Blog Archive

Friday, February 02, 2007

அம்மா பாட்டியானாள்

ஒரு அம்மா பாட்டியாகும் கதை. இதற்கு முந்திய பதிவில் நான் அமெரிக்கா புண்ணியதலத்தில் இறங்கிய மஹாத்மியம் சொல்லி இருந்தேன்.
ஸ்ரீமந்தம் நடந்து ,வரலட்சுமி நோன்பு வந்து போயி, எனக்கு மருந்து ஸ்டாக் குறைந்து, மருந்து எடுக்காத காரணத்தால், ஆகஸ்ட் குளிர் தாங்காமல் ஒரு ராத்திரி முழுதும் மகளையும்,மருமகனையும் படுத்தி எடுத்து,

40 நாட்கள் கழித்தபிறகு, அந்த நாளும் வந்தது. எங்கள் பேரன் எங்கள் கைக்கு வந்து சேரப்போகும் நாள். வேப்பிலை இல்லியே, பேசாமல் நம்ம அம்மாவை அழைத்து வந்து இருக்கலாமோ/

எனக்கு இந்த மாதிரி பிரசவம் நெருங்கும் நேரம் என் அம்மா,அப்பா எப்படி நடந்துகொண்டார்கள்? பயந்தார்களா? எல்லா நேரத்திலேயும் அவர்கள் அமைதியாக இருந்த மாதிரி தான் எனக்கு நினைவு.

இங்கே மருமகனும், பெண்ணும் அதெ அமைதியோடு செயல் பட்டார்கள்.அவர்களூக்கு மருத்துவர்கள் சொல்லித் தந்த முறைப்படிநிதானமாக, வேண்டும் பொருட்களையெல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கி வைத்தார்கள். நான் மூணாம் பேஸ்து(இதுவும் ஒரு வார்த்தை குமரனைத்தான் கேட்க வேண்டும்.)
அடித்த மாதிரி எப்போதும் வாயில் ஆபத்துக் காலஙளில் (எனக்கு ஆபத்து என்று தோன்றும்) முணுமுணுக்கும் ஆபதாம் அபகர்த்தாரம், கந்தசஷ்டி கவசம்,எதுவும் நினைவுக்கு வராமல் அவர்களையெ வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தேன்.

மருமகனுக்குத் தோன்றி இருக்க வேண்டும், ஒருவேளை 10 நாட்கள் முன்னால்வந்த மாதிரி பி.பி. எகிறிவிட்டதோ?படபடப்போ? அம்மா, பொண்ணு இரண்டு பேருக்கும் வைத்யம், காவல் இருக்க வேண்டுமோ என்று நினைத்தாரோஎன்னவோ,

என்னிடம் வந்து மெல்ல" 'அம்மா இது ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஹாஸ்பிடல்,டாக்டர்எல்லோரும் ரெடியாக இருப்பார்கள். கவலையெ இல்லை, நீங்கள் வேணுமானால்,கெடொரேட் (ரஸ்னா மாதிரி) சாப்பிடலாமெ/ தெம்பாக இருக்கும்'' என்று சமாதானப் படுத்துவதாக எண்ணிஆரம்பித்தார்.அதற்குள் பெண்ணிற்கு அவசரம் .

ஆகவே காரில் போய்க்கொண்டே பேசலாமெ, அம்மா வரியா, என்று கேட்க எப்போதும் சொல்வது போல் நீங்க போய்விட்டு குழந்தை பிறந்ததும் எனக்கு சொல்லவும்என்று பதில் கொடுக்க ஆசை தான். என்ன செய்வது, அன்னையருக்கு என்று கடமை இருக்கிறதே,
அதனால் வரவழைத்துக்கொண்ட அசட்டு தைரியத்துடன் முருகனைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டுமருத்துவ மனையை நோக்கி பயணித்தோம். எப்போதும் கேட்கும் 'பால் வடியும் முகம்"திரு மஹாராஜபுரம் சந்தானத்தின் பாடல் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. எண்ணீ 20 நிமிடப் பயணத்தில் St Mary மருத்துவ மனையும் வந்துவிட்டது.

இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் எப்படித்தான் இரவு நேரம்தெரியுமோ. எல்லா அம்மாக்களுக்கும் வலி என்பது அப்போதுதான் ஆரம்பிக்கும்,அதே போல் மருத்துவமனை செவிலிகளுக்கும் அது பழக்கமாகி விட்டது. அப்படியெ தாயாகப் போகும் அவஸ்தையில் இருக்கும் பெண்ணையும்அவளுடன் வந்த எங்களையும் நிலைப்படுத்தி சிகித்சையை ஆரம்பித்தார்கள்.

நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறைக்குப் போனோம்.முதலில் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னது யாரைத் தெரியுமா? என்னைத்தான்.

அதற்குப் பிறகு பேரன் பிறந்தது, அது முதல் என் தூக்கம் என்னைத் தொந்தரவு செய்யாதது எல்லாமெ தனிக்கதை. அவன் முகம் என் எல்லா சோர்வையும் விரட்டி விட்டது. புது சுருசுருப்பு,சக்தி எல்லாம்வந்து நான் முழுமையாக இயங்க ஆரம்பித்தது அப்புறம்தான். பாட்டி இல்லயா?

இப்போதும் எங்களுக்கு அரு மருந்து குழந்தைகள்தான். அது எப்படி ஒரு உலகையே வெற்றி கொள்ளும்,பள்ளி, ,கல்லூரி சீட் வாங்கும் அம்மா,ஒரு தைரிய புலி,சிங்கம் தன் மகளின் வலிக்கு முன்னால் பூனையாகி விடுகிறாள்? ஏன்?

// posted by manu @ 6:02 PM Comments:
அதுதான் தாய் உள்ளம். உண்மையாவே இந்தப் பதிவு சூப்பர். அருமையா வந்துருக்கு. வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க. # posted by துளசி கோபால் : 6:05 AM

ரொம்ப நல்லா இருந்தது, தொடர்ந்து எழுதுங்க! # posted by ஜீவா(Jeeva) : 6:32 AM மிகவும் நன்றி துளசி. ஜீவா.

மீண்டும் என் பேரன் பிறக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது உங்கள் பின்னூட்டம் பார்க்கும் போது. வணக்கம் நண்பர்களே. இதை விட யார் உத்சாகப் படுத்த முடியும்?இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.மனு,வல்லி # posted by valli : 7:07 AM

Very well written # posted by BLOGESWARI : 8:28 AM Thank you blogeswari.manu # posted by manu : 12:23 PM அதான் டீச்சர் சொல்லிட்டாங்கள்ள வெறென்ன சொல்ல:)

# posted by சிங். செயகுமார். : 4:48 AM வணக்கம் சிங்.செயக்குமார்.ஆமாம் ,துளசி டீச்சர் தான் பிள்ளயார் சுழி.நீங்க எழுதும் முறை எனக்கும் படியக் கொஞ்ச நாளாகும். அது வரை என் தமிழ் எழுத்தில் பிழை வரும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும். நன்றி.செயக்குமார். #

posted by manu : 6:09 AM வாழ்த்துகள் அம்மா. மகிழ்ச்சியான செய்தி சொல்லியிருக்கீங்க. பாட்டி ஆனதால் இனிமேல் உங்க பேரக்குழந்தையை கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும். என் மகள் பிறந்த போது என்னை விட என் தாயார் தான் அதிக மகிழ்ச்சி அடைந்தார். முதல் ஆறு மாதங்கள் எங்க கூடவே இருந்து இரவும் பகலும் என் மகளை பூப் போல பார்த்து கொண்டார். # posted by பரஞ்சோதி : 12:05 PM .

மனு, இரண்டு ப்ளாக் வச்சுச் சமாளிக்கிறதே கஷ்டம், இதிலே பேரனும் வந்தாச்சு. ரொம்ப பிசினு நினைக்கிறேன். # posted by Geetha Sambasivam : 2:49 PM மனு, கணினி தகராறு. வேறே ஒருத்தருக்குக் கொடுத்த பின்னூட்டம் உங்களுக்கு வந்திருக்குனு நினைக்கிறேன். # posted by Geetha Sambasivam : 2:51 PM

பரஞ்ஜோதி, எங்கள் பேரன் பிறந்து 7 வருடங்கள் ஓடி விட்டன. மற்ற பேத்திகளுக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டும். நன்றி.நானும் அங்கெ அவர்களொட இருந்து விட்டுத்தான் வந்தேன்.அருமையான காலம் அது. #

posted by manu : 2:52 PM கீதா. நன்றி. பேரன் பிறந்த போது நடந்ததைத் தான் எழுதினேன்.7வருடக் கதை. #

17 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!...

