Blog Archive

Thursday, March 08, 2007

சித்திரராமன்........9----வாலி,சுக்ரீவா











மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தைக் கண்ணெதிரே காண்கிறான் வாலி.


வில்லைக் கையில் பிடித்து அதன் முனையைத் தரையில் ஊன்றி நிற்கும் ராமனைக் காணும்போது அவனுக்குத் திகைப்பாக இருக்கிறது.


ஒரு கார்மேகத்தில் தாமரை பூக்குமா. பூத்திருக்கிறது.


ஒன்றல்ல இரண்டல்ல. ராமன் உருவமெ தாமரைகளாகத் தெரிகிறது.


சுக்ரீவனும் ராமனும் நட்புப் பூண்டது தெரியும்.


தன்னை வெல்ல ராமன் வருவான் என்று


தெரியாது.
இதற்கு முன் நடந்த காட்சிகள்:
ராமனைத் தரிசிக்கும் அனுமான்.
தன் சரித்திரத்தைச் சொல்லி முடிக்க,
லக்ஷ்மணனும் தங்கள் கதையைச் சொல்கிறான்.
ராமன் அனுமனைக் கண்டு வியக்கும் விதம்
அதிசயம். அவன் பேசும் தோரணையைவைத்தே
இவன் நவவியாக்கிரத.... ஒன்பது விதமான இலக்கணங்களையும் வேதங்களையும் கற்றுத் தெளிந்தவன். வினயமே வடிவு கொண்டவன்.
ப்ரம்மச்சாரி.
எடுத்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன்.
பலம் படைத்தவன்.
முன் யோசனை மிக்கவன்.
என்றெல்லாம் தம்பியிடம் உரைக்கிறான்.
அனுமனுக்கு ரமனைப் பார்த்ததுமே 'என்பெ'ல்லாம்
உருகியதாம். தன் வாழ்க்கையின் முழுப்பயனை அடைந்ததாகச் சுக்ரீவனிட்ம சொல்கிறான்.
ரிஷிபத்தினி அளித்துப் பின் சீதை
தன் மேனியில் பூட்டி இருந்த ஆபரணங்களைக் கண்டு சோகிக்கும் ராமனைத் தேற்றும் சுக்ரீவன் ,இவனுடைய துன்பத்தை உணரும் ராமன் இருவருமே அக்னி சாட்சியாக ஒருவருக்கு ஒருவர்
உதவ ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.
ராமனின் பலத்தைச் சோதிக்க,சுக்ரீவனுக்கு யோசனை கொடுப்பதே அநுமன்தான்.
ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே அம்பில் வீழ்த்தும் ராமனைக் கண்டு மனஉறுதி பெறும் அவன், தன்னிடம்
இருக்கும் எல்லாம் ராமன் வசம் என்று சரணாகதி
செய்கிறான்.
ராமன் அவனை வாலியைப் போருக்கு அழைக்கச் சொல்லி அறிவுறுத்த
சுக்ரீவனும் கோட்டை வாயிலில் சென்று
அண்ணனை அழைக்கிறான்.
முதலில் நம்பாத வாலி, தாரை(அவன் மனைவி)யின் வார்த்தைகளையும் தட்டிவிட்டு
வெளியே வருகிறான்.அங்கெ
சுக்கிரீவனைக் கண்டதும் பொங்கி எழும் கோபத்தோடு பொருதுகிறான்.
இரு மலைகள்,இரு கடல்கள் இவை மோதுவதுபோல் இவர்களின் சண்டை-மல்யுத்தம் வளர்கிறது.
வாலியின் பலத்துக்கு முன்னல் சுக்கிரீவன் அசந்து போகிறான்.
ராமனின் பாணம் வந்து வாலியின் மேல் பாயும் என்றால் அதையும் காணோமே/.
மீண்டு ராமனிடமே ஓடி வருகிறான்.
நீ ஏன் வாலியைக் கொல்லவில்லை என்று ராமனைக் கோபத்தோடு வினவுகிறான்.
உனக்கும் அவனுக்கும் வேறுபாடே தெரியவில்லை.
என்று ஒரு பொன்னிற மாலையை அவன் தோளிகளில் போட்டு அனுப்புகிறான்.
