Blog Archive

Sunday, July 29, 2007

இனிக்கும் முதுமை

முதுமை எப்போதுமெ இனிமை. குழந்தைகளுக்கு.

சீக்கிரமே வயசானால் படிக்க வெண்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.


தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும். அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும் . மனைவிகள் சிந்தனை,மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?) நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்


கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம், மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை , புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.


குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன். இது :-)) நமக்குத் தெரியாத டாபிக்."-)) இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை. பெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா?

நாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், "அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்." வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.



இல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி, பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.' "ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது, இது மட்டும் இல்லை , நம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும், நிறைய சோதனைகள் வரும். அப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம். கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்") . நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல், உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது. பிராண்டட்..!....------- மாமியார். அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை. சரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா? என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே


இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,
சார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார். இந்த மாதிரிக்கேள்விகள் ,

வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.


ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.


கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு, சபாவில் மெம்பராகித், தவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு , சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது, என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். !!!!!!இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/ '

அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.

'இது சொந்தக் கதை இல்லை.' இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா? அப்படியே சொல்கிறேன். இது கற்பனை. அப்படி இப்படி போயி,, எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

22 comments:

துளசி கோபால் said...

ரிப்பீட்டா? என்ன ஆச்சு?

அபி அப்பா said...

வல்லிம்மா! நீங்க சொல்லிய விதம் நல்லா இருக்கு, ஆனா பாரா பாராவா பிரிச்சி எழுதினா இன்னும் சுவாரஸ்யமா இருக்குமே படிக்க!

வல்லிசிம்ஹன் said...

ரிபீட்டேதான். துளசி, எனக்கே ஞாபகப்படுத்திக் கொள்ள இப்படிப் போட்டேன்.
கண்டுக்காதீங்க.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் அபி அப்பா, பின்னூட்டத்தில பாரா பிரிக்க முடிஞ்ச அளவு, பதிவில வரலை.

முன்னால கீதாவுக்கும் இந்தத் தொந்தரவு இருந்தது. மீண்டும் எடிட் செய்து பார்க்கிறேன்.

நன்றிப்பா.
மீட்டிங்ல என்னேல்லாம் பலகாரம்னு தெரியலையே.;)))

நானானி said...

என்ன வல்லிம்மா...? சொந்தக்கதை
சோகக்கதையா அல்லது அசோகக்கதையா..? அசோகருடைய
கதையில்லை...சந்தோஷக்கதையா?
என்று கேட்டேன். அதென்ன? கொஞ்சமே கொஞ்சம்...10%? 60%
இல்லையா?
பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாட்டியும் ஆயாச்சு. மாப்பிள்ளை என்னை 'அம்மா!' என்றே அழைக்கிறார். இனி பையனுக்கு
பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது நீங்கள் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
டிபிக்கல் மாமியாராக இல்லாமல்..ஒரு
fரண்ட்லி மாமியாராகத் திகழவேண்டும்
என்று மனதில் ஒரு வௌவ் (குறைக்கெல்லாம் மாட்டேன்)வைத்திருக்கிறேன்.
உங்கள் எழுத்து fலௌ சரளமாயிருக்கிறது.

கோபிநாத் said...

\\ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான். \\

இந்த பதிவில் நாங்கள் (சின்னப் பசங்க) பின்னூட்டம் போடலாமா!!!!! ;-))

Geetha Sambasivam said...

hahaha, valli, nalla velaiyaa "DYE" podum alavun enakku innum mosam aakalai. ippoo than inge vanthu konjsam narai theriyuthu. grrrrrrr.,. nalla irukku ninga ezuthi irukkirathu, ninaichu ninaichu sirikka vaikkum.

ambi said...

//உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது//

ha haaaaaa, அதுவும் அந்த பொட்டு எல்லாம் வெச்சுன்டு நீங்க காட்சி குடுத்தா "நமோ மாதா!" தான்.

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. இப்ப எல்லாம் பையனின் அம்மாக்கள் பாடு தான் திண்டாட்டம்.

என் கல்யாணத்துல நிறைய தடவை "நீ தான் மா என் அம்மா! முன்னால வந்து நில்லு"னு என் அம்மாவை இழுக்க வேண்டியதா போச்சு. :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் டெல்ஃபின்,

இளமையை நான் விடறதா இல்ல.

