Blog Archive

Saturday, June 16, 2007

உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட்

.





























இதோ இருக்கும் பா(ஹ்)னாஃப் என்னும் ரயில் நிலயத்தில்


இறங்கி வெளியே வரும்போது முதலில் காண்பது மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட


போக்குவரத்து.


அடுத்தாற்போல அதைக் கொஞ்சம் கூட மீற முயற்சிசெய்யாத மக்கள்ஸ்.ஒரு குட்டிப் பூனை நாய் ,குழந்தை எல்லோரும் ஒருவர் பாக்கியில்லாமல் பச்சை விளக்கு, நட,


என்று வந்தால்தான் நடக்கிறார்கள். சாலையைக் கடக்கிறார்கள்.


இந்த டிராம் போகும் வழியெல்லாம் வீடுகள்.


ஒரு வீட்டிலிருந்தும் எந்தக் குழந்தையோ இல்லை வேறு எதுவுமோ சாலைக்கு வந்து நான் பார்க்கவில்லை.


இப்படி எல்லாமே நிறைவுதானா குறையே இல்லையா என்று எனக்கும் தோன்றியது.


இதே ரயில்நிலையத்தின் வெளியே இசைக்குழுக்களும்,


தனியாக அக்கார்டியனோ,இல்லை புல்லாங்குழலோ இது போல பாடுபவர்கள்,


என்று உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் காட்சிகளோடு இன்னொன்றும் மனத்தை இறுத்தியது.


அது வயது,பெண்,ஆண் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் புகை


பிடிப்பது.


வெறும் புகை இல்லை.மரியுவானா போன்ற போதைப் பொருட்கள் பழக்கமும் அதிகரித்து வருவதாகத் தெரிந்தது.


அதே போல AIDSஉம் கொஞ்சமேபரவலாக இருப்பதாகவும் இந்தப் பக்கத்து ஆங்கிலப் பத்திரிகையில் படித்தேன்.


மற்றபடி குற்றங்கள் குறைவுதான்.


ஃப்ரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி இவை போன்று ஸ்விஸ் நிலமும் நதிகளும் கலக்குமிடங்களில் பொதுவாகப் பயணிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


தங்கள் உடமைகளைப் பாதுகாக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




இரவு 11 மணிவரை ட்ராம்கள் போய் வந்துகொண்டுதான் இருக்கின்றன.


ஒருவர் இருவருக்காகக்கூட ஓடிக்கொண்டு இருக்கின்றன.தனியாகப்போவது பற்றிப்


பயம் கவலை இல்லை.




குப்பை சேர்த்து கொட்டுவதிலும் மூன்றுவகையாகத் தான் வைக்கவேண்டும்.


சாதாரண குப்பை,ரிசைக்ளிங்,பாட்டில்கண்ணாடியெல்லாம் தனி.

ஒரு பைக்கு 2 fரான்க்ஸ் கார்ட் கட்டி குப்பை பெட்டியில் வைக்கவேண்டும்.

மின்சாரத்துக்கும் தண்ணீருக்கும் பணம் நிறைய செலவாகிறது.


சுற்றுச்சூழல் கெட்டுவிடக்கூடாது என்பதால் துவைப்பதிலிருந்து மற்ற எல்லாவேலைகளுக்கும் ஆகும் சோப் சாதனங்கள் எல்லாவற்றையும்

கவனமாகக் கையாளுகிறார்கள்.
மீண்டும் எழுதும்போது
யங்ஃப்ராவ் மலைக்குப்போய் வந்த கதையை எழுதுகிறேன்.














30 comments:

துளசி கோபால் said...

இப்பப் புரிஞ்சுபோச்சு. ஒரு நாட்டோட பேர் 'லாண்ட்'னு முடியணும். அப்பத்தான்
அது அழகான நாடா அமைஞ்சுரும் :-)))) ச்சும்மா...........

