின்னு வீட்டுக்கு வந்தா,சென்னையிலிருந்து வந்தவங்க, தேன்குழல்,
சீடை,தட்டை எல்லாம் ஆசையாக் கொண்டுவந்து கொடுத்திருக்காரு. அதில புளீக்காய்ச்சலும்,தக்காளீத்தொக்கும் அடங்கும்.
ப்பிரச்சினைன்னு வந்தா
சமாளித்துதானே ஆகணும்.
சாப்பிடக்கூடிய பொருட்கள்
ப்ளூபெர்ரி,
தொண்டங்காய் கறி,
ஃப்ளாக்ஸ் சீட் ஆயில்,
ஆலிவ் ஆயிலில் சமையல்,
வறட்டுத்தனமா இங்க ஒரு பிஸ்கட் இருக்கு. தவிட்டில தட்டினா மாதிரி. அதை சாப்பிடலாமாம்.
பயறு,சேத்துக்கலாம்.
ஆனா வேர்க்கடலை ஆகாது
பாதாம் நாலு சாப்பிடலாமாம்.
இன்னும் தேடிக்கொண்ட்டு இருக்கிறேன். நடூவில உங்களூக்கும் ஒரு ஆவலாதி பதிவு போட்டுடலாமேனு வந்தேன்.
உங்களுக்குத் தெர்ரிந்ததை சொல்லுங்க.
ஆங் நோ தயிர்சாதம்:(
மறக்கக் கூடாது.
26 comments:
ஒண்ணுமில்லைன்னு சொல்லிடாங்களே...அடடா, இதயக் கமலத்தில் என்னவிருக்கு என்று யாரும் கண்டுபிடிக்கலையா! :-)
இப்படியெல்லாம் பயமுறுத்தினால் எப்படி?
தட்டை, சீடை முறுக்கை விடமுடியாது.
மூணேமூணு திராட்சை சாப்பிடலாமுன்னு எங்க வெள்ளைக்கார டாக்குட்டர் அம்மா சொல்லி இருக்காங்க.
எதுக்கு அதுவும்? வேணாமுன்னு சொல்லிட்டேன்.
ஆனாலும் உடம்பைப் பார்த்துக்கணும்தான். இல்லேன்னா பதிவு எழுத மூளை(??) வேலை செய்யாது!!!!
என்ன இருந்திரூக்கும்னு சொல்லத் தெரீயலை அவங்களுக்கு.
ஜீவா,
அவரு பேர்ரு ஜோ நிக்கலஸ் அவருக்கு லக்ஷ்மியோ, இல்லை எங்க வீட்டுக்காரர் உருவமோ தெரிந்திருக்குமான்ன்னு சந்தேகம்தான்
ஆமம்பா.
துளசி!
நமக்கு இந்தப் பதிவு ஏழுதற பெரிய்ய பொறுப்பு இருக்கே.:)
சுவாரஸ்யமா ரெசிபீஸ் கிடச்சிருக்கு:)
தட்டை சீடை தேன்குழலையாவது விடுங்க..பார்சல் அனுப்பி வைத்திட எத்தனையோ பேர் :) இருக்கோம். தயிர் சாதமும் கூடாதாமா:( ?
வெல்கம் டு தி க்ளப்!!
வாங்கப்பா, ராமலக்ஷ்மி.
தயிர்சாதம்னா கட்டித்தயிர்:0
ஸ்கிம் மில்க்ல தயாரித்த மோர் சாதம் ஓகே:0)
எனக்காச்சு இதுக்காச்சு பாத்துடலாம்:)
நினைச்சேனே!!!
நேத்திக்கே இந்த பயமுறுத்தல் பட்டாளத்தைப் பார்த்ததுமே உங்களைத்தான் நினைச்சேன்.
கொத்ஸ் சங்கத்துக்குப் போறோம்னு:0)
ஹிஹி, கடோசியா எங்க ஊருக்கு வந்துட்டீங்க! நாக்குல பல் போட்டு எனக்கும் கொழுப்புன்னு ஒரு மருத்துவர் அம்மா சொல்லிடுச்சே! நாங்க விடுவோமா, எத்தனை கொழுப்புன்னு காமிச்சிடுவோம்னு இந்த வாரம் மட்டும்: வடாம் ஒரு நாள், பஜ்ஜி ஒரு நாள், ஸ்பிரிங் ரோல் ஒரு நாள்னு சும்மா பட்டைய கிளப்பிட்டோம்ல!
நான் மருந்து எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், நடை, இரவு உணவு சாலட், தயிர்சாதம்;-) சூரிய நமஸ்காரம் தினந்தோறும். (12 செய்யச் சொல்கிறார்கள், நாளின் நல்ல தொடக்கம்!)