என்றும் பதினாறுதான்.
அதுக்குத்தானே கடவுள் பேரன் பேத்திகளைக் கொடுத்திருக்கிறார்.
நான் எழுதினதெல்லாம் எல்லாக் கல்யாணங்கள் போதும் காதுகளீல் விழுவதுதான்.))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் டெல்ஃபின்,

இளமையை நான் விடறதா இல்ல.

என்றும் பதினாறுதான்.
அதுக்குத்தானே கடவுள் பேரன் பேத்திகளைக் கொடுத்திருக்கிறார்.
நான் எழுதினதெல்லாம் எல்லாக் கல்யாணங்கள் போதும் காதுகளீல் விழுவதுதான்.))))

வல்லிசிம்ஹன் said...

நானானி,
அசோகக் கதைதான்.
நான் கூட ரொம்ப ஃப்ரண்ட்லி மாமியார்தாம்பா.
இதோ என் ரெண்டு மருமகள்களையும் கேட்டுப்பாருங்க.
நீங்க கண்டிப்பா ரொம்ப நல்ல மாமியாரா இருப்பீங்க. அதிலென்ன சந்தேகமே இல்லை.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், இன்னும் திருமணம் ஆகாதவங்க படித்தாப் பயந்துக்குவாங்கனுதான் 55 வயசுனு போட்டேன்.
நீங்க பயப்படாத வரை என்ன கவலை....

வல்லிசிம்ஹன் said...

கீதா நான் அரைவாசி நரை.
ஸோ டை இஸ் அ நெஸசரி ஈவில்.

உங்களுக்கு இன்னும் வயசாகலை. எனக்கு அறுபது ஆச்சு.
அதனால நான் போட்டுக்கலாம்.:))))

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
உண்மையா நல்ல வேலை செய்தீங்க.
இல்லாட்ட அம்மாக்களுக்கு அன்னிக்கு புது மாட்டுப்பெண் மாதிரி பயம் வரும்.
டான்க்ஸ் ஃப்ரம் அநேக அம்மாக்கள் உங்களைத்தேடி வருது.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
உண்மையா நல்ல வேலை செய்தீங்க.
இல்லாட்ட அம்மாக்களுக்கு அன்னிக்கு புது மாட்டுப்பெண் மாதிரி பயம் வரும்.
டான்க்ஸ் ஃப்ரம் அநேக அம்மாக்கள் உங்களைத்தேடி வருது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லிசிம்ஹன்!
நல்லா சொல்லியுள்ளீர்கள். இவை நம் பக்கம் வேறு மாதிரியாக இருக்கும். அதாவது கிராமப்பாங்கு..அதுவும் தனியழகே!

ambi said...

//உங்களுக்கு இன்னும் வயசாகலை. எனக்கு அறுபது ஆச்சு.
//

@valli madam, ha haaaa :)))

நல்லா காமடி பண்றீங்க கீதா பாட்டியை வெச்சு! :p

அவங்களுக்கு 1945லேயே 10 வயசுனு பதிவுல சொல்லி இருக்காங்க. :))

கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு என்னிக்கும் கரேக்ட்டா தான் வரும். :p

வல்லிசிம்ஹன் said...

வரணும் யோகன். கிராமப் பாங்கு கேட்பானேன். நகைச்சுவை இழையோடாமல் பேச்சே வராது என் பாட்டிகளூக்கு.

அதுவும் மருமகள்களை வம்புக்கு இழுப்பதில் வல்லவர்கள்.
துணைக்குப் பேத்திகளையும் அழைத்துக் கொள்வார்கள்.

இவர்கள் சொல்வன்மை எல்லாம் திருமணங்களில் வெகு பளிச்சிடும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, சரியாப் போச்சு.
நான் கீதாவைவிடப் பெரியவளாக இருப்பதில் உங்களுக்கு என்னப்பா வம்பு.:))))

அட, வயசாயிடுச்சினு சொல்லக் கூட விட மாட்டேங்கறாங்களே.:))))

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான். கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் ....

அப்பாடா... நானும் கீதாமேடமும் இதிலே வரலை

எனக்கென்ன கவலை
நான் ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
அதுவும் எனக்கு புதுமை

வல்லிசிம்ஹன் said...

அஹோ, வாரும் பிள்ளாய், நரையில்லாத ,55க்குக் கீழ் இருக்கும் தி.ரா.ச ஐயா.

நமக்கெல்லாம் முதுமையே கிடையாது.

when we turn 60 we start to grow again:)))

காட்டாறு said...

ரொம்ப நல்லா இருக்குதும்மா. தலைப்பு திரும்ப பார்க்க வைத்தது.