Blog Archive

Tuesday, April 24, 2007

162,அப்போதைக்கு இப்போதே...








வெகு நாட்களுக்கு முன்னால்,
ஆலமரம் என்று ஒரு கதை படித்த நினைவு.
அதை அப்போது பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணாவோ
அல்லது அனுத்தமாஎனும் புனைபெயரில் எழுதும் பெண்மணி யோ அதைக் கவிதையாக வடித்து இருந்தார்.
ஒரு தொண்ணித்திநான்கு வயதான பாட்டிம்மா.
தானும் தன் கணவரும் சேர்ந்து வாழ்ந்த,
ஆண்ட, புத்திரச் செல்வங்கள் பெற்ற
ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு வந்துவிட்ட
நேரம்.
பாட்டி மனதார எடுத்த வானப்ரஸ்த வாழ்க்கை.
பாட்டியை விட்டு விடத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு மனசில்லை.
அத்தனை அழகான குடும்பம்.
பாட்டி பெற்ற பிள்ளைக்கே எம்பதுக்குப்
பக்கம் வயதாகிறது.
அவருக்குப் பிள்ளைகள், மருமகள்கள்,
பேரன்கள்,பேத்திகள்.
இப்படி வயிறு பிழைக்கப் போனவர்களைத் தவிர பெரிய குடும்பம் அங்கே இயங்குகிறது.
பாட்டியின் வீட்டு முனையில் ஒரு ஈசன் கோவில்.
அதில் நடkகும் அத்தனை பூசை நேரங்களிலும் பாட்டி சுருங்கிய தன் சரீரத்தை எழுப்பிக் கைகளை
உயர்த்திக் கும்பிடுவாள்.
அவளுக்குத் தெருவில் போகிற வருகிற அத்தனை நபர்கள் குடும்ப விவகாரமும் தெரிந்து இருக்கும்.
தங்கள் நிலத்தில் களை எடுக்கும் நபர்,மருத்துவச்சி,
புரோகிதம் செய்பவர்
என்று அனைவரும் தோழர்கள்.
பாட்டியின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பேத்தி.
பாட்டியைக் குளிப்பதற்காக உள்ளே அழைத்து(தூக்கி)ச்
செல்லும் ஒரு முரட்டுப் பேரன்.
இன்னும் குஞ்சுகுளுவான்களாக
ஒரு நான்கு பரம்பரையைக் கவனித்துப் பெருமை கொள்ளும் பாட்டிம்மா,
அவ்வப்போது தட்டிக் கேட்பதும் செய்வாள்.
அவளுடைய நினைவுகள் வலம் வரும் நேரங்களில் பாட்டியை யாரும் அணுக முடியாது.
வேறு உலகத்தில் உலாவிக் கொண்டிருப்ப்பாள்.
ஒரு நாள் காலையில் பாட்டியின் சரித்திரமும் பூர்த்தியாகிறது.
இதற்கு நேர்மாறாக இன்னொரு கதை 'யாருக்கு வேணும் இந்தப் பூசணி' என்ற
சிறுகதை.
திரு.தி.ஜானகிராமன் எழுதியது.
இதில் வரும் அம்மா தான் பெற்ற செல்வங்களிடமே அவதிப் படுவாள்.
சுவீகாரம் கொடுத்த மகன் உதவி செய்வான்.
கடைசியில் தான் இன்னும் ஏதாவது அவமானம் சம்பாதிக்க வேண்டுமோ என்ற நிலையில் ஒரு மாட்டுவண்டிப் பயணத்தில் உடலைத் துறப்பாள்.
இந்த இரண்டு கதைகளும் என்னை வெகுவாக ஆக்கிரமிக்கும்.
வயதான பிறகு ஏற்படும்
மன உளைச்சல் தொந்தரவுகளுக்கு யார் காரணம்?
சரியாகத் திட்டம் போடத் தெரியாத பெற்றோர்களா.
இல்லை சமுதாய அமைப்பு மாறியதாலா..?
இரண்டுமேதான்.
சமூகம் புதிதாக மாறவில்லை.
பாசமாக இருக்கும் பிள்ளைகளும்,
கவனிப்பு கொடுக்காத பெற்றோர்களும் அப்போதும் இருந்தார்கள்.
அதே போல பாசத்தயும் பணத்தையும் கொட்டிவிட்டு
பின்னால் இரண்டிற்குமே ஏங்கும்
பெற்றொர்களும் இருக்கிறார்கள்.
வாங்கி வந்த வரம் என்று சொல்வதை
நான் நம்புகிறேன்.
'நெஸ்ட் எக்' என்பது போல முதுமைக்காகப் பிறர் கையை எதிர்பாராமல்
சேர்த்துவைத்துவிடுதல் நலம்.
எங்கள் வீட்டுப் பாட்டிகளில் ஒருவர் இருந்த நிலபுலன்களில் இருந்து எல்லா சொத்துக்களையும் அழகாகப் பிரித்து,
தனக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு
88 வயது வரை பந்தங்களோடு
சுகமாக இருந்து விட்டுப் போனார்.
இன்னொருவர் அவர் காவேரித் தண்ணீர்
பாயும் ஊரைச் சேந்தவர்.
இன்னும் இருவர் தாமிரபரணி
ஊர்க்காரர்கள்.
ஐந்தாறு பிள்ளைகள் நான்கு மகள்கள்
என்று பெரிய சம்சாரம் பெற்றும்
தனக்கு என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல்
மன வருத்தமும் அடைந்து பின்
தெளிந்து மறைந்தனர்.
வாத்தியார் ஐய்யாவைத் தான் கேட்க வேண்டும்.
முதுமை வரமா,
கடனா என்று.
யோசித்து வைத்துப் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்யலாம்.
உடல் நலனைப் பேணி தகுந்த விதத்தில்
ஆரோக்கியமாக இருக்கலாம்.
சரியான பாட்டையில்
நிதானமாகப் போய் இறைவனிடம் சேர வேண்டும்.
முற்பகல் செய்யும் நல்முயற்சி பிற்பகலில் காக்கும் என்றே நம்புகிறேன்.



