தென்றல்னு யாராவது நினைத்தால் அவர்களுக்கு இன்னும் அனுபவம் போதாது என்றுதான் சொல்லவேண்டும்.
கிழித்த கோட்டைத் தாண்டும் பெண்களே அதிகம்.
நீ எல்லாம் இருந்த மாதிரி நான் இருக்க மாட்டேன்.
தாழ்ந்த இடத்தில தான் தண்ணீர் தங்கும்,
பொறுத்தார் பூமி ஆள்வார்...இந்த வசனம் எல்லாம் நீர்த்துப்போயாச்சு.
தாழ்ந்த இடத்தில் தண்ணீர்தங்கினா கொசுதான் வரும்.
எனக்குப் பூமியை ஆளவேணாம், இதோ இங்க இருக்கிற காலேஜுக்கு
விருப்பப்படி போயிட்டு வர நீ சரினு சொன்னால் போதும்...
இது ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் நடந்த சம்பாஷணை.
பாட்டி மாலைஆறு மணிக்கு அப்புறம் வீட்டுக்கு வெளியில் இருக்கக்கூடாது.
என்கிற பரம்பரை.
பேத்திக்கோ அதுக்குமேலதான் அரட்டையே ஆரம்பமாகும்.இது 20 வருடங்கள் முன்னால் சரியாக இருந்தது. இப்போது பாட்டியோ தாத்தாவோ
வீட்டில் இருந்து ,குழந்தைகளோடு உரையாடுகிறார்களா தெரியாது.
சொன்னாலும் குழந்தைகளுக்கு நேரம் இருக்குமா ...சந்தேகம்தான்.
பெண்கள் வளர்ந்து திருமணமாகிப் போகும் போது அவசியமான
புத்திமதிகள் சொல்வது முக்கியம்.
கிளம்பும்போதே அங்கே இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு. யாரையும் நம்பாதே. கணவனின் பெற்றோர்கள் ஏதாவது ஏறுக்குமாறாகப் பேசினால்
ஒரு போன் போடு.நாங்க வந்து அதைப் பார்த்துக்கிறோம்....
இந்த மாதிரி பயமுறுத்தி அனுப்ப வேண்டாமே.
நம்ம டி.வி சீரியல் மாமியார்கள்தான் கத்தி கபடா இல்லாமல் பேச்சினாலேயே
அழிப்பவர்களாக வருகிறார்கள்.
இதைப் பார்த்து மனம் கெடும் பெண்களும் ஏராளம்.
நல்ல குடும்பங்களைப் பற்றி,நல்லபடியாக இருக்கும் மாமியார் மாருமகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை.
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு விவாகரத்தும்
அது நடந்த விதமும்,என் காதில் விழுந்தது.
அந்தப் பெண்ணிற்கு இப்போதுதான் 25 வயது ஆகிறது.
பெரிய குடும்பத்தில் வந்த பெண்.
உறவுகளின் அருமை நெருக்கம் எல்லாம் தெரியும்.
நண்பர் வட்டாரத்திலேயே தெரிந்த இடமாகப் பார்த்து இரண்டு வருடங்கள் முன் திருமணம் நடந்தது. மும்பையில் குடித்தனம் வைத்துவிட்டு வந்த அன்றிலிருந்து இங்கே அவள் அம்மாவுக்கு இனம் தெரியாத கவலை.
இந்த அம்மாவும் மெத்தப் படித்தவள்,தானே ஒரு தொழிலதிபர்.
பெண்கள் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சங்க அமைப்பு
ஒன்றையும் நடத்திவந்தார்.
வாழ்வில் வெற்றி பெறபெண்களுக்குச் சுய சம்பாத்தியம் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்ததால் முழு நம்பிக்கையுடன்
பார்ப்பவர்கள் அனைவரையும் ஊக்குவிப்பார்.
எனக்குத்தான் இந்த அறிவுரை பொருந்தவில்லை. கேட்டுக் கொள்வேன்.
ஏதோ தடங்கல் வரும்.முனையாமல் இருந்துவிடுவேன்.
அப்படிப்பட்ட அம்மாவுக்குத் தன் பெண்ணீண் திருமணவாழ்க்கை சரியாக இல்லை என்று தோன்றிவிட்டது.
