எங்க வீட்டுக்கு வந்து 14 வருடங்கள் ஆச்சு.
சிங்கம் சொன்ன பேச்சை கேட்கும்.
இன்னிக்கு வேற வீட்டுக்கு வளப்படுத்தப் போறாங்க.
எத்தனையோ புது மாதிரியான் வண்டிகள் வந்தும் எங்களிடம் எப்பவுமே ஒரு ஃபியட் வண்டிதான் இருக்கும்.
நானானி கூட 'ஓ ,டிவிஎஸ் வாசனையா' என்று புன்முறுவலித்தார்.
அப்படித்தான் இது வரை இருந்தது. இப்போது வேற ப்ளசர் கார் வரப் போகிறது.
ம்ம். அதெல்லாம் இந்த வண்டி மாதிரி ஆகுமா.
என்ன செய்யலாம் சில நேரங்களில் காலத்தின் கட்டாயத்துக்கு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
அன்பு 2459, கருப்பாயி போயிட்டு ,போன இடத்தில நன்றாக இரு.
நீ உதவிய நேரங்களை மறக்க மாட்டேன். வாழ்க.
நன்றியுடன் என்றும்.
22 comments:
எல்லோருக்கும் வீட்டு மேல, வண்டி மேல பாசம் இருக்க வேண்டியதுதான். இந்தப் பழைய தோழி(வண்டி)யைப் பிரிவதில் இவ்வளவு மன உளைச்சல் வரும் என்று நான் நினைக்கவில்லை!!
அப்புறம் எப்படி ஞானம் வரும்னு பிரியலை சாமி!!அதான் பது போட்டுட்டேன்:)
பதிவும், முதல் பின்னூட்டமும் சூப்பர்.
உங்களது பின்னூட்டம் என்னுள்ளும் பல முறை வந்திருக்கு, இப்பவும் வருது. :-)
இந்தப் பாசம் இயல்பானதுதான்..கஷ்டப்படுத்தும் தருணங்களில் இதுவும் ஒன்றுதான்..
அஞ்ஞானி............
டாடா பைபை சொல்லீட்டுச் சீக்கிரம் அந்த ஆரத்தித்தட்டை எடுத்துக்கிட்டு வாம்மா.
புதுக்காரை சுத்திப்போடவேணாமா? அதுக்குத்தான்.
எனக்கும் ஒரு FS இருந்துச்சு.
சீக்கிரம் புது அம்மிணி படம் போடணும்,ஆமா:-)
வரணும் மௌலி,
இந்தக் கார் இவருக்கு, அப்படிப்ப் அழகிப் போனது. அவரே அசராம இருக்கார். எனக்குத்தான் மனசு கேக்கலை. அது சரி மனுஷாளே நம்மை விட்டுப் போயிடறாங்க இல்லையா.
இது போய் நன்றாக இருக்கட்டும்.
அடுத்து வரபோவது வெளையம்மாவா? :))
அதென்னவோ உண்மை. பாசமலர்.
எதற்குத்தான் ஈடு கொடுப்பது என்று தெரியவில்லை.
துளசி, அஞ்ஞானி தங்கச்சி,
இதோ கரச்சு வச்சிட்டேன் ஆரத்தியை:)
வேகனார் வர இன்னும் 10 நாட்கள் ஆகும்.
அவருக்கும் பேரு வச்சிடலாம்.
படமும் போட்டுடலாம்
அம்பி,
வரப்போறாவருக்குக் கொஞ்சம் கரடு முரடா முகம் இருக்கு. அதனால அவரை சாமியப்பன்னு கூப்பிடப்போறேன்:)
வல்லியம்மா..
பதிவும், முதல் கமெண்ட்டும் அருமை.. என்னதான் கருவியாக இருந்தாலும் நமக்காக உழைத்ததை எந்த ரூபத்தில் இருந்தாலும் மனிதர்களால் மறக்கவே முடியாது..
ஆனாலும் வரும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்..
// கொஞ்சம் கரடு முரடா முகம் இருக்கு//
அப்படின்னா முரடன் முத்துன்னு கூப்பிடுங்களேன். :-)
ஆமாம், சரவணன்.(உங்கள் பெயர் அதுதான்னு தெரிந்து கொண்டேன்)
அந்தக் காருவிக்கும் உயிர் இரூக்குன்னு தானே இப்ப சொல்றாங்க.
எப்பவுமே வண்டியைத் தட்டிக் கொடுப்பேன். எத்தனையோ இடர் வந்தாலும் எப்படியாவது தப்பித்து, ஒரு பத்துநாட்களில் வீடு வந்துடும்.
