Blog Archive

Saturday, May 03, 2008

295,திலகமா? வட்டப் பொட்டா:)


















இது ரொம்ப சீரியசான விஷயம்பா.
இப்போ யோசிச்சுப் பாருங்க. திருமணம் ஆகிறவரை ஒரு சுதந்திரம்.அதுக்கப்புறம் கொஞ்சம் பறி போகிறதா இல்லையா.



உண்மைதானே?



உடுத்துவது,அலங்காரம் செய்து கொள்வது,தூங்குவது விழிப்பது,வேலை செய்வதிலிருந்து எல்லாம் மாறும்.
பிறந்த வீட்டில் அரசாங்கம் செய்து விட்டு
புக்ககம் வரும்போது அவர்கள் விருப்பத்துக்கு நம்மை மாற்றிக் கொள்வோம். முக்கால்வாசி விருப்பமாகவே அவர்கள் முறைப்படி மாறுவோம்.



ஒரு மயக்கமான புதுமையானநாட்கள் :)





புதுப் புது மனிதர்கள், பரிசுகள்,பட்டாடைகள், விருந்துகள், அனுசரணையான விசாரிப்புகள் எல்லாம் அழகான உலகத்தில்நம்மைத் தள்ளும்.
அப்போது சரி சரி என்று எல்லாவற்றுக்குமே ஆமோதித்த பல விஷயங்களில்
இந்தப் பொட்டு விஷயமும் ஒன்று.



அந்தக் காலத்தில்(ஐய்யோ இன்னுமொரு மலரும் நினைவா!!!!) ஒரு பதினெட்டு வயது வரை தாவணி அனுமதிக்கப் பட்ட காலம்,
அப்போது பாவாடை ஒருகலர்,

மேலுடையாகிய தாவணி வேறு ஒருகலர்.
இது இரண்டும் இணைந்த வண்ணங்களில் ஒரு ரவிக்கை(ப்ளௌஸ்)


ஜார்ஜெட் தாவணிக்கு ஏற்ற வண்ணங்களில் சாந்துகள் வராதகாலம். வடநாட்டுப் பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

அதெல்லாம் எங்க அம்மாப்பாட்டி ஒத்துக்க மாட்டாங்க.

ஒரு மை இட்டுக்கலாம். சாந்து வட்டப் பொட்டு வைத்துக்கலாம். அவ்வளவுதான் அலங்காரம்.

ரொம்ப நாள் சாயந்திர வேளையாப் பார்த்துப் பாட்டியை வம்புக்கு இழுத்து மையில் தோய்த்த திலகம் அதான்பா அந்த நீட்டமா சரோஜாதேவி சாவித்திரிலாம் வச்சுப்பாங்களே அது மாதிரி(அந்த சைஸ் இல்ல, சின்னதா)
வைத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொண்டேன்.




தோழிகள் அனைவரும் இந்தத் திலகம்தான் சூப்பரா இருக்கு. மாத்தாதே,
என்று ஒரே முடிவாகச் சொன்னதும் அப்படியே இருந்தேன். வந்தது அதுக்கு வேட்டு.

ஒரு வருடச்சென்னை ஆட்டம்(கல்லூரிக் கதை பியுசி) முடிந்து மதுரைக்குத் திரும்பி, அதுக்கப்புறம் நடந்த கதையெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.


கல்யாணத்துக்கு முத நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது,


மணப்பெண் அறைக்கு...அதாவது என் அறைக்கு என் குட்டி (ஆறு வயது மூத்தவர்) நாத்தனார் வந்தார்..



என் அலங்காரம் எல்லாம் ஓகே சொல்லிவிட்டு, அந்தத் திலகம் மாதிரி இட்டுக் கொண்டிருக்கிறாயே அது மட்டும் வேண்டாம். நம்ம வீட்டு சம்பிரதாயம் கோபுரம் மார்க் ஆறாம் நம்பர் கத்திரிப்புக் கலர் குங்குமம் தான்.

இதோ எடுத்துக்கோ.

