Blog Archive

Wednesday, August 20, 2008

யு.எஸ்.ஏ பயணம் 3,பகுதி 2

சி.என் டவர்ஸ், டொரண்டோ


தங்கியிருந்த விடுதியில் ஒரு ஓவியம்



விடுதி ஜன்னல் வழியே ஒரு வியூ




இரட்டை வானவில் மழையினூடே வந்து ஆ!!! போட வைத்தது:)





டெட்ராய்ட்...டொரண்டோ சாலை






மழையினில் மாக் டி தேடல்....







கனடா விசாவுக்கும், நாட்டுக்குள் நுழைவதற்கும் நின்ற இடம்.








டோல் கேட்!!









டொரண்டோ நுழைந்ததும் முதலில் பார்த்த வான்வில். பக்கத்திலியே இன்னோரு வான்வில்லும் உருவானது டபிள் கொண்டாட்டம்:0)










மழையில் நனைந்த வீதிகள் மழை நின்றபிறகு ஒரு குளித்த தோற்றம்.











அடடா,விமானம் செங்குத்தாகக் கிளம்பிவிட்டதே.












பெண் வீட்டுத் தோட்டத்தில் பூத்த கெர்பரா டெய்சி.






இப்படியாகத்தானே பலவித டீல்களையும் பார்த்து ஒரு வார ஆராய்ச்சியில் ஹோட்டல் விடுதிகளை இணையத்தில் தேடி,ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பயன்படுத்தி மாரியாட்(டொரண்டோ) விடுதியில் இரண்டு அம்மா அப்பா,இரண்டு குழந்தைகள் தங்க ஒரு அறை ஏற்பாடு செய்தார்கள். முதல் கட்டம் முடிந்தது.
அடுத்தது நயகரா புக்கிங். நயகரா கொட்டும் அழகைப் பார்த்தவாறு ஒரு அறை வேண்டும் என்று தேடி அதுவும் கிடைத்தது:)
14ஆம் தேதி ஒரு மணிக்கு மதியம் கிளம்ப நினைப்பு. ம்ஹூம் நாங்கள் கிளம்ப மணி நாலு ஆச்சு. டெட்ராய்ட் போய்ச் சேர 5 மணிநேரம் பிடிக்கும்.
மாப்பிள்ளையின் நண்பர் அங்கெ இருக்கிறார்.
அவர் வீட்டில் இரவு தங்கி,அடுத்தநாள் கனடியன் விசா எடுப்பதாகவும்,எடுத்த கையொடு பயணம் தொடர உத்தேசம்.
நடுவில் சூசன் அம்மாவை வேற வாங்க வேண்டி வந்தது. அவங்க கூடவே வந்து வழிகாட்டியதால் தான் எல்லா இடங்களையும் ஒழுங்காகக்
கடந்தோம்! அதான் இந்த ஜிபிஎஸ்ஸின் மகிமை.
ஆனால் ஒன்று கொஞ்சம் ரோடு மாறினாலும் அந்த அம்மா,'கீப் ரைட் 'சொல்ல ஆரம்பித்துவிடுவார்,.
அப்படியெல்லாம் மகா சௌகரியமாக ஆரம்பமான பயணம்,பாதியில் நிதானப் படவேண்டி வந்தது.
ஒரு பெரிய 'மாக்' ட்ரக் மழையில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து,
கவிழ்ந்து விட்டது.
நல்ல வேளை அந்த வண்டி ஓட்டுனருக்கு அடியில்லாமல் தப்பித்திருந்தார்.
அந்த விஷயத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த சாலைப் போலீசாரை மெச்சவேண்டும்.
ஒரு வண்டி அந்த இடத்தைக் கடப்பதற்கே 10 நிமிடம் ஆகியது.
வெகுஜாக்கிரதையாக மழையில் ஒளிபாய்ச்சியபடி நின்றவர்களைப் பார்த்து
அதிசயப் பட்டேன்.
இப்படி அப்படியாக நண்ப்ர் வீட்டுக்குப் போய்ச்சேர இரவு 1 மணி ஆகியது.
அவர்களும் கதவைத் திறந்த நொடியிலிருந்து எம்க்களுக்கு படுக்க வசதி செய்து கொடுத்து தூங்கப்போகையில் மணி இரண்டு!
இதெல்லாம் இருக்கட்டும்.
என்னுடைய மறதி மகிமை அடுத்த நாள் காப்பியுடன் வெளிவந்தது.
இரத்த அழுத்த மாத்திரை மட்டும் எடுத்துவர மறந்திருந்தேன்.
அலுப்பாக இருக்கிறதா:)
நாளை பார்க்கலாம்.














Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

30 comments:

இலவசக்கொத்தனார் said...

மாத்திரையை மறக்கலாமோ?

ambi said...

காப்பியுடன் வெளி வந்ததா? :))


நயாகரா படங்களுக்கு வெயிட்டிங்க். :)

துளசி கோபால் said...

படங்கள் & பதிவு ரெண்டும் சூப்பர்.

ஆமாம்...மாத்திரையை மறக்கலாமா?

உயிரே அதுலேதானேப்பா......

ராமலக்ஷ்மி said...

படங்களும் பயணத்தைப் பற்றிய விவரிப்பும் உங்களுடனே நாங்களும் வந்தாற் போன்ற உணர்வைத் தருகின்றன.

மாத்திரைக்கு என்ன செய்வீர்கள் வல்லிம்மா:(, நம்ம ஊர் மாதிரி ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாம எதுவும் கிடைக்காதே அங்கே?

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
மத்தியானதுக்கு சாம்பார்,பாயசம்,பொரியல் செய்து சாப்பிட்டு,அதை டிஷ்வாஷரில் போட்டு,இட்டிலிகளுக்கு மிளகாய்ப்பொடிஎண்ணெய் டிரஸ் செஉது, தயிர்சாதம் வெண்ணையாஇப் பிசைந்து தனித்தனி பார்சல் செய்து அந்த பெரிய ஐஸ் பெட்டியில் பதிந்து வைத்துவிட்டு. அப்புறம் இந்த மாத்திரைகளை ஒழுங்கு செய்து பத்து பத்தாக ஒரு சிப் பையில் போட்டேன்.
இந்த க்ளூகோபே மாத்திரையும் இ.அழுத்த மாத்திரையும் கிட்டத்தட்ட ஒரே கலர். என்ன, அது கொஞ்சம் பச்சையாக இருக்கும் ,இது வெள்ளையாக இருக்கும்..........
ஒன்றுக்கு இரண்டா சர்க்கரை மாத்திரை யை எடுத்து விட்டேன்.:0)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி.
காப்பி சாப்பிடும்போதுதானே மாத்திரை நினைவு வரும்.

கொஞ்ச நேரம் சொல்லாம இருந்தேன்.
பெண் என்னைக் கண்டிப்பா நோட் செய்துகொண்டே இருப்பா. என்ன விஷயம்மா ? குட்டி போட்ட மாதிரி ரூமுக்குள்ளேயே சுத்தறியே. எது தொலைஞ்சு போச்சு?
என்று ஆரம்பித்தாள்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா துளசி.

என்னை மாதிரியும்
ஒருத்தர் இரண்டு பேர் இருந்தால்தானெ,
ருசிக்கும்.:(

நமக்கும் பதிவில எழுத ஏதாவது அவல் கிடைக்கிறது பாரு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ராமலக்ஷ்மி . மாத்திரைக்குச் செய்த கூத்து இன்னோண்ணு.
அது அடுத்த பதிவில.
படங்கள் எல்லாம் காருக்குள் உட்கார்ந்து எடுத்தது.

வெளியில் எடுத்த போட்டோக்கள் இன்னும்நல்லா வந்து இருக்கு.
அதாவது காட்சிகள் அந்த மாதிரி இருந்தது.நன்றி ராஜா.

இலவசக்கொத்தனார் said...

நார்மலா இந்த மாதிரி மாத்திரை எடுத்து வைக்கிற வேலை எல்லாம் சிங்கத்துக்கு டெலிகேட் பண்ணி இருப்பீங்களே. அப்போதானே இந்த மாதிரி நடந்தா குடும்பத்து மேல அக்கறை இருந்தாத்தானேன்னு நல்லாத் திட்ட முடியும். அப்படி எல்லாம் செய்யாம இருக்கும் அளவுக்கு ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவங்களா நீங்க! :))

ஆயில்யன் said...