இத்தனை நல்லவங்க இருக்கிற கூட்டத்தில நானும் சேர்ந்துட்டேனா.:)
வாரத்தில ஒரு நாள் ஒரே பஜ்ஜி சாப்பிட்டா என்ன???:)
சூரிய நமஸ்காரத்துக்கு நல்ல உடல் வாகு வேணும் இல்லையாப்பா.
இரவு சாலடா!!நல்லதுதான். வெயிட் குறைந்திருக்குமே.
நன்றி கெ.பி. யோஜனை நல்லா இருக்கு.
//தட்டை,முறுக்கு,ஊறுகாய் எல்லாம் வேண்டாம்.(ஹையோ)
//
அனேகமா அந்த டாக்டரூ உங்க பதிவு படிச்சருக்கணும்! குறிப்பா அந்த ஊறுகாய் போட்டோவை அதான் இப்படி சொல்லிப்புட்டாரு போல??!!!
(வீட்ல யாராச்சும் டாக்டர்கிட்ட முன்னாடியே, அம்மா நிறைய ஊறுகாய் சீடையெல்லாம் திங்கிறாங்கங்கற மேட்டர சொல்லியிருப்பாங்களோ???)
:))))))))))))))))))
நானும் வெல்கம் சொல்லிக்கறேன். :(
mmmmmநமக்கு அதெல்லாம் குறைச்சாச்சு, டாக்டரே சர்டிபிகேட் கொடுத்திருக்கார், அதே மெயின் டெயின் பண்ணறேனு, அப்படியே இருக்கணும், இந்த மாசம் போறப்போத் தான் தெரியும், வண்டவாளம் என்னனு! :)))))
போகட்டும், சீடை, முறுக்கு, தட்டை மட்டுமில்லாமல் நெய், எண்ணை, ஊறுகாய், அப்பளம், வடாம் கூடத் தான் தடா போட்டிருக்காங்க,எனக்கு, ஆனால் உங்களுக்கு அது இல்லை போலிருக்கே??? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் பெரிசாவே புகை விட்டுக்கறேனே??? :))))))))))
ஆயில்யன் அப்படித்தான் இருக்கும்..
யாரொ நல்லா வத்தி வச்சிட்டாங்க:)
சரி ,இனிமே செய்யறது மட்டும் நம்ம கடமை. பலனைத் தொடக்கூடாது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்:)))
அட ராம்கிருஷ்ணா.
இதென்னப்பா.இப்பவே சொன்னா எப்படி மௌலி?
ஓகே டேக் கேர்.:(
எல்லம்தான் தடா கீதா.
அதையெல்லாம் எழுதினா எதையாவது சாப்பிடத் தோணுமேனு விட்டுட்டேன்.
காப்பி மேல கையை வைக்காம இருந்தாங்களே. கோடிப் புண்ணியம் அவங்களுக்கு:)
இந்தியா வரவழில ஏதாவது ஒரு வனாந்தரத்தில் பாரசூட்டோட குதிச்சுட்டு.,சிவ சம்போன்னு போகலாம்.
பசிக்குமே:))
உணவுக்கட்டுப்பாடு தேவைதான். உங்கப் பதிவைப் படிச்ச பிறகு...நானும் எதுக்கும் இதையெல்லாம் இப்பவே குறைச்சிக்கலாம்னு தோணுது.
ராகவன்,
இப்ப ஃப்ரீயா விட்டுடங்க.
நல்ல சுவை தெரியும்போது அதை உணர்ந்து சாப்பிடுவர்களக்கு,
அவ்வளவாக நோய் வராது.
நீங்களும் அளவோடு உண்பவர்தான்.
அதனால் எதயும் ஒதுக்கவேண்டாம்.
மிதம் இதம்.::)
நல்லா சொன்னீங்க ஆவலாதி .. திங்காதேன்னு சொல்லும்போது தானே அது மேல அபார ஆசை வரும்..:(
சரி என்னன்னாலும் பரவாயில்லை உடம்பைப்பார்த்துக்கனுமே...
ஆமாம்பா முத்து,
அதுவும் பசி நேரத்தில ஏதாவது உப்பு சாமாசாரம் கண்ணில பட்டுச்சோ தீர்ந்தது என் லட்சியமெல்லாம்:0
கண்கொத்திப் பாம்பா என் பெண் பார்த்துக் கிட்டே இருப்பாள்:)
சும்மாச் சொன்னேன்மா.வயிறு காலியாகக் கூடாது. நீர்மோர் சாப்பிடலாம்.இப்படீஈ....:)
என்ன தயிர்ச்சாதம் தடாவா.....? ஐயோ அப்றம் எப்படி....? சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தியே இருக்காதே...? மோர்ச்சாதம்
சாப்பிடலாமில்லையா...? உங்கள் பதிவுகளைப் படித்தால் எனக்கும் பகீர்ன்னு இருக்கு. ஏன்னா எங்க வீட்ல எல்லோருக்குமே சக்கரை,பீபீ இதெல்லாம் வாழையடி வாழையா இருக்கு.
