Blog Archive

Wednesday, November 08, 2006

செல்வோமா ஊருக்கு!!

poovomaa
பனிவிழும் மலர்வனம்
நாங்கள் போகும் புதுஇடம்..

கதவைத் தொட்டால் சில் சில்சில்
கண்ணாடி தொட்டாலும் அதேதான்

வீட்டோட கோவிச்சுகிட்டு வெளிய
போகலாம்
கராஜ் கதவுவரை.

தலையோடு காலாக உடல்
மறைத்து வாழும்
பாலைவனம்
சூடு இல்லை.

சிரஞ்சீவித்தனம்,
கொண்ட குளிர்
குப்பைகொட்டும் வரையாவது
ஓரம் போகாதா,.

எல்லாமே பிடிக்கிறது.
பேரன் சிரிப்பைப் பார்த்தால்.

வருகிறோம் கார்த்திகை கொண்டாட
வள்ளல் வாடைக் காற்றே
சற்றே விலகி இரும்.

கொட்டும் பனியே
குழந்தை மருள்வான்
மறைந்தே இரு.

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாருங்கள் வல்லியம்மா!
நல்வரவு!!

வல்லி அம்மா வருகிறார்,
வாடைக் காற்றே ஓடிப் போ!
கொட்டும் பனியே எட்டிச் செல்!
:-)

வல்லிசிம்ஹன் said...

ha ha.
நன்றி ரவி.

குளிருதுப்பா உங்க ஊரை நினைத்தால்.
வாடைக்காற்றம்மானு எல். ஆர்.ஈஸ்வரிஅம்மா குரலில் பாடலாம்
. உண்மையாகவே குரல் நடுங்கும்.
ரொம்ப தான்க்ஸ்பா.

துளசி கோபால் said...

'அமெரிக்கா வென்ற(???) வல்லி வாழ்க'ன்னு கோஷம் போட ஆள் வேணுமா?
தோ...கிளம்பிட்டேன்.:-)))( ஏன் வல்லி பிரியாணிப்பொட்டலம் உண்டுதானே?)

நல்லபடியா பயணம் முடிச்சுட்டு வாங்க வல்லி. அங்கே இருந்தும்
உங்க 'எழுத்துப்பணி' தொடரணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளஸி,
கட்டாயம் எழுதணும்.
இமெயில் இருக்கக் கவலை ஏன் நமக்கு.
உங்க ஊரு சாமி எங்க ஊரு சாமி எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க. பயணம் இனிதே அமையணும்னு,.
மீண்டும் சந்திக்கலாம்.

Anonymous said...

நல்ல படைப்புகள் வாழ்க
எழுத்துப்பணி தொடரட்டும்

தி. ரா. ச.(T.R.C.) said...

போய் வெற்றியுடன் திரும்பி வாருங்கள். திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

வல்லிசிம்ஹன் said...

hello thi.ra.sa.
sorry for typing in english.

arabu naadu vanthu thamiz olinthu kondu vittathu.
thank you for your timely wishes.

meendum paarkkalaam.

சேதுக்கரசி said...

//சிரஞ்சீவித்தனம்,
கொண்ட குளிர்
குப்பைகொட்டும் வரையாவது
ஓரம் போகாதா,.//

வெல்கம் to அமெரிக்கா! :)