Blog Archive

Thursday, October 25, 2007

இதயம் இருக்கின்றதே...

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.(டிஸ்கி வரி)

இதயம்,மனசு இதைப் பற்றி ஒரேயடியாகக் கவலைப்பட்ட வயது ஒரு பதினாறு
அந்த பதின்ம வயதுகளில் தான்:)
வேறு விதமான கவலை. மணியன் நாவல்களீல் வரும் கதாநாயகிகள் போல சிம்பிளாக,ஆனால் அழகாக ,ஏழையாக இருக்கலாம். ஆனால் காதல் தான் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் மதிய இடைவேளைகளில் தோழிகளுடன் பேசிக் கொண்டது உண்டு. அதுவும்
எப்போதும் மனம் தளரக் கூடாது. துணிந்து நின்று கல்லானலும், புல்லானாலும் பேசிய காலங்கள்
அவை.
திருமணம், குழந்தைகள், அவர்கள் வளர்ப்பு, பள்ளிக்கூடம், வேலை மாற்றங்கள், ஊர் மாற்றங்கள்
எல்லாம் பார்த்து திரும்பிய போது நாற்பது வயதாகி விட்டது.
நோய் என்று பெரிதாக எதுவும் அண்டியது என்று கிடையாது. தலைவலிகள்
இருக்கும்,அதைத்தவிர கவலைப் படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அம்மா
கவனமாக நன்றாகப் பேணி வளர்த்த வயிறு.
அதை எவ்வளவு கவனிப்பில்லாமல் விட்டு இருக்கிறேன் என்பது ஒரு சாயந்திர வேளையில் தெரிந்தது.
பெரியவனின் பள்ளி விழா. பெற்றோர்களுக்கும் அழைப்பு உண்டு. இங்கே இதோ நாரத கான சபாவில்
நடக்கிறது.
இருக்கையில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கவனிக்கு மகிழ்ந்து கொண்டிருந்தபோது அந்த முணு முணு வலி ஆரம்பித்தது.
நடு முதுகில் வலி.
அலட்சியம் செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்ததும் உட்கார முடியாமல்
எழுந்து வீட்டுக்கு நடந்து வந்துவிட்டேன். ஏதோ ஒரு இனம் புரியாத பயம்.
வியர்வை,படபடப்பு இவை சேர்ந்து கொண்டதும் அரைகுறை ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் அறிவு
என்னைக் கிலி கொள்ள வைத்து உடனே தேவகிக்கு(ஹாஸ்பிடல்) விரைந்து விட்டேன்.
ஏதாவது இதயம் சம்பந்தப் பட்டதாக இருந்தால்??
ஒருவரும் வீட்டில் இல்லை.பள்ளிகளிலிருந்து வரவில்லை.
தங்க சிங்கத்தையும் எதிர்பார்க்க முடியாது, அவர் ஏதோ கூடுவாஞ்சேரியிலோ,
ஊரப்பாக்கத்திலோ ஏதாவது லாரியைப் பிரித்துப் போட்டு மேய்ந்து கொண்டிருப்பார்.
மொபைல் போனெல்லாம் கிடையாது.
அப்பா அம்மாவைப் பயமுறுத்த மனதில்லை.
அங்கே மருத்துவமனியில் என் வலி பற்றி சொன்னதும் உடனே
ஸ்ட்றெட்சரில் படுக்க வைத்து
ரத்த அழுத்தம் பார்த்து அது எங்கேயோ உயர்மட்டத்தில் உலாவிக் கொண்டிருப்பதாக அங்கே இருந்த டியூட்டி டாக்டர் சொன்னதும்
இன்னும் பயந்து, ஏகத்துக்கு முழித்து சினிமாவில் வரும் வேண்டாத சீன்கள் எல்லாம் நினைவுக்கு வர,
அட ராமா சங்கிலி, வளையல் எல்லாம் பத்திரப்படுத்திப் பெண் கல்யாணத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதி வைக்காமல் வந்தோமே
என்றேல்லாம் நினைவு ஓடுகிறது.
மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்கும் வைத்ததும் கற்பனை அதீததிற்கு ஓடி விட்டது.



பிறகு நடந்ததெல்லாம்
கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொண்டு மசாலாவும் சேர்க்க வேண்டி இருப்பதால்,
அடுத்த பதிவில் பார்க்கலாம்.:))





33 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன மசாலா சேப்பீங்களா ? சரிதான்..இப்படி திக்குன்னு ஆக வச்சிட்டு அப்பறம் சொல்றேன்னா அநியாயமா இருக்கே...எங்க பிபி யை ஏத்துவீங்களாட்டம் இருக்கு.. :)

நாகை சிவா said...