தினம் மும்பைக்குப் போன் போகும்.
சாப்பிட்டியா,தூங்கினியா தகவல்களுடன் வேலை கிடைச்சுதா
இதுவும் கேள்வி.
அந்தப் பெண் ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையின் சந்தோஷத்தை,வெளியூர் போய் வந்ததை எல்லாம் சொல்லி மகிழும்போதெல்லாம் இந்த அம்மா கேட்டுக்கொள்ளவில்லை.
இரண்டுமாதங்கள் போனதும் சென்னைக்கு ஏதோ வேலையாகப்
பெண்ணும் மாப்பிள்ளையும் வர அம்மாவின்
மனதுக்குப் பெண்ணின் வாழ்க்கை ஒட்டு மொத்தம் நாசமாகிவிட்டது போல வருந்தினாள்.
இப்படி நடக்குமா என்று கேட்காதீர்கள் நடந்தது.
மாப்பிள்ளையிடம் தன் பெண்ணுக்குத் தனி நிறுவனம்
ஆரம்பித்துக் கொடுக்கப் போவதாகச் சொல்லவும் அவர் மறுத்திருக்கிறார்.
அவர்கள் வீட்டில் அது வழக்கம் இல்லை. குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறொம் என்று சொல்லிப் பெண்ணையும் அழைத்துப் போய்விட்டார்.
அம்மா சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு
அந்தப் பெண்ணும் கணவரைத் தொந்தரவு செய்ய,
அவர் மறுக்க நிலைமை தீவிரமாகிப் பெண் கோபித்துக் கொண்டு பிறந்தவீடு வந்துவிட்டது.
அம்மாவின் முழு சப்போர்ட் கிடைக்கவும், தன் படிப்பைத் திரும்ப ஆரம்பித்துக் கொண்டாள்.
நடுவில் அவர் எழுதிய இமெயிலுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும்
பதில் சொல்லவில்லை.
தானாக அவர் மனம் மாறித் தங்கள் வழிக்கு வந்துவிடுவார்
என்ற அவர்கள் நம்பிக்கை பொய்த்தது.
விவாகரத்து செய்யப் போவதாக அறிவிப்புக் கொடுத்தார்.
அப்போது இவர்கள் ஆள் மேல் ஆள் அனுப்பி,
சரி செய்யப் பார்த்தாலும் பலன் இல்லை.
பெண்ணின் அப்பா செய்த முயற்சிகள் வீணாகிவிட்டன.
இதற்கு மேல் அந்த அம்மா பெண் விடுதலையாகி விட்டதாக மகிழ்கிறார்.
சமூகத்தில் தன் பெயர் கெடக்கூடாது என்ற ஒரே காரணம்தான்
இப்படி அவரைப் பேச வைக்கிறது என்று நினைக்கிறேன்.
இவர்களை அமெரிக்காவில் பார்த்து எனக்கு ஒரே அதிர்ச்சி.
21 வயதில் திருமணம் 23 வயதில் அது இல்லாமல் போவதற்கு யாரை நோவது.
இன்னும் நல்ல பிள்ளையாகத் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லதுதான்.
33 comments:
நல்லதொரு இல்வாழ்வு இனிதே அமைய என்னுடைய நல்வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். என்றாலும் பெற்ற பெண்ணே ஆனாலும் நாம் அவர்களுக்குப் புத்திமதி சொல்லாமலோ அல்லது அவர்கள் சண்டையில் நாம் குறுக்கிடாமல் இருப்பதோதான் நல்லது என்பது என் கருத்து. கல்யாணம் நம் விருப்பப்படி செய்து கொண்டார்களே, அதுவே பெரிசு என்னைப் பொறுத்தவரையில்! அதுக்கு அப்புறமும் நாம் எப்படி மூக்கை நுழைப்பது! ஏற்கெனவே மூக்கு பெரிசா இருக்கோன்னு ஒரு சந்தேகம் உண்டு எனக்கு! :P
வல்லி,
//பாட்டி மாலைஆறு மணிக்கு முன்னால் வீட்டுக்கு
வெளியில் இருக்கக்கூடாது.//
இந்த 'முன்னால்' பின்னாலாக இருக்கணுமேப்பா.