(குங்குமம் ஒட்டணும்னா அதுக்கு முன்னாடி கோந்து ஒட்டணமான்னு கேட்கிற கேஸ் நான்:) )



மேடைக்கு வரும்போது வட்டமா குங்குமம் இட்டு வரச் சொல்லி ஆஜிப் பாட்டி சொன்னதை ஒப்பித்து விட்டு ஓடி விட்டார்.

அன்னிக்கு மாறினவள் தான் நான். எங்க பாட்டி என்னைப் பார்த்து அசந்து போயிட்டார். வேற ஒண்ணுமில்ல குங்குமம் வைக்கிறேன் பேர்வழினு அதை நெத்தியில் வைத்து அழித்து வைத்து அழித்து நெத்தியே ஒரு சிகப்பாக மாறி விட்டது.





எனக்குத் தோழிகளாக இருந்த ரெண்டு மூணு பெண்கள், ''அய்ய கல்யாணம் செய்யணுமுன்னாப் பொட்டு கூடவா மாத்த சொல்வாங்க?''

என்று அவரவர் இஷ்டத்துக்கு என்னைக் கலாய்க்க, அந்தப் பரிகாசத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அவங்க சொன்ன மாதிரி வேஷம் கட்டி தஸ்ஸா புஸ்ஸா புடைவையோடு,ஜிமிக்கிகள் ஆட வந்ததும்,

இன்னோரு விண்ணப்பம் வந்தது. மாற்றுப் புடவை உடுத்தும்போது
ஜிமிக்கிகளையும் மாட்டலையும் கழட்டி வைக்கும்படி;0)




அதற்குக் கொஞ்ச நாட்கள் முன்னால்தான் கர்ணன் படம் பார்த்திருந்தேனா
... அந்தச் சோகத்தோட ,கண்ணாடியில் பார்த்தபடி மண்டையில்(இந்திரன்,குந்தி,
சூரியன் என்று சினி நட்சத்திரங்கள் பாட) பிஜிஎம் ஓட,அவைகளையும் கழட்டி வைத்தேன்.

இந்த பில்ட் அப் எல்லாம் எதற்குனு கேட்டீங்கன்னா மீண்டும் ஒரு இருபது வயது வேடம் போடலாமா வேண்டாமானு யோசனை வந்திருக்கு. நீங்களே சொல்லுங்க எது உசத்தி? வட்டப் பொட்டா, நீட்டத்திலகமா:)))


















42 comments:

வல்லிசிம்ஹன் said...

எழுதும்போது பாரா பிரிச்சி தான் எழுதி இருந்தேன்.
போறாத காலம் எல்லாம் ஒண்ணா இந்தியன் எக்ஸ்ப்ரஸ் எடிட்டோரியல் மாதிரி வந்து இருக்கு:)

dondu(#11168674346665545885) said...

//எல்லாம் ஒண்ணா இந்தியன் எக்ஸ்ப்ரஸ் எடிட்டோரியல் மாதிரி வந்து இருக்கு:)//

பிரச்சினை ஒன்றும் இல்லை. எடிட் பட்டனை தட்டி விட்டு பத்திகள் பிரியும் இடங்களில் எண்டர் விசை மூலம் ஒரு ஸ்பேஸ் அதிகமாகத் தரவும். அதே போல பத்திகளுக்குள்ளேயே இருக்கும் வரிகளில் தேவையற்ற காலி இடம் இல்லாது பார்த்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

G.Ragavan said...

திலகம்... திலகம்... என்னுடைய ஆதரவு நீட்டத் திலகத்திற்கே. ஓங்கி உலகளந்தான் போல் நிமிர்ந்து நிற்கும் திலகமே சிறப்பு. :) சிறுவயதில் திலகம் இட்டுக் கொண்ட பெண்களையும் சிறுமிகளையும் பார்த்திருக்கிறேன். அது அழகாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இப்பொழுது அப்படி இட்டுக் கொள்கின்றவர்கள் யாருமில்லை போல.

இலவசக்கொத்தனார் said...

இதோட ஒரு போட்டோ அதோட ஒரு போட்டோ போட்டு ஒரு கருத்துக் கணிப்பு வைக்கலாமா? :))

வல்லிசிம்ஹன் said...

நன்றி டோண்டு சார்.

