Blog Archive

Tuesday, November 28, 2006

கிருஸ்துமஸ் வருகிறது





அக்கம்பக்கம் வீடுகளில் "தான்க்ஸ் கிவிங் '' நாட்கள் நடக்கும்போதே
கிரிஸ்துமஸ் விளக்குகள், வீட்டைச் சுற்றி அமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஓ,நம்ம கார்த்திகை இவர்களுக்கும் வந்து விட்டது என்று சந்தோஷமாக இருக்கிறது.
அத்தனை அழகாக அமைப்பு.
இருள் சேரும் நேரம், விளக்குகள் ஒளிவிட்டுவருவதைப் பார்க்கும்போது,
ஒவ்வொரு நாட்டுக்கும் கொள்கைகள் வேறு மாதிரி இருந்த
போதிலிம் ஒளி இருட்டுக்கு ஒளிதானே விடுதலை தரும்.!

அங்கே கார்த்திகைக்கு இரண்டு அகல்விளக்குகள் தினமும்

அந்திநேரத்தில்.

மார்கழி மாதம் காலை பிரம்மமுஹூர்த்ததிற்கும்

வாசலில் கோலம் போடுவதற்கும், நிலைப்படி அருகே

அகல்களின் தீபஒளி,

பக்தி,பெருமாள் என்றெல்லாம் நினக்காவிட்டலும் கூட

''தீப மங்கள ஜோதி நமோ நம.'' என்று கைகூப்பத் தோன்றும்.

இந்த ஊரில் வீடுகளில் மத பேதம் இல்லாமல் எல்லோருமெ சீரியல் லைட்ஸும்,ரெயிண்டீர்,ஸாண்டாக்ளாஸ் என்று வகை வகையான

காற்றைடத்த பலூன்கள்.

அதுவும் மாலையில் 4 மணிக்கு இருட்டு வரும்போது

இந்த விளக்குகள் , சத்தமில்லாமல் ஓடும் உலகுக்கு சாட்சியாக

ஒளிகொடுக்கின்றன.

அதுவும் ஒரு வீட்டில் கோவில் கோபுரம் போலவே அலங்காரம் செய்து இருந்தார்கள்.

இந்த உலகமும் நல்லதுதான்.

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.




Monday, November 27, 2006

அரோரா ஸ்ரீ ஸ்ரீனிவாசர் கோவில்




சிகாகோ தவிர வேறு இடங்களில் இருக்கும்
நண்பர்களுக்கான பதிவு இது.
இந்த காற்று சூழும் நகரத்துக்குக்
கோவில்கள் நிறைந்த ஊர் என்று கூட பெயர் சொல்லலாம்.

ராமர் இருக்கிறார்.
வெங்கடாசலபதி தன் இல்லத்தரசி அலர்மேல்மங்கை மற்றும் முருகன்,பிள்ளையார்,
சிவன் அம்பாள் , ஐய்யப்பன் என்று ஷண்மத
கோவிலாக இருக்கும் இடம் அரோரா என்ற

பகுதி, கிரேட்டர்

சிகாகோ வில் இருக்கிறது.
நான் கூட 'அரோஹரா ' என்று சப்தம் வருகிறதே
என்று நினைத்தேன்.

அங்கே கோவில் கொண்டு இருக்கும் பெருமாள்
சகல சாஸ்திர சம்பிராயத்தோடு

திருமலை திருப்பதி போலவே
அலங்காரமாக விளங்குகிறார்.

கோவில் மடப்பள்ளி எங்கே என்று தேட நினைத்தேன்.
வடை வாசனை மூக்கைத் துளைத்ததால்.

அதற்கென்று தனி இடத்தில் காண்டீன் ஒன்று இயங்குகிறது.
அதுதான் எல்லோரையும் மெயின் அட்ட்ராக்ஷனுக்கு
அடுத்தபடி. இழுக்கிறது.
இதுதவிர மாத முதலில் நடைபெறும் திருமஞ்சனம்,
பகல்பத்து இராப்பத்து எல்லா
விதமான உத்சவங்களின் போதும்
எல்லாக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும்

ஓரோர் விதமான உணவு வகைகளைக் கொண்டு
வந்து பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
இதெல்லாம் போன தடவை நான் இங்கே வந்த போது

பார்த்த கேட்ட விஷயங்கள்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சிக்காகோவைத்
தங்கள் உழைப்புக்கும், வாழ்க்கை மேன்மைக்கும்

தேர்ந்தெடுத்த இந்தியர்கள்

கோவிலை வளப்படுத்தித்


தமிழ் மொழி வளர்க்கும், சங்கீதம்,நடனம் என்று பலவிதமாகப்
பயிற்சிகள் நடைபெறும்
கலைக்கூடமாக என்று

பழைய காலக் கோவில் பரம்பரைக்

காட்சிகள் தோன்றுகின்றன.

