திண்டுக்கல் மலைக்கோட்டை
எங்களுக்கு ஒரு பீச் மாதிரி.
சிறிய மலைப்படிகள். வேகமாக ஏறினால் அரைமணியில் கோட்டைக்குப் போகலாம்.
இதமான காற்று.கையில் பட்டாணி, அந்தக் கையில் ஏதாவது கதைப் புத்தகம். நடுவில் தம்பி நக்ஷத்ரேயன் படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். வா போலாம்னு இழுத்துக் கொண்டு கிழே வந்து விடுவான்.
எங்கள் பள்ளியின் படம் கிடைக்கவில்லை:((
காதல் என்று ஒரு படத்தில் ஒரு பெண்கள் உயர் நிலைப்பள்ளி காண்பிப்பார்கள். எங்கள் பள்ளியும் ,அச்சு அசல் அப்படியே இருக்கும்;))
தாத்தா மறைவுக்குப் பிறகு பாட்டி எங்களுடன் வசிக்க வந்ததால் அப்பா வேறு வீடு பார்க்க ஆரம்பித்தார்.அதனால் வீடு மாற்ற வேண்டிய அவசியம் வந்தது.
அப்போ இருந்த வீட்டிலிருந்து ரோடுக்கு வரும் வழி கொஞ்சம் சிக்கல்.
அதுவுமில்லாமல் பக்கத்து வீட்டுக் கோழிகள்,முயல்கள்
எல்லாம் அடிக்கடி வரும்.
பாட்டிக்கு அவ்வளவாகப் பிடிக்காது:)
வாசல் காலை நீட்டி உட்காந்து இருப்பார்.
வேலியைத் தாண்டி வரும்முயல்குட்டி அவ்வளவு அழகா இருக்கும்...அது வந்து பாட்டியைக் குசலம் விசாரிக்கும்!!
பாட்டிக்குச் சுத்தபத்தமா இருக்கணும்.
கூடவே தன் சர்க்கரை நோயைப்பற்றிக் கவனமாக இருப்பார்.ஏதாவது சுகவீனம் வந்துவிடக்கூடாதுனு உஷாராக இருப்பார்.
16 comments:
//காதல் என்று ஒரு படத்தில் ஒரு பெண்கள் உயர் நிலைப்பள்ளி காண்பிப்பார்கள். எங்கள் பள்ளியும் ,அச்சு அசல் அப்படியே இருக்கும்;))//
வல்லியம்மா.. நிஜமாவே காதல் படத்துல காட்டினது நீங்க படிச்ச புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிதான்..
ஆமா அந்த கிருஷ்ணாராவ் தெரு எங்க இருக்கு..? ஸ்கூலுக்கு பக்கத்துலன்னு வேற சொல்றீங்க..
கர்ணன் எந்தத் தியேட்டர்ல மேடம் பார்த்தீங்க..?
ஸ்கூலைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்..
பாட்டி நினைவுகள் அருமை!
அப்படியா தமிழன்.!! என்ன ஆச்சரியம்.
கிருஷ்ணாராவ் தெரு,
பள்ளி பின் வாசல் வழியாக ரோடு கடந்து போயி,ஆவாரம் செடி நிறய இருக்கும் பாதை வழியாக இறங்கி
மறுபடி இன்னோரு ரோடு வரும். அதுதாண்டிப் போனால் பன்றிமலை சுவாமிகள் பங்களா இருக்கும் . அதற்கு நேர் எதிரே ஒரு அரசமரம் பிள்ளையார்.
இவர் பக்கத்தில் ஒரு காம்பவுண்டுக்குள் பெரிய வீடுகள் ஐந்தும், சற்றே சிறிய வீடுகள் ஐந்தும் இருக்கும்.
அதில் முதல் சிறிய வீட்டில் நாங்கள் இருந்தொம்.
அந்தக் காம்பவுண்டு சுவர் மேலே ஏறிப் பர்த்தால் சவுந்தராஜா மில் கட்டிடம் தெரியும்:))
'கொடுத்துவச்ச' பாட்டி.
மதுரைக் கோயில்கடை ஞாபகம் வருது எனக்கு.
பித்தளையில் குட்டியா நிறையப் பாத்திரம் விளையாட வாங்கித்தந்தாங்க அம்மா.
அதுலே இருந்த இட்லிப்பானையில் நிஜமாவே இட்லி செஞ்சுதரச்சொல்லி ரொம்பப் படுத்தி இருக்கேன் அக்காவை.
பாவம். குட்டி இட்லி செஞ்சு கொடுத்தாங்க. இப்ப என்னன்னா கடையிலேயே 'மினி இட்லி' வந்துருச்சு.
\\அவர் சொல்லும் புத்திமதி யிலிருந்து தப்பிக்க வீட்டின் கிணற்றுப்
பக்கமாக நான் ஓடி விடிவேன்.
தம்பி கொஞ்சம் நல்லவன், சரி பாட்டி சரி பாட்டி என்று
சொல்லிவிட்டுத்தான் போவான்:))
இவன் இப்படி ஏகத்துக்கு நல்லவன் பட்டம் வாங்கிப்பான்.
