Blog Archive

Wednesday, October 18, 2006

சதிஅனுசூயா ஸ்ரீதத்தாத்ரேயா


ரி மஹ
அனுசூயா தவம் இருந்து வேண்டியது, மும்மூர்த்திகளின் எல்லா நலனும் பொருந்திய ஒரு குழந்தைக்காக.
நாரதர் அனுசூயாவையும், அவள் கற்பின் மேன்மையையும் பற்றிக் கூறிய புகழ் மாலையைக்
கேட்ட மூன்று தேவிகளுக்கும்
அவளை பரிசோதிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

அவர்கள் ஏன் இந்த மங்கையைச் சோதிக்க வேண்டும் என்ற கெள்விகெல்லாம் இப்போது போக வேண்டாம்.
(என்னிடம் பதில் இல்லை என்பது வேறு விஷயம்:-) )
அவர்கள் உடனே தங்கள் தங்கள் பதிகளைஅத்ரிஷி சப்த ரிஷிகளில் ஒருவர். அவரின் ஒழுக்கம் மிகுந்த மனைவி அனுசுயா.
அவளுக்கு சதி அனுசூயா என்ற பெயர் வந்தது எப்படி என்பது அனைவரும் அறிந்ததே. அவளின் அழகே அதற்கு
முதல் காரணமாக இருந்தது. அவளின் அழகையும் பதிவிரதா தவத்தையும் கேள்விப்பட்ட மூன்று தேவியர், லக்ஷ்மி,சரஸ்வதி, பார்வதி தேவியரும் அவளைப் பரிசோதிக்க விரும்புவதாக கதை ஆரம்பிக்கும்.
நாரதர்தான் எப்பவும் போல் ஆரம்பிக்கிறார்.
அதற்கு முன்னாலேயெ அவருக்கு 'அனுசூயா குழந்தைவேண்டும் என்று' தவம் புரிவதும் தெரிந்து இருந்தது.
அதுவும் அவள் ஆசைப்படுவது சாதாரண குழந்தைக்கு இல்லை.
எப்பவுமே நாம் பெரிய பொருளுக்கு ஆசைப்பட்டு முயற்சி செய்தால்தான் கொஞ்சமாவது முன்னேறுவோம்
என்பது அவர்களுக்கு எந்த மெனேஜ்மெண்ட் வகுப்பில் சொன்னார்களோ.
அணுகி அனுசூயாவின் நேர்மை,பதிவிரதத்தைச்
சோதிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை வெளியிட்டனர்.
நமக்குத்தான் தெரியுமே, இந்த மும்மூர்த்திகளின்
பத்தினிகளின்  விரதம் பற்றி.
அவர்களும் யோசித்தார்கள்.. எப்படியும் அனுசூயாவின் தவம் நிறைவேற வேண்டும்,
அதற்காக அவளுக்குத் தங்கள் தரிசனமும் வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன்,
அவ்ரகள் குடிலுக்கு சன்னியாசி வேடம் தரித்து செல்லுகிறார்கள்.

பவதி பிக்ஷஅம் தேஹி ''
என்ற மூன்று குரல்களைக் கேட்டு வெளியே
வந்த அனுசூயா வந்திருக்கும் மூவரின்
தேஜஸைப் பார்த்து வியக்கிறாள்.

அந்த நேரம் தன் கணவர் அங்கு இல்லையே
என்று தோன்றுகிறது.
நீராடப் போயிருக்கும் கணவர் சார்பாக
அவர்களுக்கு உபசாரம் செய்து உட்கார வைக்கிறாள்.

அவர்களும் தாங்கள் வந்த வேலையை முடிக்க,
அவளிடம் தாம் அங்கே உணவு உட்கொள்ள வேண்டுமானால் அவள் ஆடையில்லாமல் தங்களுக்கு

அன்னமிட வேண்டும் என்ற கோரிக்கையை
வைக்கிறார்கள்.
அந்தக் கணத்திலேயெ
அனுசூயாவிற்குப் புரிந்து விடுகிறது, வந்து இருப்பது

கடவுள்களே என்று.
தனக்கு வந்த சோதனையைச் சமாளிப்பது பற்றிச் சிந்திக்கிறாள்.

