Blog Archive

Monday, July 09, 2007

197,ஃபங் ஷுவே பகுதி 2










சீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.
தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))
எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மமத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.
அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.
மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.
இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.
பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.
பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))





17 comments:

வல்லிசிம்ஹன் said...

இங்கு சொல்லாமல் விட்டது ஒரு நல்ல கருத்து. வாஸ்து என்ற ஒரு நல்ல கருவியைப் பிடிப்பவர்களுக்கு நிறைய புத்திசாலித்தனமும் பொறுமையும் வேண்டும் என்பதுதான்.

Geetha Sambasivam said...

மிச்சத்தையும் இன்னொரு பதிவாப் போட்டுடுங்களேன். நீங்க சொல்ற மாதிரி எங்க மாமியாருக்குத் தோணும். பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் ஜோசியம் கேட்கிறது, குறி கேட்கிறது, அம்மன் அருள் வந்தவங்கன்னு சொன்னால் அவங்க காலிலே விழுந்து நமஸ்காரம் செய்யறது, முழு எலுமிச்சம்பபழத்தை அப்படியே வாயிலே போட்டு அவங்க சாப்பிடச் சொல்லும்போது அதை ரொம்பக் கஷ்டப் பட்டு அவங்க சாப்பிடுவாங்க, பார்க்கவே பாவமா இருக்கும். என்னவோ, எனக்கு இறை நம்பிக்கை உண்டே தவிர, இந்த மாதிரியான ஜோசியம், பரிகாரம் எல்லாம் நம்பறது இல்லை. உண்மையான ஜோசியர்கள் இப்படி எல்லாம் செய்யறதில்லை. ஜோசியத்திலேயும் சிலர் சொல்லுவது அப்படியே நடக்கும். நல்ல ஜோசியர் என்றால் நம்ம முகத்தைப் பார்த்துட்டே அப்படியே சொல்லிடுவாங்க, நாம் ஒண்ணுமே சொல்ல வேணாம், அவங்களே சொல்லிடுவாங்க என்ன கஷ்டம்னு, சொல்லி இருக்காங்க, எனக்கு, அப்படியே நடந்தும் இருக்கு, நடக்கவும் நடக்குது. அது தனி!

Geetha Sambasivam said...

ஹிஹி, அந்தப் பின்னூட்டம் ரொம்பப் பெரிசாப் போச்சு, வழக்கம்போல். வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மைதான். அதைக் கடைப்பிடிப்பது என்பது நம்முடைய சராசரி வாழ்வில் ரொம்பக் கஷ்டம். உண்மையான வாஸ்து சாஸ்திரம் தெரிஞ்சவங்க இப்படிஎல்லாம் நடக்கவே மாட்டாங்க! கொஞ்சம் விலகியே இருப்பாங்க.

துளசி கோபால் said...

//கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.//


இது :-)))))))))))))))

நான் சாந்து & சந்தனம் மட்டும்:-)

ambi said...

//மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
//

ஹஹா! இன்னிக்கி முதல் போணி நீங்க தான்! உங்க பதிவுக்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை. :)))

தனி மெயிலில், உங்க காருண்யம் பொங்கும் அந்த படங்கள் இருந்தா(குறிப்பா அந்த பொட்டுடன்) அனுப்பி வைக்கவும். டெஸ்க்டாப்ல வெச்சு சூடம் காட்டலாமேனு தான்! :p

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா, உண்மைதான்.
எங்க ஜோசியர் கூட நிறையக் கோவிலுக்குத்தான் போகச் சொல்லுவார்.

எங்க மாமியாருக்கு சஹஸ்ரநாமம் மட்டும் தான் மணி,மந்திரம்,ஔஷதம் எல்லாம்.


என்னை, வேற எங்கேயாவது, நாகலாண்டிலிருந்து தத்து எடுத்துட்டாங்களோ என்னவோ:)))

வல்லிசிம்ஹன் said...

