முதல்ல டிஸ்கி. அப்புறம் தான் செய்தி.
இந்த மாதிரி பதிவுத் தலைப்பும் கொடுத்து எழுதச் சொன்னவங்க நூசிலாந்தில இருக்காங்க.
இந்தப் படங்களுக்கும் நாங்க சந்திச்சதுக்கும் சம்பந்தமில்லை. சிப்ஸ் சாப்பிட்டோம். அது உண்மை ,மத்ததெல்லாம் சும்மா சுட்ட படங்கள்
நுனிப்புல் பதிவுக்காரங்க சென்னை வந்துட்டுப் போறாங்க. ஒரு மயில் போட்டாங்க நாம பெண்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம்
சந்திக்கலாமே என்று. அதுக்கென்ன,,,
லாமேனு ''சம்மதிச்சுட்டேன்.
வேற யாரு வருவாங்கனு தெரியலை. பார்த்தால் அடுத்தாப்புல பத்திரிகைக்கார அம்மாவும், கவிதாயினியும்,மலர்வனம் அம்மாவும்,நிர்மலமா சிரிக்கிறவங்களும் வரோம்னு சொல்லிட்டாங்க,.
சரி எங்க பார்க்கலாம்னு அடுத்த கேள்வி.சாப்பாடே நமக்கு நினைப்பு அதால(நான்) சரவணபவன்னு சொல்லிட்டோம்.
முருகன் இட்லியும் போட்டிக்கு வந்து(அங்கே) சட்டினி ஓடுவதாகத் துளசிதள அம்மா சொன்னதால், அந்த நினப்பை அப்படியே விட்டோம்.
நுனிப்புல்கார(ஸ்வீட்) அம்மாவுக்கு ஏகப்பட்ட வேலை. கையில அவங்களுக்கு மொபைல் போன் கூட இல்லை.
அதால ஒரு சஸ்பென்சோட
பெசண்ட் நகர் பீச்சாண்ட கண்டுக்கலாம்னு ஒரு மனசா(????) முடிவு செய்தாச்சு.
பத்திகைக்கார அம்மா வீட்டுக்கு வழி கேட்டுகிட்டு(நாம தான் கிழக்கு,இடது,வலது எல்லாப் பக்கமும் குழப்பறவங்களாச்சே) ஒரு துணைக்கு நம்மளோட வாரியளானு கேட்டொம்.
கவலைப்படாதெ வல்லி, நான் இட்டாண்டு போறேன்னுட்டாங்க.
அவங்க வீட்டுக்காப் போயி, நல்ல சூடா ஒரு காப்பியும் குடிச்சுட்டு,(என்னவோ மாநாட்டில தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போற நினைப்புதான்:))) )
அப்படியே பீச்சாண்ட போயி நிழலா ஒரு இடத்தில உக்காந்துகிட்டோம்.
எங்களுக்குத் துணையா காக்கா,குருவி மாதிரி
மாதிரி கொஞ்சம் என்னைவிட வயசானவங்க
பக்கத்தில உட்கார்ந்துகிட்டு எங்களயே பார்த்துகிட்டு இருந்தாங்க.
நானும் போற வர வண்டி எல்லாம் பார்த்தேன். ஒரு தேங்கா மாங்காக் காரனும் பக்கம் வரலை.
பத்திரிகைக் கார அம்மாகிட்டப் பதிவு எப்படி எழுதலாம்னு பாடம் கொஞ்சம் கேட்டுக் கிட்டேன்,
சரி நினைச்சாக் கவியா பொழிவாங்களே அவங்க வராங்களான்னு பார்த்தோம்.
வந்த்ட்டாங்கப்பா. அட இன்னா எளிமை!!. இவங்க நாலு புத்தகம் பப்ளிஷ் பண்ணி இருக்காங்களாம்.
நம்ம பொதிகைல கூட இவங்களைப் பார்த்திருக்கோமேனு உஷாராயிட்டேன். ஓஹோ நாம இருக்கிறது சீனியர் (பதிவு)மங்கைகள் கூட்டத்திலனு தெரிஞ்சு போச்சு.