எப்போதுமே தன் கணவர் பாதங்களைச் சுத்தம் செய்து தன் சிரசில் தெளித்துக் கொள்ளும்
வழக்கம் அவளுக்கு உண்டு.
அந்த புனித நீர் இருக்கும் பாத்திரத்திலிருந்த

மிச்சம் உள்ள நீரை,
மனம் நிறைந்த பிரார்த்தனைகளோடு
முழு முதல் கடவுள்கள் மேல்
தெளிக்கிறாள்.
அவள் பிரார்த்திபடியே அவர்களும் சிறு குழந்தைகள்
ஆகி விடுகிறார்கள் .
ஏற்கனவே குழந்தைகளைப் பற்றி நினைத்து
ஏங்கி இருந்த அனுசூயாவுக்கு இந்த அழகுக் குழந்தைகளைப்
பார்த்ததும் தாய்மை உணர்வு மேலிடுகிறது.
பாலூட்டி, தொட்டிலில் இட்டுத் தாலாட்ட ஆரம்பிக்கிறாள்.
நீராடி வீடு திரும்பும் அத்ரி முனிவரும்
நடந்ததை தன் ஞானக்கண்ணால் அறிகிறார்.

அழகு கொஞ்சும் அந்தக் குழந்தைகளை ,
மூன்று சக்திகள்
ஒன்று சேரும் ஒரு குழந்தையாக ஆக்கிவிடுகிறார்.

அப்போதுதான் உருப்பெறுகிறார் தத்தாத்திரேயர்.

மூன்று தலைகள், ஆறு கரங்கள்
என்று
ப்ரம்ம ஞானம்,வைணவம், சைவ சித்தாந்தம்
என்று தத்துவங்களைப் புரிந்தவராக

தத்தாத்திரேயர் உருவாகி நின்றார்.

இதற்குள் கணவர்களைத் தேடி வரும்
லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி மூவரும் வருகிறார்கள்.
அதிர்ச்சி காத்து இருக்கிறது.
கணவர்களுக்குப் பதிலாக அவர்கள் சாயலில்
சிறுவன் நிற்கிறான்.
முனிவரிடம் அவர்களுக்கும் தயை செய்யும்படி வேண்ட

அவரும் மும்முர்த்திகளையும் விடுவிக்கிறார்.

அவர்களின் சக்தி தத்தாத்திரேயரிடம் தங்குகிறது.

அனுசூயாவுக்கும் அத்திரி முனிவர்க்கும் இன்னோரு புதல்வனும் பிறக்கிறான். அவன் சந்தாமா என்று
அழைக்கப் படுகிறான்.
அத்திரி,அனுசூயா வாழ்க்கையின் உச்சகட்டம் .

ஸ்ரீராமனும்,சீதை,லக்ஷ்மணனும்
ஆரண்யகாண்டத்தில்
அத்திரி ரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
சீதையை உபசரிக்கும் அனுசூயா அம்மா அவளுக்கு
ஆபரணங்கள் பூட்டி அலங்கரிக்கிறாள்.

இராமனுக்கே இன்னோரு தடவைக் கல்யாணம் நடந்ததோ என்று பிரமை ஏற்படுகிறதாம்.

இந்த ஆனந்தத்தோடு நாமும் விடை பெற்லாமா.

12 comments:

Geetha Sambasivam said...

வல்லி, அனுசூயாவை ஆடை இல்லாமல் வரச் சொன்னார்கள் என்பது பின்னால் சேர்க்கப்பட்டது. இதற்கு என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. புத்தகம் இருக்கிறதா பார்க்கிறேன். இல்லாவிட்டால் எனக்குத் தெரிந்த விஷயத்தை எழுதுகிறேன். என்னோட பதிவுக்கு வந்ததுக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நன்றி. கட்டாயம் அந்தக் காரணத்தை எழுதுங்கள். எல்லாம் கர்ண பரம்பரைக் கதைதானே.