இவையெல்லாம் துளசி என்னை அரொரா கோவிலா
என்று ஒரு வார்த்தை கேட்டதால்.
எழுதத் தோன்றியது.

மலர்கள்,
பல விதங்களில் பல வர்ணங்களில்
கோலாகலமாக வந்துசேர்கின்றன.

திருமணங்கள் மற்ற விழாக்கள் எல்லாமே
குறையின்றி மறை ஓதுபவர்கள்
துணையோடு நடக்கின்றன.

எல்லாவற்றிலும் அருமையான ஈடுபாடு தெரிகிறது.
சென்னை மாநகரின் (ஏன் மைலாப்பூரின்)

பல இளைய தலை முறைப் பெண்களையும்
வாலிபர்களையும் பார்க்க முடிந்தது இன்னோரு அதிசயம்.

மீண்டும் தொடரலாம்.
இவர்கள் பணி நன்று வளரட்டும்.

Saturday, November 25, 2006

இன்னுமொரு தமிழ் உலகம்

Posted by Picasa இங்கே வந்த முதல் தடவை எல்லாமே
புதிதாய் அழகாய்,சுத்தமாய் தெரிந்தது.

பயணங்கள் இனிமை.
எங்கே பார்த்தாலும் செழிப்பு.

வேலை செய்வது எளிமை.
அலுப்புத் தட்டவில்லை.
போன் செய்து விட்டு வரும் விருந்தினர்கள்.
அவர்களின் இந்திய விசாரணை

அழகான அரோரா கோவில்.
பராமரிப்பும் நன்றாக இருக்கிறது.
அங்கே,

இட்டிலி,பொங்கல் வடை ஒயிட் சட்டினி!
மெயின் அட்ராக்ஷன் எது என்று தெரியவில்லை.!

அட !இங்கும் ப்ளாக்கர்ஸ் மீட்.
வாழ்த்துக்கள் அனுப்பத்தான் முடியும்.

நன்றி நவிலும் விழாவுக்கு அடுத்தநாள் "கதவு உடைக்கும் சேல்"
டி வி பேப்பர் எல்லாவற்றிலும் கண்ணைக்கட்டும் விளம்பரங்கள்.

எல்லாமெ குளிரை மறக்கத்தானோ?

இங்கே வீட்டைச் சுத்தி இருக்கும்
நெய்பர்ஹூட் மக்களும் போக வர இருந்தார்கள்.
கைகளில் வழியும் பைகள்.

இரண்டு கார்கள் நிறையும் வீட்டு உபயோக சாதனங்கள்.
துணிமணி. விளையாட்டுப் பொருட்கள்,....
நானும் மகளிடம் கேட்டேன். எல்லா வருடங்களும் இது உண்டு
தானே என்று.

'ஆமாம்மா. எப்பவும் வாங்குவோம்.


சேவிங்ஸ் தானே ' என்று பதில் வந்தது.

எப்பவோ விளையாடின 'மோனோபோலி'
ஞாபகம் எனக்கு.

எல்லாம் அசுர வேகம்.
நம்ம விவேக் கம்பனியின் புத்தாண்டு விற்பனையும்
முதன்முதலாக வாங்கின சாண்ட்விச் மேக்கரும்,

அதற்காக வரிசையில் நகர்ந்ததும்
வீட்டுக்கு வந்து அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்ததும்,..
அடுத்து அடுத்து வந்த வருடங்களில்
அந்தப் புதுமையும் பழகிவிட்டது.

மீண்டும் பார்க்கலாம் ,.

Wednesday, November 22, 2006

ஊரு விட்டு ஊரு வந்து

எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

ஊரை விட்டு வந்து 12 நாட்கள் ஆகிவிட்டன.

முதல் நாள்,அடுத்த நாள் விட்டுவந்த
வீடு பற்றிக் கவலை.

