Blog Archive

Thursday, July 12, 2007

199,Bern புகைப்படப் பதிவு

இந்தப்பதிவில் நான் பதிய நினைத்த சமாசாரங்கள் எல்லாம் புகைப்படங்களில்
இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.









இந்தப் பூனை ஜிகெக்கு உறவாம்.












இந்தக் கரடிகள் இப்போது மரத்தில் உருப்பெற்று வருகின்றன.





இது பெர்ன் நகர ஆறு. இதன் கரைகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் வெளியேறுவதும் வழக்கம்.ஆனாலும் மிகுந்த பழமை வாய்ந்த இந்த
வீடுகளில் வசிப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கே இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.









பெரன் நகரம் ஒரு ஓவர் வியூ. கதவு சின்னதாக இருக்கும். உள்ளேபோனால் விரிவாக வீடு அமைந்து இருக்கும். கூரையில் இருக்கும் ஆட்டிக் அறைகள் வெகு அழகு.கூரையில் ஒரு பால்கனி அதில் இரண்டு நாற்காலிகள். சூரியக் குளியலும் அதில்தான். மாலை நேர மதுஅருந்தும் இடமும் அதுதான்.
அவர்கள் சமைக்கிறார்களா என்றே எனக்குச் சந்தேகமாயிருக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம்.
ஆனந்தமாக ஃப்ரீ யாக இருப்பதுபோலக் கலகலப்பு எப்போதும்.
அப்படியே இருக்கட்டும்.










13 comments:

Subbiah Veerappan said...

முதல் படம் அசத்தலாக உள்ளது
ஒழுங்கான கரைகளுடன் அமைந்த ஆறு
ஒரு பக்கம் வீடுகள்
மறு பக்கம் மரங்கள்
பார்த்தாலே பரவசமாக உள்ளதே!
வசிப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?

வல்லிசிம்ஹன் said...

நிறைய படங்கள் எடுத்தேன் வாத்தியார் சார். சிலவற்றைத்தான் போட முடிந்தது.
அவர்களுக்கு செல்லார் (cellar )என்று வீட்டுக்குக் கீழேயும் அறைகள் வைத்திருக்கிறார்கள்.

இந்த ஒழுங்கு முறைதான் மிகவும் அதிசயமாக இருக்கிறது எனக்கு. வசிப்பவர்களுக்குப் பழகிப் போயிருக்குமோ..

காட்டாறு said...

Bern நகர ஆறு படம் சுப்பர். மத்த படங்களிப் போலவே.

அப்படியே அந்த fountain-ல குழந்தைகள் விளையாடுவதை படம் எடுத்துப் போடுங்க. அழகுக்கு அழகு சேர்க்குமில்ல.

Geetha Sambasivam said...

அருமையான படங்கள், நதியும் சரி, கரையும் சரி, அழகு கொஞ்சுகிறது. நம்ம இந்தியாவின் காசி நகர்க் கங்கைக் கரையை நினைத்துக் கொண்டேன். ஒரே விஷயத்தில் மட்டும் ஒற்றுமை, அங்கேயும் மக்கள் கங்கைக்கு அருகேயே எந்த வெள்ளம் வந்தாலும் இருப்பதை விரும்புகிறார்கள். நம்ம பொண்ணு, நம்மைப் பார்க்க வீடு தேடி வராள் என்று வயதானவர்களும், தாய் நம்மைப் பார்க்க வந்திருக்கிறாள் என சிறுவயதுக் காரர்களும் சொல்லிக் கொள்ள்கிறார்கள். மற்றபடி இந்த சுத்தமும், கண்கவரும் அழகும்! அழகான கங்கையைப் பார்க்கவேண்டுமானால் ஹரித்வார் தாண்டிப் போகவேண்டி இருக்கு! :(((((((

Geetha Sambasivam said...

ஃபோட்டோகிராஃபியிலே பிச்சு உதறுவீங்க போல் இருக்கு? :))))

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் விளையாடுறது கண்கொள்ளாக்காட்சியாயிருந்தது.
ஒரே கீச் கீச்சு கத்தல்.இந்த ஃபௌண்டென் போயிட்டுப் போயிட்டு வருமா. குழந்தைகள் ஓடிஓடிப் பிடிப்பது அருமையா இருக்கும்பா காட்டாறு.வகைப்படுத்திட்டுப் போடறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா,அந்த ஒவர்வியூ படம் ஏற்கனவே இருந்தது.
மத்ததுதான் நான் எடுத்தது.

ப்ரொஃபெஷனலா இருக்காது. காமிராக்கண்ணால பார்த்துட்டு நேரே ரசிக்கலியோனு தோணறது.

துளசி கோபால் said...

வல்லி,

படங்கள் எல்லாம் அட்டகாசம். நானும் பெர்ன் நகரை ரொம்பவும் , முக்கியமா அந்த 'பெர் பிட்'
ரசிச்சேன். மகள் அங்கிருந்து கிளம்ப மாட்டேன்னுட்டாள். நம்ம சினிமாக்காரங்க எல்லாம் அந்த
மணிக்கூண்டு இருக்கும் கடைவீதியை மட்டும் பாட்டு சீன்லே எடுக்கறதைக் கவனிச்சீங்களா?

அந்த வாட்டர் ஃபவுண்டெய்ன் டைமர் வச்சு இருக்குல்லே. எதுலே இருந்து தண்ணீர் பீறிடுமுன்னு
தெரியாததால் பிள்ளைங்க அங்கங்கே ஓடி ஓடிப்போய் அங்கே நிக்கறது வேடிக்கைதான்.

200 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.:-)

துளசி கோபால் said...

சொந்தக்காரனைப் பார்த்து சந்தோஷம்.

நல்லா இருக்கானா?

இப்படிக்கு,
ஜிகே ( மியாவ்)

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ள ஜிகே என்கிற கோகி,

இவனை மாதிரி இங்கே இருக்கிற உன் உறவுக்காரங்கள் படு உல்லாசமாத் திரியறாங்க. அவங்களுக்குனு மாடி வராண்டாவில பெரிய வலையெல்லாம் போடு விளையாட்டு சமாசாரமெல்லாம் போட்டு வச்சு அழகா இருக்குது. உன்னையும் விசாரிச்சான். குளிரு அதிகமானு கேட்டான்.முதல் தடவையா வந்திருக்கே,ரொம்பத் தான்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

துளசி, உங்களுக்கும் பெர்ன் பிடிச்சுதா.

கடைவீதில அள்ளிக்கிட்டுப் போக ஏகத்துக்கு குமிச்சு வச்சு இருக்காங்க.
பேர் பிட் கரடிகள் ரொம்பத்தான் சோம்பேறிகள். இருந்த இடத்திலிருந்தே சாப்பாட்டை லாவகமாக் கவ்வறது பார்த்தீங்களா.
6 மணி நேரத்தில போறாது பார்க்கிறதுக்கு. இவங்க கணக்குப்படியே ஒரு மாசக்கணக்கில பார்க்க இடம் இருக்கு.கொடுத்துவச்சவங்க,.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நான் இன்னும் கங்கை அம்மாவைப் பார்க்கவில்லை.

போயிட்டு வந்தவங்க சொல்றதைக் கேட்டால் வருத்தமா இருக்கு. எப்பவாவது அந்த ஆரத்தி காட்டும் நேரத்தில் அங்கே போக ஆசை.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி. அடக்கமாகச் சொல்ல வேண்டீருக்கிறதனால,:))))

அடக்கியே வாசிக்கிறேன் உங்களெழுத்துக்கு முன்னால் இது ஒண்ணுமே இல்லை.
அதுதான் உண்மை.