24 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\முற்பகல் செய்யும் நல்முயற்சி பிற்பகலில் காக்கும் என்றே நம்புகிறேன்.//

உண்மையிலும் உண்மை...

இலவசக்கொத்தனார் said...

ஒரு நெஸ்ட் எக் வைத்துக் கொள்வது நீங்கள் சொல்வது போல் சரிதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முத்துலட்சுமி.
இந்தப் பதிவும் மனதில் எபோதும் ஓடும் 'சிறுமுயற்சி'களில் ஒன்று.

டில்லி வெயில் ஆரம்பித்துவிட்டதா?
குழந்தைகளுக்கு என் அன்பு.

ambi said...

ஜோதிடத்தில், பூர்வ புண்ணியஸ்தானம்!னு(5ம் இடம்) சொல்வார்கள். உங்க பாஷையில் வாங்கி வந்த வரம்! சரி தான்.

எதுவாக நினைகிறாயோ அதுவாகவே ஆகிறாய்!னு வழக்கு இருக்கு.

எல்லாம் பெற்றோர் வளர்ப்பில் தான் உள்ளது.

"அன்றலர்ந்த தாமரை" போல தந்தை சொல் மீறாமல் காட்டுக்கு சென்ற (சித்திர)ராமனும் உண்டு.

அப்பாவை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து தன் குலத்தையே அழித்த துரியோதனனும் உண்டு.

"எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே!

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் .....

(இந்த குழந்தை சொல்லி தெரியனுமா உங்களுக்கு?) :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.

எல்லோரும் எல்லாவிதத்திலும்
எதற்கும் தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை உங்களை மாதிரி,
எங்கள் குழந்தைகள் போல இந்த இளைய தலைமுறை
நன்றாகவே உறுதியாக இருப்பார்கள்.
கடவுள் எப்போதும் கருணையோடு இருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
பிரமாதம்.
வழ்த்துக்கள்.
இதைவிட பெரிய சர்டிஃபிகேட்
உங்க அம்மா அப்பாவுக்கு யாரும் கொடுக்க முடியாது.
உண்மைதான்.
கருணையும், கண்டிப்பும் சேர்த்து வளர்த்தால் பிள்ளைகள் செல்லும் வழியும் நம்மைப் பேணும் வழியும் சரியாகவே இருக்கும்.
பெற்றோர் ஒரு முன்மாதிரி இல்லையா.