இந்த தடவைப் போரில் வாலி சுக்ரீவனைத் தலைக்குமேல் தூக்கி,
கீழே வீசி எறியப் போகும் தருணத்தில் ராமன் தன் வில்லில் பூட்டிய அம்பைத் துறக்கிறான்.
கீழே விழும் வாலிக்கு அம்பு துளைத்த வலியைவிடத் தன்னை வீழ்த்தியவன் யார் என்று தெரிவதற்காக
அம்பைப் பார்க்கிறான்.
அதில் எழுதி இரூக்கும் 'ராமா' என்ற எழுத்துகளைப் பார்த்து நிமிர்ந்து ராமன் மரத்து மறைவிலிருந்து
வருவதைப் பார்த்துக் கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறான்.
ராமா தசரதன் மைந்தனா நீ?
நான் உனக்குப் பங்காளியோ தாயாதியோ இல்லையே.
உன் மனித ஜாதி கூட நான் இல்லை.
உனக்கும் என்ககும் தனிப்பகை கிடையாது.
உன் ராஜ்ஜியத்தின் பகுதியில் நான் இல்லை.
அத்துமீறி எந்தக் குற்றமும் ( நான்)செய்யவில்லை.
எதற்காக ந்னைக் கொன்றாய்?
ஒருவேளை உங்கள் மனு நீதியில் ''அரக்கன், உங்கள் குலப்
பெண்ணைக் கடத்தினால்,ஒரு குரக்கனைத் தண்டித்தால் பாபம் தீரும் '' என்று எழுதி வைத்திருக்கிறதோ என்ரெல்லாம் கேட்கிறான்.
ராம்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு
தன் நீதியை எடுத்து உரைக்கிறான்.
'வாலி நீ எனக்குப் பங்காளிதான்.
எங்கள் அரசுக்குக் கட்டுப்பட்ட நிலத்தில் தான் நீ
அரசு புரிகிறாய்.உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பரதனின் அரசாட்சி நடக்கும்போது
அதன் பிரதிநிதியாய் உன்னைத் தண்டிக்க எனக்குக் கடமை உண்டு.
நீ தவறு இழைத்து இருக்கிறாய்.
மாற்றான் மனைவியை உன் வீட்டில் வைத்தாய்.
சரணடைந்த தம்பியைத் துரத்தினாய்.
நீ வன மிருக ஜாதி என்று நீயே சொன்னாய்.
மிருகங்களுடன் நேர்மைப் போர் புரிய முடியாது.
சிங்கத்தையோ புலியையோ மறைந்து நின்று தாக்குவதுபோலத் தான் நானும் உன்னைக் கொன்றேன்;'
என்று அமைதியாகப் பேசும் ராமனின் சொல்லை அப்படியே உள்வாங்கி வாலி தன் சலனத்தை
விடுகிறான்.
நிறை புத்திசாலி,கோப வசப்பட்டதால் வாழ்வை இழக்கிறான்.
தன் மகன் அங்கதனைக் கைப்பிடித்து சுக்ரீவராமர்களிடம் ஒப்படைக்கிறான்.
அனுமனை எப்பொதும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறான்.
நீ அயோத்தி செல்லும்போது அங்கே யாரும் என் தம்பியை இழிவாகப் பேசாமல் பார்த்துக்கொள்.
அவன்,
'இந்தச் சின்ன பூமியைத்" தான் எடுத்துக் கொண்டு பெரியமோட்சத்தை உன்மூலம் கொடுத்துவிட்டான் ராமா''
என்ற வண்ணம் கண் மூடுகிறான்.
செய்தி அறிந்து ஓடிவந்த தாரை
வாலியின்மரணத்துக்கு துயரப் படுகிறாள்.
ராமனைத் துதித்து வானரர்களைக் காக்கும்படி வேண்டுகிறாள்.
வாலியின் சடங்குகள் முடிந்ததும் சுக்ரீவ பட்டாபிஷேகம்.
ராமனும் லட்சுமனனும் மால்யவான் குகைப் பிரதேசத்துக்குப் போகிறார்கள் மழைக்காலத்தைக் கழிக்க.
நாமும் பொறுத்து இருப்போம்.

