காற்று, நெருப்பு
ஆகாயம்
நிலம்
...................................நீர்.........படைத்த இறைவன்......................................................................... இவைகள் எல்லாம் எமக்கு இலவசமே.
அம்மா அப்பா,திருமணம்
புத்திர செல்வங்கள்
சொந்த பந்தங்கள்,
இன்னும் எத்தனை அடங்கும் நம் பட்டியலில்.
நல்ல மனம்,
தெளிந்த புத்தி,
ஆரோக்கியம், எல்லாம் இலவசமாகக் கிடைப்பதால்
சில சமயங்களில்
அவற்றை மதிக்காமல் விட்டு விடுகிறொமோ.
இலவசங்களை மதிக்கும் நாள்
நாம் மற்றவரை ஏச மாட்டோம்.
பகைக்க மாட்டோம்.
இலவச சுதந்திரத்தில் எல்லோரும் வாழ
வகை செய்யும் மனசு கிடைக்கும்.
இலவசமாக வேண்டாம்.உழைப்பு.
சோம்பேறியாக்கும் இலவசமும் வேண்டாம்.
11 comments:
மேடம்,
//அவற்றை மதிக்காமல் விட்டு விடுகிறொமோ.//
உண்மைதான். நல்ல கேள்வி.
படங்கள் நன்றாக உள்ளது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு வல்லி...
நம்மை சுற்றி இருக்கும் அனைத்தும் இலவசம் தான்
//இலவசங்களை மதிக்கும் நாள்நாம் மற்றவரை ஏச மாட்டோம்.பகைக்க மாட்டோம்//
அருமை
வாழ்த்துக்கள் வல்லி
மங்கை
//இறைவன் இவைகள் எல்லாம் எமக்கு இலவசமே//
//சோம்பேறியாக்கும் இலவசமும் வேண்டாம்.//
சிந்திக்க வைக்கும் கருத்து.
ஆண்டவன் கொடுத்த இலவசம் நாம் மகிழ்ச்சியாய் வாழ, ஆண்டவர்கள் கொடுப்பது அவர்கள் கவலையின்றி ஆள
அன்பா இருக்கறதும் இலவசம்தானே?
கொடுக்கக் கொடுக்கக் குறையாத நிதியாச்சே!
வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
வாங்க சிவபாலன்.
அவதிப் பட்டு அடையும் எதுவும் நமக்கு
மறப்பதில்லை.
நாம் சுகமாக இருப்பதற்கு தன்னால் முடிந்ததைச் செய்யும் இயற்கைதான் கவனிக்கப் படாமல் போகிறது.
பள்ளி நினைப்புதான், தலைப்புக்குக் கட்டுரை எழுதுவது.
நன்றி.
மங்கை நல்லா இருக்கீங்களா.
ஏதாவது புதிதாக நீங்கள் எழுதி என் கண்ணில் படாமலிருக்கோ
இணையப் பக்கம் ஒரு மணிநேரம் தான் வரமுடிகிறது.
நன்றிப்பா.
மங்கை நல்லா இருக்கீங்களா.
ஏதாவது புதிதாக நீங்கள் எழுதி என் கண்ணில் படாமலிருக்கோ
இணையப் பக்கம் ஒரு மணிநேரம் தான் வரமுடிகிறது.
நன்றிப்பா.
மதி, இப்பதான் பார்த்தேன் உங்க
ஸ்மைலி கூட மஞ்சள் கலரில் இருக்கே!!
நல்ல சகுனம்தான்.:-))0)
நன்றிப்பா இங்கே வந்ததுக்கு.
நல்ல தலைப்புக்கு ஏதாவது எழுதணும்னு தோன்றியது.
துளசி, நீங்க சொல்றது உங்களுக்கு ரொம்பப் பொருந்தும்.
அன்பை விட்டு விட்டேனெ.
எங்க வீட்டிலே ஒரு சொல் உண்டு.
affection always flows downwards//
அதனாலே அன்பைத் துளி மறந்துவிட்டேன். :-))
/சோம்பேறியாக்கும் இலவசமும் வேண்டாம்/
உண்மை.
நல்ல படங்களுடன், நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.
சிவா,
வாங்க. படங்களை கூகிளில் தேடிவிட்டுப்
பதிவு போடுவது வழக்கமாகிவிட்டது.
நல்ல படைப்புகள் வெற்றி பெறட்டும்.
Post a Comment