//அட ராமா சங்கிலி, வளையல் எல்லாம் பத்திரப்படுத்திப் பெண் கல்யாணத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதி வைக்காமல் வந்தோமே
என்றேல்லாம் நினைவு ஓடுகிறது//

சிவ... சிவா...

எல்லாரும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்காங்களே...

எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு.. ஆனா அது வேற விசயத்துக்கு....

கோபிநாத் said...

\\கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொண்டு மசாலாவும் சேர்க்க வேண்டி இருப்பதால்அடுத்த பதிவில் பார்க்கலாம்.:))\\

சரி சரி.

இலவசக்கொத்தனார் said...

//கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொண்டு மசாலாவும் சேர்க்க வேண்டி இருப்பதால்,//

விஷயத்தைப் பார்த்தால் மசாலா எல்லாம் சேர்த்துக்க கூடாது போல இருக்கே!! இன்னுமா மசாலா? :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் முத்துலட்சுமி,

இது ஒரு முன்னெச்சரிக்கைப்
பதிவுதான்.

மசாலா என்று ,
ஒரு இறுக்கம் இல்லாமல் இருப்பதற்காகத்தான் சொன்னேன்.

காரமும் புளியும் என்னோடு இனிமேல்விளயாட்டுக்குக் கூட விளையாடவே முடியாது:)))

மங்கை said...

மாசாலா சேர்த்ததுனால வந்த பிரச்சனையா வல்லிம்மா... சீட் நுனிக்கு வந்துட்டேன்...நான் விழறதுக்குள்ள அடுத்த பதிவு சீக்கிறம்

வல்லிசிம்ஹன் said...

வாங்க சிவா,
அம்மாக்கள் உலகம் முச்சூடும் இப்படித்தான் இருப்பார்கள்.

அது அறுவை சிகித்சையாக இருந்தாலும் சரி.
வெறுமனே ஜுரத்துக்காக ட்ரிப் ஏத்தணும்னாலும் சரி ஒரே மாதிரித் தான் நினைப்பார்கள்.:))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத். இருபது வருஷம் முன்னால் நடந்ததால், மறந்து போயி,

டீடெயில்ஸ் விட்டுப் போயிடக் கூடாது
இல்லையா.
சாப்பாடு விஷயத்தில் கவனம் தேவை என்பதற்காகத் தான் எழுத ஆரம்பித்தேன்.:)))

வல்லிசிம்ஹன் said...

இ.கொ.

இது எழுத்து மசாலா தானே.
ஆபத்தில்லாதது:))
அப்படின்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மசாலா காரணம் இல்லை மங்கை.

சரியாகச் சாப்பிடாததால் வந்த பிரச்சினன.
நல்லாவே உட்கார்ந்துக்குங்கப் பா:)) இதோ அடுத்த பதிவும் வந்துடும்

கண்மணி/kanmani said...

வல்லியம்மா இது எப்ப நடந்ததுன்னு சொல்லலையே.
சரியா சாப்பிடாம அப்படியென்ன வேலை உடம்ப பாத்துக்கனுமின்னு தெரியாதா?

வல்லிசிம்ஹன் said...

கண்மணி, சரியா 19 வருஷத்துக்கு முன்னாலே நடந்தது.

உடம்பைப் பார்த்துக்கணூமானு அலட்சியம்.:))

அப்படிக் குடும்பத்தைக் கவனிக்கிறோம்னு நினப்பு:)))
ஒருவிதமான அறியாமைதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இதே மாதிரி எனக்கும் நடந்தது. மலர் ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆகி ஐ சி யு வில் அட்மிட் பண்ணி ஆன்ஜியோ செய்யும் சமயம் தங்க மணிக்கு போன் போட்டு "என்னை ரெஸ்டு எடுக்கச் சொல்லுவுயே வ்ந்து பாரு நான் ரெஸ்ட்லே இருக்கேன்னு' சொன்னேன்

அபி அப்பா said...

