இன்னிக்கு இவங்க எல்லாம் திருமணம் செய்துக்கறாங்க.
எனாலே ஒருத்தர் கல்யாணத்துக்கும் போக முடியாதததல கூகிள்ள தேடிப் படம் போட்டுட்டேன்பா.
எங்க கற்பகம்மா, கபாலீஸ்வரரையும்,
ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும்,
எங்கள் வில்லிபுத்தூர்ச் செல்வி கோதை அவள் கண்ணன் வடபத்ரசாயியையும்,
திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும்
திருமணம் செய்கிறார்கள்.
இன்னிக்குச் சந்திரன் அவ்வளவு தேஜசோடு இருப்பானாம்.
ஏனெனில் அவனுக்கும் திருமணம் இன்று.
ஸ்ரீமஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து எழுந்து வந்து
தன் நாயகன் பரந்தாமன் மார்பில் வந்து திருவாகத் துலங்கிய நாள்.
ஸ்ரீராமன் சீதா தேவியையும்,
லட்சுமணன் ஊர்மிளையையும்,
பரதன் மாண்டவியையும்,
சத்ருக்னன் சுருதகீர்த்தியையும்,
மிதிலையில் மணம் புரிந்த நாள்.இந்த வளம் மிகு நன்னாளில் நாம் அனைவரும் ,
தெய்வ தம்பதியர்களை நாடி, அவர்கள் அருளைப் பெறலாம் வாருங்கள்.
27 comments:
ஆஹா.. வீட்ல ஒரு விசேஷம்னாலே மூச்சு முட்டும்.. இதுல இத்தனை கல்யாணமா.. இத்தனை விசேஷமா.. நான் எல்லாத்துக்கும் வந்துட்டேன்.. தலையைக் காட்டிட்டேன்.. கிளம்பிட்டேன்.. தாம்பூலம் கொடுத்தா நல்லாயிருக்கும்..
\\எங்க கற்பகம்மா, கபாலீஸ்வரரையும்,
ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும்,
எங்கள் வில்லிபுத்தூர்ச் செல்வி கோதை அவள் கண்ணன் வடபத்ரசாயியையும்,
திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும்
திருமணம் செய்கிறார்கள்.
\\
வல்லிம்மா...இவுங்க நாலு பேரின் கல்யாண நாள் தான் பங்குனி உத்திரமா!!??
வாங்க வாங்க!!தந்தேனய்யா தாம்பூலம்:)
வரும் ஆடவருக்குப் பட்சணப்பை தனி. வேஷ்டி அங்கவஸ்திரம்.
பெண்டிருக்குப் புடவையும் தைத்து வைத்தப் ப்ளவுசும்:)
வளையலகள்,மஞ்சள், கும்குமம்,கண்ணாடி,சீப்பு எல்லாம் பெண்டிருக்கு உண்டு.
கல்யாண கலகலப்பில் உங்களைக் கண்டுக்காம விட்டுட்டேனா தமிழன்:)
கோபிநாத்,
இன்னும் எத்தனையோ மகிமை உண்டு, இந்தப் பங்குனி உத்திரத் திருநாளுக்கு.
அதெல்லாம் கீதாம்மா, ரவி கண்ணபிரான் எல்லாரும் போன வருஷம் எழுதி இருந்தார்கள்.
ரொம்ப நல்ல நாள்மா. முடிந்தால் கோவிலுக்குப் போய் வாருங்கள்.
இன்னும் நிறைய பெருமைகள் உண்டே வல்லி அம்மா பங்குனி உத்திரத்திற்கு. சிறப்பு இடுகைகள் கூடல், கண்ணன் பாட்டு, முருகனருள், அம்மன் பாட்டு பதிவுகளில் வந்திருக்கு. சிவன் பாட்டு பதிவுல இனிமே போடப் போறேன். அங்கே வந்து பார்த்தீங்கன்னா நான் ரெண்டு வருடத்துக்கு முன்னாடி எழுதுன பங்குனி உத்திர இடுகைகளைப் பார்க்கலாம். பங்குனி உத்திரத்தின் எல்லா பெருமைகளையும் தெரிஞ்சுக்கலாம். என் ப்ரொபைல் வழியா வந்து பாருங்க. :-)
பங்குனி உத்திர நன்னாள் வாழ்த்துகள் குமரன்.
கட்டாயம் வரேன். மற்றவர்களும் வந்து பார்க்கட்டும்.
ஒரு கோவிலுக்கும் போக முடியவில்லை. இன்று. மழையும் கொட்டுகிறது.