ஏற்கனவே ஒரு தடவை இந்த மாதிரி ஆச்சு.
அப்போ விஎஸகே சார் வந்து இதே வார்த்தைகளைச் சொன்னார்.

எங்கியோ தப்பு நடந்து விடுகிறது. ;)

துளசி கோபால் said...

என் ஓட்டு திலகத்துக்கே.

என்ன.... முந்திக் காலத்தில் புருவம் சேரும் இடத்திலிருந்து ஒரு இஞ்சுக்கு மேலே.

இப்ப கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வந்துருக்கு. ஆனால் அதே திலகம் டிசைந்தான்.


கொசுறுக்காக ஒரு நாலைஞ்சு வருசமா அதுக்குக் கீழே சந்தனம் இட்டுக்கறேன். மினித் தாயார்:-)
வல்லி,

நான் சோகமா இருக்கேன்னு காமிக்க ஒரு அடையாளம் வச்சுருக்கேன். வட்டப்ப் பொட்டு. பெருசா ஜெயசித்ரா வச்சுக்கும் சைஸில் வாங்கி வந்து வச்சுருக்கேன்.

சோகம் வந்தவுடன் அதை வச்சுப்பேன்.

டேஞ்சர் சிக்னல்:-)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜிரா. இருக்காங்க. நம்ம
பெண்பதிவர்ல ஒருத்தர் திலகம் இட்டுப்பாங்க. கண்டிபிடிங்க பார்ப்போம்;)

தெலிசுன்னாரா/?
தெலுகு தப்பில்லைன்னு நினைக்கிறேன்.
திலகம் அழகுதான்.
நீங்க வர்ணிக்கிறது அதைவிட அழகா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஹையோ.

ரொம்பப் பாவமாப் போயிடும் எல்லாருக்கும்.

கொத்ஸ் சார்,
அப்பாடா பி.கயமைலேருந்து தப்பிச்சுட்டேன்.

ஓ, என்னைச் சொல்லலியா. போட்டோ தானே போட்டாப் போச்ச்சு.:)))

வல்லிசிம்ஹன் said...

ஜிரா,
நான் சொன்னவங்க வந்துட்டாங்க.
வந்துட்டாங்க.
கொத்ஸ். இதிலயும் பின்னூட்டக்கயமை வந்துட்டது:)

வல்லிசிம்ஹன் said...

தாயே(தாயாரே) வணக்கம்.
ஜெயசித்ரா மாதிரியா.
சாமி!!!

ஆஹா திலகத்தோட மகிமையே தனி.
கற்பகம் படத்தில சாவித்திரியோட திலகம்.

பணக்காரக் குடும்பம் படத்தில சரோஜாதேவி திலகம். சட்டுனு ஞாபகம் வரது இது இரண்டும். இன்னும் எத்தனையோ:)
சிகப்புக்கலர் வட்டப் பொட்டா.??/
கோபாலுக்கும் தெரியுமா:)))))))

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா, என் ஓட்டு திலகத்துக்கே

:-)

ஆமாம், நீங்க சொன்ன இன்னொருத்தங்களையும் போட்டோல திலகத்துடன் பார்த்திருக்கேன்.....

வல்லிசிம்ஹன் said...

மௌலி,, இப்ப்ப ஒரே ஒர் ப்ராப்ளேம் என்னன்னா நாளைக்கு

பங்களூரூ வரும்போது அதுவும் புகுந்த வீட்டு ஃபன்க்ஷன்ல நான் ந்நீட்டப் பொட்ட்டு வச்சா ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனைசெய்து பார்த்தேன்.
ம்ஹூஉம் சரிப்படாது:((

பிரேம்ஜி said...

திலகம் தான் சூப்பர் வல்லி மேடம்!

வல்லிசிம்ஹன் said...

ப்ரேம்ஜி,

மேடம் எல்லாம் விட்டுடுங்க.

சாதா வல்லிம்மா போதும். திலகத்துக்கே இறுதியும் உறுதியுமான வெற்றி கிடைக்கப் போகிறது.:)

கோபிநாத் said...

