இது  ஒரு  தொடர்  பதிவு.  இதன்  முன்னோடி  சில  மாதங்களுக்கு  முன்னால் 
எழுதிய  நானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்
பதிவுக்கு sequel    என்று  வைத்துக்  கொள்ளலாம்.
அப்போதாவது  பட்டிக்காடு,பட்டணம்  என்று  பாவப்  பட 
ஒரு  இது?  இருந்தது.
இன்னோரு  எட்டு  வருடம்  கழித்து  வந்தாலும்
செய்த   கோளாறையே  திருப்பியும்  செய்தால்??????
பாவம்  என்  குடும்பம்.
இங்கெ  வருவது  என்று  தீர்மானித்ததும்,
முதல்  கேள்வி ' அம்மாவைத்  தனியா  அனுப்பக்  கூடாது.'
எஸ்கார்ட்  தேவை.
ஏன்னெனில்  எந்த  ஊருக்குப்  போனாலும்  அங்கெ  இறங்கினது  அந்த  ஊர்  மண்ணை  விழுந்து
கும்பிடுவது
என்  வழக்கம்.
அடடா மண் பாசம்  இல்லை...
காலுக்கும்  உடலுக்கும்  சம்பந்தம் விட்டுப்  போய்விடும்  சில  நேரங்களில்.
அது  பாட்டுக்கு  ஒரு  இடம்  போகும்.கண்  வேறே  எங்கேயோ  பார்க்கும்.
அப்புறம்  தடுக்கி விழக்  கேட்பானேன்.
amma,  ''why do  do you  stop  in  the  midway  so  suddenly?''!!
இது  என்  மகன்  அடிக்கடி  கேட்கும்  கேள்வி.
பெண்டாட்டி  கூட  வரும்போது  அம்மாவையும்  ஒரு
கை,ஒரு  கண் பார்த்துக்  கொள்ள  வேணும்னால்  கஷ்டம்தானே:-)
எங்க  வீட்டுக்காரர்  அதை  செய்யலாமேனு  கேக்கக்  கூடாது.
அவரோ  நீளக்  கால்  காரர்.
அவர்  ஒரு  அடி  எடுத்துவைத்தால்,
நான்  பின்னாடி வர   நாய்க்  குட்டி  மாதிரி
நாலு  கால்  பாய்ச்சலில்  வரணும்.
'உங்கம்மாவுக்கு  நடக்கக்  கத்துக்  கொடுக்கணும்டா' என்பார்.
''நீர்தானெ  சப்தபதியின் போது  பார்த்து
வாம்மா  என்றீர்கள்னு''  கேக்க  முடியுமா?
சரி,  இப்ப  நாம  சென்னை  விட்டு,துபாய்  வந்து
மீண்டும்  ஸ்விஸ்  ஏர் பயணம் ( தனியாக).
ஆச்சா?
அதுக்குப்  பிறகு  நடந்தது என்ன  என்பதை  அடுத்த  கட்டத்தில்  பார்க்கலாமா?
இன்னும்  பல  சில  காரணங்களால்
சின்னவன்  என்னை  அமெரிக்கா  கொண்டுவிடும்,
சேர்க்கும்  பொறுப்பை  எடுத்துக்  கொண்டான்.
 
7 comments:
பரிசோதனை.
எங்க மாமனார் மாமியாரும் இதே தான். சென்னையில் பல தடவை பார்த்திருக்கேன். மாமனார் வேகவேகமா நடந்து போயிடுவார். மாமியார் கொஞ்சம் தட்டுத் தடுமாறி கல் தடுக்கி நடந்து வருவார்கள். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். :-)
கல் ஒரு சின்னக் கல். தூள் என்று கூடச் சொல்லலாம்.
அது எனக்காகவே காத்திருக்கும்.
இன்னும் சில தம்பதியரும் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்க நிம்மதி.அல்ப சந்தோஷம்.
ஹீம்! எங்க அம்மாவும், அப்பாவைப்பற்றி இப்படித்தான் சொல்லுவாங்க!
ஜீவா நல் வரவு.
உங்க வீட்டிலியுமா/?
சரிதான்.:-)
//வேகவேகமா நடந்து போயிடுவார்......
கொஞ்சம் தட்டுத் தடுமாறி கல் தடுக்கி நடந்து வருவார்கள்//
ஆகா....இது அன்றும் இன்றும் என்றும் உள்ள ஒரு விடயம் போல் உள்ளதே! :-))))
அடடா,
இதுதான் வீட்டுக்கு வீடு வாசப்படினு பாடினாங்களா ரவி.
எங்க வீட்டுப்படியைக்கூட நான் மெதுவாத்தான் தாண்டுவேன்.:-)
Post a Comment