முந்தைய பதிவில் கணினி உடல் நலம் இல்லாமல் போனதை எழுதினேன்.
இவ்வளவு சங்கடப் பட வேண்டிய அவசியம் என்ன.
நிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய மருத்துவத்தைச் செய்தால் போச்சு.
இத்தனை பதட்டம் இருந்தால் மூளை செயல் பாடு குறையும்னு தான் தெரியுமே.
அதான் டாக்டர் ஷ்ஆலினி தினம் சின்ன மூளை, பெரிய மூளை, எப்படி எமோஷன்ஸ் கட்டுப்படுத்தறது எல்லாம் சொல்றாங்களெ
இதைத்தவிர வேளுக்குடி திரு .கிருஷ்ணனின் பகவத் கீதா சாரம் வேற கேட்டாகிறது.
அப்போது கூட ஒரு டிடாச்மெண்ட் வரலை என்றால் வயசாகி என்ன பயன்.
த்சோ த்சொ(இந்த வார்த்தைகள் கூட மத்தவங்க எழுத்திலிருந்து எடுத்ததுதான்:))) )
என்று தலையைத் தட்டி யோசித்தேன்
இந்த உணர்ச்சி பூர்வமான பந்தம்,வருவதற்குக் காரணம் உண்டு.
''எம்ப்டி நெஸ்ட் சிண்ட்றோம்'' கேள்விப் பட்டு இருப்பிர்கள்.
அந்த மாதிரி ஒரு நாள் ,,
நம்மோடு அதுவரை இருந்த குழந்தைகள் அவரவர் பொறுப்புகளைக் கவனிக்க வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.
எனக்கென்று தனிப்பட்ட வேலை ஒன்றும் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் உடல் நலம்
காரணமாக
விட்டாச்சு:))
நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன??
யோசிக்கையில் சின்ன மகனுக்குத் தோன்றியதுதான் இந்தக் கணினி வாங்கும் யோசனை,.
இப்போது புரிந்திருக்கும் எனக்கும் இந்த அழகான அற்புதமான கணிப்பொறிக்கும் உண்டான நட்பு.
இது எனக்கும் வெளி உலகத்துக்கும் என் உறவுகளுக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தது.
இதுவரை கேள்விப் பட்டிராத இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
கடந்த மூன்று வருடங்களாகத் தமிழையும் கொடுத்திருக்கிறது.
சொந்தக் கதை முடிந்து இப்போது வெள்ளிக்கிழமை விவகாரத்துக்கு வருவோம்.
காப்பி குடித்த கையோடு மேஜையருகில் வந்து மீண்டும் ஒரு தடவை ஆரம்பித்தேன்.
திடீரென கணினி பின்புறம் இருக்கும் ஒயர்களை ஒழுங்கு படுத்தலாமே,
ஒரு வேளை ரிப்பேர் செய்பவர் வந்தாலும் இடம் சுத்தமாக இருக்கணுமே:((
மேஜையைத் திருப்பி யுபிஎஸ் ப்ளக்கை எடுத்து விட்டு , தூசியெல்லாம் தட்டி மீண்டும் ப்ளக்கைப் பொருத்திக்
கணினி முன்புறம் வந்தால்...ஆஆஹா!!!
மானிட்டர் ஆன் ஆகிவிட்டது.
All it needed was a complete restart !
கதை முடிஞ்சுதுப்பா.
அதுக்கப்புறம் உடனே போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டேன் படங்களை.
கொஞ்ச நேரம் பிடித்தது.
ஆனால் மறுபடி கீபோர்ட்,நான் ,மானிட்டர்,தமிழ்.
போதும்.
செலவேதும் வைக்காமல் ஒரு குட்டிப் பிரச்சினை, பெரிதாகாமல் தீர்ந்தது.
நன்றி என் கணினிக்கு.
என் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)
நான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??
ஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.
என்ன செய்வது.
கணினி என் சாஃப்ட் கார்னர்:))))
25 comments:
//ஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.//
ஒரு முறை சரியாக எண்னுங்கள் ஆண்ட்டி. மொத்தம் 72 வரிகள் இருக்கு.
