Blog Archive
Wednesday, December 27, 2006
ஸ்ரீ வைகுந்த ஏகாதசி
அடுத்துவரும் ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி.
மார்கழி வளர்பிறை பதினோராம் நாள் புண்ணிய தினம்.
நம் நம்மாழ்வாருக்குப் பரமபதம் கொடுக்க ஸ்ரீரங்கன் மனமுவந்து வரும் நாள்.
அவரோ பெருமாளைக் கண்டுவிட்டு மீண்டும் ஆழ்வார்திருநகருக்கே வந்து விட்டதாகச் சொல்லுவார்கள். அவரால் தன் (திருக்குருகூர்) ஆதிபிரானைப் பிரிந்து இருக்க முடியவில்லையாம்.
வைகுண்டம் போய்த் திரும்பி வந்த நாளை ஆழ்வார்திருநகரியில்
அங்குள்ள கோயில் பட்டாச்சார் உருகிச் சொல்லும்,விவரிக்கும் அழகைக் கேட்க வேண்டும்.
இந்த பக்தி நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை. ஒரு துளிப் புண்ணியமாவது இருந்தால்,
உலக மாயையிலிருந்து விடுபட்டு
இறைவனையும் அவனது அடியவரையும் நினைக்கலாம்.
இதோ சில வாய்மொழிகள்.
''சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின
ஆழ்கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் நாராணன் தமரைக் கண்டு உகந்தே''
திரு நாரணனைக் கண்டு ஆகாயமும்,
அது உடுத்த முகிலும் மத்தளம் கொட்ட,
கடலைகள் ஆர்ப்பரித்து ஆடினவாம்.
வாழி குருகூர்ச் சடகோபன் நாமம்.
வாழி நாரணன் திரு அடியார்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆஹா! என்ன தவம் செய்தேன் என்னரங்கனின் எழில்முகம் புன்னகைததும்ப அளித்துள்ளீர்களே வல்லிசிம்ஹன்!
'நாளும், பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும்,
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும்- துணை வருமே தமியேனை வளைந்து கொண்டே.
(திரு அரங்கத்துமாலை)
பதிவுக்கு பாராட்டு.
திருவரங்கப்ரியா
வைகுண்ட ஏகாதசி முன்னோட்டப் பதிவு நன்றாக இருக்கிறது அம்மா. சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்.
ஷைலஜா நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் வந்ததுக்கு.
அவன் பெயர் சொன்னதும் துணை வந்த உங்களை என்ன என்று சொல்வது.
அரங்கனுக்கு அடியார்களைச் சேர்த்துக் கூட்டமாக பாடிப் பரவ வைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.நன்றிம்மா.
குமரன் பெருமாள் வீதி வலம் வரும் முன்னே சீவேலி புறப்பாடு இருக்கும்.
இந்தப் பதிவும் அதுதான்
.
பின்னால் வரப்போகும் (மற்றவர்களின்) அருமையான எழுத்துக்களுக்கும் பாடல்களுக்கும்
இது கட்டியம் கூறுகிறது.
நன்றிப்பா.
ஆழ்வார் மோட்சம் குறித்த முன்னோட்டப் பதிவு அருமை வல்லியம்மா!
நம்பெருமாளையும் கண்குளிரக் காட்டினீர்களே நன்றி.
பாயும் நீர் அரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும்
மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியர் ஒர்க்கு அகலலாமே!
கண்ணபிரான்,முன்னோட்டம் நடந்து விட்டது .இன்னும் வரும் பதிவுகளில் எம்பெருமான் பெருமை மாதவிப் பந்தலில் காணலாம்.
வல்லி அம்மா நீங்கள் சொன்ன மாதிரியே வைகுண்ட ஏகாதசியைப் பற்றி எழுதியுள்ளேன்.இன்னும் சற்று விரிவாக எழுதவேண்டும் பிறகு பார்க்கலாம்.அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
Valli, I worked at Srirangam for nearly about 8 years. The festival is so much welcomed by all the people. Srirangam used to be loaded with bullock carts and you can see people thronging the temple from midnight onwards.. i really miss Srirangam and all the great fun we had. thanks for this beautiful narration.
dear Delphine,
thank you for visiting.
it seems we have been going around the same places at different times.
yes it is good to have all our folks together for these kinds of activities.
Post a Comment