Blog Archive
Friday, October 06, 2006
மருதமலை முருகன்
அப்பனே முருகா இது வீட்டில அடிக்கடி கேட்கும் சப்தம்.
என்னடா பெருமாள் உலாவும் இடத்தில் இந்த முருகசாமி எங்கேருந்து வந்ததுனு கேக்க முடியாது.
அதுவும் இந்த மருதமலை முருகன் இருக்கானே இவன் எங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது
மலையிலிருந்து ஜோதியாகப் பார்த்து இருப்பான்.
காலையில் எழுந்ததும் சேவிக்க,
சூரியன் வருமுன்னே
மருதமலை நீல விளக்குக் கண்ணில் பட்டுவிடும்.
அரோகரா ஷண்முகா ஆறுமுகா ,குமரவேளே
என்று அவனைக் கைகூப்பிவிட்டுத் தான் கேட்டே{வாசல்}
திறப்பேன்.
கோயம்பத்தூரில் நாங்கள் இருக்கும்பொது(எங்க வீட்டுக்காரர் வேலையும் 3 வருஷத்துக்கு ஒரு
ஊரு.) எங்கள் வீட்டு வாசலில் இருந்து மருதமலை தெரியும்.
இப்போது அந்த எஸ்.ஆர்.பி நகரெல்லாம்
எப்படி மாறி இருக்கோ.
அப்போதெல்லாம் மருதமலை முருகனும் குருவாயூரப்பனும் மிக நெருக்கமாக
இருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும்
போய்ப் பார்க்கலாம்.
எங்க மாடி வீட்டு அம்மாவுக்கு குருவாயூரப்பனுக்குத்
தினம் பாலும் தேனும் தரவேண்டும்.
மாடியில் பூஜை மணி அடித்ததும்
எங்க வீட்டுப் பசங்க ஓடிவிடும்..
தினப்படி தேன்,கல்கண்டு கிடைத்தால் கசக்குமா.
அப்போது மழைக்கும் வெயிலுக்கும் மாற்றி மாற்றி
வரும் சளித்தொந்தரவு
பாடாய்ப் படுத்தும்.
அப்போது முருகன் விபூதி கொடுத்து
மார்பில் தடவச் சொல்லுவார் அந்த அம்மா
அசல் பழனியாண்டியாகி விடுவான் பையன்.
விக்ஸ் வேப்பரப்+ விபூதி நல்ல காம்பினேஷனாக வேலை செய்யும்.
காதிலோ தொண்டையிலோ தொந்தரவாயிருந்தாலும் ஒரு பால் அபிஷேகத்துக்கு சொன்னால் போதும்.
அப்போதுதான் தெரியும் இந்த மருதமலை முருகனுக்கு
நோய் தீர்க்கும் சக்தி அதிகம் என்று.
முனிவர் ஒருவர் தாகம் தாளாமல் மலையில்
மரத்தடியில் உட்கார்ந்து 'முருகா தண்ணீர் தண்ணீர்'
என்று அரற்றியதாகவும்
உடனே பெருமான் அருளால் தண்ணீர் ஊற்று
வந்ததாகவும் ஐதிகம்.
அவர் மருதமரத்தடி வேலா, மருதாசலபதி
என்று அழைத்ததால்
அந்த மலையே மருதமலை ஆனதாகச்
சொல்லுவார்கள்.
ஒரு குன்றும் குமரனும் மீண்டும் இணைந்தனர்.
எல்லா முருகன் பாட்டும் அழகு. ஆனால் மதுரை சோமு அவர்களின்
'மருத மலை மாமணியே
முருகய்யா' என்ற உருக்கும் குரல் எல்லோரையும்
கட்டிப் போடும்.
அவனுக்கு எங்கள் சார்பில் செலுத்த வேண்டிய
காணிக்கையும் இருக்கிறது.
குடும்ப அங்கத்தினர்கள் ஒன்று சேரும்போதுதான் போக முடியும் .
பார்க்கலாம் எப்போது கூப்பிடுகிறான் என்று.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//விக்ஸ் வேப்பரப்+ விபூதி நல்ல காம்பினேஷனாக வேலை செய்யும்//
மிகவும் உண்மை தான் வல்லியம்மா! அதுவும் ஆவி பிடிக்கும் போது கொதி நீரில் விக்ஸ்+விபூதி சூப்பர் காம்பினேஷன்!
