Blog Archive

Friday, August 22, 2008

யு எஸ் ஏ பயணம் 3 ,பகுதி 3

நயகரா இரண்டாம் நாள்

சிஎன் டவர் முன்னால் இருக்கும் கோபுரம் தாங்கிகள்:) கூகிளில் போனால் தெரியும்.நான் போய்ப் பார்க்கவில்லை.



நாங்கள் மதிய உணவு அருந்திய இடம் 360 ரெஸ்டாரண்ட்.சுழுலுவதால் இந்தப் பெயரோ.




டவர் மேலிருந்த கிடைத்த காமிராக் கோணங்கள்.





டவருக்கு வெளியே போஸ்டரில் சிரிக்கும் மை ஃபேர்லேடி ஆட்ரி ஹெப்பர்ன்.






ஒண்டேரியோ ஏரியில் மிதக்கும் படகு.







கீழே சூவனீர் கடையில் பிரமாண்ட கரடி.








டவர் வியூ இன்னோரு பக்கம்









இந்தக் கோபுரம் தான் கோபுரங்களிலியே உயர்ந்ததாமே அப்படியா??










முதன்முதலாக எடுத்த படம் நயகரா











360 உணவுவிடுதியில் நான் தேர்ந்தெடுத்த மெனு. பார்க்கப் பயமா இருந்தாலும் சாப்பிட ருசியாக இருந்த கத்திரிக்கய்,தக்காளி,வெள்ளரி,வெங்காயம்.தொட்டுக்க் வெண்ணை. ம்ம்ம்ம்ம்












இந்தப் படம் ரெண்டு தரம் வலையேறி விட்டது.













நியூயார்க் சைட் அமெரிக்கன் நயகரா.



ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை அம்மாவின் மறதி தெளிவாக எல்லாராலும் விலாவாரியாக
விவாதிக்கப்பட்டது.
மற்ற இரண்டு பேரும் தொலைவில் ஐஎஸ்டி பேசும் தூரத்தில் இருந்ததால் அவர்களுக்கு செய்தி போகவில்லை.
பெண் உடனேயே நீ உட்கார்ந்துக்கோம்மா .விழுந்துவிடாதே ஏதாவது செய்து உன்னை க் காப்பாற்றி விடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னாள்:). எனக்கு பெரிய கஷ்டமாக இல்லை. உள்ளூர கொஞ்சம் பயம்.
அடுத்த பிளான் நாங்கள் கனடா விசாவுக்குப் போவது,
மகள் சிகாகோவில் அவளுடைய வைத்தியர் நிலைமையைச் சொல்லி மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் கேட்பது.
அவள் சிகாகொவுக்குப் போன் போடும்முன் நான் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டேன்.
..அவங்க கீட்டெ என் மருந்து பேரை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு கிடைக்கணுமே சாமின்னு பிள்ளையார்கிட்டச் சொல்லிட்டு அப்புறம் ராகவேந்திரர் கிட்ட ஒரு அப்ளிகேஷன் கொடுத்துவிட்டுக் கனடியன் அலுவலகத்துக்குப் போனோம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு மணிநேரத்தில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லவும் நாங்கள் அங்கியே உட்கார்ந்துவிட்டோம்.
ஒருவழியாக வீடு வந்து சேரும்போது மணி ஒன்று.
அதற்குள் மகள் டாக்டரிடம் பேசி,திரும்பிப் போனதும் அவளுக்கு உண்டான குசல விசாரிப்புகளைச் சொல்லுவதாகச் சொல்லி
ப்ரிஸ்க்ரிப்ஷனை லோக்கல் சிவிஎஸ் மருந்துக்கடையில் சொல்லிவிட்டாள்.


எனக்கு வெட்கம் ஒரு புறம் அவமானம் ஒரு புறம். பிரச்சினை தீர்த்துக் கொடுத்தாளே மகராஜின்னு நன்றி ஒரு புறம்.
நண்பருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வந்தோம்.
அங்கேயிருந்து மருந்துக்கடையில் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி, 30 டாலர் மனசு
ஆகாமல் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.
'ஆம்லாங் ஏ' நம்ம ஊரில இந்த விலைக்கு ஐந்து ஸ்ட்ரிப் வாங்கி இருக்கலாம்.
எப்படியோ நிலைமை கட்டுக்கு மீறாமல் காப்பாற்றித் தந்த அந்த டாக்டரம்மாவைச் சொல்லணும்.
இவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்ட மகளையும் சொல்லணும்.
மருந்துக்கடையிலிருந்து வெளி வந்து சூசன் அம்மா சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு ஆர்சார்ட் லேக் அண்ட்
13 மைல் ரோடில் திரும்பினோம்.
இந்த ஒரு திருப்பத்துக்கப்புறம் இனிமேல் ஒரே நகைச்சுவைதான் சரியா.
இந்தத் திருப்பத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்கார அம்மா எங்க வண்டி பம்பரை ஒரு தட்டு தட்டிவிட்டு
வண்டியைக் குறுக்கே போய்க் கொஞ்சம் தள்ளி நிறுத்தினாள்.
நாங்கள் அலறிவிட்டோம்.
அவள் இடித்த சைடில் இருந்த சின்னது அதோட கார்சீட்டில் ஷாக் அடித்த மாதிரி அழ ஆரம்பித்துவிட்டது.
அன்று நாங்கள் டொரண்டோ கிளம்பப் போவதில்லை என்பது தெளிவாகியது.
ஏனெனில் கொஞ்ச நேரத்தில் போலீஸ் மாமாவும் வந்துவிட்டார். மிசிகன் சட்டப்படி இரண்டு பேரும் ம்யுச்சுவல்
செட்லிங் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார்.
மாப்பிள்ளை இன்ஷுரன்ஸுக்கும், கார் ரிப்பேருக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.
சிங்கம் நடுரோடில் நின்ற காருக்கு அவசிய சிகித்சை செய்தார்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், கிளம்பி வந்த நண்பர் வீட்டுக்கேப் போய்ச் சேர்ந்தோம்.
விருந்தோம்பலில் சலிக்காத அந்தப் பெண்ணை நான் மறக்க முடியாது.