புத்தகம் இல்லாவிட்டால் தெரிந்ததை சொல்லுங்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்பவுமே நாம் பெரிய பொருளுக்கு ஆசைப்பட்டு முயற்சி செய்தால்தான் கொஞ்சமாவது முன்னேறுவோம்
என்பது அவர்களுக்கு எந்த மெனேஜ்மெண்ட் வகுப்பில் சொன்னார்களோ//

:-))
உண்மை தான்; 'நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்' என்று சும்மாவா சொன்னார்கள்? நம் இலக்கியங்களில், பக்தியுடன் பல உலகவியல் விடயங்கள் பொதிந்து இருக்கும். அவற்றை எல்லாம் வெளிக் கொணர வேண்டும்.

"தத்தாத்ரேயர்" என்பதற்குப் பொருள் விளக்கம் சொன்னால் தெரிந்து கொள்வோம் வல்லியம்மா! முடிந்தால் சொல்லுங்களேன்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ கண்ணபிரான்.
அத்ரி மஹரிஷியின் புத்திரன் ஆனதால் ஆத்ரேயன்.
'தத்'(DHATH) என்பதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டும்.

என் சம்ஸ்க்ருதம் அறிவு மிகக் குறைவு.குமரன் சார் என் பதிவுக்கு எல்லாம் வரமாட்டார்.இல்லாட்டா அவரைக் கேட்கலாம்.:-)
தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியாக் கழிந்தது என்று தெரிய சந்தோஷம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என் சம்ஸ்க்ருதம் அறிவு மிகக் குறைவு.குமரன் சார் என் பதிவுக்கு எல்லாம் வரமாட்டார்.இல்லாட்டா அவரைக் கேட்கலாம்.:-)//

"குமர" குரு வேலை மிகுதியாக இருக்கிறார் போலும்; இருப்பினும் 2-3 பதிவுகளுக்கு முன், உங்கள் குறுங்குடி நம்பி பதிவில் தலைவர் வந்தாரே! (குருவை விட்டுக் கொடுக்க முடியுமா என்ன? :-)

"குமர" குரு வேலையில் ஆழ்ந்திருப்பாரேயானால், அவர் சீடர் ஆகிய அடியேன் பதில் உரைக்கலாம் என்றால் சொல்லுங்கள்;
எனக்குப் பெரியவர்கள் சொல்லி அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :-)))

வல்லிசிம்ஹன் said...

:-) கண்ணபிரான்,குரு வேலையாக இருப்பதற்குக் காரணம்
'பிறந்துவிட்டதா'.
சும்மா ஜஸ்ட்ஃபார் ஃபன் சொன்னெம்மா.

குருவின் சிஷ்யன் சொன்னாலும் சரிதான்.
எனக்கும் கீதை பிடிக்கும்!நன்றி.
ஷ்ரவண் தீபாவளிக்கு மத்தாப்பு விட முடிந்ததா?

துளசி கோபால் said...

//ஆடை இல்லாமல் வரச் சொன்னார்கள் என்பது பின்னால் சேர்க்கப்பட்டது//

எதுக்காம்? கவர்ச்சிக்காகவா? :-)))))

இன்னுமா சிஷ்யப்பிள்ளை விளக்கம் சொல்லலை?

காத்துக்கிட்டு இருக்கோமேப்பா.....

வல்லிசிம்ஹன் said...

துளசி,பின்னூட்டம் வரலியேனு கவலையாப் போச்சு.

எப்போது எது நடந்தாலும்''
பெண்கள் எப்படி சமாளீக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.
எனக்கும் பத்தினிகள் சொன்னதால் அவர்களின் கணவர்கள் இது போல் இன்னொருவர் மனைவியைச் சோதிப்பார்களா என்று
தோணும்.புராணம் என்பதால் அதன் உண்மையான அர்த்தங்களைப்
புரிய நிறையத் தெளிவு வேண்டும்.