பிராணாயாமமும்(குறிப்பா ரவிசங்கரின் சுதர்சன க்ரியா) சூரிய நமஸ்காரமும் தினமும் பண்ணுங்கள். தவம் பண்ணுங்கள். இவைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
சர்க்கரைக்கு எங்க வீட்ல பண்ற ஒரு நாட்டு வைத்தியம்.
காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலைச் சாற்றினை ஒரு அவுன்ஸ் தொடர்ந்து ஒரு மாதகாலம் குடித்தால் சர்க்கரை நன்றாக மட்டுப்படுகின்றது. ஆங்கில மருத்துவமும் விடவேண்டாம். டாக்டரின் ஆலோசனையை மேற்கொள்ளவும். தினமும் ஒரு மணிநேரம் நடை பயிற்சி அவசியம்.
ரத்தக் கொதிப்பிற்கு மல்லியை கொதிக்க வைத்து எதோ ஒரு கஷாயம் மாதிரி வைத்துக் குடிப்பார்கள். எனக்கு நினைவில்லை. கொஞ்சம் பொறுங்கள் அடுத்த முறை அம்மாவிற்கு ஃபோன் போடும்பொழுது கேட்டு எழுதுகின்றேன்.
ஆடிய ஆட்டம் என்ன?
தேடிய தேன்குழல் என்ன?
வழித்து நக்கிய ஊறுகாய் என்ன?
வெட்டி எடுத்த தயிர், சாதம்தான் என்ன..?
டாக்குடரின் ஒரு ரிப்போர்ட்டில் அத்தனையும் ஓடிப் போனதும் என்ன?
கூல்..கூல்..வல்லி! இத்தனை காலம் அனுபவிச்சாச்சு! போனால் போகட்டும் போப்பா..னு விட்டுடணும்.
இத்தனையும் நான் ஏஞ்சொல்றேன்னா..? நான் போன வாரம் எடுத்த ப்ளட் டெஸ்டில்...
இதுவரை சர்க்கரை உலகத்தில் கொடி கட்டி பறந்தவள்..இனி சர்க்கரையில்லா உலகத்தில் உழலப் போகிறேன். ஆனாலும் புலம்பாமல் மேலே சொன்ன பாடலையே எனக்கும் எடுத்துக்கொண்டேன். உடனே அடுத்த நேர காஃபி சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொண்டேன். ஆண்டாச்சு, அனுபவிச்சாச்சு.
என்னப்பா பொல்லாத வாழ்கை!
இதுக்குப் போயி அலுத்துக்கலாமா?
சியரப்..சியரப்...சேரியாப்பா?
ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..பத்திரமா பாத்துக்குங்க!
வரணும் ரிஷி. தாமதமாகப் பதிலெழ்உதுவதற்கு மன்னிக்கணும்.
நல்ல ரெசிபி சொல்லி இருக்கீங்களே. கொத்தமல்லி கஷாயம்
தாத்தா சாப்பிடுவார்.
இதுதான் காரணமோ என்னவோ.
தயிர்ருக்குப் பதில் கொழுப்பில்லாத மோர் இருக்கே.
ஒண்ணும் கவலை இல்லைம்மா. நம்ம உடம்பு நேர இருந்தா,மத்தவங்க நிம்மதியா இருப்பாங்க,. அதுக்காகவாவது சரியாப் பாத்துக்கணும். அதான் சரியான வழி.
நானானி, இப்படிச் சொல்லிட்டாங்களா.
உங்களுக்குக் கட்டுப்பாடு அதிகம்
நல்லாக் கவனமா இருங்க.
திடீர் அட்டாக் மாதிரி இந்த சர்க்கரைப் பொருட்கள் கண்ணில படும் பசியில்லாம் பார்த்துக்குங்க.
பாதிப் பிரச்சினை தீர்ந்தது.
கனம் குறைந்த என்னைப் பார்க்கும் போது எனக்கே பெருமையா இருக்கு:)
சந்தனமுல்லை,
கவ்வனமாப் பார்த்துப்பேன்மா.
உஷரா இருக்கட்டும் ஏன்பதற்காக
இந்தப் பதிவைப் போட்டேன்.
நன்றி ராஜா.
Post a Comment