குப்பைக்கு காசு கட்டணுமா? இங்கே நமக்கு சிட்டிக் கவுன்சிலே 26 பை
தருது. ரெண்டு வாரத்துக்கு ஒண்ணு. முந்தி 52 பைகள் தந்துக்கிட்டு இருந்தாங்க.

அதுலெ போட்டுக் கட்டி வச்சாப்போதும் எடுத்துக்கிட்டு போயிருவாங்க.
வேற பையிலே வச்சாத் தொடமாட்டாங்க(-:

இப்ப , 'எங்களுக்கு ஓட்டுப்போட்டா 52 பை தரசொல்லி கவுன்ஸிலில் வாதாடுவோம்'
தெர்தல் வாக்குறுதி வந்துக்கிட்டு இருக்கு:-))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி,
இங்கேயும் குப்பை கொட்ட முடியாதுனு தெரியுது.:-))என்னைச் சொல்றேன்.
அங்கேயும் சிகாகோவில் ரெண்டு டாலர் Tag கட்டணும். ஒருவாரக்குப்பைகளை ஒரே பையில் அடைப்பவர்கள் இருக்கிறார்கள்,...சாமர்த்தியசாலிகள்.
இங்கேயும் குப்பை கொண்டுபோய் போட பெரிய பெரிய ரீசைக்ளிங் தொட்டிகள் கோஆபரேடிவ் ஸ்டோர்ஸ்முன்னால் வைத்து இருக்கிறார்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கும்தான் ஆசை குப்பை இல்லாத சென்னையும், தொப்பையில்லாத போலீசையும் பார்க்க.ஹும் நம்ப ஜன்மத்தில் நடக்காது

நானானி said...

வல்லி!
அழகான ஒரு நாட்டுக்குப் போய் குப்பைதான் கொட்டிக்கொண்டு
இருக்கிறீர்களா? தகவல்கள் ஒகே!
நல்லதும் கெட்டதும் எங்கும் கலந்துதான் இருக்கும்.என்ன..ஸ்விஸில் 40:60
போலும்!

ambi said...

ஹிஹி, நாங்களும் இந்தியாவுல குப்பை தான் கொட்டிட்டு இருக்கோம், ஆபிஸ்ல.

வீகெண்ட் பிஸியிலும், உங்களுக்கு கமண்ட் போடரேன் பாத்தேளா? :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,ஆசையிருக்கு.
யார் கண்டா நம்ம ஊருக்கு ஆனிக்ஸ் எல்லாம் வரும்னு நினைத்தோமா.
வந்தது.
அதே போல இதுவும் நடக்கும். நாமும் பார்ப்போம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி.
குத்தம் சொல்றதுனா 30..70 அப்படித்தான் சொல்ல முடியும்.
ஜனத்தொகை குறைவு.
சுதந்திரம் நிறைய.மக்கள் உயிருக்கும் மதிப்பு கூடுகிறது.
இங்கேயும் குப்பைகளிலிருந்து சுத்தம் செய்து பெரிய டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு காலம் தள்ளும் முன்று முதியவர்களைத்தினம் பார்க்கிறேன்.
யாரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.நல்ல உடை அணிந்து கொண்டுதான் அவர்களும் உலாவுகிறார்கள்.:(

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ அம்பி.
சரியில்லை.வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உரித்தானது.கொள்கை மீறல் கூடாது. உங்க ஆஃபீசுக்குப்போன் போட்டு சொல்லட்டுமா:)))))))))

ambi said...

//வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உரித்தானது.கொள்கை மீறல் கூடாது. உங்க ஆஃபீசுக்குப்போன் போட்டு சொல்லட்டுமா//

ஆபிஸ் எல்லாம் இல்லை. வீட்டுலயே (broadband connection)இணையம் வந்து விட்டது. அதான்.

நீங்க போன் எல்லாம் போட வேண்டாம், ஏற்கனவே லட்சார்சணை பலமா தான் நடக்கறது. போற போக்க பாத்தா என் கடையை இழுத்து மூடினாலும் மூடிடுவேன் போலிருக்கு. :)

கீதா பாட்டிக்கு இத படிச்சவுடனே தேன் குடிச்ச மாதிரி இருக்கும். :p

வல்லிசிம்ஹன் said...

