பயணம் தொடங்கிய போது மழை ஆரம்பித்தது. இருண்ட மேகங்களுக்கு நடுவில் வானம் வெள்ளையாய்ச் சில நொடிகளுக்குத் தெரிந்தது. அது முதல் படம்
டொரண்டொ விமான நிலையம் அருகே இருந்த மாரியாட் விடுதி ஜன்னலில் இருந்து எடுத்த படம். அடுத்தது வானவில்லை ஒரு விமானம் கடந்தபோது எடுத்தது.
இரண்டு வான்வில்களைப் பார்க்கும் மகிழ்ச்சி ஒரு சாயந்திர மழைத் தூறல் நடுவே கிடைத்தது மகிழ்ச்சியே. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)
இரண்டாவது படம் போட்டிக்கு அனுப்புகிறேன்.
பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
14 comments:
அபூர்வமான படம் தான்.. விமானமும் வானவில்லும்... :)
மழை தூறும் மாலையிலே
வானவில்லைக் கடக்கும் வானூர்தி
அழகிய தேர்வு.
இரண்டாவதில் தெரியும்
இரண்டு வானவில்களின்
வர்ண ஜாலங்கள்
அழகின் வடிவு.
வாழ்த்துக்கள் வல்லிம்மா!
அட்டகாசமா இருக்கு.
வெற்றி உமதே.
வாழ்த்து(க்)கள்.
அன்பு ராமலக்ஷ்மி,படத்துக்கும்
பாடலூக்கும் சரி பொருத்தம்.
இந்த்ப் பயணத்தில் ஆறு வானவில்கள் பார்த்தாச்சு:)
ரசிகைக்கூ வானவில் இன்னூமொரு அற்புதம்..நன்றிப்ப்பா.
வரணும் கயல் லட்சுமி.
அன்னிக்கு மழைக்கு நடுவில கண்ணாடித் தடுப்பையும் மீறிப் போட்டோ
எடுக்க முடிந்ததே அதிசயம் தான்:)
ஆசான்(ள்) ஆசீர்வாதம் இருக்க எமக்கென்ன பயம் துளசி::))
வாழ்த்துகள் வல்லி.
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
அபூர்வமான படம் தான்.. விமானமும் வானவில்லும்... :)
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
நம்ம நுழைவு வாயிலைப் போலவே வானவில்லும் வளைந்து அழகா இருக்கே !!! அதுவும் வண்ணங்களோடு. அருமை. வாழ்த்துக்கள் வல்லிம்மா.
வரணும் கீதா. ரொம்ப நன்றிம்மா.
வாங்க வாங்க ஆயில்யன். உங்க வ.வா.சங்க வரிசையும் பார்த்தேன்.
ஒரே கல்யாண சேதியாக் காதில விழுதே.அந்தப் பெண்கள் வலையில வந்து காத்துக் கொண்டிருக்காங்கான்னு நினைச்சேஎ:)
ஆமாம் சதங்கா, இரண்டு வானவில்கள்!
மிகவும் அபூர்வமா இருந்தது.
அப்படியே மறைகிற வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வானவில்லும் வானவூர்தியும் செம
கலக்கல்! சூப்பரப்பா!!
நானானி ,
இந்தப் படத்தைத் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை.
கண்ணாடியின் பின்னாடி நின்று எடுத்ததில் படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை.
தெரிந்தும் இது ஒரு நல்ல போட்டோ என்பதற்காகவே அனுப்பினேன்:)
Post a Comment