ஹூம்......... என்னத்தைச் சொல்றது? இப்படித் தன் பெண்ணின்
வாழ்வுக்கு வேட்டு வச்சுட்டாங்களே அந்த அம்மா(-:
ஹூம். என்னத்த சொல்ல, நான் போட்ட விவாகரத்துக்கான தமாஷ் காரணங்கள் பதிவெல்லாம் இதுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை. அம்புட்டுதான். :(
ஆமாம் கீதா.
இவங்க குறுக்கிடாமலிருந்திருக்கலாம்.
தானே விழுந்து எழுந்து கற்றுக்கொடுக்கலாம்.
அல்லது செய்வதையாவது நல்லதாகச் செய்திருக்கலாம்.முதல்ல அந்த அம்மா மாறணும்.பெண் தானே சரியாகிவிடும்.நீங்க சொல்ற மாதிரி இனிமேயாவது நன்றாக இருக்கட்டும்.
கீதா, குழந்தைகள் விஷயத்தில் மூக்கை நுழைப்பது சில சமயம் செய்யலாம். எப்போது என்றுதான் தெரியவில்லை!!.
அவர்கள் நினப்பதெல்லாம் வேறு வேறு விதங்களில்:-)))))))
நல்லவேளை துளசி சொன்னீர்கள். ரொம்ப நன்றிப்பா.
இந்த விஷயம் ரொம்ப நாளா உறுத்திக் கொண்டிருந்தது.
காலைவேளைகளில் இத்தனை
தவறுகள் கணினியில் செய்வதில்லை.கொஞ்ச நேரம் போய் இரவுவேளையில் எழுத உட்கார்ந்தால்,கவனமாக இருக்கவேண்டும்.
இந்தமாதிரி தப்பு செய்தோமேனு அந்த அம்மாவுக்குத் துளி கூட எண்ணமில்லை.:((
அந்தப் பொண்ணை குழந்தையிலிருந்து தெரியும்.
படிப்பில படு சுட்டி.கேட்பார் ..(அம்மா)பேச்சைக் கேட்டு இப்படி ஆச்சு.
ரெண்டும்கெட்டானா . அது இனிமேல் என்ன பண்ணுமோ.
இனிமேலாவது மாறினால் சரி.
என்னைக் கேட்டால் அவர்களாக இதைச் செய்து கொடு, அல்லது இதுக்கு என்ன செய்யறது என்று கேட்டால் ஒழிய நாம் தலை இடாமல் இருப்பது தற்கால இளையவர்கள் விரும்புவது என்று நினைக்கிறேன். கூடியவரை நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்.
super narration as usual.
thaaya pola pillai, noola pola selai!nu summaava solraa? :)
//ஏற்கெனவே மூக்கு பெரிசா இருக்கோன்னு ஒரு சந்தேகம் உண்டு எனக்கு//
@geetha paati, Y doubt..? adhaane unmai. venumna kannabiran Ravi kooda saatchi solvaar. :p
sorry for the englipees comment.
கீதா ,
முக்கால்வாசி பெற்றோர்கள் உங்களையும் எங்களையும் மாதிரித் தான் இருக்கிறார்கள்.
இது கொஞ்சம் சூப்பர் ப்ரொட்டெக்டிவ் அன்னை.
பெண்ணுக்கு நல்லது செய்வதாக நினைத்து
இப்படி செய்ததும் இல்லாமல் அதற்கு வருத்தம் கூட இல்லை.:((
அதென்னது கண்ணபிரானை வேற அழைக்கிறீர்கள் அம்பி.!
கொஞ்ச நாள் இந்தியால இல்லைன்னால் எத்தனை நடக்கிறது.:)))
ஆனால் இந்தப் பெண் பாவமாகத்தான் தோன்றுகிறது.
அம்மாவால் அதோட வாழ்க்கை கெடுகிறதே என்று எண்ணுகிறேன்.
வல்லி!
தன் பெண்ணுக்கு நல்லது செய்வதாக
நினைத்து அவள் வாழ்கையையே
பாழாக்கும் இதுபோன்ற அம்மா ஒருவர்
அப்பெண்ணிற்கு மறுமணம் செய்யும்
முயற்சியில் இருக்கிறார். முன்பு செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமலிருப்பாரா? இருக்கவேண்டும்!
இவையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களூக்கு நெத்தியடியா?
சாட்டையடியா?
@அம்பி, இப்படி எல்லாத்திலேயும் உங்க இல்லாத மூக்கை நுழைக்கவே வேணாமே! :P
அம்பி,கீதா உங்களுக்கு மூக்கே இல்லை என்கிறார்.:-))
நானானி,
அவங்களுக்குத்தான் செய்தது தப்புனு கூடத் தெரியலை.
இதைப் பார்த்தபோது எனக்குப் பழைய சினிமாக்கள் தான் ஞாபகம்
வருது.
என்ன இவங்க பட்டுப்புடவை வைர மாலை இல்லை. பிசினஸ் சூட்,லாப்டாப் வகையறா.
கீதாம்மா...
நல்ல காலம்..அவர்களுக்குக் குழந்தை இல்லை!
இல்லை என்றால் பாசத்துக்கு ஏங்கும் உள்ளத்துக்கு இன்னும் கொடுமை தான்!
//அவங்களுக்குத் தான் செய்தது தப்புனு கூடத் தெரியலை//
அது தெரிந்தால் தான் யோசிக்கவாச்சும் செய்வார்களே!
ஒரு தாய்க்கு, தாய்மை உணர்வை விட சமூக அந்தஸ்து முக்கியமாகிப் போனதால் வந்த வினை!
எதுவாகிலும், நொந்து போன உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!
//@geetha paati, Y doubt..? adhaane unmai. venumna kannabiran Ravi kooda saatchi solvaar//
மாப்பு....ஏன்பா வைக்கப் பாக்குற
ஆப்பு! :-))
கீதாம்மா, "ஏற்கெனவே மூக்கு பெரிசா இருக்கோன்னு" சொன்னது ஒரு சுயபரிசோதனை தான். எல்லாரும் இப்படி அப்பப்ப சுயபரிசோதனை செஞ்சிக்கிட்டாங்கனா பிரச்சனையே வராதே!
ஆனா கீதாம்மா வீட்டு கெட்டிச் சாம்பார் மணக்கும் போது மூக்கை எவ்வளவு பெரிசா நீட்டி நுழைத்தாலும் தப்பே இல்லை! உங்க சாம்பார் வடை இன்னும் மறக்க வில்லை கீதாம்மா :-)))))))
சாம்பார் வடைப்பிரியர் வடை நினைவைப் பிரியார்
கண்ணன்பாட்டுப் பிரியருக்கு உணவும் பிடித்தமா.ஆஹா புதுக்கோணமாக அல்லவா இருக்கு.
கீதா உடனே சாம்பார்வடை ,கெட்டிக்குழம்பு
செய்முறை
போடவும்.:-))))))))
நன்றி ரவி.
ரவி,
உண்மையாகவே சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அவர்களுக்குக் குழந்தை இல்லாததுதான்.
உங்க ஊரில பேரனோட விளையாட வர ரெண்டு குழந்தைகளுக்கு டிவோர்ஸ் ஆன
அம்மாஅப்பா.
மனசு ரொம்ப சங்கடப் படும் அதுகளைப் பார்க்கும்போது.
நீங்க சொல்கிறமாதிரி இனிமேயாவது எல்லாரும் நிம்மதியா இருக்கட்டும்.
தங்க ஊசின்னு கண்ணைக்குத்திண்டா மாதிரி இருக்கு.
வரணும் தி.ரா.ச,
தங்க ஊசியை வச்சுண்டு என்ன பண்றதுன்னு தெரியலையோ.
எப்படியோ இன்மேலையாவது சரியா இருக்கணும். இந்த செய்தி கேட்டதிலிருந்து இத எழுதிடணும்னு தோன்றியது.
