Blog Archive

Saturday, April 21, 2007

161. எத்தனை கோடி பணம்

வழக்கமான கதை.

ஐம்பதுகளில் வெளிவந்த பல ,
குடும்பம் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்
'அன்பு எங்கே'யும் ஒன்று.

அதற்கும் ஒரு முன்னோடியாகக் கட்டாயம் ஒரு
இந்திப் படம் இருந்திருக்கலாம்.

ஒரு குடும்பம்
அண்ணன்,அண்ணி
கல்யாணம் ஆகாத தம்பி

அங்கே வேலைக்குச் சேரும் ஒரு பெண்.

குடித்து விட்டு வீட்டுக்குத் தள்ளாடியபடி வரும்
தம்பியாக
எஸ்.எஸ்.ஆரும்,
பணி புரியும் பெண்ணாகத் தேவிகாவும்
நடித்ததாக நினைவு.
இந்தச் செய்தி எல்லாம் பேசும்படம்
என்ற புத்தகத்தைப் படித்துத் தான் நாங்கள் தெரிந்து கொள்வோம்.

1958இல் வந்த படமாக இருக்க வாய்ப்பு.

ஜமுனா ராணி பாடிய ' மேலே பறக்கும் ராக்கெட்டு'
மிகவும் பிரபலம் அப்போது.
அத்துடன் கூடவே இந்தப் பாடலும்

இனிமைச் சாரலாக நினைவு வருகிறது.

அறிவு போதிக்கும் பாடல்கள் நிறைய அந்த நாட்களில் வெளிவரும்.
பட்டுக்கோட்டையார் பாடல்கள் ,
உடுமலை நாராயண கவி,
இவர்கள் எழுதி வெளிவந்த காலம்.

எப்போதுமே ரசிக்கக் கூடிய வரிகள்.

உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

பாடியவர் பி.சுசீலா.
இந்த அம்மாவுக்கு எத்தனை
நன்றி சொல்வது!!
எங்கள் இனிய நினைவுகளுக்கு இவரும் டி.எம்.எஸ் ஐயாவும் நிறைய உரம் கொடுத்து இருக்கிறார்கள்.

பாடல் இதொ.
எத்தனை கோடிப் பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலெ-இந்த
உலகம் புகழுது ஏட்டிலே


அர்த்த ராத்திரி பனிரண்டு மணிக்கு
ஆடிக் கொண்டே நுழைவதை....
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டாங்கள் செய்வதை...
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா..
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா
இல்லையா நீ சொல்லையா
இல்லையா நீ சொல்லைய்யா....(.எத்தனை கோடி)


அன்னம் இட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே...
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு நாளும்
முடிவு கொண்டே வாழ்ந்திருந்தாலும்
துணைபுரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
தினம் துணைபுரிவேன் நானும்...(எத்தனை கோடி)

ரசித்தீர்களா:-)

21 comments:

Geetha Sambasivam said...

hihihi antha mathiri oru padam vanthathunu ippo than theriyum nijamave! mmmm, nalla ninivu. malarum ninaivukal.

வல்லிசிம்ஹன் said...

vanthathu.vanthathu.

I remember everything from the day
I was born:-)

so inthap padam ennooda 9 aavathu vayasil vanthathunaalee oru siramamum illaamal winaikka mudikiRathu:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

நானும் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். இதில் டிங்கிரி டிங்காலே மீனாட்சி என்ற பாடலும் உண்டு

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச. அப்பாடி நான் தனியே இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.
இப்போ உங்களுக்கும் இந்தப் பாடல் தெரியும் என்று ஒரு அல்ப சந்தோஷம்.
நான் படம் பார்க்கவில்லை.
ரேடியோ சிலோன் உபயத்தில் நிறைய பாட்டுகள் மூளையில் பதிவாகிவிட்டன.

காட்டாறு said...

நான் பள்ளியில் படித்த காலத்தில், ஒரு போட்டியிருக்கும். அதாவது, பழைய பாடல் கொடுத்து ஆன் தி ஸ்டேஜ் நடனப் போட்டியொருக்கும். அப்போ எனக்கு 8 வயது. இந்த பாட்டுக்கு (டிங்கிரி டிங்காலே) நடனமாடி முதல் பரிசு வாங்கினேன். அதனால இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா படம்.... எனக்கு தெரிய சந்தர்ப்பம்/வயசு(:)) இல்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

புதிய செய்தி....நான் கேட்டதில்லை இந்தப் பாடலை. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் காட்டாறு,

டிங்கிரி டிங்காலே'
ரொம்பப் பிரபலமான பாட்டு.
கொஞ்சம் வயதானவர்கள் முகம் சுளிப்பார்கள். என்ன இது என்று!!:-)
உலகம் போற போக்கைப் பாரு னு போகும் .
அப்பவே இதைப் பாடியாச்சு.
இன்னும் இப்பப் போறபோக்கைப் பார்த்தால் அந்தக் கவி என்ன பாடி இருப்பாரோ:-)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
படம் நானும் பார்த்ததில்லை.
பாட்டின் பொருள் எந்த
காலத்துக்கும் பொருந்தும்.