தியாகம் ரொம்ப அவசியம்.
சிறிதே முன் ஜாக்கிரதையும் வேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியமா சரியாகச் சொன்னீர்கள்.நம்முடைய மனோபவமே நமக்கு எதிரிசில சமயங்களில் அதுவும் வயசானகாலத்தில்.
அம்பி இந்தப் பாட்டுகூட இருக்கு
தெரியுமா/
பிறக்கும்போது எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதானப்பா!
அது பெரியவனா வளரும்போது விஷயம் வேறு அப்பா
படிக்கவெச்சு கண்ணைக் கொஞ்சம் திற்ந்துவையப்பா!
நம்ப பரம்பரைக்கு ஒன்னு போரும் கவனம் வையப்பா

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச..

உண்மைதான். நம்மளைப் பார்த்துத்தான் அவர்கள் உலகம் வளருகிறது.
மாறாமல் தப்பு வழிபோகாமல் இருக்கத் தான் பிரார்த்தனை.
அந்த வழியில் நாமெல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் கடவுளை நம்புவதால்.

Geetha Sambasivam said...

post pottu kamentum vanthuducha? nan kavanikkave illai. ninga solra kathi ezuthinathu Anuththama illainu ninaikkiren. en kittee antha kathai ulla puththakam irukku, India poy parkkanum. he he he, samalikkirenu ambi solluvar. Inidra Parthasarathyyonu thonuthu. ethukkum, check pannikkanum illai? :D

துளசி கோபால் said...

இப்பச் சொன்னீங்களே அது.

கோடியில் ஒரு வார்த்தை.

'வாங்கி வந்த வரம்'

நமக்கு அப்புறம் எல்லாம் பிள்ளைகளுக்குத்தானே? அதனாலே நமக்கு(ம்)
ஒரு சேமிப்பு கட்டாயம் வேணும் வல்லி. நம்ம பிள்ளைக்குத்தானேன்னு முன்னாலேயே எல்லாத்தையும்
கொடுத்துட்டு 'அவதிப் பட்ட' சிலரைப் பார்த்துருக்கேன்(-:

வல்லிசிம்ஹன் said...

hi Delphine.
yes it is so important for evryone tosave.
everyone is hopefully aware of that and Insurance too.

there are so many agents and so many deals, I am sure we have to be extra careful.
especially when you are getting older.
thank you for yr visit.

வல்லிசிம்ஹன் said...

துளசி, வாங்கி வந்த வரம்
நல்ல வரமா அமைய
நம்மச் சீனு சார்தான் உதவி செய்யணும்.
அனுமான் ஜியும் இதை எல்லாம் மாத்திடுவாராமே.
அவதிப் பட்டப் பாட்டி கதைதான், யாருக்கு வேணும் பூசணி.
உண்மைல துளசி,

வாங்கிக் கிட்டப்புறந்தான் கீழேயே வரணும்.:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா ,
வரணும்.
இந்தக் கதை, கண்டிப்பா
இந்திரா பார்த்தசரதியா இருக்காதுனு நினைக்கிறேன்.
கிருஷ்ணா அம்மாவா இருக்க சந்தர்ப்பம் இருக்கு.
எனக்கு இந்தக் கதைபேரே ஆலமரமா,
ஆலமண்டபமா,
ஆலம்விழுதுகளா.
அப்படின்னே சந்தேகம்தான்.

'வேப்பமரத்துப் பங்களா' வேற
இர்ருக்கா!
ஒரே கன்ஃபூஷன்.

ambi said...

//பிரமாதம்.
வழ்த்துக்கள்.
இதைவிட பெரிய சர்டிஃபிகேட்
உங்க அம்மா அப்பாவுக்கு யாரும் கொடுக்க முடியாது.
//
@valli madam, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கியாச்சு! :)

//நம்ப பரம்பரைக்கு ஒன்னு போரும் கவனம் வையப்பா
//
@TRC sir, point noted. :)

//ninga solra kathi ezuthinathu Anuththama illainu ninaikkiren. en kittee antha kathai ulla puththakam irukku,//

@geetha madam, நல்ல வேளை! இந்த கதையை எழுதினதே நான் தான்!னு சொல்லலை. :p

இந்திரா பார்த்தசாரதி கண்டிப்பா இல்லை.
என்ன பெட்? என் கல்யாணத்துக்கு யுஸ் டாலர் 5001 மொய் எழுதுங்களேன். :p

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
பெட் வைக்கிறதுனா 5000த்தோட விடுவானேன்.
ஒரு மில்லியன் இருக்கட்டுமே.:-)

ஆளைவிடுங்கப்பா.
நீங்க சொன்ன அமௌண்டில இந்த ஊருக்கு ரெண்டுதடவை வந்துட்டுப் போயிடலாம்.

ambi said...