வல்லிம்மா! எனக்கு 40 ஆச்சு, அதனால கவனிச்சுகோடா உடம்பைன்னு உள்குத்தான உங்க பதிவுக்கு நன்றி, ஆனா பாருங்க எனக்கு பிரஷர் நார்மல், சுகர் சரியா நல்லா இருக்கு, 40 வயசிலேவரும் நாய்குணம் இல்லை எல்லார்கிட்டயும் அன்பா இருக்கேன், நல்லா தூக்கம் வருது, சீக்கிரமா எழுந்துக்கறேன், நல்லா வக்கணையா சாப்பிடுறேன்.. என்ன பிரச்சனை எனக்கு:-))))))))))))

துளசி கோபால் said...

இப்படி 'ஓசை'ப்படாம வந்து எங்களையெல்லாம் 'திக்'கினால் என்ன அர்த்தம்?

ஸ்பைஸ் டப்பா(வெறும் டப்பா மட்டும்) அனுப்பவா?

ஆமாம், ரெண்டாவது ஒரு படம் போட்டுருக்கீங்களே...அதெல்லாம் என்ன?

Geetha Sambasivam said...

அட ராமா சங்கிலி, வளையல் எல்லாம் பத்திரப்படுத்திப் பெண் கல்யாணத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதி வைக்காமல் வந்தோமே


mmm நேத்திக்கு எல்லாம் வந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை, அதுக்குள்ளே அட்மிட் ஆகி இத்தனை பேர் வந்து பார்த்துட்டு வேறே போயாச்சா? அது சரி, எல்லாம் பத்திரமா இருக்கா? நல்ல அனுபவம் தான், எனக்கும் உண்டு, வேறே வியாதியில், ஆனால் அப்போ சங்கிலி, வளையல்னு நினைச்சுப் பார்க்க முடியலை. ஒரேயடியாப் போனால் போதும்னு இருந்தது! :(

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச எவ்வளவு பெரிய ஷாக்
அவங்களுக்கு!! பாருங்க.
எல்லோருமே வாழ்க்கைல ஓரு எமர்ஜென்சியாவது சந்திக்காமல் இருக்க முடியாது.
ஆஞ்சியொ வேறயா.
சரியாப் போச்சு.

:))
இப்போ சரியாகி இருக்கும்னு நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
ஸ்பைஸ் கூடப் பரவாயில்லையாம். இந்த இட்லி மிளாகாய்ப்பொடி இருக்கு பாருங்க அதுதான் டேஞ்சர்..

அந்த இரண்டாவது படத்தில நான் சாப்பிடாத பொருட்களும், நான் சாப்பிடக் கூடாத பொருட்களும் இருக்கின்றன.:)0
ஃப்ரென்ச் ஃப்ரைஸ். நோ நோ.
மத்ததெல்லம் தொட்டும் பார்த்ததில்லை அதினால நோ வொரீஸ்:)))

Anonymous said...

வல்லிம்மா, சாப்புடக்கூடாத ஐட்டங்களோட படத்தையும் போட்டு இதயம் இருக்கா இல்லியான்னு கேள்வி கேக்கறீங்களே. இது உங்களுக்கே நல்லா இருக்கா

மெளலி (மதுரையம்பதி) said...

அட ராமா, 2 நாள் நான் இந்த பக்கம் வரல்லை அதுக்குள்ள இவ்வளவா?....

மெளலி (மதுரையம்பதி) said...

அட ராமா, 2 நாள் நான் இந்த பக்கம் வரல்லை அதுக்குள்ள இவ்வளவா?....

வல்லிசிம்ஹன் said...

கீதா, நீங்க சொல்றது இன்னும் அதிர்ச்சியாக இருக்கு.
இந்தப் பேச்சு வேண்டாம். நீங்கள் சுகமாக இருக்கணும்,.

வளையல்களும் சங்கிலியும் உரு மாறினாலும் ,

எல்லாமே பத்திரமாகத் தான் இருக்கு.:))
வாழ்க்கையில் திருப்பம்னு சொல்றோம் இல்லையா. எத்தனையோ திருப்பங்களில் இதுவும் ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

சின்ன அம்மிணி வாங்கப்பா.
சுட்ட படம்தானே. பார்த்தால் ஒன்றும் இல்லை.

மாக்டி போயி , சாப்பிட்டாதான் தப்பு:)))

மதுமிதா said...

