அதீதம் என்று யாரையாவது சொல்ல
எல்லாமே நிறைய. அட்வைஸ்,ஆதரவு,அன்பு.
இதோ இந்த லின்க் பாருங்கள்.http://www.ilovegrandma.com/
அற்புதமான அழகான நினைவுகள்.
பதிந்த விதமும் இதம்.
இது பரவாயில்லை.
நாம பெற்ற குழந்தைகள் அவங்க பெற்ற குழந்தைகளை (?!)
எப்படி நடத்தணும்னு நாம பாடம் எடுக்கக்கூடாது.
அது டிஸாச்டர்.
பெருமைதான் பாப்பாக்கள் பிறக்கும்போது.
எங்களுக்கு9எங்க குழந்தைகள் பிறக்கும் போது) அப்போ வாயைத் திறக்க வழி கிடையாது.
திறந்தால் வென்னீர்தான் கிடைக்கும்.
குடிக்கத்தான்.:-)
பேசக் கூடாது.
நோ விசிட்டர்ஸ்.
இப்ப அப்படியில்லை.
பிறந்ததும் சக்கரைத்தண்ணி கொடுக்கக் கூடாதாம். சென்னையிலும் பார்த்தேன்.
நோ சுகர் ப்ளீஸ்!!
இதோ இங்கேயும் பார்க்கிறேன்.
சர்க்கரை,இல்லாட்டா க்ளுகோஸ் தண்ணீர் கொடுத்தால் ரத்தம் டைல்யூட் ஆகுமாம்.
பிறந்த பாப்பா பாட்டு வ்ரரட் வ்ரரட்டுனு கத்தும்போது,
ஒரு நரசம்மா ''ஓ, யூ நாட்டிபாய். ஸ்க்ர்ரிமிங் ஆல்ரெடி/''னு வித விதமான சத்தம் எழுப்பியபடி பாப்பாவை ஒரு பண்டில் செய்து முகம் மத்திரம் தெரியறபடி உருட்டி விட்டுப் போய்விடுவார்கள்.
எனக்கோ கையும் காலும் பறக்கும்.
ஒரு துளி தண்ணீர் கொடுத்தா என்ன குறைவுனு தோன்றும்.
கிடையாது. முடியாது.
வீட்டுக்கு வந்தப்புறம் நம்ம ராஜ்ஜியம்தானேனு நினைச்சீங்க....நோ சான்ஸ்.
அதான் எல்லாம் நெட்டில பார்த்து வச்சு இருக்காங்க.
போதாக் குறைக்கு ஒரு பேபி புத்தகம். அதில
பிறந்த அன்னிலேருந்து ஒரு வயசு வரை
என்ன நடக்கும்.என்ன செய்யலாம் எல்லாம் பட்டியல் போட்டு வச்சு இருக்காங்க.
அதுதான் பெத்தவங்களுக்கு வேத பாடம்.
சின்னவனைப் பற்றி இப்போ எழுதக் கூடாது.அதனால் பெரிய பேரனைப் பற்றீ எழுதுகிறேன்.:-)
அவன் பிறந்து ஒரு மாதத்துக்கெல்லாம்
சரியாக ஜீரணம் இல்லாமல் , மலச்சிக்கல் பிரச்சினை.
ஊரில என்ன செய்வோம்?
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை போதும்.
பாலில் கரைத்து பாலாடையில் வைத்துப் போட்டிவிடலாம்.
அது கூட வேண்டாம். கொஞ்சம் ஓல்ட் மெதட்.
மில்க் ஆஃப் மக்னீஷியா இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம்.
அதுவும் இப்போ ஆகாதாம்.
நேச்சுரலாக தானே சரியாகி விடும்.
என்ன பாப்பா ஞொய்னு அழுது கொண்டே இருக்கும். இல்லாட்டா வீல் வீல் கத்தல் போடும்.
ரெண்டு நாளாச்சு மூணு நாளாச்சு. குடல்
அசைந்து கொடுத்தால் தானே.
நான் திராட்சைப் பழமாவது வென்னீரில் ஊற வைத்துக் கொடுக்க நினைப்பேன்.
அப்போது இவங்க இருந்த இடத்தில்,
நம்ம இந்தியன் ஒருவர்தான் குழந்தைநல மருத்துவர்.
அவர் ரூல் போட்டது நாட்டுமருத்துவம் கூடாது.
அவங்க அம்மா அப்பாவும் அவரை இங்கே வளர்த்து இருப்பாங்களோ.:-)
ரெண்டு நாள் பொறுத்துப் பார்த்தேன்.
கிஸ்மிஸ் அதான் உலர்ந்த திராட்சையை நன்றாக கழுவிவிட்டு, சூடானத் தண்ணீரில் போட்டு, அந்த ஜூஸைக் குழந்தைக்கு உட்டிவிட்டேன்.
அவனும் சாப்பிட்டான். அடுத்த நாள் காலையில் 'பிக்ஜாப் டன்.'
முதல் நாள் இந்தப் பசங்க வெளில சினிமா பார்க்கப் போனது வசதியாப் போச்சு.
அடுத்த நாள் குழந்தை கலகலப்பாக விளையாடுவதைப் பார்த்து அம்மா அப்பாவுக்கு சந்தோஷம்.
பெண் மத்திரம் என்னை இரண்டு மூன்று நாட்கள் சந்தேகமாத் தான் பார்த்தாள்.
அம்மா ஏதாவது மருந்து கொடுத்தியா என்று கேட்காத குறைதான்.
நமக்குத்தான் சாமி நல்ல போக்கர் முகம் கொடுத்து இருக்காரே.
அப்பாவியாக இருந்து விட்டேன்.
அடுத்த பிரச்சினை வரும் வரையில.
அப்போது மாப்பிள்ளையே சொன்னார்
நாம வேணா வெளில போலாம்
அம்மா சரி செய்து விடுவார் என்று
சிரிக்கிறார்.
மீதி யிருந்த திராட்சைகளை வெளியில் போட மறந்து
விட்டு இருக்கிறேன்.
சின்க் பக்கத்தில் பார்த்து இருக்கிறார்.
இப்போதெல்லாம் டைரக்ட் டீலிங் தான்.