![](http://photos1.blogger.com/x/blogger/4932/2669/320/538608/ist2_652782_chicago_o_hare_international_airport.jpg)
![](http://photos1.blogger.com/x/blogger/4932/2669/320/210066/1-O-Hare.jpg)
![](http://photos1.blogger.com/x/blogger/4932/2669/320/848978/01_001.jpg)
கிளம்பும்போது கூட வருவது சின்னவன்.
அவனுக்கு இங்கெ வேலை இருந்தது.
அம்மாவின் பயணத்துக்கு ஏற்றவாறு
நாட்கள் பதினைந்தையும் அமைத்துக் கொண்டான்.
காலை கிளம்பி சுரிக் வந்தோம்.
பரிசோதனை எல்லாம் முடிந்து
வெளியே வந்து என்னை எப்போதும் பிரியாத தண்ணீர் பாட்டில், தயிர் ,பால் வீட்டுக் கலந்த ததியன்னம்,(பின்ன!
ஏமாறுவேனா மறுபடி?)
எடுத்து போர்டிங் கேட் அருகே வரும்போது
மறுபடி ஒரு அம்மா வழியில் நின்றார்கள்.
மேம், நோ வாட்டர்,என்றாள்.
அப்புறம் என் தயிர் சாதத்தை விடுவார்களா.
சரி உள்ளதானே எடுத்துப் போகக் கூடாது,
வெளில லௌஞ்சில் சாப்பிடலாம்ப்பா என்றேன்.
அவனுக்கு தயக்கம் தான்.
வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)
அம்மா பாவம் என்று கூட உட்கார்ந்து கொண்டான்.
டப்பாவைத் திறந்ததும் சுற்று முற்றிலும் பார்வை
பதித்தேன்.
யாரும் கவலைப்படவில்லை.
இரண்டு வயதான் தம்பதியர் அருகில் வந்து'' போன் அப்பிட்டீட்''
என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
நறுமணம் மூக்கை எட்டியதும்
சின்னவனும் நானும் சாப்பிடுகிறேன் என்று
இன்னோரு தட்டில் எடுத்துக் கொண்டான்.
வயிறார சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.
தனிப் பரிசோதனையையும் முடித்துக் கொண்டு
விமானம் அருகே வந்துவிட்டோம்.
வாயிலில் இருக்கும்,வரவேற்பாளினி(?)
என் பெயரைப் படித்தாள்.
ஒரு வியப்பு கலந்த ஏதோ ஒன்றுடன்
கலந்த புன்னகையோடு''
ஓ the VIP from India''
என்றாளே பார்க்கலாம்.
அசடு வழிவதைதவிர வேறு தெரியவில்லை.
நகரும்மா என்றவாறு எங்கள் இருக்கைக்குக் கூட்டி வந்தவன்
சொன்னான்''
அம்மா நம் விவரம் கணினியில் பதிவாகி இருக்கும்.
அதுதான் உனக்கு எஸ்கார்ட் நியமித்ததும்
அவர்கள் உன்னை( உதவி தேவைப்படும் அம்மா)
சரியாகப் புரிந்து கொள்ளாமல் வி.ஐ.பி
என்று நினைத்துவிட்டார்கள்.
நான் கேட்டேன் ஏனப்பா, வி.ஐ.பி என்றால்
'இகானமி'யிலா பயணிப்பார்கள்?
என்று.
அவன் சிரித்துவிட்டான்.
ஒருவேளை நான்தான் உன்
மெய்க்காப்பாளர் என்று நினைத்து
நீயும் பாதுகாப்புக்காக
இப்படி வருவதாக நினைத்து இருப்பார்கள்.
''Enjoy the attention maa''
என்று தூங்கப் போய்விட்டான்.
அந்த வயதான உதவியாளர் (தலைமை)
அடிக்கடி அருகில் வந்து
so how are we?
do you like this airline?
என்று விசாரித்தார்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நானும் விளையாட்டில்
ஈடுபட்டு விட்டேன்.
நிறையப் பிடித்து இருக்கிறது. இந்த
ஏர்லைன் மாதிரி பார்த்தது இல்லை'
என்று கூறித் தூங்கிவிட்டேன்.
பத்து மணிநேரம் கழித்து சிகாகோ வந்து சேர்ந்தோம்.
7 comments:
சுவாரசியமாக இருக்கிறது!
Xlent..
Keep it up..
Surya
Dubai
நன்றி ஜீவா.
அந்த நேரம் மஹா தர்மசங்கடமாக இருந்தது.
பிறகு, போனப்போகிறது. சின்னக்
குழந்தைகளையும் இப்படித்தான் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று நினைத்து சமாதானப் படுத்திக் கொண்டேன்.:-)
நன்றி சூர்யா. படிக்க நீங்க ரெடி என்றால் எழுதுவதில் எனக்கு என்ன தயக்கம்!
//வெளில லௌஞ்சில் சாப்பிடலாம்ப்பா என்றேன்.
அவனுக்கு தயக்கம் தான்.
வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)//
வல்லியம்மா,
சங்கடமாக சாப்பிட்டதை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள். நம்ம சாப்பாட்டின் மணமே மணம் !
தொடரும் அருமையான எழுத்து நடையில் இருக்கிறது.
கண்ணன்,தாமதமாக வருவதற்கு மன்னிக்கணும்.
நம்ம சாப்பாடே ஐம்புலனுக்கும் விருந்துதான்.
அதாவது நமக்கு மட்டும்:-)
நன்றி கண்ணன்.அலுக்காமல் படிக்கிறீர்களே.
வல்லி
நல்ல பயணக் கட்டுரைதான்.
//வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)//
சுவிஸ் முழுவதுமே மணத்திருக்குமே.
மேலும், பிர்யாவின் பதிவில சிலேடைப் பாடல்கள் பார்த்தேன்.தவலுக்கு நன்றி.
தி.ரா.ச.அந்த பதிவுக்குரிய சுட்டியைத் தந்தார்.
Post a Comment