எல்லோரும் ஒரே திலக பாட்டா பாடுறாங்க...ஆனா வட்டப் பொட்டுக்கு தான் என்னோட ஓட்டு...நான் வல்லிம்மாவை வட்டப் பொட்டு வச்சி பார்த்திருகேனே!! ;))


இப்போ திலகத்தை வச்சவங்களை பார்க்க போயிக்கிட்டு இருக்கேன் ! ;))

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்:)
அப்ப அம்மாவுக்கு வட்டம்தானா. சரி:)

பிள்ளைங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்.

ஏதாவது சேஞ்சுக்குத் திலகமும், தினப்படிக்கு வட்டப்பொட்டும் வைத்துக்கொள்ளலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி ரொம்ப நாள் கழித்து உங்களுடைய ரசனைக்கு எது வச்சிக்கலான்னு நீங்களே வச்சிக்கற நிலமை வந்தட்பின்னும் நாலு பேருக்கிட்ட அபிப்பராயம் கேட்கறீங்களே பழகிடுச்சு அப்படித்தானே ? மனசுக்கு பிடிச்சதை வச்சிக்கோங்களேன்..

ambi said...

திலகம் தான் சூப்பர். இளமையா காட்டும். பானுமதி மேடம் வெச்சுபாங்களே.

தங்கமணிக்கு நான் வாங்கி குடுத்த பொருளில் இதுவும் ஒன்னு.(திருமணத்துக்கு அப்புறம் தான்)


வீட்டில் எங்காவது கீழே இந்த திலகத்தை பாத்தா நான் காசு குடுத்து வாங்கி குடுத்ததாக்கும்!னு சொல்லி காட்டி கடுப்பேத்துவது ஒரு வழக்கம். ஹிஹி. :p

நீங்க ஏற்கனவே நமோ மாதா! ரேன்ச்ஜுக்கு பொட்டு வெச்சு நடந்த கதை எல்லாம் தெரியுமே. :))

Geetha Sambasivam said...

என்னை மாதிரி எதுவும் ஒத்துக்காத கேஸுக்கெல்லாம் ஒரே வழி கோபுரம் மார்க் குங்குமமே! அது மட்டும் தான் என் நெத்தி ஏத்துக்கும். அது வட்டமோ, கோளமோ, திலகமோ தெரியலை, ஆனால் இட்டுக் கொண்டால் மூன்று நாளானாலும் அப்படியே இருக்கும். எங்கே போனாலும் குங்குமக் கையாளாய்த் தான் போகவேண்டி இருக்கு! ஸ்டிக்கர் எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ கையிலே இருக்கும் அவ்வளவுதான்!

Geetha Sambasivam said...

எப்போ ஊருக்கு?????????

வல்லிசிம்ஹன் said...

கயல்விழி முத்து,

எப்படிப்பா இப்படி ஒரு அழகுப் பேரு வச்சாங்க.

ஆமாம் எப்பப் பார்த்தாலும் யாருடைய அப்ரூவல் தேடுவது எனக்குள் இருப்பதைச் சரியாக கண்டுபிடித்தீர்கள். வயசு ஒண்ணும் மாற்றாது அம்மா. யாராவது ஏதாவது கதைதான் இன்னும்:)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, மறந்துட்டேனே பானுமதி அம்மாவை. அன்ன்ந்த 'அன்னை' திலகத்தை மறக்கமுடியுமா. அந்தப் பட்டுப்புடவை என்ன,மூக்குத்தியென்ன,கம்பீர நடையென்ன ம்ம் இனிமே யாரு அந்த மாதிரியெல்லாம் நடிக்கப் போறாங்க.

தங்கமணி சௌக்கியமா.

Anonymous said...

உங்களுக்கு பிடிச்ச பொட்டு (கலர், டிஸைன் எல்லாம் - ஸேலைக்கு மேச்சாக) கண்ணாடியில பாக்கும்போது, காதுல ஒரு அழகான ஜிமிக்கியும் ஆடணும் என்பது என் கோரிக்கை! :)

வல்லிசிம்ஹன் said...

டிக்க்கட் வந்ததும் ஊருக்கு.
இன்னும் ஒரு விசா வரணும்.

பத்து பன்னண்டு நாள் ஆகும்.
உங்க பதவிசே தனிப்பா.
நீங்களும் கோபுரமா:)

துளசி கோபால் said...