நானும் சின்னவனும் மந்தையில் சேராத ஆடுகள்:)))
\\
வல்லிம்மா...இன்னிக்கு வல்லிப்பாட்டியும் அந்த பாட்டி போல தானே!!! ;))
நானும் உங்களை போல தான்....உடனே எஸ்கேப்பு ;)
தமிழன்,
கர்ணன் பார்த்த தியேட்டர் ' சக்தி 'என்று நினைக்கிறேன்:)
அப்போது நாகல்நகரில் ஒரு தியேட்டர் இருந்தது.
பெயர் நினைவு இல்லை.
அங்கே பாசமலர் பார்த்து மூக்கு சிந்தனது நினைவு இருக்கு:)
துளசி
அந்தக் குட்டிப் பாத்திரம் எல்லாம் இருக்கா.
எல்லாம் ஆண்டிக் ஆச்சே!!!
இப்ப யாராவது சொப்பு வச்சு விளையாடறாங்களோ என்னவொ!!:))
கோபிநாத்,
:)வல்லிப்பாட்டி அட்வைஸ் எல்லாம் சொல்லி முடிச்சாச்சு.
இனி அடுத்த டார்கெட் பேர,பேத்திகள் தான்.
சொல்லாம விட்டுடுவோமா!!!!
//வல்லியம்மா.. நிஜமாவே காதல் படத்துல காட்டினது நீங்க படிச்ச புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிதான்.//
பள்ளிக்கூடம் பெயர் அதுவாக இருக்கலாம். ஆனால் காதல் படத்தில் வருவது மதுரையிலுள்ள பள்ளி..(அது எப்படி எங்க மதுரையை விட்டுக் கொடுப்போமா என்ன?)
வல்லி மேடம்..புதுமண்டபம் படம் நல்லாருக்கு..
//தமிழன், கர்ணன் பார்த்த தியேட்டர் ' சக்தி 'என்று நினைக்கிறேன்:) அப்போது நாகல்நகரில் ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் நினைவு இல்லை. அங்கே பாசமலர் பார்த்து மூக்கு சிந்தனது நினைவு இருக்கு:)//
வல்லியம்மா.. 'சக்தி' தியேட்டர் பழனி செல்லும் சாலையில் உள்ளது. சந்தோஷம்.. உங்க வீட்ல இருந்து பக்கம்தான்..
நாகல்நகரில் 'பாசமலர்' பார்த்து நீங்கள் அழுதது 'NVGB' தியேட்டர். இப்போதும் அந்த இரு தியேட்டர்களும் இருக்கின்றன.
மிக்க சந்தோஷம்..
எனக்கு எப்பவோ நடக்கப் போகிற கல்யாணத்துக்காகப்பத்துபவுன் நகைகளையும் அம்மாவிடம் கொடுத்து வைய்த்திருந்தார்
அட பாட்டிக்கு அம்புட்டு ஆசையா உங்கமேலே.
பாவம் உங்க பேரன் பேத்திங்க.இப்போ எங்கேயும் ஓடக்கூட முடியாது
மதுரைப் பள்ளியாகவே இருக்கலாம்.
ஆனால் என் (பழைய்ய்ய்ய்ய்ய)ஞாபகத்துக்க்கு இந்தப் படம் ஒத்துப்போனது:)
பாசமலர்.
இன்னும் ப்டம் போடமுடியலியேனு இருக்கு.
நாகல்நகரில் 'பாசமலர்' பார்த்து நீங்கள் அழுதது 'NVGB' தியேட்டர். இப்போதும் அந்த இரு தியேட்டர்களும் இருக்கின்றன.
மிக்க சந்தோஷம்..//
ஸோ அப் டு டேட் தெரிஞ்சாச்சு.
அந்த சக்தி தியேட்டரில் மதியம் போடும் பாடல்கள் எங்க வீட்டில் கேட்கும்.
படைத்தானே பாட்டு மனப்பாடமானது க்ஊட..அப்படித்தான்.:)
வரணும் தி.ரா.ச.
பாட்டியின் நேர்மை உணர்வை அம்மா அடிக்கடி எங்களுக்கு எடுத்துச் சொல்லுவார்.
பாட்டி தன்னுடைய 14 பேரன்கள் பேத்திகள் எல்லோரையும் பற்றி மற்ற குடும்பத்தாரிடம் நல்லதாகவே சொல்லுவார்.
அதனால் பெரியவர்களிடம் எங்களுக்கு எப்பவுமே நல்ல பெயர்தான்.
நல்ல பாட்டி.எல்லோருக்கும் சமமாகத் தன் உடமைகளைப் பிரித்துக் கொடுத்து நல்ல வாழ்வே வாழ்ந்தார்.
அருமையான மலரும் நினைவுகள் வல்லி, ஏன் சீக்கிரமா முடிக்கிறீங்கனு புரியலை! :(((((
வழக்கமான கதைதான் கீதா.
கோர்வையாக எழுதக் கொஞ்சம் நேரம் வேண்டும்.
மதுரையில் இருந்த நாட்கள் கொஞ்சம்தான்.
திருமணம் முடிந்து புதுக்கோட்டை போய் விட்டோம்.
காதலர்கள் தினமாகவே கடந்ததால் யோசித்தே எழுதுகிறேன்:))
Post a Comment