கீதா சொல்றமாதிரி அழகான நினைவுகள்.

லதா said...

so inthap padam ennooda 9 aavathu vayasil vanthathunaalee oru siramamum illaamal *w*inaikka mudikiRathu:-)

அப்படி என்றால் நீங்கள் தலைவி கீதா அவர்களுக்குத் தங்கைதான்.

e-கலப்பையில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள். [ ந தட்டச்சிட w அழுத்துவது:-))) ]

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க லதா.
இதுவரை நான் யாருக்குமே தங்கச்சியா
இல்லையெனு ஒரே கவலை.

நிஜமாத் தீர்ந்து போச்சு.:-)

அய்யோ அதையேன் கேக்கறீங்க.
ந எழுதின வா வருது. கீதாவுக்குப் பின்னூட்டம் தங்லிஷ்ல போட்டதனாலதான் இந்தப் பிரச்சினை.
அழகா ஆங்கிலத்திலேயே போட்டு இருக்கலம்:-)

Geetha Sambasivam said...

hihihi latha, valli enakku akkanu muthalileye sollitanga, blog ellam arambichu nanga rendu perum thaniya kummi adikkumpothe! :))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Geetha Sambasivam said...

@Latha, ungalai "tag" seythirukene? paarkalai?

ambi said...

ஆக இந்த படம் கீதா மேடத்துக்கு 25 வயசு இருக்கும் போது வந்தது இல்லையா? :p

//அப்படி என்றால் நீங்கள் தலைவி கீதா அவர்களுக்குத் தங்கைதான்.
//
@latha, அப்படி சொல்லுங்க லதா! இதுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ்! :)

வல்லிசிம்ஹன் said...

ஐய்யா இது என்ன ஆட்டம்னு
தெரியலையே.
வெறும் அன்பு எங்கே படம் பற்றித்தானே எழுதினேன்.
இப்படி இளமைக்காலங்கள்
படமாப்போயிட்டு இருக்கே.
அம்பி உங்க அன்புதான் வந்தாச்சே.
நீங்க இல்லறமே நல்லறம் படம் பாத்து கதைவிமரிசனம் செய்யுங்க.:-)

ambi said...

//அம்பி உங்க அன்புதான் வந்தாச்சே.
நீங்க இல்லறமே நல்லறம் படம் பாத்து கதைவிமரிசனம் செய்யுங்க//

ha haaaaa :)

Today no posts at all? :(

sari, hope U've some imp household works. will come tmrw. :)

வல்லிசிம்ஹன் said...

அம்பி.
புதுசும் போட்டாச்சு.

வயசானா இது தான் தொந்தரவு.
நினைவு பாட்டுக்கு மலரும்.
அதுக்காக நீயே நீயேனு எல்லாரையும் பதிவு,பின்னூட்டம்னு அலைக்கழிக்க முடியுமா.
எதுக்கும் ஒரு எட்டு வந்து பின்னூட்டம் போடவும்.:-)

நானானி said...

வல்லி!!
பாடலைப் படித்ததும பழையஞாபகங்கள் கிளர்ந்தெளுந்தன. என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்!
அடிக்கடி இந்த ரெக்கார்டை (78)போடச்சொல்லி ரசித்து கேட்பார்கள்!
டிங்கிரி டிங்காலே-ஐப் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.
நன்றி இலங்கை வானொலிக்கு.

நானானி said...

வல்லி!
அது...'சின்னையா நீ சொல்லையா'
சரிதானே?

வல்லிசிம்ஹன் said...

நானானி,
ஆமாம்.
ஆமாம்
ஆமாம்.
சின்னையா நீ சொல்லையா. தான்.
என்ன அழகான பாட்டு இல்லையா.
நன்றி நானானி.
நீங்கள் திருமங்கலம் (மதுரை) பக்கம் வந்து இருக்கீங்களா??

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி.
நன்றி இலங்கை வானொலிதான்.

அந்த நேயத்துக்கு இனிமேல் எங்கே போவது?
இசையும் கதையும் கேட்க வெள்ளிக்கிழமை ,
ஸ்கூலிலிருந்து ஓடி வந்த ஞாபகம்:-)
நன்றிப்பா.

நானானி said...

வல்லி!
திருமங்கலம் வழியாக மதுரைக்கு
அடிக்கடி வந்திருக்கிறேன். ஏன் என்று
ஷொல்லவேயில்லையே..

ஸ்கூலிலிருந்து வந்து காதை பிய்த்து
ரேடியோ ஸ்பிக்கரில் வைத்துவிட்டுத்தான் ஹோம்வொர்க்
செய்வேன். இது எப்படி இருக்கு..?