இல்லாவிட்டால் இவரே அதைச் சரி செய்துவிடுவார்.
இனிமேல் நம்மால் பராமரிக்க முடியாது என்றுதான் கொடுத்துவிட்டார்.நன்றிம்மா.
சரி மௌலி,
முரட்டு சாமினு வச்சுடலாம்.
சுருக்கி மூசானு கூப்பிடலாம்:)
டீச்சர் சொன்னதுக்கு ஒரு ரீப்பிட்டு ;))
கண்டிப்பாக படம் போடுங்க ;)
வரப்போகும் 'வாகனாருக்கு!' சிகப்பு கம்பளம் ரெடியா? இதே போல் அவரும் உங்கள் குடும்ப உறுப்பினரில்லையா? ரேஷன் கார்டிலும் சேர்த்துக்கொள்ளவும். பெட்ரோல் ரேஷனில் வாங்கிக்கலாம். நிஜம்ம்மா!!!
எங்கள் வீட்டு செவர்லே(1947)யோடு விளையாடி..உறவாடிய எங்களுக்குத்தான் இந்த அருமை புரியும்.(எட்டுக்குஎட்டு பதிவில் எழுதியிருக்கிறேனே!!
கோபிநாத்,
வண்டி வரட்டும்.
நேத்திக்குத்தான் பேப்பர் கையெழுத்து போட்டு இருக்கோம்.:)
சாம்பல் வெள்ளை..ashwhite வர்ணம்.
போட்டொ நம்பர் ப்ளேட் சகிதம் போட்டுடலாம்:)
எத்தனை வேளுக்குடி கிருஷ்ணன் கீதை கேட்டாலும் நமக்குஇன்னும் இந்த உயிரில்லாப் பொருள் மீதே பற்று போகவில்லையே..எப்படி உயிருள்ளவர்கள் மீது பற்று போகும்.
ambi bloglendhu vandhen, neenga enna car kellam post dedicate pani irukeenga, differenta irundhudhu.
car,naaikutti, bike idhodalaam neraya sweet memories irukkume !rite?
-K mami
வரணும் நானானி. செவர்லேயா:)
எனக்கு ஒரு செவர்லே
மாயாண்டி ஓட்டும் 5449தான் நினைவு வருகிறது.
அந்த வண்டியில் தான் திருநெல்வேலி பூராவும் சுற்றீனோம்.
அருமையான வண்டி.
எல்லாம் சித்தி செய்த புண்ணியம்.!!
உண்மைதான் நமக்கு உதவி செய்யும் நம் குடும்ப மெம்பர் ஆகி விடுகிறார்கள்.
வாகனார் வரும்நாள்முதலில் பூஜை. அப்புறம் ரெட்கார்பெட் தான்:))
தி.ரா.ச, வரணும்.
வேளூக்குடி கேட்டு விட்டு எழுந்ததும் மற்ற யோசனைகள் செய்ய வேண்டிய வேலைகள் மனசைச் சூழ்ந்து கொள்கின்றன.
அவர் கூறும் கருத்து அடிநாதமாக ஓடிக்கொண்டிருப்பதால் ஏதோபிழைக்கிறோம்:)))
ஹலோ கி.மாமி,
முதல் வருகைக்கு நன்றி.
நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த வால்யூஸ் நிறைய.
அதுவும் அப்பா சின்ன சின்ன விஷயங்களிலும் மிகக் கவனமாகச் செயல் ப்படுவார்,.
என்ன உபகரணம் வாங்கினாலும் அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று விளக்கிய பிறகே எங்களிடம் கொடுப்பார்.
அது இப்பவும் தொடருகிறது. ரொம்ப நன்றிம்மா.
எல்லோருக்கும் வீட்டு மேல, வண்டி மேல பாசம் இருக்க வேண்டியதுதான். இந்தப் பழைய தோழி(வண்டி)யைப் பிரிவதில் இவ்வளவு மன உளைச்சல் வரும் என்று நான் நினைக்கவில்லை!!
அப்புறம் எப்படி ஞானம் வரும்னு பிரியலை சாமி!!அதான் பது போட்டுட்டேன்:)
எனக்குக் கொஞ்சம் கல் மனசோனு நினைக்கிறேன் வல்லி, ஆனாலும் பழகிய இடம், மனிதர்கள், பொருள் என்றால் மனது சுத்திச் சுத்தித் தான் வரும்! :((( முதலில் கொடுத்த பின்னூட்டம் போகலை, திரும்பக் கொடுக்கிறேன், ரெண்டுமே வருதோ என்னமோ!
Post a Comment