
Blog Archive
Sunday, March 23, 2008
282,ஓ ராமா நின் நாமம்

Friday, March 21, 2008
280,பங்குனி உத்திரம்

இன்னிக்கு இவங்க எல்லாம் திருமணம் செய்துக்கறாங்க.
எனாலே ஒருத்தர் கல்யாணத்துக்கும் போக முடியாதததல கூகிள்ள தேடிப் படம் போட்டுட்டேன்பா.
எங்க கற்பகம்மா, கபாலீஸ்வரரையும்,
ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும்,
எங்கள் வில்லிபுத்தூர்ச் செல்வி கோதை அவள் கண்ணன் வடபத்ரசாயியையும்,
திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும்
திருமணம் செய்கிறார்கள்.
இன்னிக்குச் சந்திரன் அவ்வளவு தேஜசோடு இருப்பானாம்.
ஏனெனில் அவனுக்கும் திருமணம் இன்று.
ஸ்ரீமஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து எழுந்து வந்து
தன் நாயகன் பரந்தாமன் மார்பில் வந்து திருவாகத் துலங்கிய நாள்.
ஸ்ரீராமன் சீதா தேவியையும்,
லட்சுமணன் ஊர்மிளையையும்,
பரதன் மாண்டவியையும்,
சத்ருக்னன் சுருதகீர்த்தியையும்,
மிதிலையில் மணம் புரிந்த நாள்.இந்த வளம் மிகு நன்னாளில் நாம் அனைவரும் ,
தெய்வ தம்பதியர்களை நாடி, அவர்கள் அருளைப் பெறலாம் வாருங்கள்.
Tuesday, March 18, 2008
சீரும் சிறப்புமாக வாழ்த்துகள்!
Monday, March 17, 2008
காணி சோம்பல்...
ஒரே ஒரு ஊரிலெ ஒரு அம்மா. அந்த அம்மாவுகு வயதாகி விட்டது.
இருந்தாலும் மனது இளமையா இருந்தால் உடலும் சொன்ன பேச்சு கேட்கும் என்ற பரிபூரண நம்பிக்கை.
தப்பு இல்லைதான்.
அதே சமயம் ஆரோக்கியமும் பேணிக்காக்க வேண்டியதுதான்
என்பதில் கொஞ்சம் அசிரத்தை அந்த அம்மாவுக்கு.
என்ன, அந்த அந்த வேளைக்கு உண்டான மருந்தை உட்கொண்டால்
தானே உடல் வயப்படும்.'' என்று எண்ண.
அந்தச் சிந்தனைக்கு ஒரு தடை போடுவது போல, ஒரு நிகழ்ச்சி,.
கொசுக்களும், கரப்பான்பூச்சிகளும் திடிர்ப்பெருக்கம் செய்து வீட்டில் நிறைந்தன.
இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்னடா காரணம் என்று தேடியதில்,
பக்கத்து மனையில் பெஸ்டிசைட் நிறைய போட்டு, அங்கிருந்து தப்பி வந்த ஜீவராசிகள்.
சுற்றுச் சுவரைத் தாண்டியதும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டன,.
ஒரு எலி,
ஒரு பெருச்சாளி, இதெல்லாம் பெரிய ஜந்துக்கள்.
நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்
அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)
சரி என்ன செய்யலாம்னு யோசித்த அம்மா, தங்களோட சிங்கத்துக்கிட்ட சொல்லி
சாளரங்கள்:)
எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.
அது இனிமேல் கொசு வராம இருக்கும்.
ஏற்கனவே அடைக்கலாமாகி விட்ட கட்டில்களுகுக் கீழே,
கோத்ரேஜ் பீரோ மேலே ,சாமி ரூம் படங்களுக்குப் பின்னால்...
இடமா இல்லை.
அப்போது குழந்தைகள் பேரன்கள், பேத்தி வீட்டில் இருந்த காரணத்தால்
அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு
வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.
நமக்கு சுவாசம் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஏதுமில்லை,
அதனால் குளிக்கும் அறைகளுக்கு நாமே அமிலம் ஊற்றி மிச்ச மீதி
பாக்டீரியா அமீபா இனங்களை வெளியேற்றி விடலாம்னு அம்மா நினைச்சாங்க..
அங்க வந்தது காணி சோம்பல்.
எல்லாவற்றையும் பொறுமையாக முடிக்கும் போது,
நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்
அந்த வாக்கியத்தை மறந்து,
மூக்கில துணி போட்டு மறைக்காமல் அப்படியே அத்தனை அமிலத்தையும் சீராக
மாடி குளியலறை, கீழே இருக்கும் குளியலறை என்று ஒரு துளி இடம் விடாமல் தூவியாச்சு.