11 comments:

ambi said...

/ஒன்றல்ல இரண்டல்ல. ராமன் உருவமெ தாமரைகளாகத் தெரிகிறது.
//

அருமையான உதாரணம்.

அனுமனுக்கும் அழகான விளக்கங்கள். காத்திருக்கிறேன். :)

thanks for the womens day wishes for my mom and Thangamani :)

குமரன் (Kumaran) said...

இராம காதையை நன்றாக எழுதுகிறீர்கள் அம்மா. தாமரைத் தடாகம் போன்ற எம்பெருமானைக் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி வந்து கருத்துச் சொல்லி வருகிறீர்கள்.
ரொம்ப நன்றி.

கம்பராமாயணப் படல்களைக் கேட்கும்போது மனத்தின் முன்னே காட்சிகள் வருகின்றன. வார்த்தைகளில் வடிக்கத் திறமை அவ்வளவு போதாது.
முயன்றால் ராமனைப் பாடிய நன்மை வாய்க்கட்டும் என்று எழுதுகிறேன்.
அனுமன் சுந்தரன்.
அவனுக்கான காண்டம் நிறைய அழகாக அமைய வேண்டும்.
அதற்கும் அவனே துணை.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
நன்றி. குழந்தைகளுக்கு எழுதுவதாக நினைத்து எழுதுகிறேன்.
தவறிருக்கும்.

படித்துக் கருத்தும் எழுதுவதற்கு நன்றி.

துளசி கோபால் said...

வாலி சுக்ரீவ யுத்தம் அதன் காரணமா ராமனுக்கு ஒரு அபவாதம் ஏற்பட்டது இன்னிக்கும்
பட்டிமன்ற சப்ஜெக்ட்டுதான்! அவரவர் நியாயம் அவரவருக்கு.

தாமரைக்கண்ணனை ஹனுமான் அங்கம் அங்கமாக வர்ணித்து, சீதைக்குச் சொல்வதை
நேற்று 'சுந்தரகாண்டம்'( நம் வீட்டில்) படித்தபோது ஆச்சரியமா இருந்தது. எவ்வளவு கவனிச்சுப்
பார்த்திருந்தா வர்ணனை இப்படி இருக்கும்!!!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாலி மோக்ஷம் ஆகிவிட்டது.வாலி தான் எதற்காக வந்தோம் என்பதை மறந்ததால் வந்த வினை அது.
அடுத்து சொல்லின் செல்வன்,நவவியாக்ரத பண்டிதன்,சீதையின் துக்கத்தை களைந்தவன்,லக்ஷ்மணனுக்கு உயிரைக் கொடுத்தவன்,பரத சதுருக்கணனைக் காத்தவன்,அர்சுனனுடைய கொடியில் இருந்து கண்ணனிடமிருந்து கீதையை நேரடியாகக் கேட்டவனுமான ஆஞ்சநேயருடைய சுந்தர காண்டத்தைக் கேட்க காத்துள்ளேன்.

"ராம கதா சுதாரஸ பானம் ஒக ராஜ்யமு சேஸூனே என்ற மத்யமாவதி கீர்த்தனையில் தியகராஜை இவ்வாறு கூறுகிறார்.

ஏ மனமே
ராமகவியம் எனும் அமிர்தபானம் ஒரு ராஜ்யத்தை நடத்துமே!

பெண்களில் மணியாக விளங்கும் சீதை, லக்ஷ்மணன்,பரதன் மற்றும் சத்துருக்கணன் இவர்களோடு இந்த மண்னுலகில் அவதரம் செய்த அந்தக் கதை ஒரு ராஜ்யத்தை அரசாட்சி புரியுமே

ராமா உன்னுடைய கதை தர்மத்தின் பலனை அளிக்கக் கூடியது. அதோடு மட்டுமல்லாமல் தைர்யம்,ஆனந்தம், வாழ்க்கையில் சுகம் இவைகளை அளிக்கவல்லது.

