எல்லாருக்கும் உகந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு,
நான்கு இளவரசர்களும்
ஜனகபுரி இளவரசிகளைக் கைப்பிடித்தனர்.
இந்தப் பங்குனி உத்திரத்தில் மட்டும்தான் நம்பெருமாள்
ஸ்ரீரங்கராஜன் தன் பத்தினி ஸ்ரீரங்க நாச்சியாரோடு
சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி கொடுப்பான்.
மற்ற நாட்கள் தாயார் வேறு சன்னிதி. ராஜா வேறு சன்னிதி.
இங்கே இன்னோரு கதை ஸ்ரீரங்கராஜனைப் பற்றிக்
கொடுக்கிறார் உபன்யாசகர்.
ஸ்ரீரங்கத்தில்தான் ஒரு தெருவுக்கு பத்து ரங்காவைப் பர்க்க முடியுமே.
அதில் முன்ன காலத்தில் ஒரு அம்மாவும் பையனும் இருந்தார்களாம்.
ஏழைக் குடும்பம்.
பையன் வேதம் படித்து வருவதற்காக ஒரு பள்ளியில் சேர்க்கப் படுகிறான்.
15 நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா கையால் எண்ணை தேய்த்துக் கொண்டு காவேரிக்குப் போய் தோழர்களுடன் கும்மாளம் போட்டு விட்டு வருவானாம்.
அப்படி ஒரு தடவை (அமாவாசையா, பௌர்ணமியானு தெரிய வில்லை.)
அம்மாவிடம் ஆசை ஆசையாகக், கீரை சமைக்கச் சொல்லிவிட்டு ஓடி விட்டது அந்தப் பையன்.
அம்மாவும் சுடு சாதம் செய்து, சட்டியில் நல்ல அரைக் கீரையைச் சுத்தம் செய்து,
வாசனையாகப் பெருங்காயம், கடுகு தாளித்து மசித்து வைத்துக் காத்திருக்கிறாள்.
குளிக்கப் போன பையனைக் காணோமே என்று கதவுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறாள்.
நீச்சலில் சூரன் பையன்.
ஆட்டம் போடாமல் ட்ஹிரும்ப மாட்டான், எல்லலம் தெரியும்.
இருந்தாலும் நேரத்தோடு சாப்பிட்டால் தேவலையே என்று ரங்கா ரங்கா என்று கூப்பிடுகிறாள்.
'கீரை செய்து இருக்கேண்டா, சீக்கிரம் வா'ன்னு வேற
அழைக்கிறாள்.
அந்தப் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ.
நம்ம பள்ளிகொண்ட பெருமாள் காதில் விழுந்துவிட்டது.
அவருக்குக் கீரை சாப்பிட ஆசையாம்.
உடனே எழுந்து இந்த ஏழைத்தாய் வீட்டு வாசலில்
அவள் மகன் போலவே வந்துவிட்டார்.
மகனைக் கண்டதும் அம்மாவுக்குக் கோபம் இருந்தாலும், 'பாவம் பிள்ளை பசியோடு இருப்பான்' என்று
வாடா உள்ளே என்று கையைப் பிடித்து அழைத்து
ஆசனம் போட்டு, சரகு இலையில் சுடச்சுட அமுது பரிமாறுகிறாள்.
வந்த பெருமாளும் கீரையும் சோறுமாக ,அத்தனை
சோற்றையும் சாப்பிட்டுவிட்டு,
அம்மா உனக்கு இல்லையே என்கிறான்.
அவளுக்கோ மகன் சாப்பிடுவதைப் பார்த்தே வயிறு
நிரம்பிவிட்டது.
'இன்னிக்கு விரதமெ'ன்று சொல்லி விடுகிறாள்.
பையனும் வெளியே ஓடிவிட, காவிரியில் ஆட்டம் போட்ட பிள்ளை வருகிறான் பசியோடு.
களைப்பாகப் பசியோடு படுத்திருக்கும் அம்மாவை எழுப்பி
'அம்மா எங்கே கீரை?' என்கிறான்.
அம்மா 'நீதானே இப்ப சாப்பிட்டுப் போனியேப்பானு'
குழம்புகிறாள்.
நேரத்தோடு வரலைமா. சினெகிதர்கள் எல்லாம்
சேர்ந்ததால் நேரம் ஆகிவிட்டது.பசிக்கிறதும்மா' என்று சொல்லும் பிள்ளையைப் புரியாமல் பார்க்கிறாள்.
அடுக்களையில் சட்டி அலம்பிக் கவிழ்த்தாச்சு,.
இது என்ன நான் சொப்பனம் கண்டேனா.
என்று மீண்டும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீரைப் பாத்தியிலிருந்து இலைகள் கிள்ளி மறுபடியும் சமைக்கும்போது, வந்தப் பையனை நினைக்கிறாள்.
எப்போதுமே அம்மாவைப் பார்த்து ' நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னு
கேட்டுதே என்று நினைக்கும் போதே அவளுக்குப்
புரிந்தது வந்தது யார் என்று.
கண்ணில் நீர் பெருக ரங்கனின் கோபுரத்தைப் பார்த்துக்
கைகூப்புகிறாள்.
அழைத்த உடனே வந்தியா ரங்க ராஜா'' என்று மனம் குழைந்து
அழுகிறாள்.
இப்படியும் ஒரு காலம் இருந்ததா என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்போ நம்ம ராமரும் சீதையும், தசரத,ஜனக,வசிஷ்ட,
விஸ்வாமித்திரர்களின் ஆசியோடு,
'இயம் சீதா மமசுதா' என்று ஜனகன் தன் பெண்ணை அறிமுகம் செய்து, காப்பற்ற வேண்டியது உன் பொறுப்பு என்று ஒப்படைக்கிறான்.