அசட்டுத்தனம் தான்.
இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா
ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.
எனக்கு புதீசா வரப் பொருட்கள் மேல அவ்வளவு நம்பிக்கை போதாது.
அதுக்கு மாத்தா எங்க வீட்டு உதவிக்கு வர இரண்டு அம்மாக்களுக்கும் அமிலத்தைக் கண்டாலே பயம்.
''ஐய்ய அத்தை யாரு திறக்கறது.
கையெல்லாம் பொரிஞ்சு போயிடும்மா. நீ பெனாயிலைக் கொடு களுவறேன்'' என்று விலகிக் கொள்ளுவார்கள். பினாயிலுக்க் அடங்குகிற ஜன்மங்களா இந்தக் கரப்பான் பூச்சிகள்???
அதுவும் திடீர் தீடீரினு பாய்ச்சல் வேற காட்டும் ,பறக்கும்
.பெண் மருமகள் உட்பட அத்தனை பெரும் அலறுவார்கள்.
ஏம்மா இத்தனை ஜீவராசிகளை வளர்க்கறே வீட்டுக்குள்ள?? என்று கடுப்பேத்துவார்கள்.
நாம் பெற்ற செல்வங்களைக் காப்பது நம் கடமையலாவா என்றுதான் அமிலத்தைக் கையிலெடுத்தார்.
அம்மா:))
அப்படிப் பொறுப்பாக வீசும்போது கொஞ்சம் தன் கால் களிலும்(இதற்குத்தான் அறியாமை விபத்து என்று பெயர்)
தெளித்துவிட்டார்:((
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது''னு யாராவது பாடுவதற்குள் இந்த ஆசிட் விஷயத்தை மறைத்து அதற்கு சந்தனம் பர்னால்,வெண்ணை,தோசை மாவு எல்லாம் அபிஷேகம் செய்து
உடை மாற்றிக்கொண்டு பழைய அம்மாவாகவே வளைய வந்து அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பிய பிறகு வைத்தியரிடம் போனால்,
நாகரீகமாக என்னை வைதார். '' நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.
காயம் பட்ட அன்னிக்கே வந்திருந்தா இவ்வளவு பெரிதாகி இருக்குமா.
இப்போ மூணு பெரிய புண்களான இவைகளுக்கு சிகிச்சை அளித்துக் குணமாவதற்கு 40 நாட்களாவது ஆகும்''
என்றார் அவர்.
ஏதோ இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
அவர் சொன்ன ஒரு அறிவுரையும் கேட்கவில்லை.
காலைக் கீழே வைக்கக் கூடாது, நடக்கக் கூடாது....இத்தியாதி இத்தியாதி.
நமக்குப் பதிவுகள் பார்க்க,படிக்க,பின்னூட்டம் இட எல்லாவற்றுக்கும் காலைத்தூக்கி ஒரு முக்காலியில் வைத்துக்
கொண்டா செய்ய முடியும்?
அப்புறம் முதுகு வளைந்து போகாதா.
அதற்கு வேற மருந்தெடுக்கணும்.
உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,
மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்.
அறிவுரை.
அமிலம் பக்கம் போகாதீர்கள்.
அன்புடன்:)))
Monday, March 10, 2008
எப்போது எழுதக் கூடாது?



Saturday, March 08, 2008
குழந்தைகள் பள்ளியில் சந்திக்கும் சில தொந்திரவுகள்




பள்ளி செல்லும் காலம்தான் மிகவும் இனிமையான காலம் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.
எங்கள் நாட்கள் அப்படித்தான்.
இப்போது பாடங்கள் வேற, கட்டாயங்கள் வேறு.
போட்டிகள்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
படிப்பு, பாட்டு, விளையாட்டு எல்லாவற்றிலும் கடுமையான போட்டிகளுக்கு நடுவில்
ஜெயிக்க வேண்டிய நிலைமை.
நம் ஊரில் தான் இந்தப் போட்டிகளும் தவிப்புகளும் என்று நினைத்தேன்.
குழந்தைகள் அவர்களுக்கு உண்டான சூழ்னிலையில் பிழைத்து முன்னுக்கு வருவதோடு,
பள்ளியில் தங்களைவிடப் பலசாலிகளிடம்
அடியோ உதையோ பரிகாச வார்த்தைகளோ வாங்க,கேட்க நேர்ந்தால்
வீட்டுக்கு வருகையில் தெரிந்துவிடும்.
அம்மா அப்பாவிடம் சொல்லி அழும்.
