திருநரையூர் ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத சீநிவாசப் பெருமாள் கோவில் கும்பகோணம் டவுன்ஷிப்பிலிருந்து
3 மைல் தொலைவில் இருக்கிறது.
இந்த ஊரின் பழைமையான பிரசித்தமான இன்னோரு பெயர், நாச்சியார் கோவில்.
இங்கே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் நிறைய.
சன்னிதியில் பெருமாளுக்கு ஒரு அரையடி முன்னால் தாயாரின் சிலா ரூபம் இருக்கிறது.
முதல் தடவையாகப் பார்க்கும் போது ஒரே அதிசயமாக இருந்தது.இப்படிகூட அந்தக் காலத்தில் சிலை வடிக்க மனம் வந்ததா என்று. அப்புறம் தலபுராணத்தைக் கேட்ட பிறகுதான் புரிந்தது.
இங்கே இருக்கும் அருள் பாலிக்கும் தாயார் வஞ்சுளவல்லி , கணவராக வ்ரப்போகும் ஸ்ரீநிவாசரை விட மிகச் சிறியவளாக இருந்ததால், திருமகளை வளர்த்த ஹேமமஹரிஷி,
கேட்டுக்கொண்டாராம்.
அப்படி என்ன கேட்டாராம்?
என் பெண்ணுக்கு அவ்வளவாக உலகம் தெரியாது.நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்ல,
பெருமாளும் அவ்வாறெ தாயாரை முதன்மைப் படுத்திப் பார்த்து கொள்வதாக சொல்ல,
அன்றிலிருந்து தாயாருக்குத் தான் எல்லா மரியாதையும் முதலில் தரப்படும். திரு வீதி உலா கிளம்பினால் முதலில் தாயார் அப்புறம் தான் பெருமாள்.
இங்கே எழுந்து அருளி இருக்கும் கல்லினால் ஆன கருடன்தான் நம் இந்தக் கதையின் நாயகன்.
எந்த வைணவக் கோவில்கள் எதிலும் காணக்கிடைகாத காட்சி இங்கேதான் கிடைக்கும்.
ச்ரி கல் கருடன் என்று அழைக்கப்படும் பக்ஷிராஜா அவரெ விக்கிரகமாகவும் இருப்பார். அவரே வாகனமாகவும் புற்ப்பட்டு விடுவார்.
மிகப்பெரிய கருணையான உருவம்.இரண்டு கைகளும் தாயார் பெருமாளை ஏளப் பண்ணுவதற்கு தயாரான நிலையில் இருக்க, இறக்கைகள் விரித்து அவர் காட்சி தருவது மனத்தை பக்தியால் நிரப்பும்.
இவருடைய விசேஷம் என்ன வென்றால், உத்சவ காலங்களில் தாயாரையும் பெருமாளையும் தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவர் கிளம்பும்போது முதலில் ஒரு அடிக்கு நால்வர் போதும். 2ஆவது அடிக்கு எட்டு பேர். மூன்றாவது அடிக்கு 16 பேர் என்று கோவில் வாயிலை அவர்கள் அடையும்போது 64 நபர்கள் கருட வாகனனையும் அவனது பிராட்டியையும் தூக்கி நடப்பார்கள்.
வீதிஉலா முடிந்து கருடனைப் பார்த்தால் அவருக்கு முகத்தில் வியர்த்து விட்டு இருக்குமாம்.ஏன் தெரியுமா?
பெருமாளும் தாயாரும் உண்மையாகவெ அவர் மேது ஏறி ஊர்வலம் வருவதால் தான் இப்படி ஆகிறது
என்று சொல்கிறார்கள்.
திரும்பும் போது இதெ போல் கோவிலுக்குள் அடி எடுத்து வைதததும் 64, நபர்கள் 32 ஆகும்,பிறகு 16,8, 4 என்று சன்னிதி வந்ததும் கருடாழ்வார் கனம்
குறைந்துவிடுவாராம்.
.
சும்மா பார்ப்பதற்கே பக்ஷிராஜா நல்ல உயரமும் ஆகிருதியுடனும் இருப்பார். அவர் அணியும் ஆபரண்ங்களாக ஒன்பது நாகங்கள் இருக்கின்றன.
அவை அவருக்கு அடங்கி இருப்பதால் எல்லா விதமான தோஷம் தீர்க்கும் கருடாழ்வாராக காட்சி அளிக்கிரார்.
பக்ஷிராஜயதே நமஹ.
12 comments:
TEST
அருமை.
ஆமாம், படங்கள் இருந்தால் போட்டிருக்கலாமே.
எல்லாம் பேராசைதான்:-)))
nanRi thulasi. பக்ஷிராஜாவின் போட்டொ பதிய முடியவில்லை. ஏற்கனவே கல் கருடன் சார் பற்றிப் பதிவு செய்து இருக்கிறேன்.புகுந்த வீட்டுத் தாத்தா முதலில் எனக்கு அறிமுகம் செய்தது இவரைதான். அவர் வீட்டு முகப்புக் கதவில் இந்த சிற்பங்கள் இருக்கும். அந்தக் கதவு அற்புதமாக இருக்கும். எங்கே போச்சோ.எப்போ சிரமம் தோன்றினாலும் இவரைக் கூப்பிடு.பெருமாளைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடுவார் என்று அருமையாக விளக்குவார்.
அருமையான பதிவு. படித்தபோது கருங்குளம் கருடசேவை நினைவுக்கு வந்தது வள்ளி.
என்ன கும்பகோணம் பகுதி பற்றி
தொடர்ந்து எழுதறீங்க - அதுவும் யு.எஸ் ஸில் இருந்தபடி?
கும்பகோணம்வாசியா?
வாங்க சிஜி சார்.
நான் கும்பகோணம் மருமகள்:-)
தாமிரபரணி பிறப்பிடம்.
காவேரி புகுந்த இடம்.சென்னை வாழுமிடம்.
வல்லி!
அப்போ அப்போதே பெண்மையைப் போற்றித்தான் உள்ளார்கள். எனக்கு மிக புதிய செய்திகள். மேலும் திருநாரையூர்;எனக் கேள்விப்படதுபோல் உள்ளது. திருநரையூர்..இப்போதே அறிகிறேன்.
நன்றி
யோகன் பாரிஸ்
வாங்க யோகன்.
திருநரையூர் என்றுதான் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றாக
இந்த ஊரை அழைக்கிறார்கள்.
தெரு வாயிலில் இருந்தே பெருமாளைப் பார்க்கலாம்.
அப்படி ஒரு அமைப்பு.
அருமையான உரைப் பற்றி அழகான பதிவு வல்லியம்மா!
திருமங்கை ஆழ்வார் மட்டுமே 100 க்கும் மேல் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்த ஊர்!
நம்பியும் தாயார் வஞ்சுளவல்லியும் அழகோ அழகு!
அவர்களை விட தொண்டன், நம் கல் கருடன் இன்னும் அழகு!
பரையூரும் பாரம்தீரப் பார்த்தன் தன்
தேரையூரும் தேவதேவன் சேரும் ஊர்,
தாரையூரும் தண்தளிர் வேலிபுடை சூழ,
நாரையூரும் நல்வயல் சூழ்ந்த திருநறையூரே!
-திருமங்கை பெரிய திருமொழி
துளசி டீச்சர் ஊருக்கு ஒஸ்திந்தியா? டீச்சரின் பேராசைக்கு இதோ கல்கருடன் படம்!
சென்று வந்தோம் சிறப்பு மிக்க இவ்வாலயத்திற்க்கு..!
Post a Comment