Blog Archive
Sunday, September 24, 2006
நன்மை செய்யும் கோபம்
இங்குள்ள இராமனின் கோபம் நன்மையில் தான் முடிந்தது.
கிருஷ்ணனின் கோபம் உங்களுக்குச் சொல்ல இந்தப் பதிவு.
அத்துடன் அம்பரீஷ அரசனின்
மகிமையும் இன்னொரு சுவையான
நிகழ்ச்சி.
மஹாபாரதப் போர் ஆரம்பித்தவுடன்
அர்ஜுனனின் பக்கம் கண்ணன் இருப்பது முடிவானது. கண்ணனின் சேனைகள் கௌரவர் பக்கம்.
சகுனிக்குத் துரியோதனின் பேரில்
கோபம் வந்தது. கண்ணனோட சக்கராயுதம் ஒன்றே போதுமே நூறு சேனையை அழிக்க. நீ ஏமாந்து விட்டாய்.
போய்த் திருப்பி அவனைக் கேள். "நீ ஆயுதம் எடுக்கக் கூடாது என்று" ஏவிவிட்டான்.
கண்ணன் முதலிலேயெ தீர்மானம் செய்த விஷயம் அது.
துர்புத்தி சகுனிக்கு அது தெரிய நியாயம் இல்லை.
ஆனால் பீஷ்மருக்கு ஒரு சபதம்.
வாழ்க்கை பூராவும் பிரம்மச்சாரியாக
இருக்கத் தீர்மானித்ததைச் சொல்லவில்லை.
இந்த யுத்தத்தில் கண்னனை ஆயுதம் எடுக்க
வைக்க வேண்டும் என்பதே.
கண்ணன் கையால் மோக்ஷம் வேண்டும்
என்ற ஆசைதான்.
போர் அரம்பித்து உக்கிரமாகப் போகிறது.
இரண்டு தரப்பிலும் சில பல நபர்கள்
மறைகின்றனர்.
தேரோட்டியாகப் பணிபுரியும் கண்ணன்
அர்ஜுனனிடம் பீஷ்மரை வீழ்த்த வேண்டிய அவசியத்தை உணர்த்தித் தேரைப் பீஷ்மரைப் பார்த்து ஓட்டுகிறான்.
அவ்ோ இவனுக்காகத்தானெ காத்து
இருக்கிறார்.
அருச்சுனன் மேல் சரமழை வந்து விழுகிறது.
அதையெல்லாம் அவ்ன மேல் விழாமல் தன் மார்பில் வாங்கிக் கொள்ளுகிறான் கண்ணன்.
பார்த்தனுக்கொ வருத்தம்.
நிராயுத பாணிக் கண்ணனுக்கு அடி படுகிறதே என்று.
மேலும் மேலும் தன் தாத்தாவைத் தாக்குகிறான்.
அவரோ அசராமல் அம்புகள் விடும்போது
ஒரு அம்பு அருச்சுனன் மேல் தைத்துவிடுகிறது.
வருகிறதே கோபம் கண்ணனுக்கு.
தான் கஷ்டப்பட்டால் அவனுக்கு வ்ுத்தம் இல்லை.
தன் பாகவதனான பார்த்திபனுக்கு வலி என்றால்
அவன் நிலை மறந்தான்.
எங்கேயோ மறைந்து இருந்த சக்கிராயுதம்
வந்துவிட்டது அவ்ன கையில்.
இதோ தொலைத்து விடுகிறேன் இந்தக் கிழவரை!!
என்று தேரிலிருந்து குதிக்கிறான்.
பீஷ்மரோ பார்த்தார். அவர் நினைத்தப்
பூஜித்த தருணம் வந்தது என்று
ஆனந்தத்தோடு,
கண்ணா, வாசுதேவா,கோவிந்தனே
காக்க வா என்று
கண்ணன் வரும் ஆவெசக் கோலத்தின் அழகைப்
பார்க்கிறார். அவர் கண்ணில் நீர்ச்சரங்கள்
மழையாக உதிர,
கண்ணனுக்குத் தன் சபதம் நினைவு வருகிறது.