கீதாகிட்டே ஒரு சந்தேகம் கேக்கணும்.

அதெப்படிப்பா மூணு நாளானாலும் அப்படியே இருக்கும்?

நோ குளியலா?
அடிக்க வராதீங்கப்பா...

விடு ஜூட்.........:-))))

மெளலி (மதுரையம்பதி) said...

// இப்ப்ப ஒரே ஒர் ப்ராப்ளேம் என்னன்னா நாளைக்கு

பங்களூரூ வரும்போது அதுவும் புகுந்த வீட்டு ஃபன்க்ஷன்ல நான் ந்நீட்டப் பொட்ட்டு வச்சா ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனைசெய்து பார்த்தேன்.//

என்னது நாளஒ பெங்களூர் வருகிறீங்களா?....

வல்லிசிம்ஹன் said...

மதுரா, என்னப்பா. அய்யோடி என்ன சந்தோஷமா இருக்கு.
நல்லா இருக்கீங்களா.

//உங்களுக்கு பிடிச்ச பொட்டு (கலர், டிஸைன் எல்லாம் - ஸேலைக்கு மேச்சாக) கண்ணாடியில பாக்கும்போது, காதுல ஒரு அழகான ஜிமிக்கியும் ஆடணும் என்பது என் கோரிக்கை! :)//

அழுவாச்சியா வருது. ஏஎன் தெரியுமா. எங்க அம்மாக்கு,
பிறகு என் பெண்ணுக்கு அப்புறம் இப்படி சொன்ன ஒரே ஆளு நீங்கதான். மனசு பூரா நிறஞ்சு போச்சு.

செய்யலாம் அதுக்கும் ஒரு நாளு வரும்:)

வல்லிசிம்ஹன் said...

துளசி!!!!குசும்பு விடலியா:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்மௌலி.
செவ்வாய் காலையில் பங்களூரு.
புதன் சதாப்தியில் சென்ன்னை திரும்புகிறோம்.
எங்க சிங்கத்தோட அக்கா 70 பூர்த்தி செய்யறாங்க:)

துளசி கோபால் said...

இப்ப எதுக்கு ஜிமிக்கி புராணத்தைக் கிளப்பி விடுறீங்க........

அதைபத்தி(யும்) எழுதிருவேன். உஷார்...
அப்புறம் எச்சரிக்கை விடலைன்னு பேசப்பிடாது:-))))

ambi said...

//அதெப்படிப்பா மூணு நாளானாலும் அப்படியே இருக்கும்?

நோ குளியலா?
//

@tulasi madam, உண்மையை சபைல தைரியமா கேட்ட துளசி டீச்சருக்கு ஒரு யானையே பரிசாக குடுத்தாலும் தகும்.

@valli madam, Function in bangalore..? in which place..?

ஷைலஜா said...

திலகம் கட்சி நான்! கீழ சின்னதா ஒயிட் சாந்துல டாட் வச்சிடுவேன் அப்போதான் திலகம் பளிச்சுன்னு தெரியும்!
பெங்களூரா வரீங்க எங்க வீட்டுக்கு?
மைபா செய்து வைக்கவா?:)

வல்லிசிம்ஹன் said...

ப்ளீஸ் துளசி உங்க ஜிம்மிக்கி புராணம் எழுதுங்க. நான் மட்டும் பொட்டு அம்மன் கதை போட்டா நீங்க மாட்டலம்மன் கட்தை போடக்கூடாதா;)

வல்லிசிம்ஹன் said...

அம்பி ஆமாம் பா. நாளை காலை பகவத் சங்கல்பத்தில(!)

பெங்களூர்ரு வருவோம்ம். புதன் ,
ஜெய்மஹால் ஈஸ்ட் எக்ஸ்டென்ஷன்ல பூஜை,ஹோமம் எல்லாம்.
புதன் ஷதாப்தி நாலு 20க்குக் கிளம்பிடறோம்.

வல்லிசிம்ஹன் said...

ஷைல்ஸ்,

அடப்பாருடாப்பா. எல்லா அம்மக்களும் ஒரே மாதிர்ரி பழக்கி இருக்காங்க பொண்க்களை.