ஹிஹி.. உருப்படியா கமெண்ட்ட ஒன்னும் தோனல... வந்ததுக்கு ஒரு அட்டெண்டன்ஸ் போடனும்ல.. :))
சரியான பொடியந்தான் நீங்கள்.:)))
தான்க்ஸ் ஃபார் த அட்டெண்டன்ஸ்.
என்ன சார் செய்ய...
என் நோட்பாடில் 30 வரிகள்தான் இருந்தது. பதிவில அதுவே 70 ஆயிடுச்சி.:((
//சரியான பொடியந்தான் நீங்கள்.:)))//
ஹிஹி.. டேங்ஸ் ஆண்ட்டி..
உங்கள் விவரிப்பு ஒரு குழந்தையின் கவிதை போன்று இருந்தது. இரண்டு பதிவுகளையும் வாசித்து முடித்தபின் எனக்குள் ஒரு இதமான புன்சிரிப்பு மலர்ந்தது. மனதின் உணர்வுகளே உறவிற்கு வேராய் இருக்கிறது. முட்டாள் பெட்டி என்று வேடிக்கையாக குறிப்பிடப்படும் கணினி வாயிலாகத்தான் இன்று எத்தனை உறவுகள். உயிரற்ற பொருட்களுக்கும் உயிர்கொடுக்கும் மகத்துவம் நம் எண்ணங்களில்தான் இருக்கிறது
முத்துகுமரன், எவ்வளவு இதமாகச் சொல்லிவிட்டீர்கள்!! நன்றிம்மா.
உண்மையாகவே
கணினி என் சினேகிதினு கூட சொல்லுவேன்.
நம்மை மதித்து நமக்குப் பிரயோசனமாக இருக்கும் எதுவும் மதிக்கப் பட வேண்டியவைதான்.
//உயிரற்ற பொருட்களுக்கும் உயிர்கொடுக்கும் மகத்துவம் நம் எண்ணங்களில்தான் இருக்கிறது//
இது பரிபூரண உண்மை.
//முட்டாள் பெட்டி என்று வேடிக்கையாக குறிப்பிடப்படும் கணினி வாயிலாகத்தான் இன்று எத்தனை உறவுகள//
TV ய தான முட்டாள் பெட்டி( Idiot Box) என்று சொல்வாங்க.. கணிணிய கூடவா?
ஒரு டீவிப் பொட்டி.. இன்னொரு பெட்டி.... டைப்ரைட்டர் மாதிரி ஒன்னு...ரெண்டு மூனு வயருங்க...இது என்ன வேலை பாக்குது பாத்தீங்களாம்மா. :)
அப்புறம்....இந்த சாப்ட்வேர்ல எப்பவுமே restart ஒரு நல்ல மருந்து. :) யோசிச்சிப் பாருங்க... ஏரோப்பிளேன் கூட சாப்ட்வேர்தான். அதுல restart செய்யுற மாதிரி நெலமை வந்துருச்சுன்னா!
அப்பாடா............பிழைச்சோம்.
'வலை'யில் விழாத மீன்போலத் துடிச்சுட்டேன்.
பொடியன்,
சார்,
முத்துகுமரன் சொல்ல வந்தது, மூளையில்லாமல் இயங்கும் வெறும் பொட்டி. அவர் கணினியைச் சொல்லவில்லை.
:)))
ஆமாம் ராகவன்,
நம் நேரங்களைக் களவு செய்தாலும் கட்டுப்பாடுகளுக்குள் கலகலப்பு கொடுக்கும் கணினி வாழ்க.
ரிஸ்டார்ட் ஃபார் ஃப்ளையிங்.!!!!
சாமி !!
எப்போ...நடுவானில் பறக்கும்போதா???:))))
ஹை துளசி,
ஆமாம் பிழைச்சது.
இல்லாட்ட நேரம்+ செலவு ஆகி இருக்கும்.