ஆஹா, ஏமாற இருந்தோமே என்று
நின்று விடுகிறான்.
தலைவனின் நோக்கு அறிந்த சக்கரமும்
திரும்பிவிடுகிறது.
பீஷ்மர் ஏமாந்தவராய்த் துவங்குகிறார் மறுபடி.
ஒரு க்ஷணத்தில் தன் விடுதலை தடைப்பட்டதை எண்ணுகிறார்.
இதே போல ஆனால் எதிர்மறையாகக் கண்ணன்
கோபம். போவதைப் பார்ப்போம்.
அம்பரீஷன் என்ற மன்னன்
விஷ்ணு பக்தன். அதீதமான நம்பிக்கை
சம்பிரதாயங்களில்.
நித்திய வழிபாடு,அனுஷ்டானம் எல்லாவற்றையும்
அனுசரிப்பவன். ஏகாதசி,உபவாசம்,துவாதசிப் பாரணை
விடாமல் செய்பவன்.
அப்படி ஒரு ஏகாத்ி பூரண உபவாசத்துடன் முடிகிறது.
அடுத்த நாள் துவாசியைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்.
அதற்கு அப்போதெல்லாம் நேரக் கணக்கு உண்டு.
அந்த நேரம் பார்த்து வந்தார் துர்வாச மஹாரிஷி.
அவரைப் பற்றித்தான் தெரியுமே. // பிடி சாபம் //அவருடைய
மறுபெயர்.
மன்னனைப் பார்த்து 'காத்திரு. நதி நீராடி வருகிறேன்' என்று சொல்லிக் குளிக்க தன் சீடர்களோடு
போனார்.
அம்பரீஷனும் காத்துப் பார்த்தான்.
பாரணை முடிக்க வேண்டிய நேரம் வந்ததால்
தயங்கினான்.
அவனுடையா குரு வார்த்தையை மேற்கொண்டு துளி துளசித் தீர்த்தம் பருகினான்..
அதுவும் வரம்புக்கு உட்பட்டு விரதத்தை முடிக்க வேண்டிய
கட்டாயத்தால்.
வந்தார் ரிஷி.
ஞானக்கண்ணில் நடந்ததை யூகித்தார்.
கோபம் தலைக்கேறியது.
அம்பரீஷன் விளக்கியம் அவரது அகந்தை அதை ஏற்கவில்லை.
உன்னைத் தண்டித்தே தீருவேன் என்றவரின் வார்த்தைகள்
ஆரம்பிக்கும் முன்னரே வந்தது சக்கிராயுதம்.
துரத்தியது துர்வாசரை.
தருணத்தில் மாதவன் அடியாரைக் கோபித்த தவறை
உணர்ந்தார்,.
அடைக்கலம் தேடி எங்கு போயும்
விடவில்லை சக்கரம்.
முடிவாக அம்பரீசனிடமே வந்ததும்,
அவன் அந்த சக்கிராயுதத்தை வேண்ட
அதுவும் திரும்பியதாக புராணம்.
ராமன் கோபம் சேதுப் பாலம். நன்மை
திரௌபதியின் கோபம் பாரதப் போர்.- அழிவு
சூர்ப்பனகையின் கோபம் இராவணின் அழிவு.
கோபம்--பாபம்--- என்று ஒரு பழமொழி உண்டு
யோசித்து வரும் கோபத்தை அடக்கலாம்.
சட்டென்று வரும் சினத்தால் யாருக்கும் நன்மை இல்லை. நாம் நம் வசம் இழப்பதோடு சரி. அதனால்
சினத்தை அடக்கி சாதிக்கும் வழியைப்
பார்ப்பதெ நன்மையாக்ப் படுகிறது.
உங்கள் எண்ணம் என்ன.?
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அழகான பதிவு. அற்புதமான கருத்து. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மேலும் எழுதுங்கள்!!
நன்றி
அம்மா, வல்லி,
//நாம் நம் வசம் இழப்பதோடு சரி. அதனால்
சினத்தை அடக்கி சாதிக்கு வழியைப்
பார்ப்பதெ நன்மையாக்ப் படுகிறது.
