Blog Archive

Saturday, October 14, 2006

திருக்குறுங்குடி நம்பி




நம்பி வருவோருக்கு நல்லது செய்பவன் நம்பியோ?
நம்பி என்றால் நல்லதொரு
ஆண்மகன் என்று பொருளாம்.

எம் பிரானை,ஆதியன் ஜோதியை, நம் பிரான்
அழகிய குறுங்குடி நம்பியை
சேவிக்கும் அதிர்ஷ்டம்

ஜெயா டி வி உபயத்தில் இன்று காலை கிடைத்தது.

நூற்றெட்டுத் திவ்விய தேசங்கள்
அத்தனையும் நேரே போய் பார்க்காத ,
அதிர்ஷ்டம்
சந்தர்ப்பம் வாய்ப்பு கிடைக்காத என் போல் சில
மக்களுக்கு இது நிஜமாகவே அரிய சேவை.

பொதிகையிலும் தினம் கோவில்
தரிசனம் கிடைக்கிறது.
பொதிகையில் (பாண்டி நாட்டு வைணவ)
நவதிருப்பதிகளையும்
போனவாரம்,

அவைகளின் முழு விவரங்களோடு
ஒளிபரப்பினார்கள்.
தலபுராணத்தை சுவையோடு கூறுவது யார் என்று
கணிக்க முடியாமல் போய் விடுகிறது.
அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிப்
பாராட்ட வேண்டும்.

நாம் தொடங்கிய இடத்திற்கே போவோம்.

எங்கள் மூதாதையர்களின் பிறப்பு இடம்
குறுங்குடி என்பதால் ஒரு தனி அபிமானம்.
19ஆவது நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்த்து
தான் எனக்கு அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பாட்டி சொல்லுவார், கூப்பிடு தூரத்தில்
வைகுண்டம் அதனால் புண்னிய காரியம் நிறைய செய்ய வேண்டும் என்று.
சிறு வயதில் ஒரு தடவையே போக முடிந்த இடம்
திருக்குறுங்குடி.
கோவில் மதிலும் படிக்கட்டுகளும்,
மலைமேல் கோவிலும்
பசுமை வளப்பமும், தூசியுடன் மண் ரோடு
கலங்காமல் ஓடும் நம்பியாறு, களங்கமிலாத
மக்கள்.
ஓ,நீ அந்த வீட்டுப் பொண்ணா.
கேள்விகள்.//

ஒட்டியிருக்கும் வீடுகள்.
சுவருக்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நின்று பேசிக்கொள்ளும் பெண்கள்.

ஆற்றங்கரையில் குளித்து குடமும், தோளில்
துவைத்த துணிகளும் வாயில் நாராயண நாமமும்

கொண்டு வரும் இல்லத்து அரசிகள்.

எல்லோருக்கும் மங்கை,வல்லி,திருமலை,திருவேங்கடம்,
கிருஷ்ணா, ரங்கா,அலர்மேலு இப்படித்தான் இருக்கும்.

வீட்டுத்தலைவர்கள் பெயரும் இதே போல்
நம்பி, திருமலை, திருவேங்கடம்,
கிருஷ்ணா,ரங்கா,... இப்படி போகும்.
அதனாலே எனக்குக் குழப்பம் வரும்.

//பாட்டி நீங்க யாரைப் பத்தி இப்ப சொல்லறீங்க.

ரங்கா சித்தியா ரங்கா சித்தப்பாவா? என்று
கேட்ட நேரங்கள் உண்டு//

எல்லோருக்கும் நம்பிமேல் அலாதி பற்று.

இங்கேதான் திருமங்கை ஆழ்வார் இறுதி நாட்களைக்
கழித்தார்.
பெரியாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
நம்மாழ்வார்
என்று பெரியோர்களின்

மங்களாஸாசனம் வாங்கிக் கொண்டவன்.
இங்கேதான் கைசிகனுக்கு வைகுண்டப் ப்ராப்தி கிடைத்தது
நம்பியின் கோவிலில் நடைபெறும்
கைசிக புராணம்
கார்த்திகை ஏகாதசி அன்று விமரிசையாக
இரவு முழுவதும் விழித்திருந்து பார்த்தாக பாட்டி சொல்லுவார்.
வாக்குத் தவறாத ஒரு ஏழை திருமால் பக்தனின்
கதை.
நம்பாடுவான் என்றும் பெயர் அவனுக்கு.