வந்த கவிதாயினி மூலமாத் தெரியுது, நம்ம பத்திரிக்கார அம்மாவும் ஒரு புத்தகம் விகடன்ல அதுதாம்மா நம்ம ஆ.வி. அதில போடறாங்களாம்.
அது ஆச்சா, இன்னோரு தடவை திறந்த வாயை மூடறத்துக்குள்ள நிரூ அம்மாவும் வந்துட்டாங்க. பிறகு
மலர்வனம் அம்மா. அவங்களுக்கு அறிமுகமே வேண்டாம்.
பேருக்கேத்த மாதிரி சிரிச்ச முகம்.
பெரிய கம்பனில வேலை செய்யறவங்க. நானு என்ன பேச. அவங்க பேசறதைக் கேட்டுக்கிட்டு, கவிதாயினி கொடுத்த
வறுவலை மென்னுக்கிட்டு இருந்தேன்.
சர்ருனு வந்த காரில புதிசாப் பத்திரிகை அறிமுகம் செய்யற நுனிப்புல் அம்மாவும் வண்ட்டாங்க.
எல்லாருமா மணலாண்ட போயி உட்கார்ந்து,
நலம் விசாரிச்சு,சமுதாய முன்னேற்றத்துக்கான ஆவலாதிகளைப் பகிர்ந்து கொண்டோம்.
எப்படி அரைக் கிலோ ஸ்வீட் சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்கலாம்னு நுனிப்புல் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க.
திம்னு இருட்டுதேனு ஒரு பார்வை பின்னால பார்த்தால்....அப்படி ஒரு கறுப்பா மேகம் வந்திருக்குப்பா.
நேத்தித்தானே கண்ணனைப் பத்தி எழுதினோம் இன்னிக்கு பீச்சாண்ட நட்ட நடு வெளில மாட்டிக்கிட்டோமே சாமினு அழுவாச்சியா வந்திடுச்சி.
அத்தனை சீனியர்களும் என்னைப் பாதுகாப்பதாக உறுதி அளித்தாலும் நம்ம , இடி மின்னல் போது சீன் காட்டுவது அவங்களுக்கு நல்லது இல்லைனு தீர்மானஞ்செய்து
சூரத்திலிருந்த ஸ்பெஷலா வந்த இனிப்பை மட்டும் ஒரு பிடி பிடிச்சுட்டுக் கிளம்பிட்டோம்பா.
போற வழியெல்லாம் நினைச்சுட்டே போனேன் ,ஹ்ம்ம் என்னவெல்லாம் அறிவுரை கிடச்சிருக்கும்,,இப்படி வாங்கிக்காம வந்துட்டமேனு....:(((
இன்னோரு மாநாட்டில (இப்ப) விட்டதைப் பிடிச்சுட வேண்டியதுதான்:)))))
மாநாட்டுக்கு வந்தவங்க,
நுனிப்புல் உஷா....நன்றிம்மா
அருணா ஸ்ரீனிவாசன்......ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப நன்றிப்பா
மதுமிதா........உண்மையாவே சினேகிதமாயிட்டாங்க.
நிர்மலா.....சிரிக்கவே வந்திருக்காங்க, இன்னும் கடி ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாங்க:)))
(மலர்வனம்) லக்ஷ்மி......இன்னும் நிறைய விமரிசனங்கள் எழுதப் போறாங்க. நாமும் படிக்கப் போறோம்.
எல்லாருக்கும் நன்றி. என்னை அழைத்ததற்கும்,
பழைய பள்ளி நாட்களை நினைவுறுத்திய ஒரு இனிய அற்புதமான மாலை நேரத்திற்கும்.
இதைப் பதிவிட உசுப்பிவிட்ட துளசி கோபாலுக்கும் மகா நன்றி.
