Blog Archive

Saturday, November 03, 2007

பன்னிரண்டு மணி நேரம் பிரிவு

மன அலைபாயாம இருக்க எத்தனையோ விதமான ஸ்ட்ரெஸ்மேனேஜ்மெண்ட் வழிகள் வந்துவிட்ட நிலையில்,
வயசான காலத்தில் கிருஷ்ணா,ராமானு இருக்காமல்,
இமெயிலில் ஆரம்பித்து, பேரனோட முகம் பார்ப்பதற்காகக் கணினி வாங்கி, பீச்சோரமா இருக்கிற அப்போதைய விஎஸென் எல் லில் கணக்கு ஆரம்பித்து, மாசம் மாசம் பணம் கட்டி ஈமெயில் அனுப்பறத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருந்து(ஏனெனில் மோடம் வேகம் எடுக்க அத்தனை நேரம் ஆகும்):)),

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மோடத்தை நிறுத்தி விட்டு, மத்தவர்கள் யாராவது வீட்டுக்குப்போன் செய்தால் போன் எடுக்கணும் இல்லையா, அதற்காக
இமெயில் +கணினியை நிறுத்தி வேற வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுத் திருப்பி ஒரு மணி நேரம் லாகின் செய்து, பாஸ்வேர்ட் மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டு,(ஒரு எழுத்து மாறினால் கூட படு சிரமம்)
இந்தப் பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றம்.

சின்னக் கணினி,கறுப்பு வெள்ளை திரை மாறி பெரிய ஸ்க்ரீன்,கலர் கலராக வந்த போது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம்.
பிறகு வந்தது விண்டோஸ் எx பி& ஏடிஎஸெல்.
தமிழ்மணம்,தேன்கூடு,இ-கலப்பை,இணையம் தமிழில்.
நண்பர்கள்.
இந்தச் சரித்திரத்தில் சில சமயங்கள் தடங்கல்கள் வந்திருக்கின்றன.
நிபுணர்கள்(!!!) வந்து 6,7 மணிநேரம் உட்கார்ந்து சரிசெய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.அது அந்தக் காலம். விண்டோஸ் 95 போய் 98 வந்தது. இன்னோரு தடவை
சங்கடம் வந்த போது இப்போதைய எக்ஸ் பி நிறுவியாகி
விட்டது.

சரிப்பா முன்னுரை முடிந்துவிட்டது. இப்ப, தலைப்புக்கு வரலாம்:))
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த கணினி வண்டி, திடீர் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
பத்துமாதம் வெளியூர் சுற்றிவிட்டு வந்து , on செய்ததும் உடனே இயங்க ஆரம்பித்த என் உயிர்த் தோழி,
...என்ன பேரு வைக்கலாம்:))
இப்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு(நான்) மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தால் கணினி மானிட்டர் திரை(?) திறக்கவில்லை. அதல பாதாளத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு..

பதிவு போடாட்டாலும் போகிறது. பின்னூட்டமாவது போடலாமே. யார் என்ன எழுதினார்கள் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)

மாலை ஏழு மணியிலிருந்து ஸ்விட்ச் ஆன் செய்யறதும் ,காத்திருந்து ஸ்க்ரீன் வராமல் ஆஃப் செய்யறதும்,
லஸ் பிள்ளையார்,அதுதான் கம்யூட்டர் மானிட்டர் மேலே படத்தில இருக்காரே
அவர்கிட்ட சொல்றதும், பசங்க பேசும்போது சுரத்தில்லாமல் இருக்கிறதும்,
அம்மாக்கு உடம்பு முடியலையானு அவங்க மீண்டும் கேக்கறதும்,
உடனே சிங்கம்,
''கம்ப்யுட்டர்ல ஏதோ கோளாறுப்பா, அம்மா கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கிறா''
அப்படினு மெசஜ் கொடுக்க,
''ப்பூ இவ்வளவுதானா. காலைல யூ கான் கால் சம்படி அண்ட் ரிபேர் இட்'' ணு
அவங்க போனை வச்சாச்சு.
பத்து மணி வரைக்கும் இருபது தடவை இதே ரொடீன்.
படுக்கப் போகும்போதும் எப்படியாவது காலையுஇல் சரியாகிவிடும். ஒரு வேளை மின்சக்தி பிரச்சினையா இருக்கலாம். யு பி எஸ் தகறாரோ என்னமோ.
எப்படியிருந்தாலும் கணினி ரிப்பேர் சர்வீஸைக் கூப்பிட்டுச் சரி செய்துடலாம்.
என்ன பரவாயில்லை. ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.
கோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,
மெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.
ஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.
இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு சமாதானம் சொல்வது போல மனசுக்குள் சொல்லியபடியே தூங்கியாச்சு.
சரியா காலை நாலரைக்கு முழிப்பு வந்ததும்முதல் நினைவு ஐயோ கம்ப்யூட்டர் வராதே என்பதுதான்:)))
தேவையா இந்த நிலைமை.???


பின்குறிப்பு...
அடுத்த ''ஃபாலோ அப் '' பதிவைப் பத்தே வரிகளில் முடித்துவிடுகிறேன்.:))

13 comments:

கோவி.கண்ணன் said...

//ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.
கோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,
மெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.
ஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.
//

வல்லியம்மா,

அப்பாப்பா கணனி வரலாறு, விண்டோஸ் வரலாறு என்று அனைத்தையும் எழுதி, கணனி நம் அன்றாட வாழ்க்கையை எப்படி எல்லாம் திசைத் திருப்பி இருக்கிறது என்று அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

சுவையான இடுகை

Baby Pavan said...

1ச்ட் போட்டுகரென், படிச்சிட்டு திரும்ப வரென்

துளசி கோபால் said...

ஆமாய்யா இதுதான் இப்போதைக்கு 'தலை'யாயப் பிரச்சனை.

இதென்னப்பா இப்படி மாட்டிக்கிட்டோம்:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க கண்ணன் .
கிட்டத்தட்ட(முழுசாவேன்னும் வச்சுக்கலாம்)
ஒரு சித்தம் கலங்கின தோற்றம்.

என்னை நானே மறந்தேனு பாடிக் கொண்டு(தாடி வளர்க்க நேரம் ,வசதி இல்லை)

மூணாம் பேஸ்து நிலைமையில் இருந்தேன்:)))

எனக்கு சுகர் ஏறாம எப்படி இருக்கும் சொல்லுங்க!!
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஹலோ பேபி, நிதானமாவே வரலாம். பாட்டி கட்டாயம் இங்கதான் இருப்பேன்:)))

வல்லிசிம்ஹன் said...

அய்ய, ஆமாம் துளசி.

தலையாய ப்ரச்சினை, தலை போற பிரச்சினை எப்படி வேணும்னாலும் பேரு வச்சிக்கலாம்.

வலையில் அகப்பட்ட மீன் போல துடித்தோம்னு ட்ரமாடிகா சொல்லலாமா??
விரும்பியே வலைல இருக்கிறதுனால
தவிப்பு இல்லை. வலையை விட்டு வெளில வந்தாத்தான் தொந்தரவு:)))))

Radha Sriram said...

வல்லி இண்டர்னெட் கனெக்ட் ஆரச்சே
'க்கீஈஈஇங் க்ர்ர்ர்ர்ர்ர்ர்' ஒரு சவுண்ட் வருமே அத விட்டீங்களே?? நல்ல சொல்லி இருகீங்க......இந்த இண்டெர்னெட் உலகத்துல எல்லாருக்கும் பொறுமையும் கொறஞசுகிட்டே வற மாதிரி இருக்கு இல்லையா??...

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராதா.
அந்த ச்அத்தம் மறக்குமா.
சில சமயம் கீஈஈஇய்ய்ய்ய்ன்ன்ன்ங்னு போயி நின்னுடும்.
மறுபடி டொர் டொர் னு டயல் செய்து கசகசனு சத்தம் போடு கனெக்ட் ஆகும்.:)))

அந்த சத்தம் வர வரைக்கும் டென்ஷனா இருக்குமில்ல.

பொறுமை குறைஞ்சதும் இல்லாம, புதிதா நம்மளைக் கட்டிப் போட்டுக் கொண்ட மாதிரியும் இருக்கு.
பத்திரிகை,டிவி,கோவில், உறவுனு எல்லாம் மாறிப் போயிட்ட மாதிரி தெரிகிறது.
பெட்டர் வாட்ச் அவுட்:))

மெளலி (மதுரையம்பதி) said...

//மூணாம் பேஸ்து நிலைமையில் இருந்தேன்:)))//

பேஸ்து சரி, அதென்ன மூணாம் பேஸ்து?

Geetha Sambasivam said...

ஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)

ஹிஹிஹி, இங்கேயும் இதே நிலைமைதான், ஆனால் இண்டர்நெட் கனெக்க்ஷன் வரப்போ சத்தம் வரும்கிறதெல்லாம் புதுசு, நான் ஒரு பத்து வருஷமா நெட் செண்டருக்குத் தான் போயிட்டு இருந்தேன், அங்கே தான் எல்லாம் தயார் நிலையில் இருக்குமே! அப்புறம் அந்த செண்டரையே மூடிட்டாங்க, அந்தப் பையனுக்கு நல்ல வேலை கிடைச்சுடுச்சாம், அதனாலே, கொஞ்ச நாள் கை, கால் ஓடாம இருந்துட்டு, கணினி வாங்கியதும் நேரே ப்ராட்பாண்ட் தான் அதனாலே வீட்டிலே டயல் அப் கனெக்க்ஷன் பத்தி அவ்வளவாத் தெரியாது! :)))))))

வல்லிசிம்ஹன் said...

தெரியாத அர்த்ததோடு சில வார்த்தகள் புழங்குகிறோம் மௌலி. அதில இந்த மூணாம் பேஸ்தும் ஒண்ணு.:)))

வல்லிசிம்ஹன் said...

கீதா!!
மகா பொறுமை.
இத்தனை வருடங்கள் நெட் செந்டர் போய் வந்தீர்களா!!.

ஒரு விதத்தில் சௌகர்யம்.

வேலையை முடித்துக் கொண்டு வந்துவிடலாம்.

நாகை சிவா said...

:)))