நம்மதான் கன்ஃபூஸ்டு பார்டியாச்சே.:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷ்ரவண் தீபாவளிக்கு மத்தாப்பு விட முடிந்ததா?//

பதிவில் எழுதியது போல் கம்பி மத்தாப்பு பயந்து பயந்து கொளுத்தினோம் அம்மா! அதை ஏன் கேட்கிறீர்கள்? :-))

தத்தாத்ரேயர்=தத்+ஆத்ரேயர்
நீங்களே almost சொல்லி விட்டீர்கள் வல்லி அம்மா! நான் மேலும் சற்றே தான் இடுகிறேன்.

தத் என்றால் கொடுப்பது (தானம்). தத்து கொடுத்தல் என்று சொல்கிறோமே, அதே போல.
ஆத்ரேயருக்கும் (அத்ரி) அனுசூயைக்கும் கொடுக்கப்பட்டவர்;
ஆதலினாலே தத் ஆத்ரேயர்.

மார்கசீரிஷ மாதப் பெளர்ணமியில் அவதாரம். கர்ப்ப வாசம் எதுவும் இன்றி, அனுசூயை பெறாமலேயே, கொடுத்தாள். தவத்தில் சிறந்தவர்க்கு, கற்பில் சிறந்தவள், மூன்று ரூபத்தையும் சேர்த்துக் கொடுத்த கொடை.
ஆத்ரேயருக்குக் "கொடுக்கப்பட்டதால்" தத்தாத்ரேயர் ஆனார்.

இவர் யோகத்தில் சிறந்து, யோக குருவாக திகழ்வதாகவும் சொல்லபடுவது உண்டு. யோகிகள்
தத்+அ+த்ரய என்று சொல்வார்கள்.

த்ரய = மும்மலங்கள்
அ(அல்ல)+த்ரய(மூன்று) = மூன்று மலங்களும் இல்லாது இருக்க, கொடுக்கப்பட்ட யோகியானவர் தத்தாத்ரேயர் என்றும் யோக மார்க்கத்தில் சொல்லப்படுகிறார். யோகத்தில் இவர் மகா குருவாகக் கருதப்படுகிறார்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணபிரான் ரவி,
நீங்கள் எந்த ஊர்க்காரர்?
இத்தனை அருமையாகச் சொல்லிவிட்டீர்களே.

நிச்சயமாகத் த்ரூவன்,ப்ரஹலாதன்,ஞானசம்பந்தர்
வகையினர் சின்ன வௌஅதில் பெரியவர்களுக்கு உணர்த்தியது போல்

உங்கள் எழுத்து மிக எளிமையாகப் புரிகிறது.
மீண்டும் படிக்கிறேன்.

Geetha Sambasivam said...