அதானே.
வீட்டிலேயே இணையம் இருப்பது ரொம்ப ஆபத்து.

மனைவிகளும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
ஒருத்தர் பதியவோ பின்னூட்டமிடவோ செய்து கொண்டிருந்தால் மற்றவர் என்ன செய்வது. "வால் மட்டும் நுழையவில்லை" ரேஞ்சிலதான் அவங்ககிட்டயிருந்து பதில் வரும்.
அதனாலே பார்த்து செய்யவும்.

ambi said...

//மனைவிகளும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
//

மனைவியும் பதிவரா இருந்தாலும் ஆபத்து தான். நம்ம வீட்டு வண்டவாளம் எல்லாம் "அம்பியின் அட்டகாசங்கள்"னு பதிவா வந்து விடும். :p

நாகை சிவா said...

நடைப்பாதையில் நடப்பது, குப்பையை குப்பை தொட்டியில் போடுவது போன்ற தனிமனித ஒழுக்கம் நம் நாட்டிலும் நிறைய வளர வேண்டும்... வளரும்...

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் வரும் சிவா. எல்லாத்துக்கும் கவனம் வைத்து செய்யும் நிர்மல் ..எக்ஸ்னோரா போன்றவர்கள் இருப்பதும் நம்மூரில் தானே.
நடைபாதையிலேயே வண்டி விடுகிறார்கள்.
அப்படியிருக்கும்போது மனிதர்கள் ரோடுக்கு வரவேண்டி வருது.
ஒரெ சாலையில் இரண்டு ஆஸ்பத்திரிகள் ஒரு டீக்கடை இருந்தால் போதும்.அதே வழியில் பஸ்ஸும் போகுமானால நாமெல்லாரும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அப்படியும்தான் ஒரு பதிவு வரட்டுமே அம்பி ,எங்களுக்கும் தெரிந்துதான் கலாட்டாக்கள்
நடக்கட்டுமே:-P

ஸ்ருசல் said...

என்னங்க சார் / மேடம், (பெயர் தெரியவில்லை)...

நீங்களும் நம்ம ஊர் தான் போலிருக்கு.. என்னுடைய பழைய பதிவில் ஏதைச்சையாக பார்த்து கொண்டிருந்த போது உங்களின் பின்னூட்டம் கண்ணில் பட்டது.

எங்கள் ஊரை வைத்தே பதிவெழுதுகிறீர்கள். மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ருசல்.

ஊருக்கு ஊர் வித்தியாசம் நிறைய இருக்கும்போது அதுவே எழுதத் தோன்றுகிறது.என் ஊர் சென்னைதான்.
இது பார்த்த ஊர்.:))

Geetha Sambasivam said...

@அம்பி,மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமையைப் பீத்திக்கிறாரா அம்பி? :P

@வல்லி, நம்ம ஊரிலேயும் இம்மாதிரிக் குப்பை கொட்ட இப்போ ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால் இன்னும் பரவலாய் வரலை. நாம் கொட்டற குப்பையைப் பத்தித் தான் தெரியுமே! :P

ambi said...

//மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமையைப் பீத்திக்கிறாரா அம்பி?//

@geetha paati, ஹலோ பாட்டி, நான் வாங்கி இருக்கறது ஏர்டெல் இணையம், எங்க அம்மா(மாமியார்னு எல்லாம் சொல்லலை பாருங்கோ) வேலை பாக்கறது BSNL.

சென்னைலிருந்து 50 கீமி தள்ளி இருக்கற அம்பத்தூரூக்கே இணையம் கிடைக்கும் போது குளுகுளு பெங்களுர்ல இருக்கற இந்த குழந்தைக்கு கிடைக்காதா? :p

கைலாயம் போயும் காப்பி கேட்டவாளுக்கு யூஸ் போயும் இணையம் ஒழுங்கா வேலை செய்யாது!னு கருட புராணத்துல சும்மாவா சொல்லி இருக்கா? :)

வல்லிசிம்ஹன் said...