//பெண் என்னைக் கண்டிப்பா நோட் செய்துகொண்டே இருப்பா. என்ன விஷயம்மா ? குட்டி போட்ட மாதிரி ரூமுக்குள்ளேயே சுத்தறியே. எது தொலைஞ்சு போச்சு?
என்று ஆரம்பித்தாள்.:)//

ரசித்தேன்!

சிரித்தேன் :)))))

ஆயில்யன் said...

இந்த டொரண்டோ டவர் மேலேதானே ஜீன்ஸ் பாட்டுல பிரசாந்தும் ஐஸும் டான்ஸ் ஆடுவாங்க ??

இந்த படத்தை பார்த்தா எனக்கு அந்த படம்தான் சட்டுன்னு ஞாபகத்து வருது!

ஆயில்யன் said...

டொரண்டொ சாலை,டோல்கேட் போட்டோவெல்லாம் செம கலக்கலா இருக்கு! :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
இது கதையா இருக்கே!!!அவராவது மாத்திரையைக் கண்ணால பார்க்கறதாவது!!
எனக்கு ஒண்ணுமே தொந்தரவு இல்லை எல்லாம் பாதிக்கு மேல இமாஜினேஷன்னு அவரும் பெரியவனுமாக் கலாய்ப்பார்கள்.

சின்னவந்தான் அக்கறையாக் கேட்பான்.சரியாப் பத்துக்கிட்டியாம்மா.எல்லாம் இருக்க.டப்பால பகுதி பகுதியாப் போட்டுத்தரேன் ,உனக்கு சௌகரியமா இருக்கும்னு சொல்லிச் செய்தும் கொடுத்தான். அந்த டப்பாவை அங்கியே வச்சுட்டு வந்துட்டேன்:)))))))))

அய்ய அதை ஏன் கேக்கறீங்க. நான் ஏகத்துக்கு நல்லதுதான். என் மருமகள்களைக் கேட்டாச் சொல்லுவாங்க:)

வல்லிசிம்ஹன் said...

அப்படியா ஆயில்யன்??
எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அது ஐஃபில் டவர்னு நினச்சுட்டு இருந்தென்!! ஒரு வேளை ஸ்கைலான் டவரா இருக்குமோ.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா ஆயில்யன். இவங்களுக்கெல்லாம் என் மேல எப்பப் பர்த்தாலும் சந்தேகம். எதையாவது அப்புசாமித் தாத்தா ரேஞ்சில கலாட்டா செய்வதாக நினைப்பு.

ஏதோ மருந்து செய்யற மாயம்பா:)

ராமலக்ஷ்மி said...

//மாத்திரைக்குச் செய்த கூத்து இன்னோண்ணு.
அது அடுத்த பதிவில.//

வெயிட்டிங்...:))!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நயாகரா வந்தவங்க, எப்போ இங்கிட்டு வரீங்க? தொலைபேசி அழைப்பு கூட இல்லை! இருங்க இருங்க! உம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கனடா விசாவுக்கும், நாட்டுக்குள் நுழைவதற்கும் நின்ற இடம்//

பொய் சொல்லாதீங்க வல்லியம்மா!
நீங்க நின்ற இடமா?
காருக்குள் உட்கார்ந்துகிட்டே தானே விசா வாங்குனீங்க? :)

சரி சரி,
பொய்க்குத் தண்டனையா, சீடை (both sweet & karam), அனுப்பி வையுங்க! இந்நேரம் எல்லாம் தயார் ஆகிக்கிட்டூ இருக்குமே? :)

வல்லிசிம்ஹன் said...

தொலைபேசி நம்பர் இல்லையேம்மா. கூப்பிட்டு இருப்பேனே இதற்குள்.
எங்களுக்கு கனடாவிலிருந்து நேர டெட்ராய்ட் வரத்தான் ஒரு விசா இருந்தது. நியூயார்க் போனால் மாப்பிள்ளை 10 மணிநேரம் மீண்டும் ஓட்ட வேண்டும்.

இன்னோரு முக்கிய காரணம் இதோ எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

கண்ணனுக்கு உண்டான சீடை முறுக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமதான் செய்யணும்:0)

முதல் நாளெ செய்தால் கண்ணெச்சில் படுமாம்.:)

கயல்விழி said...