வலையில் பிழைக்கும் ஒரு மீன் கிட்டேருந்து இன்னோரு மீனுக்கு வாழ்த்துகள்:)))
அருமையான எண்ணக் கோர்வை வல்லி, நீங்க சொல்றது அத்தனையும் உண்மை, அதையே திரும்பி எழுத முடியாது என்பதால், ரிப்பீட்டேஏஏஏஏஏ! போட்டுடறேன். உண்மையில் இது தான் இப்போ ஒரு புதிய உலகை மட்டுமில்லாமல் உறவுகளையும் கொடுத்திருக்கு! அவங்களுக்காகக் கவலைப்படவும், சந்தோஷப் படவும், பேசினதை நினைச்சுப் பார்க்கவும், மனசிலே ஒரு புதிய ஊற்றே பொங்குவது போன்ற உணர்வும், ஏதோ விட்டு விடுதலையாகி நிற்பது போலவும் உள்ளது. எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை! :(
வரணும் கீதா.
நானும் ரிபீட்டேனு தான் சொல்லணும். இன்னும்
சொல்லப் போனால் இத்தனை அன்பும், நட்பும்
குடும்பத்துக்கு வெளில கிடைக்கிறதுன்னா ,என்ன ஒரு அற்புதம் பாருங்கோ.
ஒருத்தரை ஒருத்தர் பார்த்தது கூட இல்லை. இருந்தாலும் எது நம்மளைச் சேர்த்தது.???
இந்த இணையமும்,தமிழும் தான்.
ரொம்ப ரொம்ப நன்றி இவ்வளவு அன்பா பின்னூட்டம் போட்டதுக்கு.
விட்டு விடுதலையானது உண்மை.
எதிர்பார்க்காத நெகிழ்ச்சி உங்க வார்த்தைகளில் கிடைக்கிறது.
குடும்பத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. இணைய நட்புகளில் அது இல்லாததுதான் அடிப்படினு தோணறது.
//என் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)
நான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??//
உங்க விசாரம் சரிதான் வல்லியம்மா....உங்களுக்கு மிக உற்ற துணையாக கணினி இருப்பதை கவனித்திருக்கிறேன். நான் G-மெயில் லாகின் பண்ணுகையில் எல்லாம் உங்களை ஆன் லயனில் பார்த்து இந்த வயதில் எவ்வளவு ஆர்வம் என்று வியந்திருக்கிறேன்.
ஆமாம், நீங்க எங்க வேலை பார்த்தீர்கள்?.
//இரண்டு பதிவுகளையும் வாசித்து முடித்தபின் எனக்குள் ஒரு இதமான புன்சிரிப்பு மலர்ந்தது. //
Repeateeeeey :)))
என் பிளாக் பித்தத்தை பார்த்து, வீட்டில தடா போட்ருலாமா?னு தங்கமணி தீவிரமா யோசிச்சுட்டு இருக்காங்க. நைட் சமையல் பாத்ரத்தையும் நானே தேய்ச்சு வெச்சுடரேன்!னு தாஜா பண்ணி இருக்கேன். :)))
பிட்டுக்கு மண் சுமந்தான் ஈசன்!
நெட்டுக்கு பாத்ரம் தேய்ச்சான் இந்த அம்பி!னு நாளைய வரலாற்றில் எழுதப்படலாம்.
//பாத்ரத்தையும்//
அம்பி, இதைப்படித்ததும் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்துவிட்டது.
பாத்ரத்தையுயும்..... :-)
வரணும் மௌலி.
லைஃப்னு ஒரு பத்திரிகை முன்னாட்களில் வெளிவரும். இப்ப வரதான்னு தெரியலை.
அதில வந்த ஆர்டிக்கிள்ஸ் எல்லாம் ஒண்ணு சேர்த்து,வித்தியாசமான தலைப்புகளில் புத்தகங்கள் வந்தன.
அதே போல டைம்ஸ்,அமெரிக்கன் பத்திரிகைகளின் வெளியிடுவோர் ஒரு பதினைந்து வகைப் புத்தகங்களை
வெளியிட்டார்கள்.
ஒவ்வொன்றும் நான் அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த போது ஒரு புக் 400ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது.
