


மகிழ்ச்சி தரும்
இந்தத் தீபங்களும் கோலங்களும் நமக்கே உரிமை என்பதில்தான் எத்தனை இன்பம்.
அதுவும் இங்கே வந்த பிறகு நம்ம ஊரு ஞாபகம் தரும் எதுவுமே
உணர வைப்பது நம் பூர்வீகர்களின் முன்யோசனைதான்.
இந்தக் குளிரில் வாசலில் கோலம் போட முடியாதுதான்.
ஆனால் உள்ளே அலமாரியிலோ, அறையின் ஒரு சுத்தமான ஓரத்திலோ
இருக்கும் தெய்வங்களைப் பார்க்கும் போது '
என்னப்பா, ! எப்போதும் என்னை விட்டு
விடாதே. நான் உன்னை மறந்தாலும்
நீ என்னைப் பிடித்துக்கொள்.
ந தர்ம நிஷ்டொஷ்மின்
ந சாத்மவேதி
ந பக்திமான் த்வம் சரணாரவிந்தே
அகின்சனஹ:
அனன்ய கதிஹி
சரண்யஹ/
த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே.
அபராத சஹஸ்ர பாஜனம்
பதிதம்
பீம பவார்ணவோதரே
அகதிம்
சரணாகதம் ஹரே
கிருபயா கேவலம்
ஆத்மசாத் குருஹு//
இதை விட யார் சொல்ல முடியும்!!
அபத்தங்களின் சக்ரவர்த்தியான
என்னையும் காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு
என்றல்லவா சொல்கிறார்.
ஞானிகளைக் காப்பாற்றுவது பெரிய வேலை இல்லை
அவனுக்கு.
எனக்கு எல்லாம் தெரியும் '
என்று நினைப்பவர்களையும்
காப்பாற்றவேண்டும்.
அப்போதைக் கப்போது பெரியவர்களின் (சிறார் உட்பட:-))
பதிவுகளைப் படிக்கும்போது எத்தனை அருமையான செய்திகளை நாம்
படிக்காமல் விட்டோமே
என்று தோன்றுகிறது.
இனிமேலாவது
தொடர்ந்து படிக்க வேண்டும்.
4 comments:
arumaya solli irukkenga
//தொடர்ந்து படிக்க வேண்டும். //
அப்ப பேபி சிட்டிங்?
வாழ்த்து(க்)கள்
Thanks Kittu.
அதானே. துளசி.
சொன்னீங்களே சரியா ஒரு வார்த்தை.
நேரத்தைத் திருடித்தான் படிக்கணும்.
பேபீஸ்னு எழுதிக்கலாம்!!
Post a Comment