Blog Archive

Saturday, August 30, 2008

பயணம் 3,பகுதி 6

திவா கேட்ட கண்ணாடித்தரையின் வியூ,சி.என்.டவர்
ஸ்கைலான் நயாகரா


நயாகரா வீதிகளில் ஒன்று. காசீனோஒன்றும் இங்கே இருக்கிறது.



போட்டோ எடுக்காமல்போக முடியூமா:0)





ட்டொரண்ட்டொவிலிருந்து திரூம்புகிறோம்.






கம்பீரமா நிற்கும் ஒரு இந்தியப்பெண்.







நயாகராவின் கரையோரம்








கண்ணாமூச்சி ஆடும் நதி.
நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூகிறது.
கரூர் சேலம் பாதைதான் அது.அகண்ட காவேரியில்லிருந்து பிரிந்து வரும் ஒரு அகண்ட வாய்க்கால் தண்ணீர் சலசலக்க பஸ்ஸோடூ கூடவரும்.
அந்தப்ப் பதினெட்டு வயதுக் கனவில் மூழ்கீய நாட்களில் ஒவ்வோருபயணமும் குட்டியோ ,,பெரிசோ
அலுப்பே தட்டாது. அதுவூம் அந்த மாதம் நாலாவது மாதத்தில்
கருவாக உள்ளே இரூந்த பையனிடம் பேசீக்கொண்டு வந்தநினைவு:)
எல்லாமே அதிசயமாக இரூந்த நேரம்.
சரி இப்போ நயாகராவுக்கு வந்துவிடுவோம்:)
வாடகைக்காரில் வந்த்து எம்பசி ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லீ முடியாது:))))))
அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த்த ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசூ நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேனுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும் என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம். பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.








23 comments:

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//அதுவும் அறைக் க்கதாவைத் திறந்தட்டும் தெரிந்த் காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த்த ஜன்னல் பக்கம். //

எவ்வளவு உயிரான எழுத்துக்கள். ஏதோ நாங்களும் ஓடி வந்து பார்த்தது போலவே :))) அருமை.

//நான் கவனம்மாக கைக்கடிகாரத்தைஇக் கழட்டீவைத்தூவிட்டேன்ன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். //

அடேங்கப்பா. அசத்திட்டீங்க :)))

சதங்கா (Sathanga) said...

அந்த முதல் படம், வாவ். செம த்ரில்லிங்க் !!!!

இலவசக்கொத்தனார் said...

அப்போ அடுத்த ட்ரிப் லாஸ் வேகஸ்தான்!! :))

jeevagv said...

நயகரா படங்களைக் காணோமே என்று பார்த்தேன், அடுத்த பகுதியில் வரும் போல!

வல்லிசிம்ஹன் said...

சதங்கா,
சும்மா வேடிக்கைக்காகத் தான் போனோம். களவும் கற்று மற மாதிரி
இதுவும் தொட்டுப் பார்த்துவிட்டு வந்து விட்டோம்:)
கியூரியாசிடி!!

//அந்த முதல் படம், வாவ். செம த்ரில்லிங்க் //


அங்கே நிற்கும்போது அப்படித்தான் தோன்றியது, அத்தனை கூட்டம் அங்கே வந்து நிற்கவும் கொஞ்சம் நர்வசாகி விட்டேன். என்னை விட ரெண்டு சைஸ் அதிகமாக இருப்பவர்களெல்லாம் நின்றார்கள்

வல்லிசிம்ஹன் said...

லாஸ் வேகாஸ் கிடையாது.:)

கொத்ஸ்,

கண்ணாலே நிறைய பேரை அங்கே பார்த்ததுமே,அவர்களின் தீவிரத்தைப் பார்த்ததும்
எங்கள் ஆர்வம் அடங்கி விட்டது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜீவா.
இந்தப் பதிவுக்கு முந்திய பதிவுகளில், ஐந்து பதிவுகளிலும் நிறைய படங்கள் நயாகராவில் எடுத்தவற்றைப் போட்டிருந்தேன்.))

துளசி கோபால் said...

கஸீனோவுக்குப்போய்வர்றதும் ஒரு அனுபவம்தான் வல்லி. இல்லேன்னா நம்ம மனம் எவ்வளவு உறுதின்னு எப்படிக் கண்டு பிடிக்கறதாம்?

இங்கெல்லாம் 'பாட்டிகளுக்கு' அங்கே தனிக்கணக்கே இருக்கு. மெம்பர்ஷிப் எடுத்துக்கலாம்.

எனக்கும் ஒன்னு எடுத்துத் தர்றதா கோபால் சொல்லி இருக்கார். எப்பவாம்?

'ரியல்' பாட்டி ஆனதும்:-))))

வல்லிசிம்ஹன் said...

நானும் கஸீனோ விளையாட்டுக்குத் தப்போ நினைத்துக்கொண்டு போகலைப்பா துளசி.