கண்ணை மூடிக் கொண்டு அம்மா சொல்வதைச் சிறுவயதில் இருந்தே கேட்டுப் பழக்கப் பட்டதால் இப்படி ஆயிடுச்சோ என்னமோ? ஆளுமை இருக்க வேண்டும்தான். ஆனால் அவங்க அவங்க சுயவெளிப்பாடு வெளிவரமுடியாத ஆளுமை தவறு. அந்த அம்மா இனியாவது உணரட்டும், அல்லது பெண் புரிந்து கொள்ளட்டும். ஆனால் இதைப் பெருமையாக நினைக்கும் அம்மாக்களைப் பார்த்திருக்கிறேன், பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
@ஆப்பு, நீங்க பூரிக்கட்டை அடி வாங்கறதுதான் கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு இருக்கே! இதிலே என்னைச் சப்பை மூக்குன்னு வேறே சொல்லிட்டா சரியாப் போயிடுமா என்ன?விளெக்கெண்ணெய்க் கேசரி, ஆமணக்கு விதைகளை வறுத்துப் போட்டுக் கொடுத்ததுக்கே இந்தப் பேச்சா? இன்னும் கண்ணன் வந்த அன்னிக்குச் செய்த மாதிரி நல்ல நெய் விட்டுக் கேசரி கொடுத்தால் அவ்வளவுதான். என்னிக்கு வரப் போறீங்கன்னு சொல்லுங்க, எங்க வீட்டுக்கு. அரை கிலோ விளக்கெண்ணையாவது வேணும், கேசரிக்கு. கூடவே கத்திரிக்காயும். :P
//உங்க சாம்பார் வடை இன்னும் மறக்க வில்லை கீதாம்மா//
@ravi, ada daa! U also got deceived? that sambaar is from near by hotel, TRC sir only leaked out that secret. :p
//என்னிக்கு வரப் போறீங்கன்னு சொல்லுங்க, எங்க வீட்டுக்கு.//
@Geetha paati, when U have planned to come down chennai? Moi ellam readyaa irukku illa? :p
சுயமா அந்தப் பொண்ணு நினைக்க விடணும் இந்த அம்மா.
ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அதுக்குப் புரியும்.
நன்றாக இருக்கவேண்டும். ரொம்பப் புத்திசாலி.
அனுபவம் போதாது.
கீதா தீபாவளிக்கு வரும்போது புடவை எடுத்துவைத்துஇருக்கணுமாம்
அம்பி,
அப்போதான் மொய் கிடைக்கும்னு சொல்ல சொன்னாங்க.:-)
மொய்யா? அதுவும் அம்பிக்கா? நோ சான்ஸ்! :P
வல்லியம்மா... தோளுக்கு மிஞ்சினாத் தோழன்/தோழி... நல்ல தோழி நம் வாழ்வில் தலையிட மாட்டாள். நான் தடுமாறும் போது தோள் கொடுப்பாள்.... அப்படிதான் பெற்றோர் இருக்கவேண்டும் என்கிறேன்.
அந்த பெண், இன்றில்லையென்றால்... என்றாவது ஒரு நாள்... அந்த கணவன் நல்லவனாயிருந்திருந்தால்... இவள் கண்ணீர் சிந்துவாள் தன் தாயால் இழந்த வாழ்வை நினைத்து.
:(
வரணும் காட்டாறு.
நாங்க ஊரை விடுக் கிளம்பிவரும் போது எட்டு மாதங்கள் ஆகிவிட்டது.
அப்பவே அந்தப் பொண்ணுமுகம் வாடிப்போச்சு.
இப்ப மீண்டும் உங்க ஊரில பார்க்கும்போது ஒரு சிடுசிடுப்பு தெரிந்தது.I will not be long before she realises the truth.
வல்லி
நீங்கள் சொன்ன பெண்ணை போல நான் ஒருவரை சந்தித்திருக்கிறேன். மிக எளிமையாக பல முக்கிய செய்திகளை எழுதுகிறீர்கள். நன்றி
அன்பு டெல்ஃபின்,
சில அம்மாக்கள் சம்பந்தப்பட்டவரை அவர்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளயே கிடையாது.இந்த அம்மாவும் அந்த ரகம்தான்.
மாற்ற முடியாத குணங்களில் இதுவும்
ஒன்று.
வரணூம் பத்மா,
நமக்குத் தெரிந்து ஒன்று.
இன்னும் பசங்க வழியிலும் பெற்றோர்களின் குறுக்கீடு இருந்துகொண்டேதான் இருக்கிறது.
ஏனோ நிறைய மனிதர்கள் நல்லவிதமாக மாறுவதில்லை.நன்றி.
கீதா,அம்பி வீக் எண்ட் .வேலைகள் மும்முரம்.பதில் இல்லை.
Post a Comment