கீதா,நாம¨ கொட்டற குப்பையால தான் தேசமே செழிப்பா இருக்கு.

அதனால கவலை வேண்டாம்.
:)))
அம்பி கீதா பின்னூட்டப் பதிவுகள்னு ஒரு பதிவு போடப்போறேன்.

நாகை சிவா said...

//எக்ஸ்னோரா போன்றவர்கள் இருப்பதும் நம்மூரில் தானே.//

நானும் அதில் ஒரு அங்கம்....

:-))))))

வல்லிசிம்ஹன் said...

சிவா, இது தான் நல்ல செய்தி.
ரொம்ப நன்றி.

Iyappan Krishnan said...

பெங்களூர் எப்ப வர்ரீங்க ?

ambi said...

//அம்பி கீதா பின்னூட்டப் பதிவுகள்னு ஒரு பதிவு போடப்போறேன்//

@valli madam, small correction:

குழந்தை அம்பி - கீதா பாட்டி பின்னூட்டப் பதிவுகள்... :)

வல்லிசிம்ஹன் said...

ஜீவ்ஸ் இருப்பது பங்களூரா.
சொன்னால்
நம்பமாட்டீர்கள்,
பையனுடைய புத்தக அலமாரிகளை சுத்தம் செய்தபோது வோட் ஹவுஸ்

புத்தகங்கள் கிடைத்தன.
அட்டையில் ஜீவ்ஸ்.
உடனே இவர் எழுதறதைப் படிச்சு ரொம்ப நாளாச்சேனு நினைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

குழந்தை அம்பிக்குக் குழந்தை வரப்போற நாள் வந்தாச்சு,இன்னும் குழந்தையானு கீதா கேக்கறாங்க.:-))

ambi said...

@valli madam, இது கீதா பாட்டி கேட்ட மாதிரி இல்லையே? :p

பேக்ரவுண்டுல வேற நாராயண! நாராயண! சவுண்டு வேற கேக்குது! :)

வல்லிசிம்ஹன் said...

சொப்பனத்துல வந்தாங்கப்பா. வந்தபோது சொன்னாங்க. நான் 300ஆவது பதிவு போடப்போறேன்.
அப்படீனு சொல்லிட்டு,எல்லாரும் அங்கே வரச்சொல்லீட்டுப் போனாங்க.:-))

Geetha Sambasivam said...

@ஆப்பு, கணக்கிலே இவ்வளவு வீக்கா? சென்னையில் இருந்து அம்பத்தூர் 14 கி.மீ. தான். இது கூடத் தெரியலையே? என்னத்தைக் குப்பை கொட்டறீங்களோ? பஞ்சாப் குதிரையே பார்த்துட்டு இருந்தா இப்படித் தான்! :P

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

.வல்லிசிம்ஹன்!
சட்டத்தில் இறுக்கத்தால் அமைதியாக இருப்பது உண்மை; ஆனால் உலகிலே அழகென்பது அதன் துடைத்துவிட்டதுபோல் இருக்கும் சுத்தத்தை வைத்துச் சொல்லுகிறீர்களா?
எனக்கோ நான் பிறந்த கிராமத்து ஒழுங்கைகளில் இறைந்து கிடக்கும் பலவர்ண முள்முருங்கை,பூவரசம்; வேப்பம் சருகுகள் தான் கொட்டிக்கிடக்கும்;இயற்கை அழகெனப்படுகிறது.
இது அழகென்பதிலும் பணம் கொடுத்த பகட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

உலக அழகுகளில் ஒன்றான இடமென்று சொல்லி இருக்கலாமோ யோகன்.
எனக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லை.
அதனாலேயே சத்தம் இல்லாத ஒழுங்கு அமைதியானதாகத் தோன்றுகிறது.
மற்றபடி சொந்த ஊர்தான் நிரந்தர அழகு.சுதந்திரம்தான் நிரந்திர அமைதி.