வல்லி மேடம்

உங்களுடைய பயணக்கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன், அருமையாக இருக்கிறது. கூடவே நீங்கள் பதிக்கும் புகைப்படங்களும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

கயல்விழி,வரணும்மா.
சந்தோஷமா இருக்கு நீங்கள் எல்லாரும் ரசிக்கிறதைப் பார்த்து.

இன்னும் கொஞ்சம் நேரம் இந்த நாற்காலியில் உட்கார முடிந்தால் இன்னும் நிறைய எழுதலாம். குழந்தைகளையும் பார்க்கணும் இல்லையா.:)

திவாண்ணா said...

k//.டப்பால பகுதி பகுதியாப் போட்டுத்தரேன் ,உனக்கு சௌகரியமா இருக்கும்னு சொல்லிச் செய்தும் கொடுத்தான். அந்த டப்பாவை அங்கியே வச்சுட்டு வந்துட்டேன்:)))))))))//

ம்ம்ம்ம்ம்...இதுக்கு மேலே என்ன செய்யமுடியும்?
கொடியம்மா, வயசு குறைஞ்சுகிட்டே போவுது. கொஞ்சம் கவனமா இருங்க!

Geetha Sambasivam said...

வல்லி, கைப்பை வச்சுக்க மாட்டீங்க?? நான் எல்லா மருந்துகளையும் கைப்பையை விட்டு எடுக்கவே மாட்டேன், எங்கே போனாலும் கூடவே வருமே அதுவும்??? வேறே யாரும் அதை எடுக்கவும் விடமாட்டேன். இனிமேல் ஒரு கைப்பை வச்சுக்குங்க. அதான் சரியா வரும், மாத்திரைகள் எல்லாம் அங்கேவாங்கிக் கட்டுமா?? :(((((((

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா.
மறதிதாம்பா காரணம்.
வேணும்னு செய்யலை.

கொடியாய் நான் இருந்த காலம் இருபது வருடங்களுக்கு முன்னால். இப்ப ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க சாமி:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, க்கைப்பையில் மருந்துகள் எப்பவும் உண்டு.
ஆனால் மருந்துகள் அதிகம். அதனால் இன்னோரு பர்ஸ் மாதிரி அதையும் இதற்குள் போட்டுப்பேன். கிளம்பின அன்னிக்கு அந்தப் பையில் இந்த ஒரு மருந்தை , ரீ செக்கிங் செய்யும் போது மறந்துபோய் பெரிய பொட்டியில் போட்டு விட்டேன்.
முதல் தடவை இப்படி செய்வது. இது ஒரு நல்ல பாடம். எத்தனையோ பாடங்களில்:(

திவாண்ணா said...

//வரணும் திவா.
மறதிதாம்பா காரணம்.
வேணும்னு செய்யலை.//

வேணும்ன்னு செய்வாங்களா! என்ன நான் 2 நாளுக்கு விஷயங்கள் ஞாபகம் வெச்சுப்பேன். so i fully sympathise with you!

// கொடியாய் நான் இருந்த காலம் இருபது வருடங்களுக்கு முன்னால். இப்ப ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க சாமி:) //

அதுக்குத்தான் முன்னெச்சரிக்கையா பேரோட சேத்து வெச்சிட்டாங்க.

திவாண்ணா said...

//சாமி// ?? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
:-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திவா சாமி:)
இரண்டுநாள் விஷயங்கள் ஞாபகம் இருக்குமா. தேவலையே:)

யார் பேரு வச்சாங்க. இது நானா வச்சுக்கிட்ட பேரு.
என் பொரிஜினல் பேரு ரொம்ப மாடர்னன இருக்கறதால தாயார் நாச்சியார் பேரான கோமளவல்லி பேரை வைத்துக் கொண்டேன் மா திவா.

குமரன் (Kumaran) said...

அடுத்து நயாகராவா? எனக்கு ரொம்ப பிடிக்கும். உடனே படித்துவிடுகிறேன். :-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,

நயாகரா படங்களோடு வெளிவந்திருக்கிறது:)
நன்றிம்மா படிப்பதற்கு.