Blog Archive

Tuesday, February 13, 2007

சித்திர ராமன்....6 சரயுவைக் கடந்து நடந்தான்

ராமன் விடைபெற்றாலும் அவனைப் பிரிய மறுக்கும் அயோத்திமக்கள்




























ரதத்தைப் பின்தொடருகிறார்கள்.
ராமன் ஆறுதல் சொல்லித்
தன்னோடு வந்த மக்கள் எல்லோரும் தூங்கியபிறகு சுமந்திரரோடு தேரில்
ஏறி கங்கைக் கரைக்கு வருகிறான், .
ஆற்றுப் படலம் சொல்லித்தந்த எங்கள் பேராசிரியை
இந்திரா அவர்கள் நினைவுதான் வருகிறது.
தமிழே உயிர்மூச்சாக வாழ்ந்த தூத்துக்குடி ஸ்ரீ.ஸ்ரீனிவாசராகவன் அவர்களின் மாணவி.
தமிழ் வகுப்பு என்றால் பயமுறுத்திய பழைய நினைவுகளைப்
போக்கி எங்களைக் கம்பரோடு ஒன்றச் செய்தவர்.
அந்த ஒரு மணிநேரப் பாடங்கள் இன்னும் மனதை விட்டுப் போகவில்லை.
ஆசிரியையான குருவுக்கு நன்றி.
கோவிலில் கடவுளாக மட்டுமே பார்த்து வந்த
ராமனையும் மற்றவர்களையும் குணநலம் ம்இகுந்த பாத்திரங்களாகக் கண் முன் நிறுத்தி,
ஆராய வைத்து ஆராதிக்கவும் வைத்தவர்.
இப்போது,
குகனைச் சந்தித்து அன்புள்ள குகனோடு ஐவரானோம்
என்று அவனையும் தன் குடும்பத்தில் இணைக்கிறான் ராமன்.
அவனுடைய உபசாரங்களை ஏற்று ,இரவு தூங்கும்போது
லக்ஷ்மணன் விழித்து இருந்து காவல் செய்கிறான்.
என்னதான் அவன் ஆதிசேஷனின் அவதாரம், மாலைக் காப்பதே அவன் வேலை என்றாலும்,
இப்படிக்கூட ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியுமா என்று பிரமிப்பாக இருக்கிறது!
பதினான்கு வருடங்கள் 'மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல்' தாய் தந்தையராக சீதாராமனை வணங்கிச்
சேவை செய்யும் லக்ஷ்மணன் போல
ஒரு தம்பி கிடைப்பானா.
இல்லாமலா.
நம் உலகத்தில் சேவை செய்தே குடும்பத்தினர் அனைவரையும் காக்கும் எத்தனையோ தந்தைகள் ,
தாய்கள்,அண்ணன்கள்,அக்காக்கள்,தம்பிகள்
இருக்கிறார்கள்.
எல்லாருக்கும் ஒரு அன்பான எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள்
இந்த அயோத்தி ராமனும் அவன் சகோதரர்களும்.
சுமித்திரை ஒரு ஞானி.
அவள் பெற்ற இருவருமே அடியார்கள் ஆகிறார்காள்.
லக்ஷ்மணன் ராமனுக்கு தொண்டனாகிறான்.
சத்ருக்கினன் பரதனுக்குத் தொண்டு செய்கிறான்.
இங்கு சத்ருக்கினனைப் பற்றிச் சொல்லும்போது ,
தசரதன் யாகத்தில் கிடைத்த அமுதின் கடைசிப் பாகத்தில் உதித்தவன்.
கரும்பின் கடைசிக் கண் இனித்து இருப்பதுபோல்
இவனும் பரதாழ்வாருக்குப் பாதுகாவலனாகக் கடைசிவரை பதினான்கு வருடங்களையும் நந்திக் கிராமத்தில் கழிக்கிறான்.
பரதன் வந்து தந்தை மறைந்த செய்தியை ராமனிடம்
சொல்லும்போது கூட,