அதனால் உங்கள் பதிவுகள் கட்டாயம் ஒரு ஆன்மீகப் பயணமாக இருக்கும்.
நன்றிம்மா.
பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கம் மட்டையடி எல்ல்லாம் நினைவுக்கு வர்து.. இங்கயும் மழைலேசா....பக்கத்துக் கோயில்ல கல்யாண உற்சவம் கண்குளீரப் பார்த்துட்ட்டேன்.இங்க உங்க பதிவில்சேர்ர்த்தி சேவை!!! அருமை வல்லிமா!
படங்களோடு பதிவைப் படிக்கையில்,
மனசுக்கு இதமாக இருந்தது.
மிக்க நன்றி.
ஷைலஜா உங்களை விட ஸ்ரீரங்கராஜாவை யார் பாராட்ட முடியும்.
நன்றிப்பா.
வரணும் ஜீவி.
இணையத்தில இல்லாததே இல்லைங்கிறது இப்போது தெரிகிறது அதுவும் ஆன்மீக இணையங்கள் நிறையவே தென்படுகின்றன.
நன்றிம்மா.
ஒரே நாளில் இத்தனை கல்யாணமா?
இவர்கள் அனைவருக்கும்
அன்பான திருமண நாள் வாழ்த்து(க்)கள்.
//பெண்டிருக்குப் புடவையும் தைத்து வைத்தப் ப்ளவுசும்:)//
எனக்கு ப்ளவுஸ் ஸ்லீவ்ஸ் லூசாய்த் தைச்சு வையுங்க. கலர் சாய்ஸ் உண்டா?:-)
கால்வலி தேவலையா?
பேசாம, நானும் நீங்களும் சிங்கத்தையும் கோபாலையும் வழிக்குக் கொண்டு வந்து
பங்குனி உத்திரத்திலேயெ மணமுடித்திருக்கலாம்.
எல்லாரும் கொண்டாடுவாங்க இல்ல:)
உங்க ப்ளவுஸ் இன்னும் தைக்கலைப்பா. நீங்க வந்து பிறகு உங்க சாய்ஸ்தான்.:)
கால் வலியை மறக்கத்தான் பதிவுக்கு வந்தேன்:)இன்னும் 2 வாரங்கள் அதுக்குக் கெடு வைத்து இருக்கிறேன். சுற்றி வரதே போ வலியே என்று விரட்டுகிறேன்.
வல்லி!
நான் பங்குனி உத்திரத்துக்கு, பௌர்ணமிக்கு மேல்மருவத்தூர் போயிருந்தேன். கருவறைப்பணிக்கு.
மனசெல்லாம் நெறஞ்சுடுச்சு.
இதைப் பதிவிடுவேன். படங்கள் எடுக்கத்தான் இயலவில்லை. கவனம் அங்கு போய்விடுமல்லவா?
பங்குனி உத்திரத்திருநாளில் மணநாள் கண்ட தம்பதியரிடமிருந்து அருளாசிகள் வேண்டுகிறேன்.
எனக்கும் தாம்பூலத்தோடு புடவை,ஜாக்கெட்பிட் எடுத்து வைக்கவும். சேரியாப்பா?
நானானி, ரொம்ப சந்தோஷம்பா. மழைல மாட்டிக்காம இருந்த்தீங்களா.
கருவறைப்பணி கிடைத்ததே பெரிய புண்ணியம் இல்லையா.
கண்டிப்பாக எழுதுங்கப்பா.
நான் அந்தக் கோவிலுக்குப் போனதே இல்லை.
இதோ இன்னோரு பை எடுத்து வைத்துவிட்ட்டேன்.
என்ன கலர் வளையல் வேணும் உங்களுக்கு??:))
very interesting and very beautiful.
thank you
valli
வல்லி!
கருவறைபணி பதிவிட்டுவிட்டேன்!!!
எனக்கு என்ன கலர் புடவையோ அதே கலர் வளையல்கள். சேரியாப்பா?
சீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
பாவனஜ ஸ்துதி பாத்ர
பாவன சரித்த்ர
ரவிசோம வரநேத்ர
ரமணீய காத்ர
சீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
thank you Valli.G.
really nice of you to come here and comment.
try and visit yr blogspot too.:))
வரணும் தி.ரா.ச.
வைபோகம் வைபோகம் வைபோகமே.
இத்தனை நிறைவா ஒரு அண்ணா
பாடினால் பதிவெழுத இந்தத் தங்கைக்கு என்ன குறை.
நன்றிம்மா.
//சீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
//
ஹிஹி, எனக்கு என் ஊஞ்சல் நியாபகம் வந்துவிட்டது. :D
அம்பி, கல்யாண நின்வு வந்துடுத்தா,.