செடிக்குத் தண்ணீர் விட்டு இருப்பார்களொ..
ராத்திரி வாட்ச்மேன் வந்து இருப்பாரோ

டெலெபோன் பில் வந்ததோ,
அதை நம்ம வீட்டுப் பையன் ஒழுங்கா கட்டுமோ

முனிம்மா சரியா சாப்பிடுவாங்களொ,

வாசலில் கோலம் போடணுமே

(நாங்க வீட்டில இல்லைனு லக்ஷ்மிஅம்மாகாரு
அப்புறம் வரலாம்னு போய்ட்டாங்கன்னா/) :-)

துளசிச்செடி மழையில் நிறைய நனைந்து விட்டதோ.
இதெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து

துபை வரும் வரை.
அப்புறமும் தொடர்ந்தது.
எங்க வீட்டுக்காரருக்கோ
அவரோட காக்டஸ், அருமை டொபகொ டிரீ
இன்னும் பல.

கண்வர் ஆசிரமத்தை விட்டு வந்த
சகுந்தலையை விட சோகமாக இருந்தோம்.

எப்போவோமே இப்படி கிடையாது.
ஏதோ 2 வாரம் போவோம் வந்து விடுவோம்.
இந்தத தடவை 5 மாதங்கள் கொஞ்சம்
ஜாச்திதான்.


கடமையே கண்ணாயினராயிற்றே.

துபையிலிருந்து சூரிக்.

2 நாள் கழித்து ஸ்விஸ் ஏர் பயணம்.
10 மணிநேரம்.
இதொ இங்கெ வந்தாச்சு.

இனிமெ நம்ம குட்டிப் பையன் தீர்மானம்
செய்து எங்க எல்லோரையும்
பாக்கணும்னு நினைக்கிற நாளுக்குக்
காத்து இருக்கிறேன்.


எப்போதும் எல்லா நிகழ்வுகளிலும் நமது
தாய் தந்தையரை நினைவில்

கொண்டு வருவது வழக்கம்தானே.

அவர்களுக்கு இருந்த தெம்பும்,
முயற்சியும், எளிமையும்
ஒரு 10% இருந்தால் நான் சாதிக்கலாம்.

உழைப்பு,ஓயாத உழைப்பு அவர்களின் சொத்து.
நாகரீக வாழ்க்கை நம்மை கொஞ்சம் பலவீனர்கள்
ஆக்கி விட்டது என்று சில சமயம் தோணூம்.


இந்த ஊரிலும் நாம் தான் எல்லாம் செய்ய வேண்டி
இருக்கிறது.

10 மணி நேர உழைப்பாவது ஒரு வீட்டுக்கு
தேவை.
சீக்கிரம் எல்லா வேலைகளையும்
சுருசுருப்பாகக் கத்துக் கொள்ள வேண்டும்.

கார் ஓட்டத் தெரியாதது ஒரு நஷ்டம் தான்.

இவங்க கார்களும் பிழைச்சுட்டுப் போட்டும்.:-))

இந்தத் தடவை மசலாமாமி கதையெல்லாம் செய்யக் கூடாது.
வயசாயிடுச்சி இல்லியா. புத்தி வளர்ந்து விட்டது.
நான் ப்ப்ப்பெரியவளாகி விட்டேனே அம்மா.
வலைப் பதிவெல்லாம் போடரேன்.
அதனாலே நான் அறிவாளி.


நாளை இங்கே நன்றி உரைக்கும் நாள்.
எல்லா அம்மாக்கள் அப்பாக்கள்
குடும்பம் கூடும் நாள்.

வழியெங்கும் காத்து இருக்கும் கார்கள்.

கடையெல்லாம் மக்கள்.
காற்றில் டர்க்கி வாசனை.
பேஸ்ட் ரீஸ், சாக்கலெட் ம்ம்ம்ம் என்று நாசிகளில்
நுழைகிறது.
வீடுகளில் கொடிகள் பறக்கின்றன.

வாசல் தோட்டங்களில் தீப (மின்சாரம் ) வரிசைகள்
நம் கார்த்திகை அவர்களுக்கும் உண்டோ.

மீண்டும் வருகிறேன்.

Sunday, November 19, 2006

தமிழ் பேசலாம்

நல்ல வேளை. தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்ப்புக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, November 08, 2006

செல்வோமா ஊருக்கு!!

poovomaa
பனிவிழும் மலர்வனம்
நாங்கள் போகும் புதுஇடம்..