உங்கள் எண்ணம் என்ன.?//
உடனடியாக "சாதிக்கு" என்பதை "சாதிக்கும்" என்று மாற்றிவிட்டால் நலம். இங்கே இப்பொழுது நடக்கும் சாதிச் சண்டை நமக்கு வேண்டாமே!
கட்டுரை அருமை.
கோபத்தைப் பற்றி ஒரு ஞானி நன்றாகச் சொன்னார்:
" கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடுதான் உட்காருவான்!"
கோபம் சண்டாளம்'னு எங்க பாட்டி எப்பவும் சொல்வாங்க.
வள்ளுவரும் 10 குறளை எழுதிவச்சுட்டுப் போயிட்டார் 'சினம்' ஒரு
வேண்டாத சமாச்சாரமுன்னு.
ஆனா இப்பெல்லாம் நியாயமான காரியங்களுக்கு வர்ற கோபம்கூட
வாய் சொற்களால் தடித்துபோயிடறது.
ஆனா ஒண்ணு நம்ம கோபம் தீர்ந்தவுடன், நாம எப்படி அப்ப நடந்துக்கிட்டோமுன்னு
நினைச்சுப் பார்த்தால் .....'உவ்வே...'
ஜயராமன் நன்றி.
இங்கெ பதிப்பதே என்னைத் திருத்திக் கொள்ளத்தான்.
கோபம் வரும் பொது, முன் போல் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. அது தார்மீகக் கோபமா இல்லை வேறா என்று நம்முடையை இதயத்துக்குத் தெரியாதே.
பி.பி ஏறாமல் பதிவே போடலாம்:-))
வணக்கம் ஞானவெட்டியான் ஐயா.
நல்ல வேளையாகச் சொன்னீர்கள்.
மாற்றாமல் இருந்தால்
எழுதினதற்கே பொருள் இல்லாமல் போயிருக்கும்.
நன்றி ஐயா.
வாங்க சுப்பையா சார்.
ஆமாம் கோபத்துக்கு நஷ்டம்தான்
லாபம்.
இப்போது தெரிகிறது.
கடந்த நாள் தவறுகளை, வார்த்தைகளை சாமிகிட்ட சொல்லித்தான்
குறைக்கணும்.
துளசி, வாங்கப்பா.
கோபம் சொல்லும்போதே முகமெல்லாம் சுருக்கம் வரும்னு சொல்லுவாங்க.
ஏதோ வருத்தம் தான் கோபமாயிடுதுனு நினைக்கிறேன். எல்லாரையும் துளசி பதிவுக்கு வந்து தினம் படிக்கணும்னு சட்டம் கொண்டு வரணும். அப்புறம் சிரிப்புக்குப் பஞ்சம்
இல்லை.
வல்லி,
இன்னிக்கு என்ன ரெட்டை நாயனம்? :-))))
நவராத்ரி ஸ்பெஷலா? :-)
வல்லி,
நமக்கு எப்போ "ரௌத்ரம் பழகணும்" எப்போ "சினம் ஆறுவது"ன்னு தெரிவதில்லை.
பாரதியையும், ஔவையாரையும் நம்ம வசதிக்கு Swap செஞ்சுக்கிறதாலே சர்வ சக்தியும் விரயம்!
அன்புடன்,
ஹரிஹரன்
ஹரிஹரன் வாங்க.
செல்லும் இடத்துக் கோபம் கொண்டால் பயனில்லையாம்.
செல்லாத(நம் பவர் செல்லுபடியாகத) இடத்தில் கோபித்து வெற்றி கொண்டால்தான்
பெருமையாம்.
கோபம் விரயம்தான்.
உடன் பிறந்தே நம்மைக்கொல்லும் வியாதி ஒன்று உண்டென்றால் அது கோபம்தான்.கோபத்தால் பெற்றது ஒன்றும் இல்லை ஆனால் இழந்தது ஏராளம்
Post a Comment