12 comments:

Geetha Sambasivam said...

ஆகக் கூடி நீங்களும் அட்வென்சரில் ஆரம்பிச்சுட்டீங்க! வாழ்த்துகள் அட்வென்சர் நல்லபடியாகவே முடிஞ்சதுக்கு. நயாகரா படங்களும், வானவில் படமும், விமானம் செங்குத்தாய்ப் பறப்பதும் பிரமாதம். போட்டோ ப்ரொபெஷனல் கோர்ஸ் எடுத்திருக்கலாம் நீங்க!

துளசி கோபால் said...

மருந்து பிரச்சனை தீர்ந்ததுன்னு மூச்சுவிடலை அதுக்குள்ளே மாமாவை வரவழைச்சுட்டீங்களா?

அட (மாமா)ராமா !!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
ஆமாம் நல்ல படியா முடிஞ்சது.
கோடி நன்றி ஈசனுக்கு.

இன்னும் கவனமா எடுத்தால் அழகா சிறப்பா வரும்.
செய்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

பாருங்களேன் துளசி. நாம கண்ணையும் க்காதையும் திறந்தா இப்படியா சேதி கொட்டும்:)

மிசிகன் மாமா,அந்த அம்மாவை ஒண்ணுமே சொல்லாம விட்டாரேனு எனக்கு வருத்தம் தான்.
எங்களுக்குத்தான் நேரமும் பணமும் நஷ்டம்.
இத்தோட போச்சேன்னு பொண்ணு கிட்ட சொன்னேன்.

ராமலக்ஷ்மி said...

படங்கள் நல்லா இருக்கு வல்லிம்மா.

பிரச்சினை தீர்த்துக் கொடுத்த உங்க "மக"ராஜி நல்லா இருப்பாங்க!
போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதிவாகவே பதில். இதுவும் நல்லாருக்கு. ம்ம்ம்ம் இப்ப என்ன கேள்வி கேட்கலாம்:))?

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,வரணும்பா.
இப்ப கேக்க வேண்டிய கேள்வி அப்புறம் என்ன ஆச்சு????
:)

இலவசக்கொத்தனார் said...

அதெப்படி ம்யூச்சுவல் செட்டில்மெண்ட்? யாராவது ஒருத்தர் மேலதானே பிரச்சனை இருக்கும்?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கொத்ஸ்.

இவர் அந்த லேனில் திரும்பும்போது இண்டிகேட்டர் போட்டுத் திரும்பினார்.
அந்த அம்மா ஏற்கனவே தனக்கு மூன்னாடி இருந்த காரை ஓவர்டேக் செய்து எங்க வண்டி மேல
உராய்ஞ்சு ஃபெண்டர் பெண்டர் செய்துட்டா.
முன்னால இருக்கிற ஃபெண்டர் கீழ தொங்கி விட்டது.

அவன்(மிசிகன் மாமா) இருவர் கிட்டயும் தனித்தனியா அரைமணிநேரத்துக்கு மேல ஆராய்ச்சி நடத்தினான்.
நாங்கள் வீடியோ எடுத்துக் கொண்டோம்.


வேற என்ன செய்யறதுன்னு தெரிய வில்லை.
மிச்சிகன் லா அப்படித்தானாம். ஐ கானாட் டூ எனிதிங் ஹியர்னுட்டான்.

நன்றிம்மா.

திவாண்ணா said...

" என்னாது? பம்பர் உராசிருச்சா? வூட்ல சொல்லிகினு வன்டியா நீ" ன்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிருக்கலாமே? நம்ம ஊர் ஆசாமி ஒத்தரை அழச்சுகிட்டு போய் இருக்கணூம்!
அடுத்த தபா போறப்பவாவது யாராச்சும் கூட கூட்டி போங்க!
சரி சரி நஷ்ட ஈடு கேட்டு பாக்கலையா? வண்டி டாமேஜ், கால தாமதம், ட்ரிப் கான்சல், மனஉளச்சல்...இப்படி எவ்ளோ இருக்கு?
நம்ம ஊர் வக்கீல் ஒத்தரையாவது...உம் அந்த ஊர் ஒண்ணும் லாயகில்லே!

வல்லிசிம்ஹன் said...

நூத்துக்கு நூறூஉண்மை திவா.
நமக்கு இவ்வளவுதான் இங்க செல்லுமான்னு தோன்றியது.
மன உளைச்சல் அடுத்த நாள் நயாகராவைப் பார்க்கும் வரை தீரவில்லை.

இப்பவும் மெயிலில் தான் வக்கீல் மூலமாகப் பேசிக்கொள்கிறார்கள்.
நீங்க சொல்கிற ந்நம்ம ஊர்க்காரகளுக்கும் இந்த விதிமுறைகள் தெரீயும் போலிருக்கு.

நம்மைப் பார்த்ததும் விரைந்துவிட்டார்கள். மேபி, நானும் அதைத்தான் செய்திருப்பேனோ என்னவோ!!

குமரன் (Kumaran) said...

அடடா. இது என்ன நடுவழியில் வந்த கஷ்டம்? :-(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமரன்.

ஆனால் இத்தோடு போச்சேன்னுதான் நாம சந்தோஷப்படணும்.....