கதவைத் தொட்டால் சில் சில்சில்
கண்ணாடி தொட்டாலும் அதேதான்

வீட்டோட கோவிச்சுகிட்டு வெளிய
போகலாம்
கராஜ் கதவுவரை.

தலையோடு காலாக உடல்
மறைத்து வாழும்
பாலைவனம்
சூடு இல்லை.

சிரஞ்சீவித்தனம்,
கொண்ட குளிர்
குப்பைகொட்டும் வரையாவது
ஓரம் போகாதா,.

எல்லாமே பிடிக்கிறது.
பேரன் சிரிப்பைப் பார்த்தால்.

வருகிறோம் கார்த்திகை கொண்டாட
வள்ளல் வாடைக் காற்றே
சற்றே விலகி இரும்.

கொட்டும் பனியே
குழந்தை மருள்வான்
மறைந்தே இரு.

Sunday, November 05, 2006

"இலவசம் " -தேன்கூடு போட்டிக்கு


காற்று, நெருப்பு

ஆகாயம்
நிலம்
...................................நீர்.........படைத்த இறைவன்......................................................................... இவைகள் எல்லாம் எமக்கு இலவசமே.

அம்மா அப்பா,திருமணம்

புத்திர செல்வங்கள்

சொந்த பந்தங்கள்,

இன்னும் எத்தனை அடங்கும் நம் பட்டியலில்.

நல்ல மனம்,

தெளிந்த புத்தி,

ஆரோக்கியம், எல்லாம் இலவசமாகக் கிடைப்பதால்

சில சமயங்களில்

அவற்றை மதிக்காமல் விட்டு விடுகிறொமோ.

இலவசங்களை மதிக்கும் நாள்

நாம் மற்றவரை ஏச மாட்டோம்.

பகைக்க மாட்டோம்.

இலவச சுதந்திரத்தில் எல்லோரும் வாழ

வகை செய்யும் மனசு கிடைக்கும்.

இலவசமாக வேண்டாம்.உழைப்பு.

சோம்பேறியாக்கும் இலவசமும் வேண்டாம்.


Thursday, November 02, 2006

மாலைப் பொழுதினிலே ஒருநாள்

Posted by Picasa தெய்வத்தம்பதியருக்கு நமஸ்காரங்கள்.
எம் எஸ் அம்மா பாடலகள்
எல்லாமே அமுதம்,.
அதிலே பக்திப் பாடல்கள்
வெகு வாக எல்லோரையும் ஈர்த்தாலும்,
என்னை மிகவும் கட்டிப்போடும், சொக்க வைக்கும்
சில கானங்கள், தமிழ்ப் பாடல்கள் சில.

அவற்றில் ஒன்று இந்த மாலைப் பொழுதினிலே
பாட்டு.
குரல் குழையப் பாடுவார் தெரியும்.
மனம் அப்படியே நெகிழும்..
அதுவும் உண்மை,.
ஆனால் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் ஒரு
மங்கை தன் முருகனை உண்மையாகவே பார்த்தால் எப்படியெல்லாம் உணர்ந்திருப்பாளோ,

அதை நம்ம எம் எஸ் அம்மா
அப்படியெ கண் முன்னே கொண்டு வருவதாகத்
தோன்றும்.

கல்கி அவர்களின் பாடல் என்று நினைக்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

இந்தப் பாடலைப் பதிவோட இணைக்க ஆசை.
ஆனால் அந்த முறையெலாம் கற்கவில்லை.

இதோ அம்மாவும் பாடலும்.


மாலைப் பொழுதினிலே ஒருநாள்
மலர்ப்பொழிலினிலே...
கோலக்கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே....

மாலைக்குலவு மார்பன்
வடிவில் மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே
விழுங்குவான் போல் விழித்தான்.

நீலக்கடலினைப் போல்
என் நெஞ்சம் நிமிர்ந்து பொங்கிடினும் ....

நாலுபுறம் நோக்கி...நாணி நான்
யாரிங்கு வந்ததென்றேன்.

ஆலிலை மேல் துயின்று, புவனம்
அனைத்துமே அளிக்கும்...

மாலின் மருமகன் யான்,
என்னையே வேலன் முருகன் என்பார்.

