July 18th. 2008
ஜூலை 18 யுங் fரௌ என்னும் ஐரோப்பாவின் மிக உய்ரமான சிகரத்தைப் பார்க்கப் போவ்தாக திட்டம்.
ஷில்தார்ன் போய் வரும்போது ஒரே மழை. வீதிகளில் அதிக நடமாட்டம் இல்லை. காச் மூச்னு
மைனாக்கள் மாதிரி ஜப்பானியர்கள் கும்பல் கலகலவென்றுக் கடந்து போகும். அடுத்தாற்போல இந்த
ஊரிலியே இருக்கிறவங்க,காய்கறியோ பழமோ ஏதோ வாங்க ஒரு சைக்கிளை மிதிச்சுக் கொண்டு,சந்தோஷமா அவர்களுக்குள்ள பேசிக்கொண்டு,
சின்னதா ஒரு ரொட்டியோ, இரண்டு ஆப்பிளொ வாங்கிக்கொண்டுஒரு உற் சாக பானம் ஒண்ணையும் திறந்து,
என்ன அழகான மழைன்னு விமரிசனம் செய்து கொண்டு,
மழைக்கோட்டையும் போட்டுக் கொண்டு மீண்டும் திரும்புவார்கள்.
இதெல்லாம் நடுவில முர்ரன் எகிற கிராமத்தில்.
பையனுக்கு நான் நடந்தால் தேவலை என்று தோன்றி
விட்டது.''இந்த மாதிரி என்னிக்குமா மழைல நனையப் போற. ஜாலியா வா''.
முதலில் அந்தப் பள்ளம் மேட்டுச் சாலையைப் பார்த்துப்பயந்தாலும்,ஏனெனில் நாம்தான் எல்லார் தலை கால் எல்லாவற்றிலயும் விழுவார் தொழுவார்ஆச்சே.அந்த பயம் கொஞ்சம் தயக்கம் கொடுத்தது.
அதனால் பள்ளம் இல்லாத மலைப் பக்கமா,
திடீர் மின்னல் இடி ஒண்ணும் இருக்கக்கூடாது சாமி. மத்தவங்களுக்குக் கஷ்டம் கொடுக்காம் என்னை ரயில் நிலயத்திலகொண்டு போய் விட்டுவிடு, என்று நடந்தேன்.
பேத்தி சுகமாப் பிராம்ல தூங்கிண்டு வந்தாள். முதல் ஜோடி அவங்கதான்.பின்னால சம்பந்திகள்.அவர்கள் அப்படியே ஒலிம்பிக்குக்கு மாரத்தான் நடக்கற மாதிரிநல்லா நடக்கிறாங்க.
அவங்களுக்குப் பின்னால நம்ம சிங்கம்.
சீக்கிரம் வாம்மான்னு அப்பப்போதிரும்பிப் பார்த்தபடி ஆர்டர் வரும்.
எனக்கோ மழை ரொம்பப் பிடித்துவிட்டது. அனுபவித்தபடி மெள்ளவே நடந்தேன்பூக்கள் நிறைந்த பால்கனிகள்.மூடிய கதவுகள். திறந்திருக்கும் டீக்கடைகள்.
அவங்களுக்குப் பின்னால நம்ம சிங்கம்.
சீக்கிரம் வாம்மான்னு அப்பப்போதிரும்பிப் பார்த்தபடி ஆர்டர் வரும்.
எனக்கோ மழை ரொம்பப் பிடித்துவிட்டது. அனுபவித்தபடி மெள்ளவே நடந்தேன்பூக்கள் நிறைந்த பால்கனிகள்.மூடிய கதவுகள். திறந்திருக்கும் டீக்கடைகள்.
சத்தமே இல்லாத தெருக்கள்.
அப்பப்போ போகிற போலீஸ் வண்டிகள்,சாலைப் பாதுகாப்பு வண்டிகள்.
இப்பத்தானே ஒரு வண்டி போச்சு அதுக்குள்ள இன்னோண்ணா.என்று எண்ணியபடி மகனைக் கூப்பிட்டு என்னடா இவ்வளவு வண்டீன்னு.
அவன் சொன்னான் இரண்டு வண்டிதான்மா.ஊரு சின்னது பாரு இரண்டு வீதியைச் சுத்திச் சுத்தி வராங்க. என்றான்.
அப்படியே பேசியபடி ரயில் நிலையத்தை வந்தடைந்தோம் சூடாகக் காப்பி கிடைத்தது.
கூடவே சாப்பிட ஆளுக்கு ஒரு மஃபின்.