ஃப்ரீலான்ஸ் புக் அட்வைசர் என்பது என் வேலையின் பெயர்:))0
ஒரு ஆறு வருடங்கள் சென்னையின் எல்லா மூலை முடுக்குகளிலும் உள்ள(50%)புஸ்தகப்பிரியர்களைச் சந்தித்து, வெற்றிகரமாக விற்கவும் முயற்சி செய்தேன்.
ஒரே ஒரு நாள் என்னுடைய விற்பனை வேடிக்கையை என் அப்பாவிடமே பேசிப்பார்த்ததில் என்னுடைய வேலையில் என் பிடிப்பு குறைந்துவிட்டது.
கம்பனி பேரு எல்.பி.பப்ளிஷர்ஸ்:)))
உங்க ஊரில மஹாத்மா காந்தி ரோடில் இருக்கிறது.
பிட்டுக்கு மண் சுமந்தான் ஈசன். நெட்டுக்குப் பாத்திரம் தேய்க்கும் அம்பியே,
வாழ்க நீ .
நன்றி.
பாத்திரம் தேச்சு,தங்கமணியைச் சந்தோஷப் படுத்துவது சாமர்த்தியம்.
நெட்டில எழுதி என்னை(????) மாதிரி எழுதுபவர்களையும் ஊக்கு (பின்) வித்து:)))))
ஸ்ஸ்ஸ் ரொம்ப வேலைப்பா.:)))
பிட்டுக்கு மண் சுமந்தான் ஈசன். நெட்டுக்குப் பாத்திரம் தேய்க்கும் அம்பியே,
வாழ்க நீ .
நன்றி.
பாத்திரம் தேச்சு,தங்கமணியைச் சந்தோஷப் படுத்துவது சாமர்த்தியம்.
நெட்டில எழுதி என்னை(????) மாதிரி எழுதுபவர்களையும் ஊக்கு (பின்) வித்து:)))))
ஸ்ஸ்ஸ் ரொம்ப வேலைப்பா.:)))
முத்துகுமரன்,
பாத்திரம் தேய்க்கும் தியாகியைப் பார்த்தீர்களா:(((
உள்ளேன் அம்மா. கணினியில் எதாவது செஞ்சா அப்பப்போ சேமிச்சு வெச்சுக்குங்க. பிரச்சனைன்னு வந்தா பொதுவா ஒரு ரீ ஸ்டார்ட் பண்ணினா சரியாப் போயிடும்.
அப்புறமா உண்மையைச் சொல்லணுமுன்னா, பதிவும் ரொம்பப் புரியலை, பின்னூட்டங்களும்தான்.
கொத்ஸ், ஒண்ணும் பிரம்ம முட்இச்சு இல்ல, இந்தப் பதிவு;))0
ஜஸ்ட் லௌட் தின்கிங்.
அதில உடனே புரிஞ்சவங்க அதே பாணில பின்னூட்டமும் [போட்டு இருக்காங்க:))
ரீஸ்டார்ட் சிபியூல செய்தேன்.
அது நடக்காம
யுபிஎஸ் அணைச்சுட்டு திருப்பி ஆன் செய்தேன்.
அது தானே சரியாயிச்சு.
அவ்வளவு தான் கதை.
நீங்க சொல்றமாதிரி சேமிச்சு வச்சுக்கிறேன். தான்க் யூ பா.
Hello i am also towards total attachment for complete detachment.
Good article. Deepavalikku Grand posta?
//இதைப்படித்ததும் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்துவிட்டது.
பாத்ரத்தையுயும்//
@மு.குமரன், அடடா! கரக்ட்டா பாயிண்டை புடுச்சிடீங்களே மு.குமரன் :))
//பதிவும் ரொம்பப் புரியலை, பின்னூட்டங்களும்தான்.
//
@கொத்ஸ், அண்ணே! இதுக்கு தான் பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடனும்னு சொல்றது. பல நாள் திருடன்... ஹிஹி. :p
TRC sir,
complete attachment with total detachment???
Maha periya thaththuvamaa irukke!!!!
grand finale decide seyyalai:))))
Post a Comment