சந்திரன் வெள் கு ருகும் முகத்தில்
சஞ்சலம் தோன்றுவதேன்

சொந்தம் இல்லாதவளோ
புதிதாய்த் தொடங்கிடும் உறவோ??

முந்தைபிறவிகளில் உன்னை நான்
முறையினில் மணந்தேன்...
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏனிந்த ஜாலம் என்றான்
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏனிந்த ஜாலம் என்றான்.

உள்ளம் உருகிடினும்
உவகை ஊற்றுப் பெருகிடினும்
உள்ளம்ம்ம்ம் உருகிடினும்
உவகை ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத்தனமாகக் கண்களில்

கனலெழ விழித்தேன்.

புள்ளி மயில் வீரன்
மோஹனப் புன்னகைதான் புரிந்தான்..

துள்ளி அருகில் வந்தான்
என் கரம் மெள்ளத் தொடவும் வந்தான்.
துள்ளி அருகில் வந்தான்
என்கரம் மெள்ளத் தொடவும் வந்தான்.

பெண்மதிப் பேதமையால்
அவன்  கைப் பற்றிடும் முன் பெயர்ந்தென்...
கண் விழித்தே எழுந்தேன்
துயரக் கடலிலெ விழுந்தேன்....

வண்ணமயில் ஏறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்...
கண்கள் உறங்காவோ?
அக்குறைக் கனவைக்  கண்டிடேனோ ...........

மாலைப் பொழுதினிலே
ஒருநாள் மலர்ப் பொழிலினிலே.......

ரீங்கரிக்கும் அம்மாவின் குரலிழைந்து
பாடல் முடிவடைகிறது.
என்னதவம் செய்தோம் இறைவா
இந்தக் குரல் கேட்பதற்கே!!

அமுதசுரபி இல்லையா?

இன்று வேடிக்கை வினை இரண்டும் கலந்த

இரு செய்திகளை இப்போது பார்த்தேன்.

தொலைக்காட்சி செய்திகளில்.
ஒன்று மூன்று மாதமே ஆன பெண்குழந்தை
குற்றம் சாட்டப் ப்டது.
செய்த குற்றம் பஸ்ஸில் கொள்ளை அடித்ததாம்.
அந்த இளம் மொட்டு குட்டிப் பாப்பா


அம்மா கையில் தூங்கிய காட்சி

எனக்கு தொண்டை அடைத்தது.
காவல்காரர்களுக்கு
என்ன ஆச்சு?
Fஐஆர் பதிவு செய்து விடுதலை செய்தார்களாம். இப்படிக்கூட நடக்குமா?
அடுத்து நான் பார்த்தது
நகைச்சுவை காட்சிகள் தரும் அரசியல்வாதி ஒருவரின்

அபத்தம்.
வெளிநாட்டு அரசகுடும்பம் வந்து இருக்கிறது.
அவர்களைக் கிராமப் பஞ்சாயத்து

நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றவர்,
பேசினது என்ன தெரியுமா?

எங்கள் இந்தியாவில் பிச்சை எடுக்கும் பழக்கும் ஆதிகாலத்திலே இருந்து இருக்கிறது.
அதனால நானும் அதை
செய்யப் போகிறேன்,
மாண்புமிக்க அரசரும் அரசியும்
என் பிச்சை பாத்திரத்தில் உதவி
இட வேண்டும்.
'பவதி பிட்சாம் தேஹி'

அவர் யாருக்கும் உதவி வாங்கித் தரட்டும்.
ஆனால் பாரத பாரம்ப்ியம் என்று ஏன் சொல்ல
வேண்டும்?

நம்ம ஊரில் தானம் செய்தவர்களே இல்லையா?
கர்ணன்,தர்மர் என்று ஆரம்பித்து

கடையேழு வள்ளல்கள், ஆபுத்திரன்,மணிமேகலை
என்று வளர்ந்து, ஏன் இப்போ
நம்ம எம்.எஸ் அம்மா செய்யாத
தர்மமா.
தனக்குக் கிடைத்த அத்தனை செல்வங்களையும்
கொடுத்தவர்கள் தானே அவர்கள்?
ஒரு அரசியல் வாதி, பொறுப்பில் இருப்பவர் பேசும் சொற்களா இவை./
தவறு இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
எதற்காக இப்படிப் பேச வேண்டும்?