நமக்கு என்ன ,,சொன்ன இடத்துக்குத் தப்பாம போயிட வேண்டியது. அவ்வளவு தானெ.
போயிட்டோம்.
44 comments:
மீ த ஃபர்ஸ்ட்டு
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி
http://photography-in-tamil.blogspot.com/2007/09/pit_30.html
படம் நல்லா இருக்கு...இங்க போனா இந்த மாசம் போட்டில இந்த பதிவை இணைத்துகலாம்.
ஆகக் கூடி சத்தமில்லாது ஒரு வலையுலக மீட்டிங் நடத்திட்டீங்க....
ஆமா, கீதாம்மாவும் இந்தியா வந்துட்டாங்களே, மறந்துட்டீங்களா?
உங்களுக்கும், துளசியக்காவுக்கும் ஒரு நன்றி, இல்லேன்னா இது எங்களுக்கெல்லாம் தெரிந்தே இருக்காது....
வரணும் மௌலி. கீதாம்மா நேத்திக்குத்தானெ வந்து இருப்பாங்க.
நாங்க சந்திச்சு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. பதியத்தான் லேட்.
சென்ஷி ,
ஆமாம்
நீங்கதான் ஃபஷ்டு.நன்றி ஷார்ஜாவில் எல்லோரும் சௌக்கியமா.
வரணும் இம்சை.
படப்போட்டியா. பதிவுப்போட்டியா.
படங்கள் என்றால் இவற்றை நான் போடமுடியாது. இவை கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை. பதிவு என்றால் அனுப்புகிறேன்.:))))
@vallaymmaa urukku poyittu vantha apparam nalla maatram than ithu. jamainka.
முதல்லே துளசிக்கு நன்றி. இப்படி ஒரு சுவாரசியமான நடையிலே, ஆறு பேர் கூடிய மாபெரும், அலைமோதிய ( பீச்சில்?!)கூட்டம் பற்றிய செய்திகள் கிடைக்க வழி செய்ததற்கு :-)
இப்போ வல்லி 'மா' - மிக்க நன்றி - சந்திப்பில் கலந்து கொண்டதற்கும் இப்போது அதைப் பற்றி விவரிக்கும் நடையில் மனசு லேசாகி சிரிக்க வைத்தற்கும் :-)
அதுசரி... நாம ஆறு இளைஞிகள் அல்லவா கூடினோம்? படத்துலே ஒண்ணு குறையுதோ ? :-)
//என்னைவிட வயசானவங்க
பக்கத்தில உட்கார்ந்துகிட்டு //
இவங்கதான் "நாம்ப" ன்னு நினைச்சு கொஞ்சம் எக்கச்சக்கமா வயசான்னவங்க கூட்டத்துலே மாட்டிக்கிட்டோம் போலிருக்கே என்று "மலர்வனம்" ஒரு கணம் பயந்தாங்களாமே :-)
வரணும் தி.ரா.ச.
மாற்றம் தெரிகிறதா:))
நல்லதாக இருந்தால் சரி. வரலாறு காணாத கூட்டதுக்கு நடுவே, மழைத் தூறல்களோடு மானாடு நடந்தது பாருங்க.
ஹ்ம்ம் அது ஒரு மழக்காலம்தான்:)))
போண்டா இல்லாத, போலி(ளி) இல்லாத ஒரு சந்திப்பையெல்லாம் மீட்டிங்க்னு ஒத்துக்கவே முடியாது.
ஸ்வீட் வருவல் எல்லாம் யாருக்கு வேணும்...மீட்டிங் முடிஞ்சி எந்த பாருக்கு போனீங்க?.இஸ்கோலு பசங்களாட்டம் ஜவ்வு மிட்டாய சாப்டுட்டு மீட்டிங்காம்...மீட்டிங்....
ஹி..ஹி...கோவிக்காதீங்க தாயே
அருணா,
நீங்க ஐந்து பேரும் நின்னா போட்டொ எடுக்க ஒருத்தர் வேண்டாமா:))
அதான் இன்னோரு ஆறு பேரும் இருக்கிற போட்டொ விட்டுப் போச்சுப்பா.