இந்த மருத மரம் பற்றியும் கொஞ்சம் தேடிப் படிக்கணும். நாட்டு வைத்தியர்கள் மருத மரப் பட்டை வைத்து இருப்பார்கள்!
'மருத மலை மாமணியே
முருகய்யா' எத்தனை முறை கேட்டாலும் திகட்டுமோ? அதுவும் மலையதி, கடலதி...என அதி அதி என்று அதிரும் போது...மனதும் சேர்ந்தே அதிரும்!
கண்ணபிரான்,
ரொம்ப நன்றி.
எதுக்குனு நினைக்கிறீங்களா?
முதன்முதலில் பதிவைப் பார்த்து படித்து அக்கறையாகப் பதில் போட்டதற்கு.கடந்த காலங்களைப் பற்றி எழுதும்போது எல்லோரையும் அது கவரும்னு எண்ணமுடியாது.
பார்வைகள் தனி தானே.நன்றி.
புரட்டாசி,ஷ்ரவண் பையன், இன்று சனிக்கிழமை.
இதுவும் நல்ல காம்பினேஷன்தான்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கண்ணபிரான்,
ரொம்ப நன்றி.
எதுக்குனு நினைக்கிறீங்களா?
முதன்முதலில் பதிவைப் பார்த்து படித்து அக்கறையாகப் பதில் போட்டதற்கு.கடந்த காலங்களைப் பற்றி எழுதும்போது எல்லோரையும் அது கவரும்னு எண்ணமுடியாது.
பார்வைகள் தனி தானே.நன்றி.
புரட்டாசி,ஷ்ரவண் பையன், இன்று சனிக்கிழமை.
இதுவும் நல்ல காம்பினேஷன்தான்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கோபாலின் பேவரைட் பாட்டு'மதுரைமலை மாமணியே'
மதுரை சோமுன்னா அப்படி ஒரு ஈர்ப்பு. அவர் கோவையிலெ அஞ்சு வருசம்
எஞ்சிநீயரிங் காலேஜ்லே 'குப்பை' கொட்டுனப்ப ரெண்டு வாரத்துக்கொருதடவை
மருதமலை ட்ரிப் அடிப்பாராம்.
எங்க கல்யாணம் ஆனபிறகு 'தன்னுடைய பிரதாபத்தை'க் காட்ட ஒருக்கா அங்கெ
கூட்டிப்போனார்.
துளசி நம்ம பிளாகில பாத்தீங்களா,ஒரு பதில் சொன்னா இரண்டு தடவை வருது,.கோபால் படிக்கும்போது நாங்களும் அங்கே இருந்தொமோ என்னமோ.
என்ஜ்சினீயர்னா குப்பை கொட்டினாதானே வேலை ஆகும்.
நாம பாருங்க எஞ்சினீரிங் படிக்காமலயே கொட்டுறோம்.
முருகனை பற்றி நீங்கள் எழுதியதை படிக்க எனக்கும் பழைய நினைவுகள். இப்போ முருகன் தான் துனை. நானும் மருதமலை அடியில் தான் இருந்தேன்..ம் எல்லாம் நினைவாகி விட்டது.
sorry I meant "sydney murugan" தான் துனை. Missed that word. Good to remember coimbatore and that you too lived there.
FAIRY,
அன்பு ஃபேரி,
நல்ல நினைவுகள் எப்போதுமே நல்லவைகளாக இருக்கட்டும்.
வரப்போகும் நாட்களும் நல்லவைதான்.
அந்த நினைவுகள் இன்னும் பத்து வருஷங்கள் கழித்து நன்றாக இருக்கும்.
ப்ளாகர்ஸ் மீட் சிட்னியில் இருப்பதாக நியூஸ்.
ஆமாம், அங்கே இன்று ப்ளாக்கர்ஸ் மீட் செய்யராங்க இல்லியா. நீங்களும் போவீங்களா.
நாங்க கோயம்பத்தூரில் '70 டு 74 இருந்தோம்.
Post a Comment