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி.
எனக்கு வகுப்பு எடுட்த்த ''குரு''
பிறந்த கதை, இது.:-)

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா, நீங்க பிரசவ மருந்து (லேகியம், சூப்பரா இருக்குமே) தயாரிப்பதை ஏன் பதிவாக எழுதக்கூடாது......அதற்கும், தீபாவளி லேகியத்திற்கும் உள்ள வேறுபாடு போன்றவை பதிவுக்கு உரியவைதான்.....

வல்லிசிம்ஹன் said...

மௌலி சார். எழுதுகிறேன்.
நல்ல பதிவாகப்
பிரயோசனப்படும்.
நன்றி.

மு.கார்த்திகேயன் said...

குழந்தை பிறப்பும் அந்த படபடப்பையும் அழகா சொல்லி இருக்கீங்க வல்லி..

பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகள் தானே.

துளசி கோபால் said...

காணாமப்போக இருந்தது கிடைச்சது:-)))))

வல்லிசிம்ஹன் said...

கார்த்திகேயன்,
கவலைப் படுவதில் தவறில்லை.
பலன் அழகான கனியாக இருப்பதால்:-0)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
கிடைத்ததே. நல்லவேளை. கடற்கரைப் பிள்ளையாரிடம் சொன்னீர்களோ??
:-)

வடுவூர் குமார் said...

நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறைக்குப் போனோம்.முதலில் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னது யாரைத் தெரியுமா? என்னைத்தான்.

இந்த இடம் நச்சுன்னு இருக்கு.
பின்னூட்டத்தையும் சேர்த்து போட்டது வித்தியாசமாக இருக்கு.
பேரான்டிக்கு என் ஆசீர்வதத்தையும் சேர்த்திடுங்க.

பிரசாத் said...

ஒரு தாய்க்கு தான் பட்டவேதனைகள் எல்லாம் தான் பெற்ற மதலையின் முகம் கண்டவுடன் மறந்துவிடும்.
உலகிலேயே மிகவும்மாறாத அதிசயம் என்னவென்றால் ஒரு மதலையின் புன்னகை. அதுஈடு இணையற்றது. விலை மதிப்பிலாதது

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா,
தயவுசெய்து எனக்கு நீங்க சார் போட வேண்டாம், தங்களைவிட மிகச்சிறியவனே நான்....

வல்லிசிம்ஹன் said...

மௌலி சரி நீங்க வெறும் மௌலி
ரைட்டா?

வல்லிசிம்ஹன் said...

குமார்,
இப்போதான் உங்க பின்னூட்டம் பார்த்தேன்.

கவலைப் படத் தெம்பு இல்லை.
சொல்லிவிட்டு ஓட வழியுமில்லை.
அதான் டாக்டர் அப்பாடி கிடனு சொலாமல் சொல்லிட்டார்.:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க பிரசாத்,
கருத்துக்கு நன்றி.
எல்லாக் கவலையும் போயிடும் ஒரு குழந்தையின் சிரிப்பில்.

குமரன் (Kumaran) said...

அம்மா. எங்கள் முதல் குழந்தைக்கு கொஞ்சம் அவசர அவசரமாக ஓட வேண்டியிருந்தது. இரண்டாவது குழந்தை நாள் குறித்துப் பிறந்தான். அதனால் ஓட வேண்டி வரவில்லை. முதல் குழந்தை பிறந்த போது மாமியாரும் மருத்துவமனைக்கு வந்தார். இந்த முறை குழந்தை பிறந்த பிறகு வந்து கூட்டிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். :-)

வல்லிசிம்ஹன் said...

பார்த்தீங்களா. இதே தான் நானும் இந்த தடவை செய்தேன்.
நாள்' குறீத்துப் பிறக்கும் போது
மனசு தேவையான முன்னேற்பாடுகளைத் தன்னுள்ளேயே செய்துவிடுகிறது.
உடம்பு என்னை விட்டுவிடு என்கிறது.
உங்களுக்கெல்லாம் கண்ணனும்,குமரனும் வேண்டிய பலத்தைக் கொடுக்கட்டும்.
இல்லாவிட்டால் இந்த ராட்சத ஊரில் இருப்பது கொஞ்சம் கடினமே. நான் குளிரைச் சொல்கிறேன்.:-)

வல்லிசிம்ஹன் said...

குமரன், உங்க பெண்ணுக்கும் ஆசீர்வாதம் சொல்ல மறந்துவிட்டேன்.
இந்தப் பனியும், வெளியில வாசல்ல போக முடியாமல் அவஸ்தை ஏற்படுவதையும் பார்த்து தளர்ந்து போகிறேன்.
உங்க மாமியாருக்கும் மாமனாருக்கும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.