ராமன் அழுகிறானாம்... என்ன சொல்லித் தெரியுமா?
சீதே உன் மாமனார் போய்விட்டாராம்.
லக்ஷ்மணா உன் தந்தை போய் விட்டாராம் என்று
சொல்லி மறுகுகிறான்.
ஏன் இவனுக்குத் தந்தை மறையவில்லையா என்று கேட்டால்,
எனக்குத்தான் கோடைகாலத் தண்ணீர்ப் பந்தல் போல உன்னைக் கொடுத்து இருக்கிறாரே ,
அதனால் லக்ஷ்மணா எனக்குத் தந்தை இருக்கிறார் என்று அவனை அணைத்துக் கொள்கிறான்.
இதுவே லக்ஷ்மணனுக்குக் கிடைத்த பாக்கியம்.
அதே போல் பரத சத்ருக்கினனின் ஆதர்சமும்
சொல்லாமலே விளங்குகிறது.
எல்லோரும் ராமலக்ஷ்மண பரத சத்ருக்னன் என்று
தானே சொல்கிறோம்.
அயோத்திக்கு மற்றவர்கள் ராம பாதுகையைச் சுமந்து
கொண்டு திரும்ப, பாதுகா பட்டாபிஷேகம் நடக்கிறது நந்திக்கிராமத்தில்.
ராமனுக்குத் தண்டகாரண்யம் அரசாங்கமாகிறது.
ஆஸ்ரமங்கள், அவைகளில் வாழும் முனிவர்கள்
அவர்கலுக்குத் தொண்டுபுரியும் பத்தினி,பிள்ளைகள் எல்லோருக்கும் சரணாகதி அளிக்கிறான்.
அரக்கர்களிடமிருந்து அவர்காளைக் காப்பதாக.
பின் பரத்வாஜ முனியின் குடிலுக்கு சென்று உணவருந்தி
மேலும் பயணத்தை தொடருகிறார்கள்.
ராமன் முன்னே நடக்க சீதை நடுவில் வர லட்சுமணன் பின்னே வர, கம்பன் கண்களுக்கு ஓம் எனும் ப்ரணவ மந்திரமே உருவெடுத்து நடப்பது போலத் தெரிகிறதாம்.
அங்கங்கே தென்படும் அழகிய காட்சிகளைச் சீதைக்கு ஆவலுடன் வர்ணிக்கிறான் ராமன்.
சீதையும் ரமணீயமான காட்சிகளை ரசிக்க
,
பஞ்சவடி க்கு வந்து சேருகிறர்கள்.
அந்த இடம் மிக அமைதியாக,மயில்,குயில் புறா ஆகிய பறவை இனங்களும்
மான்,முயல் இவை போன்ற சிறிய மிருகங்களும் நிறைந்த
இடமாக இருந்தது.சீதையின் முகக்குறிப்பால் அவளது விருப்பத்தை அறிந்த ராமன் லட்சுமனனிடம் அங்கேயே
குடிலை அமைக்க வழி சொல்கிறான்.
அவர்கள் அமைதியாக இருக்கட்டும். நாம் பிறகு பார்க்கலாம்.





4 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ........
படிச்சுட்டு மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு வல்லி.

மெளலி (மதுரையம்பதி) said...

படங்கள் அருமை....

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
எங்க அப்பா கண்ணனின் கீதையை ஆங்கிலத்தில் வரப் போகும் தலைமுறைக்காக எழுதினார்.(மொழிபெயர்த்தார்..சுலப கீதை)அதில் இருந்த ரசம்,கருத்தை இதில் என்னால் கொண்டுவரப் பார்க்கிறேன்.முயற்சிதான்.
கூடவே நடப்பதற்கு நன்றி துளசி.

வல்லிசிம்ஹன் said...

தவறாமல் வருகை தருவதற்கு நன்றி மௌலி.வரப்போகும் படலங்கள் ரொம்பக் கடினம். ஜாக்கிரதையாகப் போகணும்.
பார்க்கலாம்.