கொஞ்ச கூட்டமா வந்தது நம்மைப் பார்க்க.!!!
குறி சொல்ற அம்மாவை விட்டுட்டேனே.
அவங்க கூட பீச்சில ப்ளாக் போடறவங்களாம்.:))
மலர்வனம் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க, நாம இவ்வளவு இளமைஇயா,அழகக,அல்ட்ரா மாடர்னா இருப்போம்னு:)
அதான் வேற யாரையோ பார்த்துப் பயந்து போயிட்டாங்க:))))))
நன்றி அருணா.ஃபார் எவ்ரிதிங்.
இந்த பெண்ணீய பதிவினை கண்டப்படி எதிர்க்கிறேன்..... :)
Behalf of Koths,
:)))
மாயாவி , தண்ணீ இல்லாம பதிவர் மீட்டிங் நடக்குமா,.
கால் பாவம தண்ணீல நின்னோம் பாருங்க. அவ்வளவு தள்ளாட்டம்:)))))
கொஞ்சம் உப்புக் கரிச்சு போச்சு. அதான் கஷ்டம். போண்டாலாம் பழசுப்பா. இப்போ கலர் கலர ஸ்வீட்டும், பிஸ்கட்டும், இன்ன பிறவும் தான் முறை:)))))
அதானே பாரத்தேன்,
இன்னும் உஷா வந்த மீட்டிங்குக்கு இ.கொ ஒண்ணும் சொல்லலிய்யேன்னு வருத்தமா இருந்தது.:))))))
பதிலுக்கு இராம் வந்தாச்சு.
கண்டு படிச்சுட்டு எதிர்ப்பு வேறயா.!!
பதிவுலக மேன்மைக்காகத் தான் இந்த மீட்டிங்கே என்று இங்கு வன்மையாகச் சொல்லுகிறேன்:))))))
நன்றி ராம்.
நாம் இதை பத்தி வாய்க் கொடுப்பானே...
நல்ல சந்திப்புங்க.... நாங்க ஊருக்கு வரும் போது எங்களையும் கண்டுக்குங்க..
எங்கள் தானைதலைவி கீதாவை சந்திப்புக்கு அழைக்காதை நான் வன்மையாக கண்டிக்குகிறேன்.
கொடுத்த தலைப்பை வாபஸ் வாங்கலாமான்னு இருக்கு. 'வடை' இல்லாத மாநாட்டை மனசாலெயும் நினைச்சுப் பார்க்க முடியலையேப்பா(-:
ஆமாம், உஷா கொண்டுவந்த ஸ்பெஷல் ஸ்வீட் பேர் என்ன? 'சூரத்காரி'ன்னு சொல்லிடாதீங்க:-))))
தமிழில் இப்ப ஏகப்பட்ட 'முன்னேற்றங்கள்' கொண்டுவந்ததுக்குப் பாராட்டு(க்)கள்.:-))))
ஜாலியா ஒரு பொன்மாலைப் பொழுது போயிருக்குபோல.
அடுத்த மாநாட்டுக்கு ஒரு மூணுமாசம் இருக்கும்போதே சொல்லுங்க. பறந்துறலாம்.
நானும் அழைக்கப்பட்ட அன்றே இதைத் தான் சொன்னேன்,,
கீதாவும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு. உஷா ஒரு நாள் தான் வந்தாங்கப்பா.
சிவா, அன்னிக்கு கீதா ஊருக்கு வரவே இல்லை.
வரணும் சிவா, நீங்க ஊருக்கு வரும்போது உங்க அம்மாவையும் அழைத்துவந்து மாநாடு நடத்திடலாம்..
சரியா.....
ஓஹோ அதுபேரு அதுவா துளசி:)))))
சொல்லலை. காரமா இருக்கே.