ரயில் நிலையத்தில் எங்களைத் தவிர யாருமில்லை. நிறையப் படங்களை எடுத்து உள்ள தள்ளினேன்.
மெதுவாகக் கணினியில் ஏற்றிப் பார்த்து அனுபவிக்கத்தான்:)
பதிவு நீண்டதால் மறுபாகத்தை நாளை பதிகிறேன்
23 comments:
யங்ஃப்ரௌ எனறால் இளைய புது மனைவி என்று அர்த்தம் என்று சொன்னார்கள்.
அந்தப் பேருக்கு ஏத்தாற்போல நிறைய இந்திய புதுமண தம்பதிகள் நிறையப் பார்க்க முடிந்தது:)
மழைக்குப் பயப்படாம நடந்தீங்களா?!! :)))
//புதுமண தம்பதிகள் நிறையப் பார்க்க முடிந்தது:)//
லைக் யூ அண்ட் சிங்கம்? :)))
படங்களில் இயற்கை அழகு கொஞ்சுகிறது.
நளைய தொடர் பதிவுக்கு காத்திருக்கிறேன்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
பின்ன?
கொத்ஸ்.
ஐயா முன்னாடி,அம்மா பின்னாடி.
எவ்வளவு முதுவா வரேம்மா அன்பாச் செல்லமா சிங்கம் சொல்லும். நானும் என்னப்பா சீக்கிரமா தானே வரேன்னு குயிலாக் கூவுவேன்.அருமையான மூன்றாவது ஹனிமூன்.:)
நன்றி கோவை விஜய். தொடர்ந்து பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி.
குயிலம்மா குயிலம்மா கூவுவதேனம்மா?
பாடணும் போல இருக்கு. சிங்கத்தின் மேல் ஒரு குயில் ஊர்வலம்போகும் படம் மனக்கண்ணில்:-)
//திறந்திருக்கும் டீக்கடைகள்.//
அந்த மழைக்குச் சூடா ஒரு டீ குடிச்சிருக்கலாமோ???
ஹிஹிஹி, இதுவே பதிவு பெரியதா?? அப்போ நம்மளை என்ன சொல்லுவீங்களோ? அங்கங்கே அலறிட்டு பதுங்கிட்டிருக்காங்க, சிஷ்யகேடிங்க எல்லாம், இந்தப் பதிவுகளைப் பார்த்துட்டு! ம்ம்ம்ம்ம்., கொடுத்து வச்சிருக்கீங்க, இந்தப் பெரிய பதிவுக்கும், அஞ்சாமல், அசராமல் வராங்க எல்லாரும்! :P
அழகா இருக்கு இடங்கள்.. ஜாலியா சுத்தி இருந்திருப்பீங்க போல... :)
ஆஹா குயிலும் கூவிட்டாத்தான்!!துளசி:)
ரொம்ப அழகா இருக்கு கற்பனை.
முன்னாலியாவது கறுப்புத் தலை,குயில் வந்து உட்கார சான்ஸ் இருந்தது. இப்ப டோட்டல் வெள்ளை.அப்படி ஒரு அப்துல் கலாம் லுக்கோட உலாவுகிறார் சிங்கம்:)
கீதா, உங்களை மாதிரிப் பொறுமையும் கூர்மையும் இருந்தாப் பெரிய பதிவுக்குப் போகலாம்.
கொஞ்சம் எழுதினவுடனேயே ஓஹோ அதிகமாப் போச்சோன்னு தோணித்து.சரிப்பா , தொடரும் போட்டுடலாம்னு கட் செய்துட்டேன்.
அவ்வளவு தான் விஷயம்.:)
ம்ம்ம் ஜாலிதான் முத்துலட்சுமி.
உடம்பில தெம்பு கொஞ்சம் குறைந்ததினால இந்த உயரமா இருக்கிற இடத்தில கொஞ்சம்(ஆக்சிஜன் குறைவு) மூச்சு வாங்கும்.
