ஒரு சுதை உருவில் உட்கார்ந்து அருள் தரும் ஒரு நிஜமான அம்மா இவள். சமயபுரம் மாரியம்மனை தெற்கில் எல்லோருக்கும் வருடம் ஒரு தடவையாவது நினைவுக்கு வரும்.
வருடாந்திர விடுமுறையின் போது கண்டிப்பாகப் போய் வரும் கோவில்களில் இந்த அம்மாவும் இருப்பார்.
திருச்சி மன்னார்புரத்தில் நாங்கள் தங்கியிருந்த நான்கு வருடங்களும் முக்கால்வாசி ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமயபுரம் வந்துவிடுவோம்..
ஆடி மாதம் கேட்கவே வேண்டாம்.
எத்தனை கூட்டம் இருந்தாலும் அது நகர்ந்து அம்மாவைப் பபர்த்தபடி போய்க்கொண்டே இருக்கும்.
நம் முறை வந்ததும் பூசாரி அய்யா அம்மாவுக்குத் தீபம்காண்பிப்பார்.
இத்தனை மக்களைப் பார்த்துப் பார்த்துக் கருணை வழங்கிய கண்கள் இன்னும் அகன்று என்னைப் பார்ப்பதுபோல் இரூக்கும்.
அங்கு கமழும் சாம்பிராணிப் புகை,கற்பூரத்தின் வாசனை,அம்மாவின் மேல்பூச்சாக ஒளிவிடும் சிவந்தவண்ணம் ,ஆயிரம் தீபங்களுக்குச் சமமாக ஒளிரும் முக மண்டலம்....
இவ்வளவு சக்தியும் நம்மை ஆகர்ஷிக்கும்.
அந்த அனுபவம் இந்தக் கோவிலில் ஒன்றில்தான் நான் உணர்வேன். சன்னிதியை விட்டு வெளியே வந்து மாவிளக்குகள்,அலகு குத்தியவர்கள் இவர்களோடு பிரகாரத்தைத் திரும்பும்போது அம்மாவின் இன்னோரு பிம்பம் காத்திருக்கும்.
பகல் பன்னிரண்டு மணி அளவில் அந்தத் தீர்த்தத்தை மேலே தெளிப்பார்கள்.
அந்தத் தீர்த்தம் மேலே தெறித்ததும் தனி மகிழ்ச்சி. அம்மாவை மீண்டும் பார்க்க வருவோம் என்ற நம்பிக்கை துளிர்க்கும்.
வெளியே வந்து யானைக்குத் தலையைக் காண்பித்து,இன்னுமொரு சமயபுரம் படம் வாங்கிக்கொண்டதும், அடுத்தாற்போல சசப்பிடப்போகும் நுங்கை நினைத்தபடி பயணம் தொடரும்.
11 comments:
தமிழ்மணத்தில் பதிய முடியவில்லை. பின்னூட்டம் வந்தால்தான் தெரியும்.
நீங்க பதியலைன்னால் கூட நான் வந்து முடிஞ்சப்போ எட்டிப் பார்த்துடுவேன், இன்னிக்குப் போகிற இடமெல்லாம் அம்மன் தரிசனம்தான். இந்தியாவை மிஸ் பண்ணுவது ரொம்பவே கஷ்டமாத் தான் இருக்கு! :(
ஆமாம் கீதா. ஆடி வெள்ளிக்கிழமை அல்லோல கல்லோலப் படும்.
கபாலீஸ்வரர் கோவிலில் வரிசையாக மாவிளக்க்கு எல்லாம் ஏத்தி அழகா இருக்கும்.
அம்பாள் அப்படியே ஜொலிப்பார்.
ஆடி மாதத்தில் இனிய நினைவுகளால் இணைத்த இணைய பதிவுகள்.பார்வதிதேவி அக்னி தபஸ் இருந்த மாதம்."தாம் அக்னிவர்ணாம் தபஸாஜ்வலந்தீம்" என்று அவளைப் புகழ்கிறது நெருப்பைப் போல சிகப்பு வர்ணமுடையவள் அதிலும் தவத்தின் மகிமையால் இன்னும் ஜ்வலிக்கின்றவள்.நல்ல பதிவு வல்லியம்மா
சமயபுரம் போய் பல வருஷங்களாச்சு. இந்த அம்மனை நினைக்கும்போது என் மனசுலே
வர்றது அந்த பெரிய நட்சத்திர வடிவிலே அம்மன் காதுலே இருந்த கம்மல்தான்.
இப்பவும் அதெ டிசைன் தானா?
நாங்களே கோவிலுக்கு போன மாதிரி இருந்தது. ரொம்ப நன்றி ஹை. ஹிஹி, வன்டவங்களுக்கு மாவிளக்கு எல்லாம் கிடையாதா? எனக்கு ரொம்ப பிடிக்கும். என் தம்பியோடதையும் சேர்த்து சாப்ட்ருவேன். :)
வரணும் தி.ரா.ச. ஆடி வெள்ளிக்காகத் தான் பதிய நினைத்துப் போட்டேன். இங்கே பக்கத்தில கோவில் இல்லை. கூகிளில் கிடைத்த படத்தைப் போட்டேன்.
அம்மன் அருள் தபஸினால் நாமெலாரும் நலமாக இருக்கிறொம்.
துளசி, பதில் போடநேரமாகி விட்டது. எலோருக்கும் நல்ல சலதோஷம்.
நான் கடைசியாக சமயபுரம் போனது 2003இல்.
அப்போதும் இதே தோடுதான்.
என்று நினைக்கிறேன்.
வரணும் அம்பி, லேட்டப் பதில் போடறேன்.
மாவிளக்கு கூழ் எல்லாம் அங்க போனால் கிடைக்குமே.
மாங்காடு அமிர்தமாப் பால் கிடைக்கும்.
சின்ன வயசுல அம்மாவை முதன்முதலாப் பாத்து அப்படியே திகைச்சு நின்னது நல்லா நினைவுல இருக்கு வல்லியம்மா. நீங்க சொல்றது சரி தான்.
நான் இந்த இடுகையைப் படிக்க வந்தப்ப நீங்க தமிழ்மணத்துக்கு அனுப்ப முடியலைன்னு சொல்லியிருந்தீங்க. நான் முயன்று பார்த்தேன். முடிந்தது. அனுப்பிவிட்டேன். அது நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன. இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது. :-)
அதானா விஷயம் குமரன்.
சமயபுரத்தம்மாவுக்குக் குமரன் கையால் பதிய வேண்டும் என்று ஆவல்.
நன்றி குமரன்.
இங்கு ஏ டி எஸ் எல் போயி டைரக்ட் டயலிங் வந்து இருக்கு.
அதனால எல்லாம் படு ஸ்லோ.
அம்மாவை எத்தனைதடவை பார்த்தாலும் ஆனந்தமாகத் தான் இருக்கு.
Post a Comment