வட்டமோ, திலகமோ அடில குட்டிப் பொட்டும் இடறதுதான் பிடிக்கும்.:)
மைபா வேணாம். (நெய்0)

அல்வா கேக்கலாமா?????????????

கிருத்திகா ஸ்ரீதர் said...

என் ஓட்டு திலகத்திற்குத்தான். எங்க மாமியார் நல்ல வாடாமல்லி கலர்ல திலகமும் இல்லாம வட்டமும் இல்லாம கையாலயே ஒரு மாதிரி வட்டமா வைச்சுண்டு மேல தில்கம் மாதிரி இழுப்பா பார்க்க அவ்வளவு அழகா இருக்கும் ஆனா எனக்கு குங்குமம் சரிப்பட்டு வராது ஸ்டிக்கர் தான். ஆனா எப்பவாவது கால வேளல நெத்தில ஸ்டிக்கர் இல்லேன்னா இத மாதிரி செஞ்சு பார்ப்பேன் ஆனா அந்த வாடாமல்லி கலர் கிடைக்க மாட்டேங்குது.

தி. ரா. ச.(T.R.C.) said...

அடே நான் ஊரிலே இல்லாதபோது இவ்வளவு பிரச்சனையா உங்களுக்கு. சரி பொட்டா/திலகமா முடிவி ஆயிடுத்தா. என் ஒட்டு பொட்டுக்குத்தான்

வல்லிசிம்ஹன் said...

வரணும் கிருத்திகா.
அட அதே வாடமல்லி தான் நான் கத்திரிப்பூனு சொல்லிட்டேன். கோபுரம் 6ஆம் நம்பர்னு அதுக்குப் பேரு.

அந்த குங்குமம் இப்ப வரதான்னு
கேட்டுப் பார்க்கிறேன்.
தெரியலையே,.
ஆமாம் குங்குமம் வச்சுக்கிறது ஒரு கலை.
மூக்குமேல சிந்தாம, பெரிசாவும் இல்லாம, கண்ணுக்கும் அழகா
வட்டமா வச்சுக்கிறது ஒரு பெரிய ஆர்ட்.
அதையே திலகமா வச்சிக்கணும்னால் ஏகப்பட்ட முயற்சி வேணும். :)

உங்க மாமியாருக்கு என் பாராட்டுகள்.
அதைச் சொன்னதற்கு உங்களுக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ தி.ரா.ச. அதெல்லாம் ஃபெப்ரவரி நாலாம் தேதி 1966லெயே முடிவான விஷயம்:)

கட்ட்டளைகளை மீறும் வழக்கம் நம் பெண்களுக்கு அவ்வளவு சுருக்க வந்துடாது.
வட்டமே ஜெயிக்கிறது:)

துளசி கோபால் said...

அதெப்படிப்பா வட்டம் ஜெயிக்கும்?

வெற்றித்திலகம் அணிந்து.....

வெற்றிவட்டம் அணிந்து....

எது சரியா இருக்கு?

ஆமாம். பெண்களூர் போய் வந்தாச்சா?

வல்லிசிம்ஹன் said...

திலகம் இட்ட திலகமே வருக.

பெண்களூர் போய் வட்டமாகவே திரும்பி விட்டேன்.

வாழ்வில் வெற்றி அடைய வட்டப் பொட்டே வழி என்று எனக்குப் பாடம் சொன்னவர்கள் நடுவில் 'திலகம்மா'வா மாற வழியே இல்லை.:)))
வெற்றித்திலகமே சரி. வெற்றிவட்டம்ன்ன்னு சொல்லிக் கேள்விப்பட்டதே இல்லை.!!!!

Geetha Sambasivam said...

//நோ குளியலா?
அடிக்க வராதீங்கப்பா...//

ஹிஹிஹி, துளசி, 3 நாள், 4 நாளெல்லாம் ரெயிலில் போன அனுபவம் உண்டே, அதான் சொன்னேன். இப்போவும் விமானப் பயணத்தில் சற்றும் கலையாது! :))))))) நல்ல கேள்வி கேட்டு டாமை ஜெயிக்க வச்சுட்டீங்களே? :P