ரொம்ப நாள் ஆசை அந்த மெஷின்லேயிருந்து கலகலன்னு நாணயங்கள் கொட்டும் இல்லையா. அதைப் பார்க்க ஆசை:)

சிங்கத்துக்காவது அஞ்சு டாலர் கிடைச்சது.
எனக்கு ஒரு வின் கூட இல்லை.அதுவும் இப்ப அது ஒரு பேப்பரைத்தான் வின் பண்ணாக் கொடுக்கிறது. யூ கான் காஷ் இட்'' அப்டீனு ஒரு வாக்கியம் அதில:)

Geetha Sambasivam said...

புதுமையான அனுபவங்கள் வல்லி, நல்லா இருக்கு படங்கள் எல்லாம், அதுவும் சதங்கா சொல்றாப்போல் முதல் படம் சூப்பர்!

கரூர் சேலம் சாலையின் அழகை இப்போக் கொஞ்ச நாள் முந்திக் கூடப் பார்த்தேன், அதே அழகு கொஞ்சுகிறது, இப்போவும்! நதி கூடவே வரும், இங்கே தஞ்சை ஜில்லாவிலேயும், கரையோரங்களில் போனால், பார்க்க முடியும்.

திவாண்ணா said...

நேயர் விருப்பம் நிறைவேத்தினதுக்கு நன்ஸ்!

ambi said...

//வேனுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு//

ஹாஹா! பேரன் அப்படியே பாட்டியை கொண்டு இருக்கான் போல. :p

விடுபட்ட பதிவுகளையும் இப்ப படிச்சாச்சு.

வல்லிசிம்ஹன் said...

Dhiva,

most welcome. thanglishukku mannikkavum.

வல்லிசிம்ஹன் said...

Dhiva,

most welcome. thanglishukku mannikkavum.

வல்லிசிம்ஹன் said...

Ambi,

Ekappatta Aninnu keLvippatten.
BABY eppadi irukku.
Thank you ma.
Peran kitta solREn:)

ராமலக்ஷ்மி said...

//களவும் கற்று மற//

ரசித்தேன்:))!

வல்லிசிம்ஹன் said...

எத்தனையோ கத்துக்கறோம்.

களவு செய்ய எவ்வளவு சாமர்த்தியம் வேண்டும் இல்லையா ராமலக்ஷ்மி:)

அப்புறம் இதயத்தைத் திருடாதேனு வேற சொல்லிடறாங்க:)
பொதுவா சீட்டு இந்த மாதிரி ஆட்டத்தில் ஜெயிப்பவர்கள் காதலில் தோல்வி அடைவார்கள் என்று சொல்வார்கள். நான் இதுவரை 'டிக்ளேரி'ல் கூட ஜயித்ததில்லை.தம்பி முந்திக்கொண்டு விடுவான்:)

SK said...

அனுபவிச்சு படம் புடிக்கறீங்க. அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி எஸ்கே.

சில சமயம் போட்டோ வேண்டாம் மனசில பிடிச்சுக்கலாம்னு தோணும்:)

திவாண்ணா said...

//Dhiva,

most welcome//
பலரைபோல நீங்களும் என்னை திவாகர்ன்னு நினைச்சு கொண்டு இருக்கீங்க போல இருக்கு!
அது தி.வாசுதேவன் என்பதன் சுருக்கம்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. வாசுதேவனா.!!
நல்லவேளை சொன்னீங்க.
எனக்குப் புண்ணியம் உங்களை ஒவ்வொரு தடவை கூப்பிடும்போதும்;)
நன்றிம்மா.

நானானி said...

நானும் இந்த களவை கற்றக் கூடாது என்று எண்ணீத்தான் உள்ளே போனேன். ரங்கமணிக்கும் ஆசைக்கு 50 டாலர்தான் என்று ரேஷன் வைத்தேன்.
உள்ளே போனால், 'கற்றுக் கொள்..கற்றுக் கொள்' என்று கூவி அழைத்தன மெஷின்கள்!!50 டாலர் எடுத்துக் கொண்டு ஒரு செண்ட், 10 செண்ட்களாக விளையாடி 60 டாலர்கள் கிடைத்தன.60-ஐயும் மறுபடியும் விட்டுவிட்டு கையைத்தட்டிக்கொண்டு வெளியே வந்தோம். பிறகு..? கற்றேன்..மறந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி மகா பொறுமை நானானி.!!! எனக்கு முதல் தடவை பணம் போனதும் விட்டுப் போச்சு:)
போடா போ இந்தப் பழம் புளிக்கும்னு விட்டூட்டேன்.:)

சிங்கம் மீண்டும் விளையாடி பத்து டாலர் வெளியில் கொண்டுவந்து பேரனுக்கு ஒரு கிஃப்டும் வாங்கிவிட்டார்::)