//ஆளைவிடுங்கப்பா.
நீங்க சொன்ன அமௌண்டில இந்த ஊருக்கு ரெண்டுதடவை வந்துட்டுப் போயிடலாம்.
//

@valli madam, இந்த மொய்ய நான் கீதா மேடம் கிட்ட தான் பெட்டா கேட்டேன். நீங்க பயபடாதீங்க. :)

வல்லிசிம்ஹன் said...

அம்பி டான்க்ஸ்பா.
ஒரு பெரிய பாரம் இறங்கிடுத்து.:-0)

கீதாதானெ.
10001 கேளுங்கப்பா.

Geetha Sambasivam said...

@ Ambi, thundai virichu pottu utkarntha kuda kidaikathu. 10,001$ grrrr ambi, you will not get any gift from me. Instead you will give me the reversible sari in two colors for me. Note it?

வல்லிசிம்ஹன் said...

கீதா ,துண்டு வேணாம்பா.
பட்டுப் புடைவையே போட்டுடலாம்.

அம்பி வீட்டில கல்யாணம் ஆன கையோடு,
பங்களூறூ போயீடலாம்.
ஒரு ஆறு மாதம் மருமகளோட இருந்துட்டு வந்துடலாம். தானிக்கு தீனி.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒரு மனகணக்கு. அப்பப்போ ஆப்பு வைக்கிறவங்களுக்கே இரண்டு ரிவர்ஸிபில் சாரின்னா. நாளு தடவை சமோசா, கார், சப்பாடு, இருக்க எடம், கச்சேரி, கல்யாணம் எல்லாம் ஏற்பாடு பண்ணதுக்கு என்ன கேட்கலாம் வல்லியம்மா. கேட்டு சொல்லுங்கோ?

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச
நீங்க சொன்னதை அம்பி படிக்கட்டும்.
உங்க வீட்டில எல்லோருக்கும் பட்டு வேஷ்டி,
பட்டுப் புடவைகள்.
அப்புறம் திருமதிக்கு ஒரு வைர நெக்லஸ்.
போன் பில் விட்டுட்டீங்களே:-)

காட்டாறு said...

//யோசித்து வைத்துப் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்யலாம்.
உடல் நலனைப் பேணி தகுந்த விதத்தில்
ஆரோக்கியமாக இருக்கலாம்.//

சரியா சொல்லிட்டீங்க வ்ல்லியம்மா. இந்த பதிவ படிச்சிட்டு, உங்க அடுத்த பதிவ படிச்சிருக்கனுமோ. அவசரப் பட்டு மறு மொழியிட்டு உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,
கலங்கலாமா.
எப்பவுமே சள சளனு ஓடணும்.
நம்ம எல்லாருக்கும் அவங்க அவங்க பார்வையிலே முதுமை
தெரியரது.
அதை ஹாண்டில் பண்ணற விதம் வேறயா இருக்கும்.
எனக்கு இத்தனை சகோதரிகளும் தோழிகளும்(மகள்களும்) இருக்க வருத்தத்திற்கு வழியே இல்லை.:-)

radhakrishnan said...

வேண்டாம் பூஷணி கதையில் வரும் பாட்டியை நினைத்தால் மிகவும் பயமாக
இருக்கும்.வாசந்தியின் பயணம் என்ற
கதையில் வரும் பாட்டியின் நிலை
இன்னும் பயங்கரம்.
ஒரு நெஸ்ட் எக் வைத்துக்கொள்ளாத
கி.ரா.கதையில் வரும்(காய்ச்சமரம்)
நிம்மாண்டு நாயக்கர் தம்பதியின் நிலை
அதி பயங்கரம்.எல்லோருமே நடப்பைத்தான் எழுதியுள்ளனர்.நாம்தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்