பாவங்களைப் போக்கக்கூடியது.போன ஜ்ன்மங்களால் ஏற்பட்ட வினைகளான கடலை கடப்பதற்கு நல்ல படகு போன்றது.

இந்த ஏழை தியகராஜனால் துதிக்கப்பட்ட ராமனுடைய சரித்தரம் என்கிற அமிர்தத்திற்கு ஒப்பான கதை ஒரு ராஜியதையே ஆளும்.


ஒரு ராஜ்யம் அல்ல மூன்று ராஜ்யங்களை(அயோத்தி,கிஷ்கிந்தை மற்றும் இலங்கை) ஆண்டது
சிஷ்யன் சுருக்கமாக அழ்காக
சொல்லிவிட்டான்.ஆனால் குருவால் முடியவில்லை.நீண்ட பின்னூட்டமாக ஆகிவிட்டது.மன்னிக்கவும்

வல்லிசிம்ஹன் said...

துளசி,உடனெ பதில் போட முடியவில்லை. வாலிக்கு நேர்ந்தது
தண்டனை என்றுதான் கம்பராமாயணத்தில் இருப்பதாக காலாட்சேபம் செய்பவர் சொல்கிறார்.
அரசனாக இருப்பது சிரமமான தொழில்தானே. சீதையையும் காட்டுக்கு அனுப்புகிறானெ ராமன்
அதுவும் அரசனாகத்தான்.

வாலியும் சமாதானமாகவே செல்வதாக இருக்கிறது.
இதே வாலிதான் ராமனுக்கு அடுத்த கிருஷ்ணாவதாரம் முடியும் வேளையில் மான் வேட்டையாடும் வேடனாக, அம்பு விட்டு கிருஷ்ணரின் அவதாரம் வைகுண்டம் ஏகக் காரணமாகிறான் என்றும் ஒரு சொல் உண்டு.
முற்பகல் ,பிற்பகல் எல்லாம் கடவுளருக்கும் உண்டாம்:-)

வல்லிசிம்ஹன் said...

சுந்தரகண்டம் இன்னும் படிக்கிறிர்களா
துளசி. வீட்டில் எப்போதும் சலனமே இருக்காது என்பது கண்கூடாகத் தெரியும்.
ஹனுமான் வாயிலாக ராமனைப் பார்ப்பது நமக்கே இத்தனை மகிழ்ச்சி.என்றால் சீதாஇ எப்படி ஆனந்தப் பட்டிருப்பாள். மஹானுபாவன்,சிரஞ்சீவி நேயடு என்றும் நம்மைக் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

முதலில் சிஷ்யன் அப்புறம் குருவா.
தி.ரா.ச நீங்களும் குமரனும் என் எழுத்தைப் படிக்கிறீர்கள் என்றால் எனக்கு பயமாக இருக்கிறது.
எத்தைத் தின்றால் பித்துத் தீரும் என்று ராமனைத் துணைக்கு அழைத்தேன்.
வார்த்தைகளில் பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்துவிடுங்கள். பாகவதர்களைத் துன்புறுத்துவது பாவம் .

மெளலி (மதுரையம்பதி) said...

வாலி பிரமதனாய நம:

வாலி வதம் ஆயிற்று.....

சுந்தர காண்டத்திற்குக் காத்துள்ளேன்

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.ஆமாம்
வாலிக்கும் மோட்சம் காட்டிவிட்டான் ராமன்.
அவனுக்குத் தகுதி இருந்தது.கிடைத்தது. எப்பவுமே நமக்கு அடிபட்டவர்கள் மீது ஒரு பாசம் வருகிறது.அதுபோலத்தான் வாலியின் பகுதியும் ராமயணத்தில்.,என்று எனக்குத் தோன்றும்.