அவர்களைக் கொஞ்சம் தனியே விட்டுவிட்டு மீண்டும் சந்திக்கலாம்.
ஜானகி காந்தனுக்கு சுப மங்களம்.
12 comments:
ஜானகீ காந்தஸ்மரணம்!!!
ஜெய் ஜெய் ராம ராமா!
நாமம் நல்ல நாமம்
ராம நாமம் நல்ல நாமம்!
ஜனன மரண பயம் நீக்கும் நாமம்,
சனகாதி முனிவர்கள் ஜபிக்கும் நாமம்,
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்,
மாதா-பிதா குருவை மதித்த மன்னன்,
ராம நாமம் நல்ல நாமம்.
(ஜெசுதாஸ் பாடியிருக்கிறார்)
ராமம் பஜே, ஸ்யாமம் மனஸா!
வேறெதுவும் தோன்றவில்லையம்மா...
அவனருளால் அவன்தாள் பணிவோம்....
மௌலி,
அன்றலர்ந்த தாமரையாய்,கைகேயியை வணங்கிய ராமனை வணங்குவதே
நமக்கு வழி.
இவ்வளவு சொல்லி இருக்கிறீர்களே, இதுவே பெரியது.
எம்பெருமானுக்கே சாதம் போட்ட தாயா? கொடுத்துவச்சவுங்க.
ஆமாம், முதல் படத்துலே 'நம்மஆளு' இருக்காரே. அதன் கதை என்ன?
ஸ்ரீராமன் கையில் கிளியா?
ஒரு வேளை 'கிளியை வளர்த்து பூனை கையில்' பழமொழியை சொல்லும் படமா?
கதை ப்ளீஸ்......
வல்லி,
இதுலே ராமா ராமா'ன்னு ஒரு பாட்டு இருக்கு.
ஜேசுதாஸ் பாடுனது. கேட்டுப்பாருங்க.
http://www.musicindiaonline.com/music/malayalam/s/movie_name.3255/
வல்லி,
இதுலே ராமா ராமா'ன்னு ஒரு பாட்டு இருக்கு.
ஜேசுதாஸ் பாடுனது. கேட்டுப்பாருங்க.
http://www.musicindiaonline.com/music/malayalam/s/movie_name.3255/
அந்தக் கதையா?
இந்த உண்டிவில்லாலே கூனியை அடித்துவிட்டுப் பசங்க சந்தோஷப் பட்டுதுனு வரும் இல்லியா/
அதுபோல நம்ம பூனை ஐயா
இந்தக் கிளிஅம்மாவைத் துரத்த, ராமன் கிளியைப் பிடித்துக் கொள்ளுகிறாராம்.
என்னுடைய உணவை நீ எடுப்பது என்ன நியாயம்னு கேட்டதும்,ராமன் சரணடைந்த கிளியை நான் விடமுடியாது என்று சொல்ல வாக்குவாதம் நடக்கும்.
என்ன ஆச்சுனு மறந்து போச்சு.
இந்தப் படத்தில் ராமர் ஏன் நீல மேக ஸ்யாமளனாக இல்லை என்பது என் கவலை.:-)
துளசி ராகா.காமில் போய்க் கேட்கிறேன்.
நன்றிப்பா.
நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னு
என்ன நெகிழ்வான வார்த்தைகள்?
எங்கோ கொண்டுபோகிறது.
ராம நமமே திவ்ய ரக்ஷ்க மந்தரம்
தாமசம் செய்யாமல் ஜபி மனமே
சூரியனும் சந்திரனும் இரு கண்களாக உடையவனான
ராமச்சந்திரா உனக்கு சமானமாக உள்ளவர்கள் யார்
தீனசரண்யன் என்ற பேரை நீ காப்பதத வேண்டுமானால் என்னை காத்தருள்வாய்
வல்லி அம்மாவுக்கு வந்தனம்.பக்த பராதீனன் ராமனுக்கும் சீதைக்கும் மங்களம்
வரணும் தி.ரா.ச.
உங்கள் (மஹா பெரியவா) மெயில் வந்தது.
படித்துவிட்டு,
பின்னூட்டம் இட முடியவில்லை.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் எல்லாம் நடந்து முடிந்திருக்கும் உங்க ஊரில்.
அந்தப் படங்கள் இருந்தால் பதிவிட முடியுமா?
ரொம்ப நல்லா இருந்தது கதையும் சித்திரங்களும்.... நீ சாப்பிட்டியா அம்மானு ஒரு குழந்தை கேட்டால் தாயின் மனம் எவ்வளவு பூரிப்பு அடையும் என்ற நினைப்பே சிலிர்ப்பை எற்படுத்துகிறது.
சித்திரங்கள் இன்னும் கதைகளை விளக்குற மாதிரி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியாளின் தாள்மையான கருத்து.
உங்கள் அன்பிற்கினியாள்
வரணும் இனியாள்.
இந்தக் கதையில் தாய் ஏழை. கணவனை இழந்து பையனை வளர்ப்பதாக
நடக்கிறது.
எல்லொருக்கும் ஏக்கங்கள் இருக்கும்.அதுவும் அந்த நாட்களில் சொல்லவும் முடியாது.
அதுதான் பகவானே வந்துவிடுகிறார்.
படங்களை இன்னும் விரிவாகத் தேடுகிறேன்.
அப்புறம் பாருங்கள்:-)
நன்றி.
Post a Comment