கீதா, சாமி வந்தவங்க ,குறி சொல்லறவங்க பக்கமெல்லாம் போக மாட்டேன்.
ஆனால் இந்த மால்குடி டேஸ் ரெஸ்டாரண்ட் வாசலில் எப்பவுமே ஒரு கிளி இருக்கும். அது ரொம்பப் பாசமா ஒரு பத்துரூபாய்க்கு எதிர்காலம் நல்லா இருக்குனு சொல்லும்.அதை மத்திரம் கேப்பேன்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி ,மகா வேஷம் அது. ஒரு ஆறு வருஷம் கழிச்சு கூட எனக்கே பயமா இருக்கு என் படத்தைப் பார்த்தால். இந்த அழகில அதே கோலத்தோடு வெளியூர் வேற போனேன். அருள் தாரும் மாதாவேனு பாடாம விட்டானே.....

வல்லிசிம்ஹன் said...

அம்பி கைவசம் அகிலமெல்லாம் விளங்கும் ஆம்மன் அருள் போட்டோ ஏதும் இல்லை.
அந்தப் போட்டொவைப் பார்த்து பக்கத்து வீட்டுக் கரையிண்ட மோள் ஒண்ணு அழுகையையே நிறுத்திவிட்டது.
அப்புறம் உங்களுக்கொ தங்கமணிக்கோ ஜுரம் வந்தால் நான் பொறுப்பல்ல.:))

துளசி கோபால் said...

இப்ப கைவசம் இல்லேன்னாலும், ஊருக்குப் போனதும் தனிமடலிலாவது
அந்த போட்டோ அனுப்புங்க.

ஐய்யோ......... திவ்யமா இருக்குமே:-)))))

வல்லிசிம்ஹன் said...

அடி சக்கைன்னானாம்.துளசி!!!

பிட்டிச்சிட்டீங்களே பாயிண்டை.

ஆமாம் திவ்யமான போட்டோ .

உங்க கையில ஒண்ணு இருக்குமே.
பயமா இல்ல ??????

இலவசக்கொத்தனார் said...

கருணை தெய்வமே வல்லியம்மாவே!! காண வேண்டும் உந்தன் பொட்டு படமே!!

அபி அப்பா said...

அந்த போட்டோ இங்கிட்டும் ஒன்னு பார்சல்! நட்ராஜ் அழுதா காட்டலாம்:-))

வல்லிசிம்ஹன் said...

அடக் கடவுளே,
இப்பத்தான் ஒண்ணுமே புரியலே வெண்பாவிலேனு புலம்பிட்டு வந்தா
இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்களே கொத்ஸ்....
ம்ம்.

அனுப்பி இருக்கேன் பார்த்துக்குங்க.:))
உங்க பையனும் எதுக்காவது அடம் பிடிச்சா சொல்லுங்க. ஒரு படம் 100 டாலர்தான்.அனுப்பறேன்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,
தேவையா எனக்கு.:)

நட்ராஜ் க்குப் பாட்டிமேல ரொம்பப் பிரியம்.

அப்பா சீக்கிரம் கிளம்பி ஊருக்குப் போயிட்டாருனு நேத்துதான் சொன்னான். நான் அப்பாவைக் கண்டுக்கறேன்னு சொல்லி இருக்கேன்.:))
உங்களுக்கும் தனி மடல் வருது...

ambi said...

//அனுப்பி இருக்கேன் பார்த்துக்குங்க.:))//

கொத்ஸுக்கு அனுப்புவீங்க, இந்த குழந்தைக்கு அனுப்ப மாட்டீங்களா? Grrrrrrr ;)

//ஒரு படம் 100 டாலர்தான்.அனுப்பறேன்.//
எது? இந்த வடபழனி கோவில் வாசலில் கிடைக்குமே முருகன் டாலர் அது தானே? :p

வல்லிசிம்ஹன் said...

அம்பி மாதிரி குழந்தை உலகத்திலேயே கிடையாது. அதே படம் அம்பிக்கும் அனுப்பிடறேன். 100 டாலர் எல்லாம் ஜுஜூபி.
இந்தப் படம் வந்தால் வீட்டுமரத்தில.....இல்லாட்ட பால்கனில பணாமாக் கொட்டும்.:)))