ரெமெடி#1 புதுசா
ஊஞ்சல் வாங்கலாம்.:)
ரெமெடி 2 தொட்டில் வாங்கலாம்.
கல்லிடைக்குறிச்சியில் மழை ரொம்ம்பவா??
நான் விசாரித்தாகச் சொல்லவும்.
புதுசா ஊஞ்சல் வாங்கினா என் தங்கமணி புதுசா பூரிகட்டை வாங்க வேண்டி இருக்கும். :p
புதுசா தொட்டில், நல்ல யோசனை, விரைவில் அமுல்படுத்தபடும். :D
கல்லிடையில் கன மழையாம். எப்போ நிக்க போகுதோ?னு போன் வந்தது. நல்லவங்களா இருக்கீங்க, அதான் இப்படி கொட்டுதுனு பதில் சொன்னேன்.
போன பங்குனி உத்திரத்துக்கு எழுதினேன், இந்த முறை இணையத்திலேயே இல்லை. :(((( என்ன செய்யறது? நீங்க போட்டிருக்கிற மாதிரிப் படங்கள் எல்லாம் என்னாலே எங்கே போடமுடியுது? நல்ல அருமையாப் படங்கள் தேர்ந்தெடுக்கிறீங்க!
அம்பி,
தொட்டில் ஒண்ணு தூளி ஒண்ணு ஆமாம் சொல்லிட்டேன்.
பட்டில தூளி இருக்கணும் மெத்து மெத்துன்னு. பாங்களூறூ குளுருக்கு அடக்கமா:)
இதை எழுதற நேரம் மழை நின்னு இருக்கணும்னு வேண்டிக்கறேன்.
நான் படங்களைக் கூகிள்ளதான் முக்காவாசி எடுக்கிறேன்.
உங்களை மாதிரி சொல்வளம்,விஷய ஞானம் இல்லையேம்மா:))
இணையத்தில இல்லை என்றால்? கனெக்ஷன் போயிடுத்தா அன்னிக்கு??
//ஸ்ரீராமன் சீதா தேவியையும்,
லட்சுமணன் ஊர்மிளையையும்,
பரதன் மாண்டவியையும்,
சத்ருக்னன் சுருதகீர்த்தியையும்,
மிதிலையில் மணம் புரிந்த நாள்.இந்த வளம் மிகு நன்னாளில் நாம் அனைவரும் ,
தெய்வ தம்பதியர்களை நாடி, அவர்கள் அருளைப் பெறலாம் வாருங்கள்.//
என்னே ஒரு அற்புதமான coincidence
என்று சொல்வதா அல்லது ஸ்ரீ ராமபெருமானின் கடாக்ஷமா
எனத்தெரியவில்லை.
நீங்கள் என்னுடைய பதிவு "ஆத்திசூடி " க்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு
நன்றி சொல்லிவிட்டு, அதே சமயம், இன்று முதல் என்னுடைய இன்னொரு
ஆன்மீகம் ( more ritualistic ) பற்றிய தகவல்கள் உள்ள பதிவில்
சங்க்க்ஷேப ராமாயணம் என்று 108 ஸ்லோகங்களில் வால்மீகி முனிவருக்கு
நாரதர் அருளிய கவிதைத் தொகுப்பை 1923ம் ஆண்டு ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரால்
அன்றைய வழக்குத் தமிழில் மொழி பெயர்த்ததை நான் இன்று வழக்கில் உள்ள
எளிய நடையில் தர இருக்கிறேன் என சொல்லலாம் என்று தான் வந்தேன். இது
தினசரி பாராயணத்திற்கானது.
இங்கு வந்து பார்த்தால், சீதா ராம கல்யாணத்திற்கு வந்து ஆசி பெற்றது போன்ற
உணர்வு வருகிறது.
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ
நீங்கள் பூஜிக்கும் ஸ்ரீ ராமனை வேண்டுகிறேன்.
நேரம் கிடைப்பின் வருக.
http://pureaanmeekam.blogspot.com
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
சூரி,
கட்டாயம் உங்க புதுப் பதிவைப் படிக்கீறேன்.
அவ்வளவு புண்ணியமும் உங்களுக்குத் தான்.எத்தனையோ இடர் வரும்போது ஸ்ரீராமாயணமே காக்கிறது. நீங்கள் ,சம்க்ஷேப ராமாயணமாகவே கொடுத்துவிட்டால்
பாராயணம் எளிதாகிறது.
நன்றி. ராம நாமம் எல்லா இடத்திலும் ஒலிக்கட்டும்.
Post a Comment