மாலைப் பாடி மகிழும் அவனுக்கு ஒரு
பிரம்மராக்ஷசனால் அபாயம் ஏற்படுகிறது.
அதற்கு அவன் வாக்குக் கொடுக்கிறான். திரும்பி
வருவதாக.
அப்படியெ திருமாலைத் தரிசனம் செய்து திரும்பும்
அவனது நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த அந்த துர்ப்பாக்கிய ப்ரம்ம்ராஷசன்
ந்மபாடுவானிடம் தன்னைக் கரையேற்றச் சொல்லி வேண்டுகிறது.
அப்படியே அவனும் தன் புண்ணிய பலன்களைத் தத்தம் செய்து கொடுத்து அந்த சாபத்திலிருந்து விடுவிக்கிறான்.

இதுவே கைசிக புராணம் என்று அழைக்கப் படுகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட எங்கள் ஊருக்குப் போய் வாருங்களேன்.

5 comments:

enRenRum-anbudan.BALA said...

//இவ்வலவு ஒஎருமை கொண்ட எங்கள் ஊருக்குப் போய் வாருங்களேன்.
//
நிச்சயம் போய் வர வேண்டும் !

பதிவை வாசித்ததும் மனது நிறைவாக இருந்தது. சில பாசுரங்களை தந்திருக்கலாமே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலா.எருமையைப் பெருமை
ஆக்கி விட்டேன்.

பாசுரங்களையும் பதித்து இருக்கலாம்.
அதிலும் அச்சுப் பிழை வர
வாய்ப்பு உண்டு.

மனம் போகிற போக்கில் கீபொர்ட் பயணிக்கவில்லை என்றாஆல் வம்புதானே?

குமரன் (Kumaran) said...

திருக்குறுங்குடி நம்பியைப் பற்றிய அறிமுகம் நம்மாழ்வார் பாசுரங்களின் மூலமும் கைசிக புராணத்தின் மூலமும் உண்டு. ஒரு முறை தற்செயலாக கார்த்திகை ஏகாதசி அன்று திருவரங்கத்தில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று இரவு முழுவதும் அழகிய மணவாளன் திருமுன்பு அரையர் சேவையில் கைசிக புராண நம்பாடுவான் திருக்கதையைச் செவிமடுக்கும் பாக்கியமும் கிடைத்தது. அவை எல்லாம் உங்கள் பதிவைப் படித்தவுடன் நினைவிற்கு வருகின்றன. மிக்க நன்றி வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன், பிறந்த வீட்டில் எல்லோரும் தல யாத்திரை போகும் போது என்னால் போக முடியவில்லையேனு தோன்றியது.
சரி பதிவு செய்து விடலாம் என்று எழுதிவிட்டேன்.

நம்பாடுவான் கதையை நம்முரில்
நாரதகான சபாவில் ஒரு உபன்யாசத்தில் வெகு உருக்கமாக கல்யாணபுரம் திரு ஆராவமுதன் சொன்னார். கைசிக ஏகாதசி அன்று அந்த டேப் போட்டுக் கேட்பேன்.
வேளுக்குடி கிருணனும் வெகு அழகாக உரையாற்றி இருக்கிறார்.
நீங்கள் இங்கே வரும்போது வாங்கலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வல்லியம்மா
வணக்கம். ஆகா இந்தப் பதிவைப் பாக்கும் முன் உங்கள் அந்தப் பதிவைப் (உங்கள் ஊர்)பார்த்து விட்டேன்! தமிழ்மண இடுகையில் அப்போது மேலே தெரிந்தது உங்க ஊர்ப்பதிவு!

என்னப்பா இது வல்லியம்மா நம்பி போட்டோவை மட்டும் போட்டு விட்டுட்டாங்களேன்னு அங்க நம்பியைப் பத்தி பின்னூட்டம் போட்டுட்டு வந்தா, இங்க நம்பி சிரிச்சிட்டிருக்கான் :-)
அடடா...
"வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே" என்பது இது தானோ?

நம்பாடுவான் அரையர் சேவை அவசியம் காண வேண்டிய ஒன்று! திருவரங்கம் மற்றும் ஆழ்வார் திருநகரியில் கார்த்திகை ஏகாதசியின் போது அருமையாகச் செய்து காட்டுவார் அரையர்!

//கண்ணபிரான் இதற்கு முந்திய பதிவு.....திருக்குறுங்குடி நம்பி
போட்டபோது வராத பின்னூட்டம் இப்போது விஷுவல்ஸ்க்கு வந்து இருக்கு.
:-))
நன்றி கண்ணபிரான்.ஷ்ரவண் எப்படி இருக்கான்?//

தங்கள் ஆசியும் அன்பும் கொண்டு, ஷ்ரவண் "பப்பு" நலமாகவே உள்ளான். பிள்ளைத் தமிழ் பாடல்களுக்கு ஒரு தனிப்பதிவு போடணும்னு ஒரு ஐடியா, அவனால் தான் வந்தது! சீக்கிரமே செய்யணும்! நன்றி வல்லியம்மா!