அத்னால் மற்றவங்க சுத்தினாங்கன்னா நான் வசதியான இடத்தில உட்கார்ந்து கொண்டு பேத்தியை மேய்ப்பேன்:)
//எவ்வளவு முதுவா வரேம்மா அன்பாச் செல்லமா சிங்கம் சொல்லும். நானும் என்னப்பா சீக்கிரமா தானே வரேன்னு குயிலாக் கூவுவேன்.//
ஹி..ஹி..ஜூப்பர்..:P
//இந்த
ஊரிலியே இருக்கிறவங்க,காய்கறியோ பழமோ ஏதோ வாங்க ஒரு சைக்கிளை மிதிச்சுக் கொண்டு,சந்தோஷமா அவ்ர்களுக்குள்ள பேசிக்கொண்டு
சின்னதா ஒரு ரொட்டியோ, இரண்டு ஆப்பிளொ வாங்கிக்கொண்டுஒரு உர்சாக பானம் ஒண்ணைய்ம் திரந்து,என்ன அழகான மழைன்னு விமரிசனம் செய்து கொண்டு,மழைக்கோட்டையும் போட்டுக் கொண்டு மீண்டும் திரும்புவார்கள்.
//
நானும் அவர்களுடன் பயணித்தேன். நல்ல ஆப்சர்வேஷன்**, நல்ல வர்ணனை. அருமை அம்மா :))
ஆப்சர்வேஷன்- தட்டச்சுன் போது, தமிழில் என்னவென்று உடனே நினைவில் வரவில்லை :(
வாங்கப்பா நியூபீ.
சொல்லிக்க வேண்டியதுதான்.
உண்மைல ஏம்மா இப்படி ஸ்லோவா நடக்கிற? வேகமா நடந்தாத் தானே சதை குறையும்னு சொல்லுவார்.
இந்த சதை போட 30 வருஷமாச்சு. அதனால உடனே கரையாதுன்னு நானும் சளைக்காம சொல்லுவேன்:0)
ஆப்சர்வேஷன்...கவனம்தானே நியுபீ. லுக் அவுட்.பழைய கால மாமியார்கள் செய்வது.
துளசி கிட்டப் பாடம் கத்தது.:)
அவங்கதான் கண்ணு காது திறந்து வைங்கன்னு சொல்லுவாங்க.
அழகிய படங்கள்! ரசித்து அனுபவித்ததை ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.
//சீக்கிரம் வாம்மான்னு அப்பப்போதிரும்பிப் பார்த்தபடி ஆர்டர் வரும்//
நல்லதுதானே! "நினைத்தாலே நடுங்கும்" பதிவில குறிப்பிட்டிருந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் தொலைந்து கிடைத்த பயத்தில் அப்பப்போ அக்கறையா சொல்கிறார்:))!
நன்றிப்பா,ராமலக்ஷ்மி.
உண்மைதான்பா. அதுவும் அங்க மழையினால ஒரே மிஸ்ட் வேற. எதிர வரவங்களைப் பார்க்க முடியவில்லை.
அதனால நானும் ஜாக்கிரதையாத் தான் போனேன். வேற யாரையாவது இவர்னு நினைச்சுட்டேன்னா:))))))))).
ஹிஹி, மூனாவது ஹனிமூன் சூப்பர். :)
ஓஹோ எந்தன் பேபி! பாட்டு தான் நினைவுக்கு வருது. :)))
ஆமா ஆமா ஆமாம். மூணாவதே தான்:0)அடடா எப்படி இருந்திருக்கும் அந்தக் காட்சி!!
கண்ணே உன்னைக் காணும் கண்ணில் காடராக்ட் இருக்குதே!!
கண்ணால் காணும் வண்ணம் எந்தன் கால்கள் வழுக்குதே:)
//கண்ணே உன்னைக் காணும் கண்ணில் காடராக்ட் இருக்குதே!!
கண்ணால் காணும் வண்ணம் எந்தன் கால்கள் வழுக்குதே:) //
:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
aahaa.Thulasi.
paattukku paattaa;))))))
thamizh copy paste seythaa varuthu:)
ஆஹா வல்லிம்மா சூப்பர் வர்ணனை.
சிங்கத்தின் ஆர்டர், மிஸ்டில் நீங்க பாட்டுக்கு வேற யாராவது சிங்கம் என்று நினைக்கறது, போக பின்னூட்டங்களிலும் உங்கள் நகைச்சுவை இனிமை.
அத்தோடு, இப்படி தன்னடக்கம்.
//கீதா, உங்களை மாதிரிப் பொறுமையும் கூர்மையும் இருந்தாப் பெரிய பதிவுக்குப் போகலாம்.//
க்ரேட்.
சதங்கா, சிரித்தால் நோய் விட்டுப் போகிறது இல்லையாம்மா.
தன்னடக்கமா:0)
உண்மை,உண்மை.
ஆமாம் மிஸ்டில நானே வருவேன்னு பாட ஆசை. அந்த ஜனங்க பயந்து போகுமேன்னு வீட்டூட்டேன்.
நன்றிம்மா.
Post a Comment