வல்லி, கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. இருந்தாலும் தத்தாத்ரேயனுக்கு விளக்கம் கண்ணன் சொல்லி விட்டார். இது பத்திக் "ஸ்காந்த புராணத்தில்" வருகிறது. என்னிடம் கிருபானந்த வாரியார் எழுதிய "கந்தன் கருணை" இருந்தது. தேடிப் பார்த்தால் கிடைக்கவில்லை. ஆனால் அனசூயையி கற்பைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகள் அவள் பெருமையை உலகுக்கும், மற்ற ரிஷி பத்தினிகளுக்கும் எடுத்துச் சொல்லவே, அதாவது தங்கள் செயல் மூலம் காட்டவே வந்தார்கள். முதலில் தண்ணீரே இல்லாத "காமதம்" என்ற காட்டில் அத்திரி ரிஷியும், அனசூயையும் தவம் செய்து வந்த போது பஞ்சம் வர அனசூயை தன் தபோபலத்தால் கங்கையை அங்கே பிரவாகம் எடுக்கச் செய்கிறாள். ஏற்கெனவே தன் படிப்பு, அறிவு, தவம், சிவபக்தி, பதிபக்தி, கற்புத் திறனால் சிறந்த சகல செல்வங்களையும் பெற்றிருந்த அனசூயையின் புகழ் மேலும் பரவவே மற்ற ரிஷி பத்தினிகள் அவள் மேல் பொறாமை கொண்டதாகவும், முப்பெரும் தேவியரும் பொறாமை கொண்டதாயும் வருகிறது. உலகெங்கும் பஞ்சம் நிலவ அனசூயை இருந்த இடம் மட்டும் செழிப்பாக இருக்கவே அவளைச் சோதிக்கவும் அவளுடைய சிறப்பை உலகுக்கு எடுத்துக் காட்டவும் முப்பெரும் தேவியர் நாரதரிடம் இரும்புக் கடலைகளைக் கொடுத்து அனுப்ப அவரும் அனசூயையிடம் அதை வறுத்துக் கொடுக்கச் சொல்கிறார். அவளும் மறுபேச்சுப் பேசாமல் வறுத்துக் கொடுக்கிறாள். இதைக் கண்ட முப்பெரும் தேவியர் தங்கள் கணவன்மாரை அனுப்ப, அவர்கள் பிட்சை கேட்கிறார்கள். அப்போது வந்திருப்பது யார் என்று உணர்ந்த அனசூயை பிட்சை இடத் தயாராக, உடனேயே அவர்கள்,"அம்மா, யார் வீட்டில் குழந்தை உள்ளதோ, அங்கே தான் நாங்கள் பிட்சை எடுப்போம்." எனச் சொல்ல அனசூயை தன் கற்புத் திறத்தால் அவர்களையே குழந்தைகளாக்கித் தன்னிடமே வைத்து வளர்க்கிறாள். இது காரணமாக உலகின் நியமம் தடைப்பட்டு நிற்கவே அனசூயை அதையும் தானே செய்கிறாள். தேவியர் மூவரும் வந்து தங்கள் கணவன்மாரை வேண்ட குழந்தைகளைக் காட்டுகிறாள், அனசூயை. தங்கள் கணவன்மார் பழைய உருவம் பெற முடியாமலும்., தாங்களும் மாற்ற முடியாமலும் திகைத்த மூன்று தேவியரும் அனசூயையை வேண்ட அனசூயை அவர்களை முன்போல் மாற்றுகிறாள். அவளின் கற்புத் திறன் மட்டுமல்லாது தவத்தின் மேன்மையும் வெளிப்படுகிறது. அப்போது அனசூயை மும்மூர்த்திகளிடமும் தங்கள் அம்சத்தை இங்கேயே விட்டுப் போங்கள் என்று கேட்க அவர்களும், அப்படியே பிரம்மா, சந்திரனையும், விஷ்ணு, ஆத்திரேயனையும், ருத்ரன், துர்வாசரையும் விட்டுச் செல்கிறார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து கொண்ட ஒரே உருவம் தான் தத்தாத்ரேயர். மஹாவிஷ்ணு அத்திரி ரிஷிக்கு அந்தக் குழந்தையைத் தத்தம் செய்து (முறைப்படி) கொடுத்தார். தவஸ்வரூபமான இவர் இமயமலையில் இருந்ததாகவும், இப்போதும் இமயக்காடுகளில் சிலருக்கு இவர் தரிசனம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள். இது பற்றி என்னுடைய "ஓம் நமச்சிவாயா-15, 16 பதிவுகளில் எழுதி உள்ளேன்.
கூடுதல் தகவல்" இந்த அனசூயை ராமாயண காலத்தில் மிகவும் வயது முதிர்ந்தவளாகத் தனக்கு ஒரு பெண் இல்லை என ஏக்கம் கொண்டிருக்க அப்போது ராமரும், சீதையும் அங்கே வர சீதையைத் தன் நகைகளால் அலங்கரித்துப் பிறந்த வீட்டுச் சீதனம் என்று கொடுக்கிறாள். சீதையை ராவணன் தூக்கிச் சென்றபோது இந்த நகைகளைத் தான் தூக்கி எறிந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
திரு வாரியார் ஸ்வாமிகள் எழுதியதும், அவரால் உறுதி செய்யப்பட்டதும் ஆகும் இந்தத் தகவல்.

வல்லிசிம்ஹன் said...

அற்புதமான தத்துவம் கீதா.

நீங்களே இதப் பதிவாகப் போட்டு இருக்க வேண்டும்.

மனம் நிறைய நன்றி.
நமசிவயாவைப் பார்க்க இதோ போற்ன்.