Blog Archive

Tuesday, May 22, 2007

சாக்கலேட்,சீஸ்..ஸ்விட்சர்லாண்ட்...3

























இந்தப்பதிவில் இடம் பெறும் படங்கள்
ரைன் நதியும் அதன் மேலிருக்கும் பாலமும்
வீட்டுக்கு எதிரில் உள்ள மலைப்பகுதி,பாசல்
சிட்டி என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள மேசை அலங்காரம்.
சாக்கலேட்டும் ஸ்விட்சர்லாண்டும் பிரிக்க முடியாதவை.
இத்தனை மாடுகள் தரும் பாலையும் என்ன பண்ணுவது.
அத்தனையும் சீஸ் ஆகவும்,சாக்கலேட் ஆகவும் மாறுகின்றன.
இதோ ஒரு யூ டுயூப் க்ளிப்.
இந்தப் பசுக்கள் மேயும் அழகே தனி.
கழுத்தில் பெரிய மணி.
டிசைன் டிசைனாக் கட்டி இருக்கும்.
அதன் கனம் நிறையவே இருக்கும்னு நினைக்கிறேன் .
குனிந்த தலை நிமிராமல் புல்லை மேய்ப்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு மகனிடம் விசாரித்தேன்.
அவன் சொன்னபடி,
இந்தப் பசுக்களுக்குக் குளிர்காலம் வரும் வரை எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடத்தான் இந்த வெயிட்டான ஏற்பாடு.
கழுத்துமணியின் பாரத்தினால் தலை நிமிரவே முடியாது.
சாயந்திரமானதும் கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.
மறுபடி காலையில் இப்படியே மேய்ந்து கொண்டே இருக்கும்.
பசுக்களின் புஷ்டியைப் பார்த்து எனக்கு அதிசயப்பட்டு மாளவில்லை.
அதுதான் இந்த ஊர்ப்பாலும் அப்படி ஒரு சுவையாக இருக்கு என்று தெரிந்தது.
பால்,தயிர் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ஸ்விஸ் சீஸும் பிரபலம் தானே.
பாலில் ஷெர்மானி எனப்படும் பாக்டீரியாவைச் சேர்த்து ஸ்பெஷல்
சீஸ் வித் ஐஸ்(EYES) தயாராகிறது.
எனக்கு இதைப் பார்த்ததும் டாம் அண்ட் ஜெர்ரிதான் ஞாபகம் வந்தது.
சீஸுக்குள்ளயே இந்த ஜெர்ரி குடும்பம் நடத்துமே...:) :-) :)) :-))
இந்த ஸ்மைலி உபயம் நம்ம இ. கொத்தனார்.
அதனால இந்த சாக்கலேட் ,சீஸ் பதிவு அவருக்குக் கொடுத்தடறேன்.
அப்புறம் இந்தச் சாக்கலேட் தனியாப் படங்கள் போடணும்.
அந்த வாசனையே நமக்கு ஆகாமப் போயிட்டதாலே
*[பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும்.உடம்புக்கு ஒத்துக்காது]
அடுத்தபதிவிலெ பார்க்கலாம்.



6 comments:

இலவசக்கொத்தனார் said...

சாக்லேட், சீஸ் அப்படின்னு குடுத்து நம்மளை கொழு கொழுன்னு ஆக்கிறதைப் பார்த்தா அடுத்த திருவிழாவில் நமக்கு மாலை போட்டு, பொட்டு வெச்சு பூசாரி கிட்ட கொண்டு போகப் போறீங்க போல தெரியுதே.

ஐயாம் தி அப்பீட்!!

வல்லிசிம்ஹன் said...

ஹாஹ்ஹா.

அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன்.

its too hilarious.
எப்படித்தான் இப்படி உங்களுக்குத் தோணுமோ.
நன்றி கொத்ஸ்.

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்., சாக்லேட், சீஸ் நமக்குத் தேவையான ஐடெம், உங்களுக்கு ஒத்துக்காதுன்னா இங்கே தள்ளுங்க எல்லாத்தையும்.

வல்லிசிம்ஹன் said...

ஓ.கட்டாயம் கீதாக்குனு எடுத்து வச்சிடறேன்.
யாருக்கும் கொடுக்காம நீங்களே சாப்பிடுங்கோ..,>>((*P}}}

G.Ragavan said...

ஐரோப்பாவுல மக்கள் சீஸ் இல்லைன்னு சொல்லீட்டா...துக்கம் தாங்காம உயிர விட்டுருவாங்கன்னு நெனைக்கிறேன். அவ்வளவு சீசு. நெதர்லாந்துல சீசூர்-னு ஒரு ஊரே சீஸ் தயாரிக்குதாம். அது வடநெதர்லாந்துல இருக்காம். அந்தூருக்கு நானே சீசூர்னு பேரு வெச்சிட்டேன். தெருத்தெருவா சீசப் போட்டு கூறுகட்டி விக்குறாங்களாம். உருண்டையா...வெள்ளையா, மஞ்சளா, அதுல அதையும் இதையும் கலந்தும்...அடேங்கப்பா!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,ஆமாம்.
நம்ம ஊரில அரிசிக்கும்,தண்ணிக்கும்
பாடு.
இந்த ஊரில தான் தண்ணீ [அந்த} ஆறாப் போகிறதே.

அதனாலெ சீஸுக்குத் தான்
அழுவாங்க ராகவன்.
அமெரிக்காலே இருக்கிற வறுமைக்கோட்டுக்கும் நம்ம மிடில் கிளாஸ் லெவல்தான்.

தளங்களே வேற வேற.