எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
ஊரை விட்டு வந்து 12 நாட்கள் ஆகிவிட்டன.
முதல் நாள்,அடுத்த நாள் விட்டுவந்த
வீடு பற்றிக் கவலை.
செடிக்குத் தண்ணீர் விட்டு இருப்பார்களொ..
ராத்திரி வாட்ச்மேன் வந்து இருப்பாரோ
டெலெபோன் பில் வந்ததோ,
அதை நம்ம வீட்டுப் பையன் ஒழுங்கா கட்டுமோ
முனிம்மா சரியா சாப்பிடுவாங்களொ,
வாசலில் கோலம் போடணுமே
(நாங்க வீட்டில இல்லைனு லக்ஷ்மிஅம்மாகாரு
அப்புறம் வரலாம்னு போய்ட்டாங்கன்னா/) :-)
துளசிச்செடி மழையில் நிறைய நனைந்து விட்டதோ.
இதெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து
துபை வரும் வரை.
அப்புறமும் தொடர்ந்தது.
எங்க வீட்டுக்காரருக்கோ
அவரோட காக்டஸ், அருமை டொபகொ டிரீ
இன்னும் பல.
கண்வர் ஆசிரமத்தை விட்டு வந்த
சகுந்தலையை விட சோகமாக இருந்தோம்.
எப்போவோமே இப்படி கிடையாது.
ஏதோ 2 வாரம் போவோம் வந்து விடுவோம்.
இந்தத தடவை 5 மாதங்கள் கொஞ்சம்
ஜாச்திதான்.
கடமையே கண்ணாயினராயிற்றே.
துபையிலிருந்து சூரிக்.
2 நாள் கழித்து ஸ்விஸ் ஏர் பயணம்.
10 மணிநேரம்.
இதொ இங்கெ வந்தாச்சு.
இனிமெ நம்ம குட்டிப் பையன் தீர்மானம்
செய்து எங்க எல்லோரையும்
பாக்கணும்னு நினைக்கிற நாளுக்குக்
காத்து இருக்கிறேன்.
எப்போதும் எல்லா நிகழ்வுகளிலும் நமது
தாய் தந்தையரை நினைவில்
கொண்டு வருவது வழக்கம்தானே.
அவர்களுக்கு இருந்த தெம்பும்,
முயற்சியும், எளிமையும்
ஒரு 10% இருந்தால் நான் சாதிக்கலாம்.
உழைப்பு,ஓயாத உழைப்பு அவர்களின் சொத்து.
நாகரீக வாழ்க்கை நம்மை கொஞ்சம் பலவீனர்கள்
ஆக்கி விட்டது என்று சில சமயம் தோணூம்.
இந்த ஊரிலும் நாம் தான் எல்லாம் செய்ய வேண்டி
இருக்கிறது.
10 மணி நேர உழைப்பாவது ஒரு வீட்டுக்கு
தேவை.
சீக்கிரம் எல்லா வேலைகளையும்
சுருசுருப்பாகக் கத்துக் கொள்ள வேண்டும்.
கார் ஓட்டத் தெரியாதது ஒரு நஷ்டம் தான்.
இவங்க கார்களும் பிழைச்சுட்டுப் போட்டும்.:-))
இந்தத் தடவை மசலாமாமி கதையெல்லாம் செய்யக் கூடாது.
வயசாயிடுச்சி இல்லியா. புத்தி வளர்ந்து விட்டது.
நான் ப்ப்ப்பெரியவளாகி விட்டேனே அம்மா.
வலைப் பதிவெல்லாம் போடரேன்.
அதனாலே நான் அறிவாளி.
நாளை இங்கே நன்றி உரைக்கும் நாள்.
எல்லா அம்மாக்கள் அப்பாக்கள்
குடும்பம் கூடும் நாள்.
வழியெங்கும் காத்து இருக்கும் கார்கள்.
கடையெல்லாம் மக்கள்.
காற்றில் டர்க்கி வாசனை.
பேஸ்ட் ரீஸ், சாக்கலெட் ம்ம்ம்ம் என்று நாசிகளில்
நுழைகிறது.
வீடுகளில் கொடிகள் பறக்கின்றன.
வாசல் தோட்டங்களில் தீப (மின்சாரம் ) வரிசைகள்
நம் கார்த்திகை அவர்களுக்கும் உண்டோ.
மீண்டும் வருகிறேன்.
9 comments:
மேடம்
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல்..
நாம் எங்கிருந்தாலும் என்ன நமக்குத் தொழில் எழுத்து. அதைத் தொடருவோம்.கருத்துக்களைப் பதிப்போம்.
ஆகா.. அங்கிட்டுப் போய்ட்டீங்களா!!
வாழ்த்துக்கள்
சிவபாலன்,
நன்றி.
அதே அதே.
ஜெட் லேக் முடிஞ்சுருச்சு:-)))))
பழைய ஃபார்முக்கு வந்தாச்சு.
துளசிக்கு ஒரு குடை வச்சுட்டுப் போயிருக்கலாமுல்லே? :-)
வாங்க பொன்ஸ்.
ஆமாம் ஆறு மாசம்னு நினைச்சுட்டு வந்து இருக்கேன். டேரா தூக்குனு மேலிடம்(என்)
உத்தரவு போட்டதுன்ன்னால் ஊரைப் பார்க்க வேண்டியதுதான்.
அட ஆமாம் துளசி, பெரிய குடையே வச்சிருக்கலாம்.:-))
அதுக்குள்ள செம்பருத்தி வளர்ந்து
குடை போட்டுடும்.
சிபா நான் போட்ட பின்னூட்டம் என்னா ஆச்சுனு தெரியலை.
தமிழ் எழுத்து மோகம் நிறையவோ இங்கே?
சாப்பிட்டு விட்டதே.
உங்க கருத்து தான் எனக்கும்.
நன்றி
தி.ரா.ச வாங்க,திருமண நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
Post a Comment