மீண்டும் சமாதானப் படுத்தி சமாளித்து அனுப்புவதும் தெரியும்.
கொஞ்சம் மீறினால் நாமே பள்ளிக்கூடத்திற்குச் சென்று
சம்பந்தப் பட்டவர்களிடம் பேசிக் குழந்தைகளுக்கு
இவர்கள் தொந்தரவிலிருந்து விடுதலை கிடைக்க வழி செய்வோம்.
இப்போது புதிதாகத் தெரிய வந்த செய்தி யுஎஸ் ஏ இருப்பவர்களுக்குப் பழைய
செய்தியாகக் கூட இருக்கலாம்,
பள்ளிக்குச் செல்லும் எலிமெண்டரி க்ரேட் பையன்களும் பெண்குழந்தைகளும் இந்த மாதிரி புல்லி(bullies)களிடம்
மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் செய்திகள் நிறைய காதில் விழுகிறது.
சிகாகோ பள்ளியில் இந்தியப் பெண்குழந்தைகளை விட அங்ஏ வரும் மற்ற குழந்தைகள்
இன்னும் அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கவே,
இவர்கள் நிறமும் நடையுடை பாவனைகளும் இவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில்
வேற்றுமை தெரிகிறது
வேற்றுக் கிரகத்து மனிதர்களைப் போல நடத்தும் செயல் அதிகமாகி வருவதாக
அங்கிருந்து வந்தவர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
நீ ஏன் தலைக்கு எண்ணை வைத்து வருகிறாய்.
நீ போடும் உடைகள் ட்ரெண்டியாக இல்லை.
நீ ஒரு பாட்(bad) பர்சன்"
இதெல்லாம் அவர்கள் இந்தக் குழந்தைகளைப் பார்த்து பிரயோகிக்கும் அஸ்திரங்கள்.
இத்தனைக்கும் அவர்கள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிகள்.
இதே போல பையன்களும் அவர்கள் வகுப்பில்
வேறு விதமாக மிரட்டப் படுகிறார்கள். பேசிக் பள்ளியிலோ ,நர்சரி வகுப்புகளிலோ
அனுபவிக்காத சிரமங்களையும் வருத்தங்களையும் இந்தக் குழந்தைகள் சந்திக்கும் போது அளவுக்கதிகமாக கோபம் கொள்ளுகிறார்கள் என்றும்,
அவர்களது மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக தியான வகுப்புகளும் ஆரம்பிக்கப் பட்டு
இந்த்க் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த சமாதான முறையில் இந்தபிரச்சினையை சமாளிக்கக் கற்று வருவதாகவும் சொன்னார்.
இது சம்பந்தமாக் எங்கள் பேரனையும் விசாரித்துப் பார்த்தேன்.
''Yes Paatti, there are some boys who think differently.
and use very bad words and behave cruelly
and they make me angry.''
I just want to take up a wand and make them suffer''
இந்தப் பதில் எனக்கு முதலில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும்,
அவனது உண்மையான வருத்தம் புரிந்தது.ஏனெனில் அவனும் அங்கே வளர்ந்தவன் தானே.
திடீரென முளைக்கும்
சவால்களை இரண்டு வருடமாக இந்தப் புதுப் பள்ளியில் தான் அவன் பார்க்கிறான்.
இத்தனைக்கும் இந்த குட்டி நெய்பர்ஹூடில் ஒரு ஆறு இந்தியர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பிள்ளைகளும் வேறு வேறு வகுப்புகளில் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.
''you are not cool''
இந்த வார்த்தைகள் அவனுடைய ஹாரி பாட்டர் புத்தியை வேறு விதமாக முடுக்கிவிட்டு விட்டு இருக்கிறது.
.
அதன் விளைவு தான் இந்தக் கோபமும், டார்த் வேடர் வேஷமும்,வீர வார்த்தைகளும்..
தினமும் அவனுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
அடுத்த சாக்கர் சீசன் வந்தால் இந்தக் குளிர்கால blue moods குறையும் என்று நம்புகிறேன்.
அந்த ஊரில் உள்ள இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குச் சொன்னால்
கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.:)
வளர்சிதை மாற்றம்???
Thursday, March 06, 2008
மார்ச் புகைப் படப் போட்டிக்காக
என் சோகக் கதை கேளுனு பாடலாமான்னு பார்த்துட்டு,
என்னையே டேக் இட் ஈசினு சொல்லிட்டு இந்தப் படம் மட்டும் அனுப்பறேன்.
மத்தபடங்களை ப்லாக்கர்ல ஏத்த முடியலை.
பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)
Saturday, March 01, 2008
எழுதக்கூடாதது என்ன?