அங்கே படிச்சுட்டு இங்கே வந்து.....
அப்பாடா... என்னதிது வல்லிம்மா
இந்த சஸ்பென்ஸ் எல்லாம் வேணாம் தெரியுமா

ஒழுங்கா காலையில் ஒன்பதுக்கு முன்னால சாப்பிடுங்க‌
ஆமா சொல்லிட்டேன்
இப்பதான் நிம்மதியா இருக்கு


செரியன் இருதய ஆப்ரேஷன் செய்த கேஸெல்லாம் சக்சஸ்
உயிரைக் காப்பாற்றும் பணியாற்றும் அவருக்கு வாழ்த்து சொல்லிக்கறேன்

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,

அப்படி எல்லாம் ஒண்ணும் உள்குத்து கிடையாது..
வெளிப்படையாகவே சொல்லலாமே உங்க கிட்ட:))
நல்லா சிரிச்சு,களிப்பா இருங்கோ,
மத்தபடி வாய்விடு சிரிச்சா நோய் விட்டுப் போகும் என்கிற உங்க பாலிசியே உங்களைக் காப்பாத்தும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.

ஒரே நீளப் பதிவாப் போடரதுக்குப் பதிலா ரெண்டாகப் போட்டு விட்டேன்.அதனால நீங்க எதையும் மிஸ் செய்யலை:))

செல்வம் said...

இதயம் பற்றி எழுதும் போது மசாலாவா?.நன்றாய் உள்ளது.நலமடைய பிரார்த்திக்கிறேன்.

cheena (சீனா) said...

வல்லீ 19 வர்டங்களுக்கு முன்னால் நடந்தவற்றை அசை போடுகிறீர்களா ?? பயமுறுத்தாதீர்கள். தங்கள் நலம் விரும்பும் பல நண்பர்கள் வலையில் இருக்கிறார்கள். அவர்கள் படித்ததும் பயந்து விடுவார்கள்.

அபி அப்பா : சுத்திப் போட்டுக்கங்க பிளீஸ்

வல்லிசிம்ஹன் said...

வரணும் மதுமிதா.
நல்லா இருக்கேன்பா.

இப்போதைய(ஆண்டு) பரிசோதனை நேரம் வந்த போது, இது எப்படி ஆரம்பித்தது என்று நினைவுக்கு வர இந்தப் பதிவை எழுதினேன்.
கூடிய வரை உணவுக் கட்டுப்பாட்டை மீறுவதில்லை.
எனக்கு சிகிச்சை அளித்தவர் பெரிய செரியன். (அவர் இப்போது இல்லை)இதய ஆபரேஷன் செய்பவர் கே.எம்.செரியன்.(தம்பிக்கு பை பபஸ் செய்தவர்)

இருவரும் ரயில்வே ஹாஸ்பிடலில் இருந்து வெளிவந்த நல்ல மருத்துவர்கள்.

வல்லிசிம்ஹன் said...

செல்வம் வாங்க.
பின்னூட்டங்கள் படிக்கும் போதுதான்

வேறு வேறு கருத்துகள் கிடைக்கிறது:)
நநன் இயல்பபக எழுதிய இரு விஷயம் மசாலாவாக வந்துவிட்டதே:)))

வல்லிசிம்ஹன் said...

சீனா நண்றி.
உண்மைதான். பயமுறுத்துமெண்ணத்தோடு எழுதவில்லை.

நல்ல நட்புகள் இருக்கவே ,ஒரு விஷயத்தைப் ப்அகிர்ந்துகொள்ளும் எண்ணம் வருகிறது.

அவர்களைப் பதற வைத்ததற்கு வருத்தமாக இருக்கிறது.
மன்னிக்கணும்.
http://naachiyaar.blogspot.com/2007/07/207-1943.html

இதுவும் எப்பவோ நடந்ததைப் பற்றிய பதிவுதான்.
past and present have a way of mingling in our words and writings.
I shall take care.

VSK said...

ஒரு பழைய சம்பவம்னு முதலிலேயே கட்டம் கட்டி சொல்லி இருக்கக் கூடாது! ?
என்னமோ ஸ்டைலா திகில் நாவல் மாதிரி நடுவுல எங்கேயோ சொருகி வைச்சிருக்கீங்களே!

கீழ்ப்படம்... அஜீரணம்.... தானே காரணம்!
:))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வி எஸ்கே சார்.
கட்டம் கட்டா விட்டாலும் ஒரு வரிஏழுதி இருக்கணும்.

இவர் வேற!!!

நாவலா !!நநனா?? அதுவும் திகில் நாவலா.நல்ல ஆளைப் பார்த்தீங்க:))
வெறும் சம்பவத்தை ஒழுங்கக் கொடுக்கத் தெரியலை.

அதுதான் இப்படி வழிஞ்சு ஆறாப் போகிறது..
ஜீரணத்துக்கு ஆகாரம் போடாததால வந்தது.
படம் அஜீரணம்தான்.