அதனாலே வேண்டாம்:)))
என்ன செய்யறது உஷாவுக்குக் கிடைத்த அரை மணி நேரத்துல பொட்டலம் பிரிச்சி ஸ்வீட் சாப்பிடத்தான் நான் இருந்தேன்.
இல்லாட்ட வடை வாங்கி சாப்பிட்டு இருக்கலாம்:))))
அதுக்கெல்லாம் நூசி அக்கா வந்தாத்தான் கிடைக்குமாம்.
அடுத்த முன்னேற்ற மாநாடு வடை மாநாடாவே நடத்தலாம்... ஓக்கேயா:)))))
எலியர்ட்ஸ் வரை வந்திருக்கீங்க. இப்படி சொல்லாம போயிட்டீங்களே...முருகன் இட்லி கடை பக்கம்தானே நம்ம கடையும். கொஞ்சம் புண்ணாக்கும் கொடுத்திருப்பேன். அடுத்த முறை பீச்சுக்கு வரும்போது சொல்லுங்கோ...என் செலவில் புண்ணாக்கு...(தமாசுக்குத்தான்)
ஆடுமாடு, நன்றி.
புண்ணாக்கு கேக் நல்லா இருக்குமெ.
அதைக் கொடுத்து அனுப்பலாம்.
சாப்பிட ரெடி:)))
//நாம ஆறு இளைஞிகள் அல்லவா கூடினோம்? படத்துலே ஒண்ணு குறையுதோ ? //
போட்டோ எடுக்க ஒரு ஆள் வேணுமில்லா?
எழுதிய நடை சிரிப்பை வரவழைத்தது! :)))
நீங்க செஞ்ச உருபடியான காரியம் சந்திப்புக்கு கீதா பாட்டியை அழைக்காதது. அதுக்கே இந்தாங்க மலர்கொத்து. :p
அம்பி:)
கீதாவைக் கூப்பிட்டே இருக்க முடியாது,.
ரெண்டு நாள் கழிச்சுத்தான் அவங்களே வந்து இருக்காங்க.
மேலும் இது நான் ஏற்பாடு செய்த சந்திப்பும் இல்லை:)))
பூங்கொத்து இத்தனை அழகா நான் பார்த்ததே இல்லை:))))))
:-(((((
மாநாடு பெண்களுக்கு மட்டும் என சொல்லிய நுனிப்புல்லுக்கு கண்டனம்! இதுல வந்து வாய் திறக்காத இ.கொவுக்கும் கண்டனம்.:-)))
லக்கிலுக் சார், ஏன் சோகம்????
No Delphine it was not like that.
How will I ever forget to call you!!
you know better than that.
It was a swift notice,short kind of meeting.
Thats all I know abt that.
sorry pa.
அபி அப்பா, யாரோ ஓட்டைவாஉலகநாதனு ஒருத்தராமெ.
அவங்க அம்மா நானு:))))))
இ.கொ.
பெண்கள் மீட்டிங்னு சொன்னதும் எதுக்கு வம்புனு வரலை:)))
கீதா பாட்டி 2 நாள் கழிச்சு தான் வருவாங்க!னு தெரிஞ்சு தானே அவசர அவசரமா இந்த மீட்டிங்க்? :p
நாராயண! நாராயண!
ஒன்னும் இல்ல! புரட்டாசி மாசமா இருக்கே! அதான் நாரயணனை வாயார கூப்பிட்டு பார்த்தேன். :)))
இந்த நேரம் பார்த்து கீதா பாட்டி அவங்க வீட்டுல எலிக்கு பிரசவம் பாத்துட்டு இருகாங்க. :)))
இங்க அவங்கள வெச்சு காமடி கீமடி எல்லாம் நடந்துட்டு இருக்கே! :p
ஆமாம் ஆமாம்,, புரட்டாசி.
இல்லாட்ட மட்டும்:)00)!!!!
பூலோக நாரதரே வருக வருக.
என்னது எலிக்குப் பிரசவமா.
என்ன கொடுமை இது சரவணா:))))))ஸாரி அம்பி!!!
மிக மிக நல்ல பதிவு
ஆனா பின்னூட்டம் இட முடியல
இதை காப்பி பேஸ்ட் செய்துடுங்க ரேவதி (வல்லி)
இந்தப் பெயர் கூத்தை சொல்லாம விட்டுட்டீங்க:-)
நன்றி துளசிம்மா
எங்கேயோ இருந்து ஆட்டுவிக்கிறீங்க:-)
நடத்துங்க
அருணா வல்லிமாதான் படம் எடுத்தாங்க
அறிவுரையா?????
எதுனா அறிவுரை யாராவது சொன்னாங்களா என்ன
எனக்குதான் சொன்ன அறிவுரை கேட்கலியோ:-)
அன்புடன்
மதுமிதா
மேலே இருக்கும் பின்னூட்டம் மதுமிதாவோடது.
காப்பி டீ ஆத்தினதுல அது வல்லிசிம்ஹன் பேரில வந்துட்டது:)))
மதுமிதா, வாங்க வாங்க.
உங்க பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்ததில் என் பேர் போட்டு வந்திடுச்சு.
அறிவுரை கேக்கலியா...என்னப்பா.
உரை +அறிவுதான் நடந்திச்சே.
ஒருத்தரை ஒருத்தரரறிஞ்சுண்டோம்.
இப்போ நானும் ரேவதிசிம்ஹனும் ஒண்ணு அப்படினு நீங்க அறிஞ்சு கிட்டீங்க இல்லையா.:))))))
உரை எதுன்னா நம்ம பேச்சுதான்.
ஐய்யோ ரொம்பக் கடிச்சுட்டேனா:)))))
நன்றிப்பா.
உங்க பின்னூட்ட பெட்டி என்னை எழுத விடமாட்டேன்னு சொ(கொ)ல்கிறது:-)
இதையும் உங்க பதிவில் காப்பி பேஸ்ட் செய்துடுங்க:-)
முக்கியமான விஷயம் விட்டுப்போச்சு வல்லி மா
மயக்கும் மாலைப்பொழுதில், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடல் மயக்கியதை முக்கியமா சொல்லணுமே:-)
அன்புடன்
மதுமிதா
வாங்கப்பா.
மதுமிதா!!
என்னாலியே என் பொட்டியைத் திறக்க முடியவில்லை:)
என்னவோ நடக்குதுப்பா:)))
சொல்ல வேண்டியதுதான்.
என்ன,,,
மயக்கினேனா,பயந்து ஓடினேனானு நீங்கதான் சொல்லணும்:)))
வரணும் தி.ரா.ச
எலியட்ஸ் பீச்சுக்கு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன் என்னை மறந்தியளே...நாயமா? வல்லிம்மா?
அடுத்த மாநாட்டுக்காச்சும் யாபகம்
வெச்சுக்கோங்க.
நானானி,கட்டாயம்
நீங்கள் உண்டு.
அடுத்தது வரல்ஆறு காணாத ்மாநாடு நாம நடத்தப் போறோம்.
உண்மையாப் பார்க்கப் போனா ஏண்டா பதிவு போட்டொம்னு இருக்குP:)))))))
டாக்டரம்மா, நானானி உங்க மெயில் ஐடி எனக்கு அனுப்பிடுங்க. அடுத்த மீட்டிங்கு கட்டாயம் கூப்பிடுகிறேன்.
வல்லிமா என்ன இது?
// உண்மையாப் பார்க்கப் போனா ஏண்டா பதிவு போட்டொம்னு இருக்குP:)))))))
ஒண்ணூம் இல்லை உஷாமா.
யாரோஏதோ பின்னூட்டம் போட்டது ஏத்துக்க முடியாம புலம்பல்ஸ்.
அவ்வளவுதான்:)
அந்தப்
பின்னூட்டம் டெலிட் பண்ணிட்டேன். மனசிலேருந்து எடுக்காமாப் பேசறேன்.
இது தப்பு.
சரியா:))))
Post a Comment